TNPSC Thervupettagam

ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாடு (UNFCCC)

March 29 , 2018 2495 days 5348 0
ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாடு (UNFCCC)
- - - - - - - - - - - - - - - -

வரைவு மசோதா            09 மே, 1992
கையெழுத்தான தினம்              04 ஜூன், 1992
அமலுக்கு வந்த தினம் 21 மார்ச், 1994
உறுதி செய்த நாடுகள்                197 (ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர்கள், பாலஸ்தீன், நையூ, கூக் தீவுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன்)
  • ஐ.நா.பருவநிலை மாறுபாடு மாநாடானது (United Nations Framework Convention on Climate change - UNFCCC) ரியோ டி ஜெனிரோவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் (Earth Summit) ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சுற்றுச் சூழல் உடன்படிக்கையாகும்.
  • UNFCCC ஆனது, ரியோ டி ஜெனிரோ புவி உச்சி மாநாடு, ரியோ உச்சி மாநாடு அல்லது ரியோ மாநாடு எனவும் அழைக்கப்படுகிது.
  • பருவநிலை அமைப்பில் ஆபத்தான மனித செயல்பாடுகளின் (Anthropogenic) குறுக்கீடுகளைத் தடுக்கும் அளவிற்கு வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவை நிலைநிறுத்துவதை UNFCCC நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • UNFCCC ஆனது 197 நாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது (ratified).
  • இந்த ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்ட 197 நாடுகள் அனைத்தும் மாநாட்டிற்கான உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றன (Parties to the Convention).
  • 192 UNFCCC உறுப்பினர் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1997 ஆம் ஆண்டின் கியோட்டோ நெறிமுறைக்கு (Kyoto Protocol) ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாடே அடிப்படை உடன்படிக்கையாகும்.

உறுப்பினர்களின் வகைப்பாடு மற்றும் அவர்களின் பொறுப்பு

வகைப்பாடு உறுப்பினர்கள்
பட்டியல் – I (Annex I)
  • ஐரோப்பிய யூனியனையும் சேர்த்து 43 UNFCCC நாடுகள் பட்டியல் – Iல் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • மேலும், இவை தொழில்மயமான (வளர்ச்சியடைந்த) நாடுகள் மற்றும் பொருளாதார மாற்றம் அடைந்துவரும் (Economies in Transition - EIT) நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • 14 EIT நாடுகள் என்பவை, முற்கால மத்திய திட்டமிடப்பட்ட பொருளாதார (Centrally – Planned Economies) நாடுகளான கிழக்கு ஐரோப்பா மற்றும் இரஷ்யா (சோவியத்).
பட்டியல் – II (Annex II)
  • இந்த உடன்படிக்கையின் பட்டியல் - Iல் வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஐரோப்பிய யூனியனையும் சேர்ந்து 24 நாடுகள் பட்டியல் – II லும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் உறுப்பினர்களால் பட்டியல் – II உருவாக்கப்பட்டுள்ளது.
  • பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதற்கும் (பருவநிலை மாறுபாட்டை மட்டுப்படுத்தல்) பருவநிலை மாறுபாட்டின் விளைவுகளைக் கையாளுவதற்கும் (பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப மாற்றியமைத்தல்) EITs & வளரும் நாடுகளுக்குப் பட்டியல் – II நாடுகள் பொருளாதார & தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டும்.
பட்டியல் – B (Annex B)
  • கியோட்டோ நெறிமுறை பட்டியல் – Bயில் உள்ள நாடுகள், முதல் அல்லது இரண்டாம் கட்ட கியோட்டோ பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டு இலக்குகளைக் கொண்டுள்ள பட்டியல் – I ல் உள்ள நாடுகளாகும்.
மிகவும் குறைவாக வளர்ச்சி பெற்ற நாடுகள் (Least-developed countries  - LDCs)
  • 47 நாடுகள் மிகக் குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளாகும். பருவநிலை மாறுபாட்டின் விளைவுகளோடு ஒத்திசைவதற்கான இந்நாடுகளின் மிகக்குறைந்த திறனை கணக்கில் கொண்டு இந்நாடுகளுக்கு இவ்வுடன்படிக்கையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பட்டியல் அல்லாதவை – I (Non-Annex I)
  • குறைந்த வருமானமுள்ள மற்றும் வளரும் நாடுகள் பெரும்பாலும் UNFCCC மாநாட்டின் பட்டியல் – Iல் இணைக்கப்படுவதில்லை.
  • போதுமான அளவு வளர்ச்சியைக் கண்ட வளரும் நாடுகள் பட்டியல் – I ல் தானாக வந்து இணைந்து கொள்கின்றன.

 

கியோட்டோ நெறிமுறை
கையெழுத்தான தேதி 11 டிசம்பர் 1997
அமலுக்கு வந்த தேதி 16 பிப்ரவரி 2005
உறுப்பினர்கள் 192 (ஐரோப்பிய நாடுகள், கூக் தீவுகள், நையூ & அந்தோரா, கனடா, தெற்கு சூடான், அமெரிக்கா தவிர அனைத்து ஐ. நா உறுப்பினர் நாடுகள் )
முதல் பொறுப்புக் காலம் 2008 – 2012
இரண்டாம் பொறுப்புக் காலம் 2013 – 2020
  • கியோட்டோ நெறிமுறை (Kyoto Protocol) என்பது UNFCCC உடன் இணைக்கப்பட்ட சர்வதேச உடன்படிக்கையாகும்.
  • இது உறுப்பினர்களுக்கு சர்வதேச அளவில் சட்ட பிணைப்புடன் (Legally Binding) கூடிய உமிழ்வு குறைப்பு குறிக்கோள்களை ஏற்படுத்துகின்றது.
  • இந்த நெறிமுறை பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைக்க அதன் உறுப்பு நாடுகளை, இரண்டு கருத்துகளின் அடிப்படையில் ஈடுபடுத்துகிறது
    • புவி வெப்பமயம் அடைகின்றது
    • இதற்கு மனிதனால் ஏற்படும் கரியமில வாயு உமிழ்வுகள் முதன்மையான காரணியாகும்.
  • இந்த நெறிமுறையானது பொதுவான ஆனால் வேறுப்பட்ட பொறுப்புடைமைகள் தத்துவத்தை (Principle of Common but Differentiated Responsibilities) அடிப்படையாகக் கொண்டது. இது தற்போதைய உமிழ்வுகளைக் குறைக்கும் கடமைகளை வளர்ந்த நாடுகளுக்குத் தந்துள்ளது. ஏனெனில் வரலாற்று ரீதியாக இந்நாடுகளே வளிமண்டலத்தின் பசுமை இல்ல வாயுக்களின் தற்போதைய அளவிற்குப் பொறுப்பாகும்.
  • இந்த நெறிமுறையைச் செயல்படுத்துவதற்கான விரிவான விதிகள், மொராக்கோவின் மரக்கேஷில் 2001ல் நடைபெற்ற COP7 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது மரக்கேஷ் உடன்பாடு (Marrakesh Accords) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்த நெறிமுறையின் இரண்டாவது பொறுப்புக் காலம் (Commitment Period) 2012ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது கியோட்டோ நெறிமுறையின் தோகா திருத்தம் என அறியப்படுகிறது.
  • முதல் பொறுப்புக் காலத்தின் போது, 37 தொழில்துறை நாடுகள் மற்றும் ஐரோப்பிய சமுதாயம், 1990 - ன் அளவுகளுக்கு எதிராகச் சராசரியாக 5% அளவிற்குப் பசுமை இல்லா வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்க பொறுப்பேற்றுக் கொண்டன.
  • இரண்டாம் பொறுப்புக் காலத்தில், 2013 முதல் 2020 வரையிலான 8 ஆண்டுக் காலத்தில் 1990 அளவுகளுக்கு எதிராகக் குறைந்தபட்சம் 18%க்கும் கீழாக உமிழ்வுகளைக் குறைக்க உறுப்பு நாடுகள் பொறுப்பேற்றுக் கொண்டன.
  • இந்த நெறிமுறையின் கீழ் தேசிய நடவடிக்கைகள் மூலமாக நாடுகள் அவற்றின் இலக்குகளை எட்ட வேண்டும்.

நெகிழ்வு இயங்குநுட்பம் (Flexibility Mechanism)

உறுப்பு நாடுகள் அவற்றுடைய இலக்குகளை எட்டுவதற்கு மூன்று சந்தை அடிப்படையிலான இயங்கு நுட்பங்களை கூடுதல் வழிமுறைகளாக இந்த நெறிமுறை அளிக்கிறது.

  1. சர்வதேச உமிழ்வுகளின் வர்த்தகம்
  2. தூய்மையான தொழில்நுட்ப வளர்ச்சி (Clean Development Mechanism - CDM)
  3. கூட்டு செயல்படுத்தல் (Joint Implementation - JI)

சர்வதேச உமிழ்வுகளின் வர்த்தகம்

  • உமிழ்வுகள் குறைப்பு பொறுப்புகள் அதிகரிக்கும் போது கியோட்டோ நெறிமுறையின் கீழ் ஒதுக்கப்படும் அளவு அலகுகளை (Assigned Amount Units – AAU) விற்கும் ஓர் செயலே சர்வதேச உமிழ்வுகளின் வர்த்தகம் ஆகும்.

தூய்மையான தொழில்நுட்ப வளர்ச்சி (Clean Development Mechanism – CDM)

  • சான்றளிக்கப்பட்ட உமிழ்வு குறைப்பு அலகுகளைப் பெறுவதற்கு CDM வளரும் நாடுகளின் உமிழ்வு குறைப்புத் திட்டங்களுக்கு அனுமதியளிக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு டன் CO2க்குச் சமம்.
  • சர்வதேச உமிழ்வுகளின் குறைப்புகளை வர்த்தகம் செய்ய முடியும் & விற்க முடியும். அதோடு தொழில்துறை நாடுகள் கியோட்டோ நெறியின் கீழ் உமிழ்வுகளின் இலக்குகளின் பகுதிகளை எட்ட இவை தொழில்துறை நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
  • UNFCCC தழுவல் நிதியத்தின் முக்கிய நிதி வளம் தூய்மையான தொழில்நுட்ப வளர்ச்சிஆகும்.
  • தழுவல் நிதியத்திற்கு (Adaptation Fund) தெளிவான மேம்பாட்டு இயங்கு நுட்பத்தால் சர்வதேச உமிழ்வுகளின் வர்த்தகம் மீதான 2% வரி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

கூட்டு செயல்படுத்துதல்

  • கூட்டு செயல்படுத்துதல் என்பது தொழில் துறை நாடுகள் அவற்றின் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டின் பாதியைக் குறைப்பதற்கு, வேறு தொழிலக நாடுகளில் வெளியீட்டின் குறைப்புத் திட்டங்களுக்கு கியோட்டோ நெறிமுறையின் கீழ் உள்ள நிதியளிப்பதை அனுமதியளிக்கும் திட்டமாகும்.
  • நிதியளிக்கும் நாடு, உமிழ்வு குறைப்பிற்கான அலகுகளைப் (Credit) பெறும். இந்நிதியை அந்நாடுகளின் உமிழ்வு இலக்குகளுக்கும் உபயோகிக்கலாம்; பணம் பெறும் நாடு அந்நிய முதலீடு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகிய ஆதாயங்களைப் பெறும்.
 

சிறுதகவல்கள்

சர்வதேச உமிழ்வு வணிகம் CDM & JI
சர்வதேச வெளியீட்டு அளவுகளின் கட்டுப்பாட்டை அமைத்தலை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச வெளியீட்டுக் குறைப்பின் உற்பத்தி  யோசனையை அடிப்படையாகக் கொண்டது.
CDM JI
பட்டியல் – I ல் இல்லாத நாடுகளில் உமிழ்வு குறைப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வடிவமைப்பே CDM ஆகும். உமிழ்வு குறைப்பு உற்பத்தியை  பட்டியல் – I நாடுகளில் ஊக்குவிக்கிது.
CDM தொழிற்துறை & வளரும் நாடுகளுக்கிடையேயான ஒன்று JI தொழிற்துறை நாடுகளுக்கிடையேயான ஒன்று

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்