TNPSC Thervupettagam

வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தி நீக்கம்

January 4 , 2022 943 days 520 0
  • தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறைச் சட்டம்-1987-ல் அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் பட்டியல் தொகுப்பிலிருந்து பருத்தியைத் தமிழ்நாடு அரசு நீக்கம் செய்து சந்தைக் கட்டண விலக்கு அளித்துள்ளது.
  • இது தொடக்கத்தில் விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் நன்மை தருவதுபோல் இருப்பினும் நாளடைவில் மத்திய, மாநில அரசின் நிதியை அரசுச் சந்தைகள் எதிர்நோக்கும் கட்டாயம் ஏற்படும்.
  • தனது சுயநிதி (சந்தைக் கட்டண நிதி) மூலம் விவசாயிகளுக்கு எவ்வித சந்தை மேம்பாட்டுப் பணியையும் செய்ய இயலாமல் நலிவடைந்துவிடும்.
  • மத்திய வேளாண் சட்டங்களால் வேளாண் சந்தை அமைப்புகள் அழிந்துவிடும் என்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.
  • அது போலத்தான் வேளாண் விளைபொருள் பட்டியலிலிருந்து பருத்தியையும் அடுத்தடுத்த விளைபொருட்களையும் நீக்கினால், ஒழுங்குமுறை வேளாண் சந்தை அமைப்புகள் வலுவிழந்து போய்விடும்.
  • அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.
  • வணிகர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் விவசாயிகள் வர வேண்டிய நிலை ஏற்படும். இடைத்தரகர்கள் மீண்டும் வருவார்கள். அரசு சார்ந்த சந்தை அமைப்புகள் வலுவிழந்த நிலையில், அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வது சாத்தியமில்லா நிலை ஏற்படும்.
  •  விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலைகூடக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகக்கூடும். பருத்தி போன்ற விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும், இந்தியப் பருத்திக் கழகம் கொள்முதல் செய்ய இடைத்தரகர்களையும் வணிகர்களையும் நாட வேண்டிய நிலை வரும்.
  • என்னதான் வேளாண் சந்தைகளுக்கு அரசு நிதி வழங்கினாலும், அது சுயமாக நிதி ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளும் நிலையில் இருந்தால்தான் அமைப்பு வலுப்பெறும்.
  • சந்தை அமைப்புகள் வலுவாக இருந்தால்தான், அதன் மூலம் வேளாண் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை அரசு கண்காணித்துக் கட்டுப்படுத்த இயலும்.
  • சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்பதற்கோ, நுகர்வோருக்குக் குறைந்த விலை கிடைக்கும் என்பதற்கோ எந்தவித ஆராய்ச்சித் தரவுகளும் இல்லை.
  • ஆகவே, சந்தைக்குள் நடக்கும் பரிவர்த்தனைக்கு மட்டும் சந்தைக் கட்டணம் விலக்கு அளித்துவிட்டு, வெளிப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தால் நிறைய வணிகர்கள் சந்தை அமைப்புக்குள் கொள்முதல் செய்யப் போட்டி போடும் நிலை வரும். விவசாயிகளுக்கும் போட்டி விலை கிடைக்கும்.
  • ஆகவே, பருத்தி போன்ற வேளாண் விளைபொருட்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதும், முழுமையாகச் சந்தைக் கட்டண விலக்கு அளிப்பதையும் அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.
  • மேலும், 100 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வேளாண் விற்பனைச் சந்தைகளை உருவாக்கினால், சந்தை அமைப்பு மேம்படும். நல்ல விலை கிடைக்கும்போது உற்பத்தி தானாகப் பெருகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்