TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: வடகிழக்கு

May 20 , 2019 2061 days 1105 0
  • அசாம், அருணாசல பிரதேசம், சிக்கிம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், மேகாலயா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள். கி.மு. முதலாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பிராந்தியம் பிரசித்தி பெற்ற வணிகப் பாதையாக இருந்தது. கி.பி. முதலாம் ஆயிரம் ஆண்டுகளின் பெரும்பான்மையான ஆண்டுகள் இந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகள் காமரூபா என்ற பேரரசின் ஆட்சிக்குக் கீழ் இருந்தன.
  • 7-ம் நூற்றாண்டில் யுவான் சுவாங் இங்கே வந்திருக்கிறார். ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிறகு 19-ம், 20-ம் நூற்றாண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய விடுதலைக்குப் பிறகு வடகிழக்குப் பிராந்தியங்கள் என்பவை அசாமையும் மணிப்பூர், திரிபுரா ஆகிய சமஸ்தானங்களையும் மட்டுமே உள்ளடக்கியிருந்தது. அசாமிலிருந்து நாகாலாந்து 1963-லும், மேகாலயா 1972-லும், அருணாசல பிரதேசம் 1975-லும், மிசோராம் 1987-லும் உருவாக்கப்பட்டன.
  • 1956-லிருந்து யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரும் திரிபுராவும் 1972-ல் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
அசாம்
  • நாட்டின் 17-வது பெரிய மாநிலம். பரப்பளவு 78,438 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள்தொகை 12 கோடி (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 2.58%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 397. இந்துக்கள் 61.47%, முஸ்லிம்கள் 34.22%, கிறிஸ்தவர்கள் 3.74%. உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள் 6.9%. பழங்குடியினர் 13%. மக்களவை: 14; மாநிலங்களவை: 7.
அருணாசல பிரதேசம்
  • நாட்டின் 15-வது பெரிய மாநிலம். பரப்பளவு 83,743 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அருணாசல பிரதேசத்தின் மக்கள்தொகை 84 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.11%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 17. இந்துக்கள் 29.04%, முஸ்லிம்கள்1.9%, கிறிஸ்தவர்கள்30.26%, டோன்யி-போலோ சமயத்தினர் 26.2%, திபெத்திய பௌத்தர்கள் 11.76%. உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள் 0.6% பழங்குடியினர் 64.2%. மக்களவை: 2; மாநிலங்களவை: 1.
சிக்கிம்
  • நாட்டின் 28-வது பெரிய மாநிலம். பரப்பளவு 7,096 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சிக்கிமின் மக்கள்தொகை 11 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.05%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 86. இந்துக்கள் 57.8%, பௌத்தர்கள் 27.3, முஸ்லிம்கள் 1.4%, கிறிஸ்தவர்கள் 9.9%. உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள் 5%. பழங்குடியினர் 20.6%. மக்களவை: 1; மாநிலங்களவை: 1.
திரிபுரா
  • நாட்டின் 27-வது பெரிய மாநிலம். பரப்பளவு 10,486 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி திரிபுராவின் மக்கள்தொகை 73 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.3%). மக்கள் அடர்த்தி
  • ஒரு சதுர கிமீக்கு இந்துக்கள் 83.40%, முஸ்லிம்கள் 8.60%, கிறிஸ்தவர்கள் 4.35%, பௌத்தர்கள்
  • 41%. உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள்
  • 4%. பழங்குடியினர் 31.1%. மக்களவை: 2; மாநிலங்களவை: 1.
நாகாலாந்து
  • நாட்டின் 26-வது பெரிய மாநிலம். பரப்பளவு 16,579 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாகாலாந்தின் மக்கள்தொகை 79 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.16%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 119. இந்துக்கள் 8.74%, முஸ்லிம்கள் 2.44%, கிறிஸ்தவர்கள் 88.1%. உட்பிரிவுகளில் பழங்குடியினர் 89.1%. மக்களவை: 1; மாநிலங்களவை: 1.
மணிப்பூர்
  • நாட்டின் 24-வது பெரிய மாநிலம். பரப்பளவு 22,327 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மணிப்பூரின் மக்கள்தொகை 70 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.21%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 130. இந்துக்கள் 41.39%, முஸ்லிம்கள் 8.40%, கிறிஸ்தவர்கள் 41.29%, சனமாஹி மதத்தினர் 7.78.% உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள் 2.8%. பழங்குடியினர் 34.2%. மக்களவை: 2; மாநிலங்களவை: 1.
மிசோராம்
  • நாட்டின் 25-வது பெரிய மாநிலம். பரப்பளவு 21,081 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மிசோராமின் மக்கள்தொகை 97 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.09%). மக்கள் அடர்த்தி ஒருசதுர கிமீக்கு 52. இந்துக்கள் 2.75%, முஸ்லிம்கள் 1.35%, கிறிஸ்தவர்கள் 87.16%, பௌத்தர்கள் 8.51%. உட்பிரிவுகளில் பழங்குடியினர் 94.5%. மக்களவை: 1; மாநிலங்களவை: 1.
  • மேகாலயா
  • நாட்டின் 23-வது பெரிய மாநிலம். பரப்பளவு 22,429 சதுர கிமீ. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மேகாலயாவின் மக்கள்தொகை 67 லட்சம் (ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் 0.25%). மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 130. இந்துக்கள் 11.52%, முஸ்லிம்கள் 4.39%, கிறிஸ்தவர்கள் 74.59%. உட்பிரிவுகளில் பட்டியல் இனத்தவர்கள் 0.5%. பழங்குடியினர் 85.9%. மக்களவை: 2; மாநிலங்களவை: 1.
அரசியல் சூழலும் முக்கியப் பிரச்சினைகளும்
  • இங்கே பெரும்பாலானவற்றில் பாஜகவோ பாஜகவின் ஆதரவு பெற்ற கட்சிகளோ ஆட்சியில் இருக்கின்றன. இங்கே அசாமுக்கு மட்டுமே அதிக மக்களவைத் தொகுதிகள் இருப்பதால் மத்தியில் அமையும் ஆட்சியில் வடகிழக்கின் செல்வாக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இந்தியாவிலேயே வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களுள் வடகிழக்கு மாநிலங்களும் ஒன்று. சிறப்பு ஆயுதப் படை அதிகாரச் சட்டத்தின் காரணமாக எப்போதும் இந்தப் பகுதி கனன்றுகொண்டே இருக்கிறது. தனி நாடு கோரிக்கை, தனி மாநிலக் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்கிய குழுக்கள் போராடிவருகிறார்கள். கூடவே, இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்கள் வேறு. எனவே, இந்தப் பிராந்தியத்தில் தொழிற்சாலைகள் குறைவு என்பதால் வேலைவாய்ப்புகளும் இல்லை. வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் பலருக்கும் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை(20-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்