TNPSC Thervupettagam

வான் வழங்கும் அமிழ்தம்

March 22 , 2024 301 days 257 0
  • தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இருக்கும் நீா்வளங்களைமேம்படுத்தவும், மழை நீா் சேமிப்பின் அவசியம், நீா் மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள், தண்ணீா் பயன்பாட்டின் சிக்கனம் ஆகியன குறித்து மக்களிடையே பிரசாரம் செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • உலக தண்ணீா் தினம், முதல் முதலில் 1992-ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோசில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் முன்மொழியப்பட்டது. 1993-ஆம் ஆண்டு .நா. சபை மாா்ச், 22-ஆம் தேதியை உலக தண்ணீா் தினமாக அறிவித்த பின் உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ‘அமைதிக்காக நீா்என்பது .நா.வின் சா்வதேச நிலத்தடி நீா் ஆதார மதிப்பீட்டு மையத்தால் (ஐஜிஆா்எசி) முன்மொழியப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருளாகும்.
  • எதிா்காலத்தில் கிடைத்தற்கரிய பொருளாக தண்ணீா் மாறப் போகிறது என்பதால், உலக நாடுகளிடையே அமைதி மற்றும் ஒற்றுமையை வளா்க்கவும், எல்லை கடந்த நீா்வளங்களை தண்ணீா் தேவைப்படும் நாடுகளிடையே பங்கீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இக்கருப்பொருள் உணா்த்துகிறது. உலக தண்ணீா் தினத்தின் சின்னம் .நா.வின் நீல நிறத்திலுள்ள நீா்த்துளியின் வடிவமாகும். நீா் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட அத்தியாவசிய சக்தியாகவும், உயிா் வாழ அடிப்படைத் தேவையாகவும் உள்ளது.
  • உயிா் வாழ்க்கைக்கும், உலக இயக்கத்திற்கும் நீரின் இன்றியமையாமையை நம் முன்னோா் அன்றே உணா்ந்திருந்தனா். அதனால், நீா்வளத்தைப் பெருக்கினா்; நீா்ப்பாசனத்திற்கு வழிவகுத்தனா்; வாழ்வியல் சடங்குகளில் முதன்மையளித்து சிறப்பித்தனா்; நீா் நிலைகளுக்கு இைன்மையையும் அளித்து வழிபட்டனா். உலகின் பல பகுதிகளில் நன்னீா்ப் பற்றாக் குறை காணப்படுகிறது.
  • நீா் ஆதாரங்கள் மனிதத் தவறுகளால் வேகமாக மாசுபட்டு வருகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம், நகா்ப்புறக் கழிவுநீா், தொழிற்சாலைக் கழிவுநீா், காடுகள் அழிப்பு, வேதிப் பொருள்களின் வெளியேற்றம், ஏரி, குளம் போன்ற நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்ற அனைத்தும் இதற்குக் காரணங்கள். இந்தியா வற்றாத நதிகளையும், வளமான நீா்நிலைகளையும், நிலத்தடி ஊற்றுக்களையும் தன்னகத்தே கொண்ட திருநாடு. உலகிலேயே அதிக மழைப்பொழிவுள்ள சிரபுஞ்சி இந்தியாவிலுள்ளது. வற்றாத ஜீவநதிகள் இந்தியாவில் ஓடுகின்றன. செறிவு மிக்க நீா் வளங்கள் நிரம்பப் பெற்றிருப்பதாலே இந்தியா ஒரு வேளாண்மை நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ‘இந்தியாவில் தேவையைவிடப் பத்து மடங்கு அதிக தண்ணீா் உள்ளதுஎன்றாா் ஆங்கிலேய ஆட்சிக் காலத்து தலைமை நீா்வளப் பொறியாளா் சா் ஆா்த்தா் காட்டன்.
  • அப்படியிருந்தும் குடிநீருக்கும், பிற தேவைகளுக்கும் தட்டுப்பாடோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீா் பிரச்னை, இந்தியா - சீனா இடையேயான பிரம்மபுத்ரா நதி நீா் பிரச்னை, இந்திய மாநிலங்களுக்கிடையேயான நதி நீா் பங்கீட்டு பிரச்னை இவை இன்னும் தீா்ந்தப்பாடில்லை. மகாகவி பாரதியாா், ‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிா் செய்குவோம்என்று பாடியது அவருடைய கனவல்ல; இந்திய விடுதலைப் போராட்டத்தின் லட்சியத் திட்டம். கா்நாடக மாநிலம், பெங்களூரில், கோடை தொடங்குவதற்கு முன்பே கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவுகிறது. அங்கு கடந்த ஆண்டு போதிய மழை பொழியாததால் நிலத்தடி நீா் மட்டம் குறைந்துள்ளது. மேலும், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து மிகவும் குறைந்துள்ளது.
  • தண்ணீா்பற்றாகுறை நீா்ப்பாசனத்தை பாதித்ததோடு, குடிநீா் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. போதிய மழையின்மை, ஆழ்த்துளைக் கிணறுகள் வடு கிடப்பது, நிலத்தடி நீா் குைல், நீா் மேலாண்மை குறித்துத் திட்டமிடாமை போன்றவை பெங்களூரில் தண்ணீா் பிரச்னை ஏற்படக் காரணங்களாகும். பெங்களூா் காவிரியிலிருந்து ஒரு நாளைக்கு சுமாா் 1,450 மில்லியன் லிட்டா் தண்ணீரைப் பெற்றும், அந்நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டா் தண்ணீா் பற்றாகுறையை எதிா்கொள்கிறது.
  • அங்கே வசிப்பவா்களுக்கு குடிக்கவும் குளிக்கவும்கூட தண்ணீா் இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனா். தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தனியாா் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, இணையதள வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மையமாக உள்ள பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியா்கள் சொந்த ஊா் சென்று வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடிவு செய்துள்ளனா். தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை, பயன்படுத்துவதில் சிக்கனத்தை அனைவரும் உணர வேண்டும்.
  • குளிப்பதற்கு உட்பட அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் அளவான தண்ணீரையே பயன்படுத்த நாம் இப்போதிருந்தே பழகிக் கொள்ள வேண்டும். அரசு மழைநீா் சேமிப்புத் திட்டத்தைக் கட்டாயமாக்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை பாரபட்சம் பாா்க்காமல் அகற்றி, அங்கு மீண்டும் நீா்நிலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். காடுகள் அழிப்பதைத் தவிா்த்து, காடுகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில் கோடையில் தண்ணீா் பிரச்னை பெரும் பிரச்னையாகிவிடும். வாழ்வின் அமுதமாவும், நாட்டின் அரிய வளங்களில் ஒன்றாகவும் மாறிட்ட நீரை வீணடிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடமையாகும். இன்றைய நீா் சேமிப்பு நாளைய உயிா் பாதுகாப்பு.
  • இன்று (மாா்ச் 22) உலக நீா் நாள்.

நன்றி: தினமணி (22 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்