TNPSC Thervupettagam

இட ஒதுக்கீட்டுக் கொள்கை

February 19 , 2019 2104 days 18620 0

இட ஒதுக்கீடு

  • இடஒதுக்கீடு என்பது தகுதியுள்ள மக்களுக்கான உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை உறுதி செய்யும் ஒரு சமூக நடவடிக்கையாகும்.
  • இது சமூக நீதியின் ஒரு வகையாகும்.
  • இந்திய அரசியலமைப்பு இட ஒதுக்கீட்டிற்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது.
  • தற்போது திறந்தவெளிப் போட்டியின் மூலம் அகில இந்திய அளவில் மத்தியப் பணி நிலையில் நேரடி ஆட்சேர்ப்பில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முறையே 15 சதவிகிதம், 7.5 சதவிகிதம் மற்றும் 27 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
  • திறந்தவெளிப் போட்டியின் மூலம் அல்லாமல் அகில இந்திய அளவிற்கான நேரடி ஆட்சேர்ப்பின் போது பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முறையே 66 சதவிகிதம், 7.5 சதவிகிதம் மற்றும் 25.84 சதவிகிதம் என்று இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
  • நலிவுற்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு போன்ற சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளது.
அரசியலமைப்பில்
  • இந்திய அரசியலமைப்பு ஷரத்துகளான 15(4), 16(4) மற்றும் 46 ஆகியவை சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோர்களின் வளர்ச்சிக்கான சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.
பிராமணர் அல்லாதோருக்கான திட்ட அறிக்கை
  • அரசாங்க வேலைகளில் குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத்திற்கெதிராக 1913ஆம் ஆண்டில் 3 முஸ்லீம் கூட்டிணைவுகள் மற்றும் தென்னிந்திய கூட்டிணைவுகள் ஆகியவை ஒன்றாக இணைந்து மதராஸ் மாகாணத்தின் அப்போதைய வைசிராயிடம் மனு ஒன்றை அளித்தன.
  • நீதிக் கட்சியானது பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் நிலையினை உயர்த்திடப் பணியாற்றியது.
  • மதராஸ் மாகாணத்தில் முதன் முறையாக சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மிகப்பெரும் அளவில் பங்கெடுப்பதற்கான கோரிக்கையானது மிகச் சிறிய ஒரு உயர்மட்ட குழுவினரால் 1916இல் ஒரு விளக்க அறிக்கையாக அளிக்கப்பட்டது.
  • இந்த விளக்க அறிக்கையானது 1916ஆம் ஆண்டின் பிராமணர் அல்லாதவரின் விளக்க அறிக்கை என்றறியப்படுகிறது. இது கல்வி, தொழில் மற்றும் அரசுப் பணிகளில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதோரின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது.
  • நீதிக் கட்சி 1920ஆம் ஆண்டில் அமைச்சரவையை உருவாக்கிய போது சாதிவாரியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முயன்றது.
1921 ஆம் ஆண்டின் தீர்மானம்
  • அரசாங்க அலுவலகங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினர் வகிக்கும் பதவிகளின் விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அரசிற்கு பரிந்துரை செய்வதற்காக 1921ஆம் ஆண்டு ஆகஸ்டில் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர்கள், இந்திய கிறித்துவர்கள், முஸ்லீம்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் இதர பிரிவினர் போன்ற ஒரு முறையான பொது வரிசையில் நியமனங்கள் பிரிக்கப்பட்டன.
  • இது வருவாய் வாரியத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்தத் தீர்மானம் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1921ஆம் ஆண்டில் முதன்முறையாக வகுப்புவாரி பிரதிநித்துவத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
வகுப்புவாரி பிரதிநித்துவத்திற்கான அரசாணை
  • அரசு நியமனங்களில் பிராமணர் அல்லாதோர்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்திட 1922ஆம் ஆண்டில் மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டது.
  • இதற்கிடையில் அரசாங்கம் 1925ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தவிர்த்த மற்ற பிரிவினர் என்ற இரண்டு பட்டியல்களை அறிவித்தது.
  • விதி 92-ன் கீழ், தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து மற்ற பிரிவுகளுக்கு மாறிய, தகுதியுள்ளவர்களுக்கு பகுதி கட்டணச் சலுகையை அளிக்கும் முதலாவது அரசாணை இதுவாகும். இது ஆதிதிராவிடர்களும் கல்வித் துறைகளில் பயனடைய உதவியது.
  • பிராமணர் அல்லாதோர்களும் தமது பங்களிப்பினைக் கொண்டிருப்பதற்காக, 1927ஆம் ஆண்டில் முக்கியமான மூன்றாவது அரசாணை வெளியிடப்பட்டது.
  • சமூகங்கள் 5 பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டன. ஆனால் ஒவ்வொரு பிரிவுகளுக்கான நியமனங்களின் விகிதங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
    • பிராமணர் அல்லாத இந்துக்கள் (5/12)
    • பிராமணர்கள் (2/12)
    • முஸ்லீம்கள் (2/12)
    • ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறித்தவர்கள் (2/12) மற்றும்
    • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (2/12)
  • இந்த நிலை 1947 வரை தொடர்ந்து நீடித்தது.
1928
  • மும்பை மாநில அரசினால் பின்வரும் வகைப்பாடுகள் உருவாக்கப்பட்டன.
    • தாழ்த்தப்பட்ட பிரிவினர்.
    • பழங்குடியினர் மற்றும் மலைகளில் வாழும் பழங்குடியினர்.
    • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
1931
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக தனித் தேர்தல் முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
  • இறக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி தொடங்கினார் (1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று கையெழுத்திடப்பட்ட பூனா உடன்படிக்கை).
  • இறுதியாக இந்துக்கள் மற்றும் தலித் தலைவர்களுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட ஒப்புக் கொள்ளப்பட்டது. இது பூனா ஒப்பந்தம் என்றறியப்படுகிறது.
  • மதராஸ் மாநில சட்டமன்றக் குழுவின் உறுப்பினரான ரெட்டைமலை சீனிவாசன், இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றார்.
  • ஆங்கில அரசாங்கம் சிறுபான்மையினரின் பிரதிநிதியாக ரெட்டைமலை சீனிவாசனையும் பட்டியலிடப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாக அம்பேத்கரையும் நியமித்தது.
  • 1935ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் படி, மதராஸ் மாகாணமானது சட்ட மேலவை மற்றும் சட்ட கீழவை ஆகிய இரு அவைகளைக் கொண்டுள்ளது.
  • சட்டமன்றக் கீழவை 215 உறுப்பினர்களைக் கொண்டது. வகுப்புவாத பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • 146 பொதுத் தொகுதிகளில் 30 தொகுதிகள் பட்டியலிடப்பட்ட பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
1943
  • டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரால் வைசிராய்க்கு சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பாணையின் படி, பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கு என்று அரசுப் பணிகளில் ஒதுக்கப்பட்ட33 சதவிகித இட ஒதுக்கீடானது நடைமுறைக்கு வந்தது.
1944
  • இந்திய கல்வித் துறையானது பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கு கல்வி உதவித் தொகையை அறிவித்தது.
1946
  • மத்திய அரசுப் பணிகளில் பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடானது 8.33 சதவிகிதத்திலிருந்து 12.33 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
1946-48
  • மத்திய அரசுப் பணிகளில் பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடானது 16.66 சதவிகிதத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.
சம்பகம் துரைராஜன் வழக்கு 1951
  • மதராஸ் மாகாணம் எதிர் சம்பகம் துரைராஜன் வழக்கு என்பது இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு புகழ்மிக்க வழக்காகும்.
  • இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்திற்கு இட்டுச் சென்றது.
  • இது இந்தியக் குடியரசில் இட ஒதுக்கீடு தொடர்பான முதலாவது மிக முக்கியமான தீர்ப்பாகும். 1927-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்த மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தீர்ப்பினை இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது.
  • இது போன்ற இட ஒதுக்கீடுகள் அளிப்பது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 16(2)-ற்கு எதிரானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருதியது.
முதலாவது திருத்தம் 1951
  • சம்பகம் துரைராஜன் வழக்கானது 1951-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் ஷரத்து 15-ன் பிரிவு 4-ஐச் சேர்க்க வழிவகை செய்தது.

  • ஷரத்து 15-ன் பிரிவு 4- பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், சமூக மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடிமக்களுக்கு அரசு சிறப்புச் சலுகைகளை அளிப்பதற்கு ஷரத்து 29-ன் பிரிவு (2)  அல்லது ஷரத்து 15(4) எந்தவொரு விதியும் தடை விதிக்கவில்லை.
சங்கரி பிரசாத் எதிர் இந்திய அரசு (1951)
  • சங்கரி பிரசாத் எதிர் இந்திய அரசு வழக்கில் இந்திய அரசியலமைப்பின் முதலாவது திருத்தம் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் நோக்கம் இந்திய பாராளுமன்றத்தால் திருத்தம் செய்யப்பட்ட முதலாவது திருத்தமானது சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்பது குறித்ததாகும்.
  • இந்திய உச்ச நீதிமன்றம் முதலாவது திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் ஷரத்து 368-ஐப் பயன்படுத்தி பாராளுமன்றம் அரசியலமைப்பில் திருத்தம் செய்யலாம் என்றும் கூறியது.
1953 – முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • ஷரத்து 340-ன் கீழ் காகா கலேல்கர் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பிரச்சனைகளை இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து 1955-ல் தனது அறிக்கையினை அளித்தது.
  • இது சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டது.
  • மத்திய அரசு, மாநில அரசுகளை சமூக மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும்படி வலியுறுத்தியது.

பரிந்துரைகள்

  • நில சீர்திருத்தங்கள், கிராமப் பொருளாதார மறுசீரமைப்பு, பூதான் இயக்கம், ஊரக மற்றும் குடிசைத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி, ஊரக வீட்டு வசதி, பொதுச் சுகாதாரம், ஊரக குடிநீர் விநியோகம், கல்வி, பல்கலைக்கழக கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவையே இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்த மிகவும் முக்கிய தீர்வாகும்.
  • 1961-ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பானது சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். மேலும் அது பெண்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதியது.
  • மேலும் இந்த ஆணையமானது அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 70 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
1979 – மண்டல் குழு
  • இந்தியாவில் சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் கண்டறிவதற்காக ஜனவரி 1, 1979-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதம அமைச்சரான மொரார்ஜி தேசாய் என்பவரால் சமூக மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான ஆணையம் அல்லது மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது.

  • இந்தக் குழு பரிந்துரைத்த சாதி, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை கண்டறிதல் என்ற அடிப்படையில் கண்டறியப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 1980-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 52 சதவிகிதமாக உள்ளனர்.
  • மண்டல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டில் கடைசியாக 1931 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 52% சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர்.
  • மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது. இதன் மூலம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான மொத்த ஒதுக்கீடானது 49 சதவிகிதமாக மாறியது.
  • இக்குழுவின் அறிக்கை 1983-ல், இறுதி செய்யப்பட்டாலும் 1990-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதியன்று வி.பி. சிங் தலைமையிலான அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்த விரும்புவதாக அறிவித்தது.
1982
  • 1982 ஆம் ஆண்டில், பொதுத் துறை மற்றும் அரசால் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு முறையே 15 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அரசுக் குறிப்பு கூறியது.
1991
  • 1991 ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசானது மேல்தட்டு சாதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தது. மேலும் இந்த முடிவை எடுக்கும் முதல் அரசாங்கம் இதுவாகும்.
1992 – மண்டல் வழக்கு
  • இது இந்திரா சகானி வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வாகும்.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது மண்டல் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் இட ஒதுக்கீடானது 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியுள்ளது. மேலும் இது இட ஒதுக்கீட்டின் மூலம் அளிக்கப்படும் பயன்களிலிருந்து “கிரீமி லேயர் பிரிவினரை” அல்லது பசையடுக்குப் பிரிவினரை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • ஷரத்து 16(4)-ன் படி குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களைப் பொருளாதார ரீதியில் அல்லாது சாதி அடிப்படையில் மட்டுமே கண்டறிய முடியும்.

  • ஷரத்து 16(4) ஆனது, ஷரத்து 16(1)-ற்கு விதி விலக்கானது அல்ல.
  • ஷரத்து 16(4)-ன் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஷரத்து 15(4)-ன் கீழ் உள்ளவர்களைப் போன்று கருதப்பட மாட்டார்கள். உதாரணம், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து “கிரீமி லேயர் பிரிவினரை” அல்லது பசையடுக்குப் பிரிவினரை கண்டிப்பாக நீக்க வேண்டும்.
  • கிரீமி லேயர் தகுதி நிலையானது 1993 ஆம் ஆண்டில் 1 இலட்சமாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இது திருத்தியமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டில் 5 இலட்சமாகவும் 2008 ஆம் ஆண்டில் 4.5 இலட்சமாகவும் 2013 ஆம் ஆண்டில் 6 இலட்சமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வரம்பு தற்பொழுது 8 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது (2017 ஆம் ஆண்டு செப்டம்பரில்).
  • ஷரத்து 16(4)-ஆனது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாகவும் வகைப்படுத்த அனுமதிக்கிறது.
  • மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • 50 சதவிகித இட ஒதுக்கீட்டு வரம்பானது 27 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 5 சதவிகிதம் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோர்களுக்கும் அளிக்கப்பட்டு மொத்தம் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டு என்ற வரம்பைக் குறிக்கின்றது.
  • மேலும் உச்ச நீதிமன்றமானது இந்த முறையை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • “ஆனால் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் துயர நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முறை தளர்த்தப்படலாம். ஆனால் அவ்வாறு செயல்படும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இதற்கு முன்னெடுத்துச் செல்லுதல் முறை பொருந்தும். ஆனால் அவ்வாறு செய்யப்படும் போதும் 50 சதவிகித வரம்பைத் தாண்டக் கூடாது.
  • பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றக் கூடாது. ஆனால் 5 வருடங்களுக்கு அது தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ. இனாம்தார் எதிர் மகாராஷ்டிர மாநிலம்
  • அரசு உதவி பெறாத தனியார் தொழில்சார் கல்லூரிகளில் இந்திய உச்ச நீதிமன்றம் அரசின் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. மேலும் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை அரசு திணிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இது 2005-ஆம் ஆண்டு, டிசம்பரில் பாராளுமன்றத்தால் 93-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2005 இயற்றப்பட வழி வகுத்தது.
93-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
  • 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில 27 சதவிகித இடஒதுக்கீட்டை அளிக்க அரசு முடிவு செய்தது.
  • இந்தியாவில் 2006-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 93-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி ஷரத்து 15 உடன் 5-வது பிரிவு இணைக்கப்பட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோர்களின் நலனுக்காக சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் சிறப்புச் சலுகைகளை எந்த ஒன்றாலும் தடுக்க முடியாது என்று இந்தப் பகுதி கூறுகிறது.
அசோக் குமார் தாக்கூர் எதிர் இந்திய அரசு
  • இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 52 சதவிகிதத்தினர் என்ற மண்டல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு இந்தியப் பொதுநல வழக்காகும்.
  • 93-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2005 ஆனது மாநில அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்ற வகையில் அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை” பாதிக்கவில்லை.
  • “கிரிமீ லேயர்” அல்லது பசையடுக்கு முறை என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளம் காணும் வரையறைகளில் ஒன்றாகும்.
  • எனவே இந்த “கிரீமி லேயர்” முறையானது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் தனி வகுப்பினர்களாகவே கருதப்படுவர்.
நாகராஜ் வழக்கு 2006
  • 1995 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட அனுமதிக்கப்பட்ட 5 வருட காலம் முடிவடையும் முன்னர் ஷரத்து 16-ஐ திருத்தம் செய்வதற்காக 77-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • மேலும் இடஒதுக்கீட்டின் மூலம் பதவி உயர்வு பெற்ற பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு மூப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டின் பயன்களை அளிப்பதற்காக 85-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலமும் அந்த ஷரத்து மாற்றியமைக்கப்பட்டது.

  • ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள இடங்களை தனி மற்றும் தனித்துவக் குழுவாக கருத அரசிற்கு அனுமதி அளிப்பதற்காக 81-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டு உச்ச வரம்பு பொருந்தாது.
  • பதவி உயர்வுகளில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு அரசுச் சலுகைகளை அளிப்பதற்காக 82-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது ஷரத்து 335-ல் சில விதிமுறைகளை சேர்த்துள்ளது. மேலும்
    • எந்தவொரு தேர்வுகளிலும் தகுதி மதிப்பெண்களில் வரம்பைத் தளர்த்தல்
    • மதிப்பிடும்போது கண்டிப்பான மதிப்பிடுதலைக் குறைத்தல்
    • மத்திய மற்றும் மாநில விவகாரங்களுடன் தொடர்புடைய பணிகள் மற்றும் சேவைகளில் எந்தவொரு வகுப்பு மற்றும் பிரிவினருக்கும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு அளிக்கப்படுதல்.

          ஆகியவற்றிற்கு இந்த ஷரத்து அனுமதியளிக்கும்.

  • 77-வது, 81-வது, 82-வது மற்றும் 85-வது அரசியலமைப்புத் திருத்தங்களின் செல்லுபடித் தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • ஆனால் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் / பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்கான பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற மாநில அரசு சுயமாக முடிவெடுக்க விரும்பினால் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அரசு அந்த வகுப்பினரின் பிற்படுத்தப்பட்டதற்கான தகுதியுள்ள தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும், மேலும் அந்த வகுப்பினர்களின் பிரதிநிதித்துவம் பற்றாக்குறையாக இருந்தால் அவை குறித்தத் தகவல்களையும் அரசு சேகரிக்க வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இதை வேறு விதமாக கூற வேண்டும் என்றால், இந்திய உச்ச நீதிமன்றமானது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லுபடியாகும் என்று கூறியது. ஆனால் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளுவதற்கு முன்னால் ஒவ்வொரு நிலையிலும் கண்டிப்பாக தேவைப்படும் காரணங்களாக அந்த வகுப்பினர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, பிரதிநிதித்துவம் குறைவாக இருத்தல் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் உள்ளிட்ட காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதமன்றம் கூறியது.
ஏப்ரல்-2008
  • 2008-ஆம் ஆண்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று மத்திய அரசினால் உதவி அளிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • மேலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையிலிருந்து “கிரீமி லேயர் பிரிவினரை” நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்டம்பர் 2018
  • பதவி உயர்வுகளில் பட்டியலிடப்பட்ட பிரிவினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.
  • இந்தியத் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வினால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஏக மனதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் அரசாங்கப் பணிகளுக்கான பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டுக்கான (Quota) நடைமுறைக்கு வழிவகுத்தது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது நாகராஜன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை மாற்றியமைத்தது.
  • 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பானது பிற்படுத்தப்பட்ட தன்மையை நிரூபிப்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்களை மாநிலங்கள் சேகரிக்கத் தேவையில்லை என்று கூறியது. மேலும் இது இந்திரா சகானி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்றும் கூறியது.
  • மேலும் இடஒதுக்கீடானது 50 சதவிகித இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை மீறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
  • “கிரீமி லேயர்” என்ற முறை பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களின் அரசாங்கப் பணிகளுக்கான பதவி உயர்வுகளுக்குப் பொருந்தாது என்றும் இந்தத் தீர்ப்பு கூறுகிறது.
தமிழ்நாட்டில்
  • தமிழ்நாட்டில் 1947-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது.
  • இந்தக் கட்சி சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
  • 1946-47-ஆம் ஆண்டுகளில் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த டி. பிரகாசம் செயல்திறன் மற்றும் நுண்ணறிவினை காரணம் காட்டி 1947-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வகுப்புவாத அரசாணையை எதிர்த்தார். மேலும் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் “திறந்த நிலைப் போட்டி” எனும் பிரிவிற்காக 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை வெளியிட்டார்.
1951
  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீடானது 16 சதவிகிதமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ககளுக்கான இட ஒதுக்கீடானது 25 சதவிகிதமாகவும் பி.எஸ். குமாரசாமி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மொத்த இட ஒதுக்கீடானது 41 சதவிகிதமாக இருந்தது.
1971 – சட்டநாதன் ஆணையம்
  • இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை பற்றி ஆராய 1971-ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியினால் ஏற்படுத்தப்பட்டது.
  • சட்டநாதன் ஆணையமானது “கிரீமி லேயரை” அறிமுகப்படுத்தியது. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 16 சதவிகிதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு என்று தனியாக 17 சதவிகிதமாகவும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றியமைக்கப் பரிந்துரை செய்தது.
  • தி.மு.க. அரசானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 31 சதவிகிதமாகவும் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 18 சதவிகிதமாகவும் அதிகரித்தது.
  • மொத்த இட ஒதுக்கீடானது 49 சதவிகிதமாக இருந்தது.
1980
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் பெறும் இட ஒதுக்கீட்டுப் பயன்களிலிருந்து “கிரீமி லேயர் பிரிவினரை” நீக்கி எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அஇஅதிமுக அரசு உத்தரவிட்டது.
  • இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெற வருமான உச்ச வரம்பு ரூ.9000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • இந்த முடிவை எதிர்த்து தி.மு.க. மற்றும் இதர எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
  • பின்னர் “கிரீமி லேயர்” திட்டம் திரும்பப் பெறப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.
  • மொத்த இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக இருந்தது.
1989
  • வன்னியர் சங்கத்திற்கு மத்திய அரசுப் பணிகளில் 2 சதவிகித இட ஒதுக்கீடும் மாநில அரசுப் பணிகளில் 20 சதவிகித இட ஒதுக்கீடும் அளிக்கப்பட வேண்டும் என்று வன்னியர் சங்கத்தினரால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
  • தி.மு.க. அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்