TNPSC Thervupettagam

ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி

November 9 , 2024 68 days 91 0

ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி

  • ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சியில். ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தியா உள்ளிட்ட 112 நாடுகளைச் சேர்ந்த 2,522 பதிப்பகங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்றுள்ளன. ‘புத்தகத்துடன் தொடங்குகிறது’ (It starts with a book) என்பதே இந்தப் புத்தகக் காட்சியின் கருப்பொருள்.
  • ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின், ஷார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் ஷேக்கா பொதுர் பிந்த், சுல்தான் அல் காஸிமியின் ஆகியோரின் ஆதரவில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு நடைபெறும் புத்தகக் காட்சியில் மொராக்கோ நாடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளது.
  • இதன் மூலம் அந்த நாட்டின் கலை, பண்பாடு, இலக்கியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் நேரடிச் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுகள் நடக்கவுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.
  • தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன், இசைஞானி இளையராஜா, தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். ஷார்ஜா அரசு புத்தகக் கலாச்சார விழாவிற்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 63 நாடுகளைச் சேர்ந்த 250 விருந்தினர்கள் பங்கேற்கும் 1,357 கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சமூக வலைதள நிலையம் மக்களின் கவனத்தை அதிகம் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் நூல் குடில் பதிப்பகம், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சிந்தனை விருந்தகம், காலச்சுவடு, எதிர் வெளியீடு, நர்மதா, கவிதா, வானதி, விஷ்ணுபுரம் உள்ளிட்ட பதிப்பகங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
  • தமிழகப் பாடநூல் நிறுவன இணை இயக்குநர் சங்கர சரவணன் தமிழக அரங்குகளைப் பார்வையிட்டார். துபாயைச் சேர்ந்த இமான் அமைப்பு தமிழகப் பதிப்பாளர்களை வரவேற்றுக் கெளரவித்தது. இந்நிகழ்வில், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் இதயத்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்