TNPSC Thervupettagam

இந்தியாவில் புலிகள் காப்பகம்

September 26 , 2017 2469 days 17619 0
  • இந்தியாவிலுள்ள 50 புலிகள் காப்பகங்களும் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் (Project Tiger) கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் (National Tiger Conservation Authority-NTCA) நிர்வகிக்கப்படுகின்றன.
  • இந்திய அரசானது 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அழிந்து போகும் அபாயத்திலுள்ள உயிரினமான (Endangered species) புலிகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தியது.
  • உலகில் 70% புலிகளின் இருப்பிடமாக இந்தியா உள்ளது. 2006-ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2011 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் அதிகரித்துள்ளது. உலக வனவிலங்கு நிதியமும் (World Wildlife Fund) உலகளாவிய புலிகள் மன்றமும் (Global Tiger Forum) 2016-ம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை, உலகளவில் 3890 ஆக உயர்ந்து இருக்குமென அறிவித்துள்ளன.
  • 1973-74 இல் 9 காப்பகங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது தற்போது 50 காப்பகங்களைக் கொண்டதாக வளர்ந்துள்ளது. இந்த புலிகள் பாதுகாப்பு திட்டமானது10 கி.மீ.2 மொத்த பரப்பளவை கொண்டுள்ளது.
  • தற்போதுள்ள புலிகள் காப்பகங்கள் இந்தியாவிலுள்ள அடர்ந்த காடுகளில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளன.
  • 53,547.5 சதுர கிலோமீட்டர் (20,674.8 சதுர மைல்) பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகங்களானது மாநில வனத்துறைகளால் பராமரிக்கப்படுகிறது.
  • கார்பெட், கன்ஹா, காசிரங்கா, பெரியார், ரந்தம்பூர், சுந்தரவனம் ஆகிய ஆறு புலிகள் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மதிப்பீட்டின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த புலிகள் காப்பகங்களினுடைய பொருளாதாரப் பயன்களின் மதிப்பானது ஆண்டுக்கு3 பில்லியன் முதல் 17.6 பில்லியன் வரை உள்ளதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
  • 2016 ஆம் ஆண்டு முதலாவது காலாண்டில் அதிகப்படியான புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் மொத்த இறப்பு விகிதத்தை விட அதிகமாகும். இந்த முக்கியமான வெளிப்பாடானது புலிகள் கணக்கெடுப்பு எண்ணிக்கைப் பற்றி, அறிவியலாளர் சமூகத்தால் விவாதத்திற்குள்ளாக்கப்பட்ட சமயத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

இந்தியாவின் புலிகள் காப்பகங்கள்

வ.எண். புலிகள் காப்பகத்தின் பெயர் மாநிலம் மைய / அல்லது நெருக்கடியான வசிப்பிட பரப்பளவு (சதுர கி.மீ.) புலிகள் வசிப்பிடத்தின் புறப்பகுதி பரப்பளவு (சதுர கி.மீ.) மொத்த பரப்பளவு (சதுர கி.மீ.)
1. பந்திப்பூர் கர்நாடகா 872.24 584.06 1456.3
2. கார்பெட் உத்தரகாண்ட்   821.99 466.32 1288.31
அமங்கார் (இது கார்பெட் புலிகள் காப்பகத்தின் புறப்பகுதியை சேர்ந்தது) உத்திரப் பிரதேசம் 80.60 80.60
3. கன்ஹா மத்தியப் பிரதேசம் 917.43 1134.36 2051.791
4. மானஸ் அஸ்ஸாம் 840.04 2310.88 3150.92
5. மேல்காட் மஹாராஷ்டிரா 1500.49 1268.03 2768.52
6. பலாமவ் ஜார்க்கண்ட் 414.08 715.85 1129.93
7. ரந்தம்பூர் ராஜஸ்தான் 1113.364 297.9265 1411.291
8. சிமிலிபால் ஒடிஸா 1194.75 1555.25 2750.00
9. சுந்தரவனம் மேற்கு வங்காளம் 1699.62 885.27 2584.89
10. பெரியார் கேரளா 881.00 44.00 925.00
11. சரிஸ்கா ராஜஸ்தான் 881.1124 332.23 1213.342
12. பக்சா மேற்கு வங்காளம் 390.5813 367.3225 757.9038
13. இந்திராவதி சத்தீஸ்கர் 1258.37 1540.70 2799.07
14. நம்தபா அருணாச்சலப் பிரதேசம் 1807.82 245.00 2052.82
15. துத்வா உத்திரப் பிரதேசம் 1093.79 1107.9848 2201.7748
16. களக்காடு - முண்டந்துறை தமிழ்நாடு 895.00 760.542 1601.542
17. வால்மீகி பீஹார் 598.45 300.93 899.38
18. பேன்ச் மத்தியப் பிரதேசம் 411.33 768.30225 1179.63225
19. தடோபா-அந்தாரி மத்தியப் பிரதேசம் 625.82 1101.7711 1727.5911
20. பந்தவ்கர் மத்தியப் பிரதேசம் 716.903 820.03509 1598.10
21. பன்னா மத்தியப் பிரதேசம் 576.13 1021.97 1578.55
22. தம்பா மிசோரம் 500.00 488.00 988.00
23. பத்ரா கர்நாடகா 492.46 571.83 1064.29
24. பேன்ச் மஹாராஷ்டிரா 257.26 483.96 741.22
25. பக்கே அருணாச்சலப் பிரதேசம் 683.45 515.00 1198.45
26. நமேரி அஸ்ஸாம் 200.00 144.00 344.00
27. சாத்புரா மத்தியப் பிரதேசம் 1339.264 794.04397 2133.30797
28. ஆனைமலை தமிழ்நாடு 958.59 521.28 1479.87
29. உதாந்தி - சீதாநதி சத்தீஸ்கர் 851.09 991.45 1842.54
30. சத்கோசியா ஒடிஸா 523.61 440.26 963.87
31. காசிரங்கா அஸ்ஸாம் 625.58 548.00 1173.58
32. அச்சனக்மர் சத்தீஸ்கர் 626.195 287.822 914.017
33. தந்தேலி - அன்ஷி கர்நாடகா 814.884 282.63 1097.54
34. சஞ்சய் - தூப்ரி மத்தியப் பிரதேசம் 812.571 861.931 1674.502
35. முதுமலை தமிழ்நாடு 321.00 367.59 688.59
36. நாகர்ஹோல் கர்நாடகா 643.35 562.41 1205.76
37. பரம்பிக்குளம் கேரளா 390.89 252.772 643.662
38. சஹயாத்ரி மஹாராஷ்டிரா 600.12 565.45 1165.57
39. பிலிகிரி ரங்கநாதர் கோவில் கர்நாடகா 359.10 215.72 574.82
40. காவால் தெலுங்கானா 893.23 1125.89 2019.12
41. சத்தியமங்கலம் தமிழ்நாடு 793.49 614.91 1408.40
42. முகுந்த்ரா மலைகள் ராஜஸ்தான் 417.17 342.82 759.99
43. நவேகான் - நாகசீரா மஹாராஷ்டிரா 653.674 - 653.674
44. நாகர்ஜுனசாகர் - ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசம் 2595.72 700.54 3296/31
45. அம்ராபாத் தெலுங்கானா 2166.37 445.02 2611.39
46. பிலிபித் உத்திரப் பிரதேசம் 602.7980 127.4518 730.2498
47. போர் மஹாராஷ்டிரா 138.12 - 138.12
48. ராஜாஜி புலிகள் காப்பகம் உத்தரகாண்ட் 255.63 819.54 1075.17
49. ஓராங் புலிகள் காப்பகம் அஸ்ஸாம் 79.28 413.18 492.46
50. கம்லாங் புலிகள் காப்பகம் அருணாச்சலப் பிரதேசம் 671.00 112.00 783.00
40340.12 30686.98 71027.10

புலிகள் காப்பகங்கள் எண்ணிக்கை -  மாநிலம் மற்றும் எண்ணிக்கை வாரியாக 

வ.எண். மாநிலம் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை புலிகள் காப்பகம்
1. அஸ்ஸாம் 04 v  காசிரங்கா புலிகள் காப்பகம் v  மானாஸ் புலிகள் காப்பகம் v  நமேரி புலிகள் காப்பகம் v  ஓராங் புலிகள் காப்பகம்
2. அருணாச்சலப் பிரதேசம் 03 v  நம்தபா புலிகள் காப்பகம் v  பக்கே புலிகள் காப்பகம் v  கம்லாங் புலிகள் காப்பகம்
3, ஆந்திரப் பிரதேசம் 01 v  நாகர்ஜுனசாகர் - ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்
4. பீகார் 01 v  வால்மீகி புலிகள் காப்பகம்
5. சத்தீஸ்கர் 03 v  அச்சனக்மர் புலிகள் காப்பகம் v  இந்திராவதி புலிகள் காப்பகம் v  உதந்தி & சீதாநதி புலிகள் காப்பகம்
6. ஜார்க்கண்ட் 01 v  பலாமவ் புலிகள் காப்பகம்
7. கர்நாடகா 05 v  பந்திப்பூர் புலிகள் காப்பகம் v  நாகர்ஹோல் புலிகள் காப்பகம் v  பத்ரா புலிகள் காப்பகம் v  அன்ஷி - தந்தேலி புலிகள் காப்பகம் v  பிலிகிரி ரங்கசாமி கோவில் வனவிலங்கு காப்பகம்
8. கேரளா 02 v  பெரியார் புலிகள் காப்பகம் v  பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்
9. மத்தியப் பிரதேசம் 06 v  கன்ஹா புலிகள் காப்பகம் v  பன்னா புலிகள் காப்பகம் v  பேன்ச் புலிகள் காப்பகம் v  சஞ்சய் தூப்ரி புலிகள் காப்பகம் v  பந்தவர்கர் புலிகள் காப்பகம் v  சாத்புரா புலிகள் காப்பகம்
10. மஹாராஷ்டிரா 06 v  மேல்காட் புலிகள் காப்பகம் v  பேன்ச் புலிகள் காப்பகம் v  டதோபா அந்தாரி புலிகள் காப்பகம் v  சஹயாத்ரி புலிகள் காப்பகம் v  நங்சிரா - நவிகியான் புலிகள் காப்பகம் v  போர் புலிகள் காப்பகம்
11. மிசோரம் 01 v  தம்பா புலிகள் காப்பகம்
12. ஒடிஸா 02 v  சத்கோசியா புலிகள் காப்பகம் v  சிம்லிபால் புலிகள் காப்பகம்
13. ராஜஸ்தான் 03 v  ரந்தம்பூர் புலிகள் காப்பகம் v  சரிஸ்கா புலிகள் காப்பகம் v  முகுந்த்ரா மலை புலிகள் காப்பகம்
14. தமிழ்நாடு 04 v  களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் v  ஆனைமலை புலிகள் காப்பகம் v  முதுமலை புலிகள் காப்பகம் v  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
15. தெலுங்கானா 02 v  காவால் புலிகள் காப்பகம் v  நாகார்ஜுன சாகர் - ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்
16. உத்திரப் பிரதேசம் 02 v  தூத்வா புலிகள் காப்பகம் v  பிலிபித் புலிகள் காப்பகம்
17. உத்தரகாண்ட் 02 v  கார்பெட் புலிகள் காப்பகம் v  ராஜாஜி புலிகள் காப்பகம்
18. மேற்கு வங்காளம் 02 v  பக்சா புலிகள் காப்பகம் v  சுந்தர்பன்ஸ் புலிகள் காப்பகம்

-------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்