வளங்குன்றா வளர்ச்சி இலக்குக் குறியீடு (SDG) 2023 - 24 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் செயல்திறன்
(For English version to this please click here)
முன்னுரை
- இந்தக் குறியீட்டில், நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட மாநிலத்தின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகள் மற்றும் விரிவான கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டின் கூட்டு மதிப்பெண்
- சமீபத்தியப் பதிப்பில் தமிழ்நாட்டின் கூட்டு மதிப்பெண் 78 ஆக அதிகரித்துள்ளது.
- இது 2018 ஆம் ஆண்டில் 66 இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.
- இந்த மேல்நோக்கிய வளர்ச்சியானது, சமூக சமத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்கள்
இலக்கு 1 குறியீட்டு மதிப்பெண்
- மீள்பார்வை
- இலக்கு 1க்கான SDG குறியீட்டு மதிப்பெண் (வறுமை இல்லை) மாநிலங்களுக்கு 39 முதல் 92 வரையிலும், யூனியன் பிரதேசங்களுக்கு 58 முதல் 89 வரையிலும் உள்ளது.
முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- மாநிலங்கள்: தமிழ்நாடு (மாநிலங்களில் முதன்மை) மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ (யூனியன் பிரதேசங்களில் முதன்மை).
- முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் : இந்த வகைக்குள் 21 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் அடங்கும் (65 மற்றும் 100க்கு இடைப்பட்ட மதிப்பெண்கள், 100 என்பதைத் தவிர).
- லட்சியமிகு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: இரண்டு மாநிலங்கள் 50க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன என்ற நிலையில் இது முன்னேற்றம் தேவைப் படும் பகுதிகளைக் குறிக்கிறது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (இலக்கு 3)
- மாநிலத்தின் சுகாதார முயற்சிகள் கணிசமான முடிவுகளைக் காட்டியுள்ளன என்பது 2023-24 ஆம் ஆண்டில் பேறுகால தாய்மார்கள் விகிதம் 97.18% ஆக உள்ளது.
- இந்தச் சாதனைக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு காரணமாகும்.
- தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சமூக சுகாதாரத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- இந்த முன்னெடுப்புகள் அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்கிறது.
நாகரீகமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (இலக்கு 8)
- வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
- பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பயனுள்ள கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
- தொழில்முனைவோரை வளர்ப்பது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவுவது போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன.
இலக்கு 13 குறியீட்டு மதிப்பெண் (காலநிலை நடவடிக்கை)
மீள்பார்வை
- இலக்கு 13க்கான SDG குறியீட்டு மதிப்பெண் மாநிலங்களுக்கு 30 முதல் 81 வரையிலும், யூனியன் பிரதேசங்களுக்கு 13 முதல் 80 வரையிலும் உள்ளது.
முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- மாநிலங்கள்: சிக்கிம் மற்றும் தமிழ்நாடு.
- யூனியன் பிரதேசங்கள்: சண்டிகர்.
வகைகள்
- முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் : 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் 65 முதல் 100 மதிப்பெண்களுடன் (100 தவிர) முன்னணியில் உள்ளன.
- லட்சியமிகு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் : நான்கு மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்கள் 50க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளன.
நிலத்தில் வாழ்க்கை (இலக்கு 15)
- தமிழ்நாடு அதன் புவியியல் பகுதியில், கிட்டத்தட்ட 25% காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
- இந்த முன்முயற்சியானது பல்லுயிர்ப் பாதுகாப்பிற்குப் பங்களிப்பது மட்டுமல்லாமல், கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாற்றத்தை ஊக்குவிக்கும் அரசு முன்னெடுப்புகள்
- SDG இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முதன்மை முன்னேடுப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது, அவற்றுள்:
- PMAY (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா): அனைத்து குடிமக்களுக்கும் வசிப்பிடத்தை உறுதி செய்வதற்காக 4 மில்லியன் என்ற அளவிற்கு மலிவு விலையில் வீடுகள் கட்டுவதை இலக்காகக் கொண்டது.
- ஆயுஷ்மான் பாரத் - PMJAY: 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு உடல்நலக் காப்பீட்டை வழங்குதல் மற்றும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளுக்கான அணுகுதலை மேம்படுத்துவதாகும்.
- ஸ்வச் பாரத் அபியான்: 11 மில்லியன் கழிப்பறைகள் கட்டுவதற்கான வசதிகளைச் செய்து, அதன் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதாகும்.
மாநிலத்தின் செயல்திறன் மற்றும் எதிர்கால கடமைகள்
- SDG இந்தியக் குறியீடு 2023-24 இன் படி, தமிழ்நாடானது 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்னணி நிலையை அடைந்ததாக அறிக்கை செய்துள்ளது.
- இந்த வெற்றியானது நிலையான வளர்ச்சிக்கான மாநிலத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பிரதிபலிப்பதோடு, இது பல்வேறு துறைகளில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கிறது.
- பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதி மற்றும் பாதிக்கப்படக் கூடிய சமூகங்கள்
- CSR நிதியளிப்பில் உள்ள சவால்கள்
- மிகவும் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு CSR நிதியை ஊக்குவிப்பது கடினமாக உள்ளது.
- இந்தியாவின் தனியார் துறையால் நிதியளிக்கப்படும் CSR நடவடிக்கைகள் அதிகரித்தாலும், பெரும்பான்மையான நிதிகள் குறிப்பிடத்தக்க தனியார் துறை செயல்பாடுகளைக் கொண்ட மாநிலங்களில் குவிந்துள்ளன.
CSR செலவினங்களில் முதன்மையான மாநிலங்கள்
- 1. மகாராஷ்டிரா: INR 23,947 கோடிகள்
- 2. கர்நாடகா: INR 8,993 கோடிகள்
- 3. குஜராத்: INR 7,809 கோடி
- 4. தமிழ்நாடு: INR 6,876 கோடிகள்
இந்தியாவில் SDG செயல்திறன்
- SDG இந்தியா குறியீடு 2023-24 மீள்பார்வை
- மாநில மதிப்பெண்கள் 57 முதல் 79 வரையும்; யூனியன் பிரதேசங்களின் மதிப்பெண்கள் (UTs) 65 முதல் 77 வரையும் உள்ளன.
- 2020-21 மதிப்பெண்களுடன் ஒப்பிடும் போது முன்னேற்றம் அடைந்துள்ளது (மாநிலங்கள்: 52 முதல் 75 வரை; யூனியன் பிரதேசங்கள்: 62 முதல் 79 வரை).
முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- மாநிலங்கள்: உத்தரகாண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் 79 மதிப்பெண்களுடன் முன்னிலையில் உள்ளன.
- யூனியன் பிரதேசங்கள்: சண்டிகர் 77 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
- மற்ற குறிப்பிடத்தக்க மாநிலங்கள்: தமிழ்நாடு (3வது), கோவா, இமாச்சல பிரதேசம்.
மகப்பேறு நன்மைகள்
- PMMVY பரவல்
- 2023-2024 ஆம் ஆண்டு வரை, பதிவு செய்யப்பட்டப் பயனாளிகளில் 46.29% பேர் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) கீழ் சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெற்றுள்ளனர்.
- முழு பரவல் இலக்கு: முழுமையான பரவலை அடைவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
சிறப்பு சாதனை படைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- மாநிலங்கள்: தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியன 100% இலக்கை எட்டியுள்ளன.
- யூனியன் பிரதேசங்கள்: லடாக் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவையும் முழுப் பரவலை எட்டியுள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் (MMR)
தற்போதைய நிலை
- இந்தியாவின் MMR விகிதம் 100,000 பிறப்புகளுக்கு 97 ஆக உள்ளது.
- 2030 ஆம் ஆண்டுக்குள் 100,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 70 மகப்பேறு இறப்பு என்பது தேசிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேசிய இலக்கை எட்டும் மாநிலங்கள் அந்தந்த MMR உடன் இலக்கை எட்டியுள்ளன:
- 1. கேரளா: 19
- 2. மகாராஷ்டிரா: 33
- 3. தெலுங்கானா: 43
- 4. ஆந்திரப் பிரதேசம்: 45
- 5. தமிழ்நாடு: 54
- 6. ஜார்க்கண்ட்: 56
- 7. குஜராத்: 57
- 8. கர்நாடகா: 69
சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள்
- தேசிய கண்ணோட்டம்
- 2022 ஆம் ஆண்டில், சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 12 பேர் ஆக இருந்தது.
மாநிலப் புள்ளி விவரங்கள்
- அதிகபட்ச விகிதம்: 100,000க்கு 23 இறப்புகளுடன் தமிழ்நாடு உள்ளது.
- குறைந்தபட்ச விகிதம்: நாகாலாந்து 100,000க்கு 1 இறப்பு ஆக உள்ளது.
இலக்கை அடையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- மாநிலங்கள்: மேகாலயா (5), மணிப்பூர் (4), நாகாலாந்து (1).
- யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (5), லட்சத்தீவுகள் (3).
உயர் கல்வியில் சேர்க்கை விகிதம்
- தேசிய கண்ணோட்டம்
- ஒட்டுமொத்தச் சேர்க்கை: 18 - 23 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 28.4 சதவீதம் பேர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
முன்னணியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- தமிழ்நாடு: 47 சதவீத மாணவர் சேர்க்கை.
- சண்டிகர்: யூனியன் பிரதேசங்களில் 64.8 சதவீதம் பெற்றுள்ளது (ஒட்டு மொத்தமாக காணும் போது முதலிடம்).
- குறைவான பதிவு: அஸ்ஸாம் 16.9 சதவீதம்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
- தேசிய கண்ணோட்டம்
- இடைநிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 92.2 சதவீத ஆசிரியர்கள் பயிற்சி பெற்றவர்கள்.
சிறந்த மாநிலங்கள்
- தமிழ்நாடு: 99.9 சதவீத ஆசிரியர்கள் பயிற்சி பெற்றவர்கள் (முதனிலை).
- சண்டிகர்: யூனியன் பிரதேசங்களில் 99.1 சதவீதம்.
குறைந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
பள்ளிகளில் உள்கட்டமைப்பு
- தற்போதைய நிலை
- 2021-2022 ஆம் ஆண்டில், 88.65 சதவீதப் பள்ளிகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் (மின்சாரம் மற்றும் குடிநீர்) கிடைத்துள்ளது.
சிறந்த சாதனையாளர்கள்
- தமிழ்நாடு மற்றும் கோவா: 100 சதவீத உள்கட்டமைப்பு அணுகல்.
- குறைந்த செயல்திறன்
- மேகாலயா: 20.5 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளது.
இலக்கை அடையும் யூனியன் பிரதேசங்கள்
- சண்டிகர், டெல்லி, புதுச்சேரி, லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை தேசிய இலக்கை எட்டியுள்ளன.
நிலத்தடி நீர் எடுப்பு
- தற்போதைய நிலை
- ஒட்டு மொத்த நிலத்தடி நீர் எடுப்பு: இந்தியாவில் 59.26 சதவீதம் நிலத்தடி நீர் எடுக்கப் படுகிறது.
- இந்த மதிப்பானது தேசிய இலக்கான 70 சதவீதத்திற்குள் வருகிறது என்பதோடு இது ஜல் சக்தி அமைச்சகத்தால் 'பாதுகாப்பானது' என்று கருதப்படுகிறது.
சிறப்பாகப் பங்காற்றிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
- அருணாச்சலப் பிரதேசம்: 0.42 சதவீதம் நிலத்தடி நீர் எடுத்தல்.
அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
- அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் நிலத்தடி நீர் எடுக்கும் மாநிலங்கள் பின்வருமாறு:
- பஞ்சாப்: 163.76 சதவீதம் நிலத்தடி நீர் எடுத்து மோசமானச் செயல்திறன் கொண்ட மாநிலமாக உள்ளது.
- மற்றவை: ஹரியானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சண்டிகர், டெல்லி, புதுச்சேரி, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ.
சிறப்பாகச் செயல்படும் யூனியன் பிரதேசங்கள்
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்: 1.37 சதவீதம் நிலத்தடி நீர் எடுப்பு.
PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருத்திருக்கும் பெண்கள்
- தேசியக் கண்ணோட்டம்
- 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (PMJDY) கீழ் கணக்கு வைத்திருப்பவர்களில் தோராயமாக 55.63 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.
மாநிலப் புள்ளி விவரங்கள்
- தமிழ்நாடு: PMJDY கணக்கு வைத்திருப்பவர்களில் 58.59 சதவீதம் பேர் பெண்கள்.
- கோவா: குறைந்தபட்சமாக 44.15 சதவீதப் பங்கு.
யூனியன் பிரதேசங்களின் புள்ளி விவரங்கள்
- புதுச்சேரி: அதிகபட்சமாக கணக்கு வைத்திருப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை 56.68 சதவீதம்.
- டெல்லி: குறைந்தபட்சமாக 37.07 சதவீதம்.
சதுப்புநிலக் காடுகளின் பரவல்
- தற்போதைய நிலை
- 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியக் காடுகளின் அறிக்கையின் படி, இந்தியாவில் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 0.34 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிறந்த மாநிலம்
- கர்நாடகா: அதிகபட்சமாக 30 சதவீதம் உயர்வு.
அதிகரிப்பு இல்லாத மாநிலங்கள்
- தமிழ்நாடு மற்றும் கேரளா: சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால நோக்கம்
- SDG இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் மற்றும் செயல்படுத்தலில் NITI ஆயோக் உடனான தனது கூட்டாண்மையை ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.
- சமூகத்தின் தேவைகளுடன் வளர்ச்சி இலக்குகளைச் சீரமைக்கும் ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
- இந்த செயல்முறை 2047 ஆம் ஆண்டிற்குள் வளமான மற்றும் நிலையான தமிழகத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
-------------------------------------