TNPSC Thervupettagam

இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 377

September 19 , 2018 2111 days 2585 0

To read the article in English - Click Here 

  • இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவானது பருவம் எய்திய நபர்களுக்கிடையேயான இணக்கமான தனிப்பட்ட பாலியல் நடவடிக்கைகளை குற்றமாக அறிவிக்கின்றது.
  • இது, இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலமான 1862ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • குற்றப் பரம்பரைச் சட்டமானது (1871), அது நீக்கப்படுவதற்கு முன்பு வரை திருநங்கைகள் போன்ற எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பிறப்பிலேயே குற்றவாளியாக முத்திரை குத்தியது.
  • இந்திய சட்ட ஆணையத்தின் 172வது அறிக்கையானது, 377வது பிரிவின் நீக்கத்திற்கு பரிந்துரைத்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  • இந்த தண்டனைச் சட்டக் கூறானது, “எந்தவொரு ஆணுடனோ, பெண்ணுடனோ அல்லது மிருகங்கள் போன்றவைகளுடனோ இயற்கைக்கு மாறாக சுய விருப்பத்துடன் உடலுறவு கொள்பவர் எந்த நபராக ஆயினும், அவர் வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்கப்பட்டு தண்டிக்கப்படலாம் அல்லது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படலாம்” என்று விவரிக்கிறது.
  • 377வது பிரிவை அகற்றப்படுவதற்கான இயக்கமானது 1991ஆம் ஆண்டு எய்ட்ஸ் பெத்பவ் விரோதி அந்தோலன் என்பவரால் தொடங்கப்பட்டது.
  • அந்த இயக்கத்தின் வரலாற்றுத்துவம் மிக்க “Less than Gay : A Citizens report” என்ற வெளியீடானது 377வது பிரிவில் உள்ள பிரச்சனைகளை வெளிக்கூறி அதனை திரும்பப் பெற கேட்டுக் கொண்டது.
நாஸ் : ஃபவுண்டேசன் எதிர் தில்லியின் தேசிய தலைநகரப் பகுதி அரசு
  • சமூக ஆர்வலர் குழுவான நாஸ் ஃபவுண்டேசன் (இந்தியா) அறக்கட்டளையானது வயது வந்தவர்கள் ஒப்புதலின் அடிப்படையிலான ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக ஆக்குவதற்காக 2001ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.
  • 2003ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றமானது, இந்த விஷயத்தில் தலையிடுவதற்கான வழக்குரிமை இல்லை என மனுதாரர்களிடம் கூறி இச்சட்டத்தின் சட்டமுறைமை சம்பந்தமான மனுவை பரிசீலிக்க மறுத்து விட்டது.
  • நாஸ் ஃபவுண்டேசன் ஆனது, தொழில்நுட்ப ரீதியிலான காரணங்களை சுட்டிக்காட்டி, மனு தள்ளுபடி செய்யப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • உச்சநீதிமன்றமானது, நாஸ் ஃபவுண்டேசன் இவ்வழக்கில் பொது நல வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் உள்ளது எனத் தீர்மானித்து அவ்வழக்கை, தகுதி அடிப்படையில் மீண்டும் பரிசீலிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது.
  • அதன் பிறகு, தில்லியை மையமாகக் கொண்ட அகனள், அகனன், ஈரர், திருனர் எனப்படும் LGBT (lesbian, gay, bisexual, and transgender), பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டணி இயக்கமான “377க்கு எதிரான குரல்கள்” (Voices Against 377) என்ற அமைப்பினது தலையீடு இவ்வழக்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்த அமைப்பானது 377வது பிரிவின் வரம்பில் இருந்து வயது வந்தவர்கள் ஒப்புதலின் அடிப்படையிலான ஓரினச் சேர்க்கையை விலக்கி தீர்ப்பளிக்க சொல்லும் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தது.
  • 2008ஆம் ஆண்டு மே மாதம் இவ்வழக்கானது தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டில் உறுதியற்று இருந்தது.
  • ஓரினச் சேர்க்கை தொடர்பான 377வது பிரிவினுடைய அமல்படுத்துதல் விவகாரங்களில் மத்திய உள்துறை அமைச்சகமானது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டிற்கு முரணான நிலைப்பாட்டையே கடைபிடித்து வந்தது.
  • இறுதியில், 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி அன்று வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுத்துவம் மிக்க தீர்ப்பில் வயது வந்தவர்கள் ஒப்புதலின் அடிப்படையிலான ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கி 150 வருட பழமையான சட்டப்பிரிவை தில்லி உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது.
  • இந்தப் பிரிவின் சாராம்சமானது குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது எனக் கூறி உயர்நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்தது.
  • தீர்ப்பைப் பொறுத்தவரையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவானது, அனைத்து குடிமக்களும் வாழ்க்கைக்கான சமமான வாய்ப்பைக் கொண்டிருப்பதாகவும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் கூறுகின்ற சரத்து 14ஐ மீறுகின்றதாக அமையும்.
சுரேஷ் குமார் கௌஷல் Vs நாஸ் ஃபவுண்டேசன்
  • சுரேஷ் குமார் கௌஷல் மற்றும் வேறு சில மக்களும், தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
  • 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றமானது உயர்நீதிமன்றத் தீர்ப்பை, சட்டப்பூர்வமாக நிலையற்ற தன்மையை கொண்டதெனக் கண்டறிந்து, அதை மாற்றியமைத்தது.
  • இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, “நாட்டு மக்கள் தொகையின் மிகக் குறைந்த பகுதியினரே அகனள், அகனன், ஈரர், திருனர் என்ற LGBT வகுப்பினரைச் சார்ந்தவர்கள்” மற்றும் கடந்த 150 ஆண்டுகளில் 200க்கு குறைவான மக்களே இச்சட்டத்தின் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டனர் போன்ற தகவல்களை உயர்நீதிமன்றமானது மிகைப்படுத்திப் பார்த்துள்ளதை சுட்டிக் காட்டினர்.
  • உச்சநீதிமன்றமானது, அச்சட்டக்கூறுகளை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்க பாராளுமன்றத்திடம் விடுத்தது.
  • நாஸ் ஃபவுண்டேசனுடைய 2014ஆம் ஆண்டின் மறுசீராய்வு மனுவும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு, 377வது பிரிவின் கீழ் உள்ள குற்றங்கள் தொடர்பான தகவல்களை, சேகரிக்கத் தொடங்குவதென தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது முடிவு செய்துள்ளது.
  • 2016ம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக மாற்றும் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக மக்களவை வாக்களித்தது.
உச்சநீதிமன்றத்திற்கு கூட்டு மறுசீராய் மனு
  • நன்கு அறியப்பட்ட LGBTQ ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவானது, அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி - IIIஇன் கீழ் உறுதியளிக்கப்பட்ட பிற அடிப்படை உரிமைகளோடு அவர்களது பாலியல் பண்பு, பாலியல் சுய உரிமை, விருப்பப்பட்ட பாலியல் துணை, வாழ்க்கை, அந்தரங்கம், கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பான உரிமைகளை 377வது பிரிவு மீறுவதாக கூறுயது.
  • 377வது பிரிவின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுவானது முதன்முதலாக அச்சட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவரால் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
தனிநபர் அந்தரங்க உரிமை மீதான தீர்ப்பு
  • உச்சநீதிமன்றமானது, 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மைல்கல் தீர்ப்பில், தனிநபர் அந்தரங்க உரிமையை அடிப்படை உரிமையெனக் கூறி தீர்ப்பை நிலைநிறுத்தியது.

  • உச்சநீதிமன்றமானது, பாலியல் உறவு தொடர்பான நோக்குநிலை என்பது தனிநபர் அந்தரங்கத்தின் ஒரு முக்கியப் பண்பு எனவும் கூறியது. மேலும் இது, தனிநபர் அந்தரங்க உரிமை மற்றும் பாலியல் உறவு தொடர்பான நோக்குநிலை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துக்கள் 14, 15 மற்றும் 21 கீழ் உறுதியளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளின் மையத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளது.
நவ்தேஜ்சிங் ஜோகர் எதிர் மைய அரசு
  • 2018ஆம் ஆண்டில் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வானது 377வது பிரிவின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.
  • மத்திய அரசாங்கமானது இந்த வழக்கில் எவ்வித நிலைப்பாடும் எடுக்காமல் 377வது பிரிவைப் பற்றி முடிவெடுப்பதை நீதிமன்றத்தின் போக்கிற்கே விடுத்தது.
  • மனுதாரர்கள், 377வது பிரிவின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மைக்கு எதிராக வாதிடுவதற்காக பாலியல் அந்தரங்கம், கண்ணியம், பாகுபாட்டிற்கு எதிரான உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் போன்றவற்றைக் கொண்டு மேல்முறையிட்டனர்.
இறுதித் தீர்ப்பு
  • 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்று ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவில், வயது வந்தவர்கள் ஒப்புதலின் அடிப்படையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பான சட்டத்தின் சில பகுதிகளை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தீர்ப்பை வெளியிட்டது.

  • இந்த முடிவானது நீதிமன்றத்தால் நிலைநிறுத்தப்பட்ட சுரேஷ் குமார் கெளஷல் Vs நாஸ் ஃபவுண்டேசன் வழக்கில் 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றியமைக்கின்றது.
  • இருப்பினும், சிறார்களுடனான பாலுறவு, வலுக்கட்டாயமான பாலியல் நடவடிக்கைகள் மற்றும் விலங்குகளுடனான பாலுறவு போன்ற 377வது பிரிவுக்குத் தொடர்பான பிற பகுதிகள் நடைமுறையில் தான் இருக்கும்.

  • இதன் மூலம் ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்த நாடுகளில் இந்தியா 125வது நாடாக ஆனது.

- - - - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்