எவ்வளவு அதிகாரம் கொண்டவர் ஆளுநர்?
- ஒரு மாநிலத்தில் நிர்வாகம் செய்யும் ஆளுநரின் அதிகாரமானது குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்குச் சமமானது
- அவர் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
- மேலும் அவர் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் செயல்படுகிறார்.
- மேலும் ஆளுநர் தேவை ஏற்படும் போது மாநில சட்டசபையை கலைக்கிறார். அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத போது அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்.
- தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, ஆளுநரால் சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய முடியும்.
- தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் நடப்பதைப் போல், ஆளும் கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை இழக்கும் போது, அச்சமயத்தில் மாநில நிர்வாகத்தை மேற்கொள்வார்.
துணைநிலை ஆளுநரைப் பற்றி?
- துணைநிலை ஆளுநரும் மற்ற மாநிலத்தில் உள்ள ஆளுநரும் சமமான அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே துணைநிலை ஆளுநரைக் கொண்டுள்ளன.
- இந்த அதிகாரங்கள் யாவும் மாநில அரசு மற்றும் அதன் நிர்வாகம் கட்டுப்பாடுகளுடன் இருப்பதை உறுதி செய்யும்.
குடியரசுத் தலைவரிடமிருந்து ஆளுநர் எவ்விதத்தில் வேறுபடுகிறார்?
- ஆளுநர் பெற்றிருக்கும் அதிகாரங்களின் மற்றொரு தொகுப்பு, விருப்புரிமை அதிகாரங்களாகும். இந்த விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்துவதில் ஆளுநர் குடியரசுத் தலைவரிடமிருந்து வேறுபடுகிறார். விருப்புரிமை அதிகாரத்தில் ஆளுநரின் பங்கு மிகவும் விசாலமானது மற்றும் தெளிவற்றது.
உதாரணம் 1
- ஆளுநரின் விருப்புரிமை அதிகாரத்தில் முதலமைச்சர் பதவிக்குரியவரைத் தேர்வு செய்தல் ஒன்றாகும். சமீபத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை இருந்த போதும், ஆளுநர் வஜ்பய் வாலா தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனித்த கட்சியான பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்தார்.
உதாரணம் 2
- ஆளுநரின் விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி, கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பிஜேபியை ஆட்சி அமைக்க ஆளுநர்கள் அழைத்தனர். மாநில சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க பின்னர் மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தனர்.
சட்டமன்ற அதிகாரங்கள்
- மேலும் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்படி நிர்வாகம் நடைபெறாதபோது அது குறித்து ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
- சட்டமன்றத்தால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அம்மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்கி வைக்க அல்லது மறுப்புத் தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
உண்மையிலேயே டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளனவா?
- டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 2016 - ல் பிறப்பித்துள்ள உத்தரவில் தேசியத் தலைநகரான தில்லியைப் பொறுத்தவரை துணைநிலை ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்கள் உள்ளன என்றும், துணைநிலை ஆளுநரின் இசைவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியது. தற்பொழுது ஜூலை 2018 – ல் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் துணைநிலை ஆளுநர் தில்லி அரசின் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
- டெல்லியைப் பொறுத்தவரை நிலம், காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகிய மூன்று துறைகளிலும் மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் அத்துறைகளின் மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவார். அந்த வகையில் மற்ற மாநிலங்களின் ஆளுநர்களை விட அதிக அதிகாரம் உள்ளவர் டெல்லி துணை நிலை ஆளுநர் ஆவார்.
தற்போதுள்ள துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
யூனியன் பிரதேசங்கள் |
துணைநிலை ஆளுநர்கள் |
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (யூனியன் பிரதேசம்) |
அட்மிரல் டி.கே.ஜோஷி |
தில்லி (தேசியத் தலைநகரம்) |
ஸ்ரீஅனில் பய்ஜால் |
புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) |
டாக்டர்.கிரண் பேடி |
நன்றி : தி இந்து (ஆங்கிலம்)
- - - - - - - - - - - - - - -