TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 04

November 16 , 2024 70 days 517 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 04

(For English version to this please click here)

இலக்கு 2: பட்டினியின்மை

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) 2013

தொடங்கப்பட்டது:

  • 2013.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்.

NFSA 2013 சட்டத்தின் நோக்கங்கள்

  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) 2013 உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
  • அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு: இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் போதுமான அளவு மற்றும் மலிவு விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்தல், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவுகளில் கவனம் செலுத்துதல்.
  • மலிவு விலை உணவு தானியங்கள்: இந்தச் சட்டம் தகுதியான பயனாளிகளுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பசி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பு: NFSA சட்டத்தின் முக்கிய நோக்கம் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இது சார்ந்த தொடர்புடைய நோய்களை எதிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்வதாகும்.
  • பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் குறி வைத்தல்: இந்தச் சட்டம் மிகவும் உதவி தேவைப் படும் குடும்பங்களைக் கண்டறிந்து உதவுவதில் கவனம் செலுத்துகிறது.

NFSA சட்டத்தின் கீழ் பயனாளிகள்

  • NFSA சட்டமானது சமூகத்தின் பல்வேறு பாதிக்கப்படக் கூடியப் பிரிவுகளுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குகிறது, அவற்றுள் பின்வருவன அடங்கும்:
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே (BPL) உள்ள குடும்பங்கள்: BPL பிரிவின் கீழ் அடையாளம் காணப் பட்ட குடும்பங்கள்.
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள்: ஏழைகளில் மிகவும் ஏழ்மையானவர்கள், பெரும்பாலும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளிகள் இல்லாத குடும்பங்களுக்கும் பொருந்தும்.

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்: தாய்வழி ஊட்டச்சத்துக்கான சிறப்பு ஒதுக்கீடுகள்.
  • குழந்தைகள் (6 மாதங்கள் முதல் 14 வயது வரை): மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆதரவினை வழங்குதல்.

பயனாளிகளுக்கான தகுதி அளவுகோல்கள்

  • முன்னுரிமைக் குடும்பங்கள் (PHH): நிலையான வருமானம் இல்லாத குடும்பங்கள், அல்லது பட்டினி நிலைக்கு அருகில் வாழும் குடும்பங்கள்.
  • இந்த குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் கிடைக்கும்.
  • பொதுக் குடும்பங்கள்: பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஆனால் "முன்னுரிமை" என வகைப்படுத்தப் படாத குடும்பங்கள்.
  • இந்தக் குடும்பங்களுக்கு குறைந்த அளவு உணவு தானியங்கள் கிடைக்கும்.

NFSA சட்டத்தின் கீழ் நன்மைகள்

மானிய உணவு தானியங்கள்:

  • முன்னுரிமைக் குடும்பங்கள்: ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ (பெருவகைத் தானியங்கள், கோதுமை, அரிசி).
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள்: மானிய விலையில் மாதத்திற்கு 35 கிலோ.
  • இந்த உணவு தானியங்கள் பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

மானிய விலை:

  • உணவு தானியங்கள் அதிக மானிய விலையில் கிடைப்பதை NFSA உறுதி செய்கிறது:
  • அரிசி ஒரு கிலோவுக்கு 3 ரூபாய்.
  • கோதுமை ஒரு கிலோவுக்கு 2 ரூபாய்.
  • பெருவகைத் தானியங்கள் ஒரு கிலோவுக்கு 1 ரூபாய்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆதரவு:

  • இந்தச் சட்டம் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் மூலம் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குகிறது.

குறை தீர்ப்பு நடைமுறை:

  • உணவு தானியங்கள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மாவட்ட மற்றும் மாநில அளவில் குறை தீர்ப்பு நடைமுறைகளை நிறுவுவதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.

NFSA 2013 சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பரவல்:

  • இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியது.
  • NFSA சட்டத்தின் கீழ் 75% கிராமப்புற மக்களும், 50% நகர்ப்புற மக்களும் மானிய விலையில் உணவு பெற உரிமை பெற்றுள்ளனர்.

பொது விநியோக அமைப்பு (PDS):

  • PDS என்பது NFSA சட்டத்தின் முதுகெலும்பாகும் என்பதோடு தகுதியான குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் விநியோகிக்கப் படுவதை உறுதி செய்கிறது.
  • NSSO ஆய்வின் 2011-12 குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியான பரவல் தீர்மானிக்கப் படுகிறது.

மத்திய வெளியீட்டு விலை:

  • பெருவகைத் தானியங்கள், கோதுமை மற்றும் அரிசி ஆகியவை மானிய விலையில் வழங்கப் படுகின்றன என்ற நிலையில் இவை 2019 ஆம் ஆண்டு ஜூன் வரை மாறாமல் இருந்தது.

பயனாளிகளின் அடையாளம்:

  • NFSA சட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வழங்குவதற்கு குடும்பத்தின் மூத்தப் பெண் 'குடும்பத் தலைவர்' என்று கருதப் படுகிறார்.

  • வருமானம், தொழில் மற்றும் நில உடைமை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசால் வழங்கப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பயனாளிகளை அடையாளம் காணுகிறது.

வெளிப்படைத் தன்மை:

  • NFSA சட்டமானது வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த, பயனாளிகளின் பட்டியல்கள் மற்றும் PDS பதிவுகளைப் பொது தளத்தில் வெளியிடுவதைக் கட்டாயமாக்குகிறது.
  • பொறுப்புணர்வை உறுதிப்படுத்த சமூகத் தணிக்கை மற்றும் வழக்கமான கண்காணிப்பு இதற்கு தேவைப்படுகிறது.

NFSA சட்டத்தின் கீழ் பொறுப்புகள்

மத்திய அரசு:

  • உணவு தானிய ஒதுக்கீடு: அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு.
  • போக்குவரத்து மற்றும் கையாளுதலுக்கான நிதி: மத்திய அரசானது உணவு தானியங்களைக் கையாளுதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு நிதி வழங்குகிறது.
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: விநியோகச் செயல்முறை வெளிப்படையானது மற்றும் NFSA சட்டத்தின் நோக்கங்கள் திறம்பட பூர்த்தி செய்யப் படுவதை உறுதி செய்தல்.
  • பொறுப்புக் கூறலை உறுதி செய்தல்: குறைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் PDS செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல்.

மாநில அரசுகள்:

  • பயனாளிகளின் அடையாளம்: தகுதியான குடும்பங்களைக் கண்டறிந்து குடும்ப அட்டைகளை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பு.
  • பொது விநியோக முறை மேலாண்மை: போக்குவரத்து, நியாய விலைக் கடைகள் மற்றும் உணவு தானிய விநியோகம் உள்ளிட்ட PDS திட்டத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்தல்.
  • குறை தீர்க்கும் முறை: பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மாவட்ட மற்றும் மாநில அளவில் குறை தீர்க்கும் வழிமுறைகளை அமைத்தல்.

உள்ளூர் அதிகாரிகள்:

  • நியாய விலைக் கடைகளைக் கண்காணித்தல்: நியாய விலைக் கடைகள் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்டு.
  • பயனாளிகளின் அடையாளம்: தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு குடும்ப அட்டைகளை வழங்குதல்.

சவால்கள் மற்றும் விமர்சனங்கள்

PDS திட்டத்தில் திறமையின்மை:

  • பல்வேறு முயற்சிகள் இருந்த போதிலும், கசிவுகள், ஊழல் மற்றும் உணவு தானியங்களின் தரமற்றப் பிரச்சினைகள் உள்ளிட்டவை பொது விநியோக அமைப்பின் செயல்பாட்டில் திறமையின்மையை எடுத்துக் காட்டுகிறது.

பயனாளியின் அடையாளம்:

  • பயனாளிகளின் துல்லியமற்ற அல்லது சீரற்ற அடையாளம் அதன் பரவலில் பிழைகளுக்கு வழி வகுத்துள்ளதோடு, அங்கு தேவையுடைய சிலர் விடுபட்டுள்ளனர், மேலும் சில தகுதியற்றக் குடும்பங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

நிதி நிலைத்தன்மை:

  • உணவு தானியங்களின் மானிய விநியோகம் அரசாங்கத்தின் மீது கணிசமான நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது என்பதோடு இது நீண்ட காலத்திற்கு அத்திட்டத்தின் ஒட்டு மொத்த நிலைத் தன்மையைப் பாதிக்கலாம்.

உள்கட்டமைப்புச் சிக்கல்கள்:

  • NFSA சட்டத்தினைச் திறம்படச் செயல்படுத்த சில மாநிலங்கள் உள்கட்டமைப்பு போன்றவை (மோசமானப் போக்குவரத்து அமைப்புகள் அல்லது போதுமானச் சேமிப்பு வசதிகள் இல்லாமை போன்றவை) அடிப்படையில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.

பிராந்திய வேறுபாடுகள்:

  • மாநிலங்கள் முழுவதும் இதனைச் செயல்படுத்தும் நிலை மாறுபடுவதோடு இது பிராந்தியங்களுக்கு இடையில் உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு சமமற்ற அணுகலுக்கு வழி வகுக்கிறது.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY)

தொடங்கப்பட்டது:

  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 17.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • நிதி அமைச்சகம்.

PMGKY திட்டத்தின் நோக்கங்கள்

  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் முதன்மை இலக்குகள்:
  • கறுப்புப் பணத்தைத் தடுத்தல்: இந்தத் திட்டமானது வரி ஏய்ப்பாளர்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை எந்த அபராதமும் அல்லது வழக்கையும் சந்திக்காமல் வெளியிடுவதற்கான ஒரு முறை வாய்ப்பை வழங்குகிறது.
  • வெளிப்படுத்தப்பட்ட தொகையின் மீது அரசாங்கம் 49.9% வரி விதிக்கிறது.
  • வருமான சமத்துவம்: இந்தத் திட்டம் வருமான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதையும், சமூகத்தின் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதிக்கான அளவுகோல்கள்

PMGKY திட்டத்தின் முக்கியப் பயனாளிகள்:

  • வறுமைக் கோட்டுக்குக் கீழே (BPL) குடும்பங்கள்: BPL பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுக்குத் தகுதியுடையவர்கள்.
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள்: AAY திட்டத்தின் கீழ் அடையாளம் காணப் பட்ட குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன.
  • முன்னுரிமைக் குடும்பங்கள் (PHH): குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப் படுகின்றன.
  • புலம் பெயர்ந்தத் தொழிலாளர்கள்: குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் போன்ற அவசர காலங்களில், PMGKY புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.

PMGKY திட்டத்தின் முக்கிய நன்மைகள்

இலவச உணவு தானியங்கள்:

  • இத்திட்டம் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறது என்ற நிலையில் ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 1 கிலோ முழுக் கடலை ( கொண்டைக்கடலை) பெறுகிறார்கள்.

இலவச LPG சிலிண்டர்கள்:

  • PMGKY திட்டத்தின் கீழ், BPL குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவச LPG சிலிண்டர்களைப் பெறுகின்றன என்ற நிலையில் இது மலிவு விலையில் சமையல் எரிபொருளை உறுதி செய்கிறது.

பணப் பரிமாற்றங்கள்:

  • பெண்கள், முதியோர்கள் மற்றும் பிற விளிம்பு நிலைக் குழுக்களுக்கு அவர்களின் பொருளாதார நிலைத் தன்மையை உறுதிப்படுத்த பணப் பரிமாற்றம் மூலம் நிதி உதவி வழங்கப் படுகிறது.

முன்னணித் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுப் பரவல்:

  • இந்தத் திட்டம் முன்னணி ஊழியர்களுக்கு, குறிப்பாக கோவிட்-19 நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது.
  • இதில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்.

வேலைவாய்ப்பு உருவாக்கம்:

  • PMGKY கிராமப்புறங்களில் பணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்காக ரூ.50,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வரி ஏய்ப்பு வெளிப்பாட்டிற்கான ஆதரவு:

  • இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வெளிப்படுத்துபவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு PMGKY திட்டத்தில் 25% முதலீடு செய்வதோடு, வெளியிடப்படாத தொகையில் 50% செலுத்த வேண்டும்.
  • இது வழக்கு மற்றும் தண்டனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

கூடுதல் நன்மைகள்

சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • PMGKY, சுகாதாரக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டச் சமூகங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதன் மூலம் விரிவான சமூகப் பாதுகாப்பை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிராமப் பொருளாதார வளர்ச்சி:

  • கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) போன்ற கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை PMGKY ஆதரிக்கிறது.

சுகாதார நன்மைகள்:

  • ஆயுஷ்மான் பாரத் யோஜனா போன்ற திட்டங்கள் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியப் பிரிவினருக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

  • PMGKY பெண்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதன் மூலம், குறிப்பாக LPG மானியங்கள் மூலம், அவர்களின் உடல்நலம் மற்றும் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்துவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.

சவால்கள் மற்றும் சிக்கல்கள்

பயனற்றச் செயல்படுத்தல்:

  • அதிகாரத்துவக் காலதாமதங்கள் மற்றும் திறமையின்மை ஆகியன இந்தத் திட்டம் சுமூகமாக செயல்படுத்தப் படுவதைத் தடுக்கின்றன, இதனால் அந்தச் சேவைகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

போதிய பரவல் இல்லை:

  • இத்திட்டத்தில் பரந்த பரவல் இலக்குகள் இருந்த போதிலும், தவறான அடையாளம் அல்லது ஆவணங்கள் காரணமாக பல பயனாளிகள் இதிலிருந்து விடுபட்டுள்ளனர்.

ஊழல் மற்றும் கசிவுகள்:

  • இதன் நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன இதன் விளைவாக இப்பலன்கள் தகுதி கொண்டப் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை.

எண்ணிம உள்கட்டமைப்பு சார்ந்தது:

  • மோசமான இணைய இணைப்பு மற்றும் குறைந்த எண்ணிமக் கல்வியறிவு உள்ள பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில், எண்ணிம தளங்களில் இந்தத் திட்டத்தின் நம்பிக்கை சிக்கலாக உள்ளது.

தற்காலிக நடவடிக்கைகள்:

  • இந்தத் திட்டமானது உடனடி நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், நீண்ட கால வறுமை ஒழிப்புக்குப் பதிலாக இது குறுகிய காலத் தீர்வுகளின் மீது அதிக கவனம் அளிப்பதாக உள்ளது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்