TNPSC Thervupettagam

ஃபிபா உலகக் கோப்பை

July 27 , 2018 2372 days 3658 0
  • உலக விளையாட்டுகளை நிர்வகிக்கும் அமைப்பான, பெடரேஷன் இண்டர்நேஷனலே டி புட்பால் அசோஷியேஷனின் (Federation Internationale de football Association FIFA) உறுப்பினர்களான மூத்த ஆண்களுக்கான தேசிய அணிகள் பங்கு பெறும் சர்வதேச சங்கங்களின் கால்பந்து போட்டியாகும்.
  • ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விடவும், உலகக் கோப்பையானது உலகளவில் பெரிதும் ரசிகர்களால் பார்வையிடப்பட்ட மற்றும் பின்தொடரப்பட்ட போட்டியாகும்.
  • இதில் பிரேசில் ஐந்து முறை வென்றுள்ளது. ஒவ்வொரு தொடரிலும் பங்கு பெற்ற ஒரே அணி பிரேசில் ஆகும்
  • பிபா உலகக் கோப்பை முதன்முறையாக 2002ஆம் ஆண்டில் ஆசியாவில் நடைபெற்றது. இப்போட்டியை தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. மேலும் இப்போட்டி பல நாடுகள் இணைந்து நடத்தும் முதலாவது போட்டியாகும்.
  • முதன்முறையாக 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா இப்போட்டியை நடத்தியது.
  • மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவிருக்கிறது.
  • 2026ஆம் ஆண்டு உலகக் கோப்பையானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற இருக்கிறது. முதன்முறையாக மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் உலக் கோப்பைப் போட்டி இதுவாகும்.

பிபா 2018

  • 2018ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை என்பது 21வது பிபா உலகக் கோப்பை ஆகும். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச கால்பந்துப் போட்டியாகும்.
  • 1930ஆம் ஆண்டு உருகுவேயில் இப்போட்டி தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு போட்டியானது 21வது உலகக் கோப்பைப் போட்டியாகும.
  • இந்த ஆண்டு ரஷ்யா இப்போட்டியை நடத்தியது.
  • இந்த வருட உலகக் கோப்பையானது முதன்முறையாக கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்றது. மேலும் ஐரோப்பாவில் நடைபெற்ற 11வது உலகக் கோப்பைப் போட்டி இதுவாகும்.
  • இப்போட்டி முதன்முறையாக ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களில் நடைபெற்றது.
  • இதுவரை இல்லாத அதிக அளவில் செலவிடப்பட்ட உலகக் கோப்பைப் போட்டி இந்த வருட உலகக் கோப்பைப் போட்டியாகும்.
  • மேலும் முதன்முறையாக இந்த வருட உலகக் கோப்பை போட்டியில் காணொளி நடுவர் முறை (Video Assistant referree - VARs) பயன்படுத்தப்பட்டது.
  • உலகக் கோப்பை ரஷ்யா 2018-க்கான பிராண்ட் அடையாளம் மற்றும் சின்னம் (Logo) 2014ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களால் வெளியிடப்பட்டது. இது மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
  • 2018ஆம் ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பையின் கருத்துருவானது ‘கனவு மற்றும் காஸ்மிக் புறவெளி ஆய்வுப் பயணம்’ ஆகும்.

சின்னம் (Logo)

  • இந்த வருட சின்னமானது உலகக் கோப்பை கால்பந்து பதக்க வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாட்ரியோஷக்காஸ் மற்றும் பயர்பேர்டஸ் போன்ற நாட்டுப்புற சின்னங்களுடன் உட்பொதிக்கப்பட்டிருக்கிறது.
  • பூனை, புலி மற்றும் ஓநாய் ஆகிய மூன்று சின்னங்களிலிருந்து ஒன்றை இறுதி செய்வதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ஐபிவாகா என்ற பெயர் கொண்ட விலங்கு ஓநாய் ஆகும். எக்தெரினா போசாரோவா என்ற மாணவரால் இது வடிவமைக்கப்பட்டது.
  • 1958 - லிருந்து முதன்முறையாக இத்தாலி இந்த ஆண்டு பிபா உலகக் கோப்பையில் பங்கு பெறவில்லை.
  • இந்த வருட உலகக் கோப்பையில் ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகிய இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆட்ட பந்து

  • 2018ஆம் ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட டெல்ஸ்டார்18 கால்பந்து பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாகும். இது தெர்மோவால் பிணைக்கப்பட்டதாகும். (வெப்பத்தின் மூலம் கால்பந்து பேனல்களை இணைப்பதனால் செய்யப்பட்டது).
  • 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அலுவலக ஆட்டப் பந்து ‘டெல்ஸ்டார் 18’ என்று அழைக்கப்படுகிறது. இது 1970ஆம் ஆண்டிலிருந்து முதலாவது அடிடாஸ் உலகக் கோப்பை பந்தின் பெயர் மற்றும் வடிவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இப்பந்து 2017ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
  • குழுநிலை ஆட்டத்திற்குப் பிறகு நாக்அவுட் சுற்றுக்கு டெல்ஸ்டார் மெக்டா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெக்டா என்றால் கனவு அல்லது இலட்சியம் ஆகும்.
  • டெல்ஸ்டார்18 மற்றும் மெக்டா ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் வடிவமைப்பில் உள்ள சிவப்பு நிறங்கள் ஆகும்.

காணொளி நடுவர் முறை (VARs)

  • காணொளி நடுவர் முறையை ஆட்டத்தின் விதிமுறைகளில் சேர்க்க சர்வதேச கால்பந்து சங்க மன்றம் முடிவு செய்த பிறகு,FIFA குழு மிகவும் எதிர்பார்கப்பட்ட நடவடிக்கையான VAR ன் பயன்பாட்டை முதல்முறை இந்த வருட உலகக் கோப்பையில் பயன்படுத்திட ஒப்புதல் அளித்தது.
  • அனைத்து விளையாட்டுகளுக்கான காணொளி நடுவர் முறையின் செயல்பாட்டின் ஒற்றைத் தலைமையிடமாக ரஷ்யாவின் மாஸ்கோ விளங்குகிறது.
  • விளையாட்டின் நேரடி காணொளியைப் பெறுவது மற்றும் களத்தில் உள்ள நடுவர்களுட்ன் ஒலித்தொடர்பு மூலம் தொடர்பு கொள்வது ஆகியவற்றை இந்தத் தலைமையிடம் ஏற்படுத்தும்.
  • முதல் வார போட்டிக்குப் பிறகு காணொளி நடுவர் முறை வெற்றி பெற்றுள்ளதாக பிபா அறிவித்துள்ளது.

அலுவல் பாடல்

  • இந்த வருட போட்டியின் அலுவல் பாடல் என்பது ‘அதை வாழ விடு‘ (நிக்கி ஜாம்)

2022 பிபா உலகக் கோப்பை

  • பிபா உலகக் கோப்பை வரிசையில் இது 22வது உலகக் கோப்பையாகும்.
  • 2022ஆம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதன்முறையாக அரேபிய நாட்டில் உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. முதன்முறையாக முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
  • இப்போட்டி 28 நாட்களில் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டி டிசம்பர் 18 அன்று இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தினம் கத்தாரின் தேசிய த் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • பரப்பளவில் சிறிய நாடான கத்தார் முதன்முறையாக 2022ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை நடத்துகிறது. பரப்பளவில் ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்த இடத்தில் கத்தார் உள்ளது.

பிபா

  • பிபா 1930-ல் தொடங்கப்பட்டது.
  • 1930-ல் உருகுவே உலகக் கோப்பையை வென்றது.
  • சில்வியோ கஸனிகா உலக கோப்பையை வடிவமைத்தார்.
  • பிபா கோப்பையை பிரேசில் 5 முறை வென்றுள்ளது.
  • 1994-ல் பிபா கோப்பையை அமெரிக்கா நடத்தியது.
  • ஜெர்மனி 8 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டியில் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது.

பொதுத் தகவல்கள்

  • உலகக் கோப்பை என்பது 18 காரட் தங்கத்திலான, 14 இன்ச் உயரமுடைய, 11 பவுண்ட் எடை கொண்ட கோப்பையாகும்.
  • இது பிபா உலகக் கோப்பையின் 21வது இறுதிப் போட்டியாகும்.
  • பிபா உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி 2018-ஆம் ஆண்டு, ஜூலை 15 ம் தேதி, ரஷ்யாவின் மாஸ்கோவில் லுஸ்நிக்கி மைதானத்தில் நடைபெற்றது.
  • உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதன்முறையாக காணொளி நடுவர் உதவி (video assistant referee) என்ற முறையின் மூலம் பெனால்டி வாய்ப்பு பிரான்ஸ் அணிக்கு அளிக்கப்பட்டது.
  • உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதன்முறையாக தனக்குத் தானே கோல் அடிக்கப்பட்டது (குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜீகிக் மூலம்). மேலும் இது எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவாக 12வது முறையான சொந்த கோல் ஆகும்.
  • முதல் பாதியில் அடிக்கப்பட்ட 3 கோல்கள் 1974-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு அதிகம் அடிக்கப்பட்டதாகும்.
  • 1966-ம் ஆண்டு இங்கிலாந்து மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதற்கு பிறகு அதிக கோல்கள் அடிக்கப்பட்ட இறுதிப் போட்டி இதுவாகும்.
  • மேலும் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளும் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த வகையில் இந்த வருட இறுதிப்போட்டி 9 வது போட்டியாகும். இதற்கு முன்னால் இவ்வாறு ஏற்பட்டது 2006 மற்றும் 2010 ம் ஆண்டுகளில் ஆகும்.
  • இப்போட்டியை லுஸ்நிக்கி மைதானத்தில் ஏறக்குறைய 78,011 ரசிகர்கள் கண்டு களித்தனர்.
  • இவர்களில் 10 நாட்டுத் தலைவர்களும் அடங்குவர்.
  • அவர்களில் முதன்மையானவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், குரோஷிய அதிபர் கொலின்டா கிராபார்-கிதாரோவிக்.

பிரான்ஸ்

  • பிரான்ஸ் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் தோற்கடித்தது.
  • பிரான்ஸ் அணிக்கு இது மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். முதல் இறுதிப் போட்டி 1998 ம் ஆண்டில் அப்போட்டியை நடத்தியதோடு அதில் பங்கேற்று, அப்போதைய நடப்புச் சாம்பியனான பிரேசில் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
  • 2006-ம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் பிரான்ஸ் பங்கேற்றது. அதில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டு, இறுதியில் பெனால்டி முறை மூலம் இத்தாலியிடம் தோல்வியடைந்தது.
  • ஜெர்மனியும் (எட்டு முறை), இத்தாலியும் (ஆறு முறை) மட்டுமே இறுதிப் போட்டியில் அதிக முறை பங்குபெற்ற ஐரோப்பிய நாடுகளாகும்.
  • 2002-ம் ஆண்டில் பிரேசிலுக்குப் பிறகு, 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பையில் அனைத்து நாக்-அவுட் ஆட்டங்களிலும் கூடுதல் நேரமோ அல்லது பெனால்டி முறை இல்லாமலோ வெற்றி பெற்ற இரண்டாவது அணி பிரான்ஸ் ஆகும்.
  • இவ்வெற்றியின் வாயிலாக பிரான்ஸ் அணி 2021 - பிபா கூட்டமைப்புக் கோப்பையில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளது.
  • பிரேசில் (5 முறை), ஜெர்மனி / மேற்கு ஜெர்மனி மற்றும் இத்தாலி (தலா நான்கு முறை), உருகுவே மற்றும் அர்ஜெண்டினா (தலா இரண்டு முறை) ஆகிய அணிகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையை ஒரு முறைக்கும் மேல் அதிகம் வென்ற அணியாக பிரான்ஸ் அணி ஆறாவது அணியாக உருவெடுத்துள்ளது.
  • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1958-ஆம் ஆண்டில் பீலே (பிரேசில்) என்ற வீரருக்குப் பின் இளம் வயதில் கோல் அடித்த முதல் வீரர் பிரான்சின் பாப்பி ஆவார்.
  • பிரான்சின் திதியர் டெஸ்சாம்ப்ஸ், ஜெர்மனியின் பிரான்ஷ் பேகன்பவுர் மற்றும் பிரேசிலின் மரியோ ஜகலோ ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது நபராக ஒரு அணியின் ஆட்ட வீரராகவும், மேலாளராகவும் இருந்து கோப்பையை வென்றவராக உருவெடுத்துள்ளார்.
  • பிரான்ஸ் வீரர்களின் சராசரி வயது 25 வருடங்கள் மற்றும் 10 மாதங்கள்
  • 1970 ம் ஆண்டில் பிரேசில் அணி வீரர்கள் மட்டுமே சராசரியாக 25 வருடங்கள் மற்றும் 9 மாதங்கள் என்ற அளவில் இளம் வயது வீரர்களோடு கோப்பையை வென்ற அணியாகும்.
  • 1970-ஆம் ஆண்டில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்த பிறகு பிரான்ஸ் அணி மட்டுமே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான்கு கோல்கள் அடித்த முதல் அணியாகும்.

குரோஷியா

  • குரோஷியா ஒட்டுமொத்தமாக தங்களது ஐந்தாவது உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக தங்களது இறுதிப் போட்டியில் விளையாடினர்.
  • 1974-ம் ஆண்டில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி தோல்வியடைந்த பிறகிலிருந்து தங்கள் முதல் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த முதல் அணி குரோஷியா ஆகும்.
  • உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வகையில் உலக அளவில் 13 வதாகவும், ஐரோப்பிய அளவில் 10 வது நாடாகவும் குரோஷியா உள்ளது. 2010-ம் ஆண்டில் விளையாடிய ஸ்பெயினுக்குப் பிறகு முதல் புதிய இறுதிப் போட்டியாளர் குரோஷியா ஆகும்.
  • 17 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட குரோஷியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உருகுவே அணிக்குப் பிறகு (1930 மற்றும் 1950 களில் வெற்றியாளர்) மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட அணியாக விளையாடிய இரண்டாவது நாடாகும்.
  • கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நாடு குரோஷியா ஆகும். மேலும் 1962 ஆம் ஆண்டில் பிரேசிலுக்கு எதிராக தோல்வி அடைந்த செக்கோஸ்லோவேகியாவிற்குப் பிறகு பங்கேற்ற முதல் கிழக்கு ஐரோப்பிய நாடு குரோஷியா ஆகும்.
  • குரோஷியாவின் சிறந்த ஆட்டம் இதற்கு முன்பு எப்போதென்றால் 1978 ம் ஆண்டில் பிரான்ஸ் நடத்திய உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்ததே ஆகும்.
  • உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் தனக்குத்தானே கோல் அடித்து எதிரணிக்கு எதிராகவும் கோல் அடித்த வீரர் என்ற வகையில் 1998-ம் ஆண்டில் இத்தாலிக்கு எதிராக நெதர்லாந்தின் எர்னி பிரான்ஸ்க்குப் பிறகு குரோஷியாவின் மாண்ட்சூகிக் இரண்டாவது வீரராவார்.

பிபா 2018 சாதனைகள்

  • பிபா 2018-ல் ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகிய இரு நாடுகள் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளன. உலகக் கோப்பைப் போட்டியில் மக்கட் தொகையில் மிகவும் சிறிய நாடான ஐஸ்லாந்து பங்குபெற்றுள்ளது.
  • ஒவ்வொரு பிபா உலகக் கோப்பையின் போதும் சிறந்த விளையாட்டு வீரருக்காக தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • போட்டியில் மிகச்சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் வீரர்களுக்கு முறையே வெள்ளிப் பந்து மற்றும் வெண்கலப் பந்து பரிசாக அளிக்கப்படும்.
  • தங்கக் காலணி அல்லது தங்க ஷீ விருது பிபா உலகக் கோப்பையில் அதிக கோல் அடிப்பவருக்கு வழங்கப்படுகிறது.
  • சிறந்த இளம் வீரருக்கான விருது முதன் முறையாக 2006ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது வழங்கப்பட்டது. இவ்விருது ஜெர்மனியின் லூகாஸ் போடோல்ஸிக்கு வழங்கப்பட்டது.
  • 1970-ஆம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியாயமாக விளையாடும் அணிகளுக்கு பிபா பேர் பிலே கோப்பை (Fair play Trophy) வழங்கப்பட்டு வருகிறது.

2018 உலகக் கோப்பையில் பிபா விருதுகள்

  • சிறந்த வீரருக்கான தங்கப் பந்து - லுகா மோட்ரிக் (குரோசியா)
  • வெள்ளிப் பந்து - ஈடன் ஹசார்ட் (பெல்ஜியம்)
  • வெண்கலப் பந்து - அன்டோய்னி கிரீஸ்மேன் (பிரான்ஸ்)
  • அதிகபட்ச கோல் அடித்தவர் தங்க காலணி - ஹாரி கேன் (இங்கிலாந்து) - ஆறு கோல்கள்
  • வெள்ளி காலணி - அன்டோய்னி கிரீஸ்மேன் (பிரான்ஸ்) நான்கு கோல்கள் மற்றும் இரண்டு துணை புரிதல்கள்
  • வெண்கல காலணி - ரோமேலு லுகாகு (பெல்ஜியம்) நான்கு கோல்கள்
  • சிறந்த கோல்கீப்பர் விருது - தங்க கையுறை - தைபவுட் கோர்ட்டோயிஸ் (பெல்ஜியம்)
  • சிறந்த இளம் வீரர் - பிபா இளம் வீரர் - கைலியன் பாப்பி (பிரான்ஸ்)
  • நேர்மையான அணி பிபா நேர்மையான விளையாட்டிற்கான கோப்பை – ஸ்பெயின்
  • ஆட்ட நாயகன் விருது (இறுதிப்போட்டி) - அன்டோய்னி கிரீஸ்மேன் (பிரான்ஸ்)

- - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்