காவேரி
- - - - - - - - - - - - - - - -
பிறப்பிடம் |
- மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியிலுள்ள தலைக்காவேரி
- தலைக்காவேரி, கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தின் மடிக்கேரி என்ற இடத்திற்கு அருகே உள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ளது
|
உயரம் |
1340 மீட்டர் |
நீளம் |
765 கிலோமீட்டர் |
வேறுபெயர்கள் |
தட்சிண கங்கை / தெற்கின் கங்கை (The Ganga of the South) |
பாயும் மாநிலங்கள் |
- கர்நாடகா
- தமிழ்நாடு
- கேரளா
- பாண்டிச்சேரி
|
கலக்கும் கடல் |
வங்காள விரிகுடா (பூம்புகாரிலுள்ள இரண்டு முக்கிய முகத்துவாரங்கள்) |
தலைக்காவேரி
குறிப்பு
- கேரளா மற்றும் பாண்டிச்சேரி காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளன.
எல்லைகள்
கிழக்கு |
கிழக்குத் தொடர்ச்சிமலைகள் |
மேற்கு |
மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
தெற்கு |
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
வடக்கு |
கிருஷ்ணா மற்றும் பெண்ணாறு ஆற்றுப் படுகைகளில் உள்ள முகடுகள் |
கிளை ஆறுகள்
இடது |
வலது |
ஹாரங்கி |
லஷ்மண தீர்த்தம் |
ஹேமாவதி |
கபினி |
ஷிம்ஷா |
சுவர்ணவதி, பவானி |
அரக்காவதி |
அமராவதி, நொய்யல் |
காவிரி ஆற்றுப் படுகையின் வரைபடம் (முழு அளவு படத்தைக் காண இங்கே சொடுக்கவும்)
கபினி
- தென்னிந்தியாவில் காவேரி ஆற்றின் மிகப்பெரிய கிளை நதிகளுள் ஒன்றான கபினி , கபிலா எனவும் அழைக்கப்படுகிறது.
- பனமரம் ஆறு மற்றும் மனந்தவாடி ஆறு ஆகியவையின் சங்கமத்தின் மூல கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இது பிறக்கிறது.
- கர்நாடகாவின் திருமாக்கூடலு நரசிப்புராவில் காவேரியுடன் கலப்பதற்கு கிழக்காகப் பாய்கிறது.
- இது மிகப்பெரிய நீர்த்தேக்கமான கபினி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.
கபினி நீர்த்தேக்கம்
பவானி
- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள நீலகிரி குன்றுகளில் பிறக்கும் பவானியானது கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவில் பாய்ந்து பின்னர் மீண்டும் தமிழ்நாட்டை நோக்கிப் பாய்கிறது.
- பவானி சாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் அமைந்துள்ளது.
காவேரி ஆற்றின் மேல் அமைந்துள்ள அணைகள்
- கிருஷ்ணராஜ சாகர் அணை
- கல்லணை
- மேட்டூர் அணை (எல்லிஸ் பூங்கா, ஸ்டான்லி நீர்த்தேக்கம்)
- ஹேமாவதி அணை
- ஹாரங்கி அணை
- கபினி அணை
- அமராவதி அணை
- பனாசுரா சாகர் அணை
கிருஷ்ணராஜ சாகர் அணை
மேட்டூர் அணை
அமராவதி அணை
கல்லணை
முதலிரு அணைகள் மட்டுமே காவிரி ஆற்றில் அமைந்துள்ளன மற்ற அனைத்தும் காவிரியின் கிளை நதிகளில் அமைந்துள்ளன.
கல்லணை
- கிராண்ட் அணைக்கட் என்றழைக்கப்படும் கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரியாற்றில் கட்டப்பட்டுள்ளது.
- இந்த அணை கரிகால்சோழனால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
காவேரியாற்றிலுள்ள நீர்வீழ்ச்சிகள்
- சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி (சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது)
- ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி
ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி
தேசியப் பூங்காக்கள்
- காவேரி வனவிலங்கு சரணாலயம்
- முதுமலை தேசியப் பூங்கா
முக்கியத்துவம்
- கிழக்கில் பாயும் ஆறு
- காவேரி ஆறு பொன்னி என்றும் அழைக்கப்படுகிறது.
- கோதாவரி, கிருஷ்ணாவுக்குப் பிறகு இது தென்னிந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஆறாகும்.
விழாக்கள்
- காவேரி புஷ்கரம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் விழாவாகும்.
- மகாபுஷ்கரம் (144 ஆண்டுகளுக்கு ஒருமுறை) வியாழன் துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்ததிலிருந்து 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தீவுகள்
- கர்நாடக மாநிலத்தில்ஸ்ரீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.
- இந்த மூன்றில்ஸ்ரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது. இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது.
- இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது. மற்றொரு சிறப்பு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
- காவிரி ஆற்றின் சிவசமுத்திர அருவியில் 1902-இல் நீர்மின்நிலையம் அமைக்கப்பட்டது.
காவேரியில் அமைந்துள்ள நகரங்கள்
- ஸ்ரீரங்கப்பட்டினம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி மற்றும் கும்பகோணம், திருவாரூர்.
காவிரியில் அணைகள் அமைந்துள்ள முக்கிய இடங்கள்
சமீபத்திய நிகழ்வுகள் - காவேரி
- காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 192 டி.எம்.சி.யிலிருந்து25 டி. எம்.சியாக குறைத்து (பிப்ரவரி 6, 2018) உத்தரவிட்டது.
தீர்ப்பின் முக்கியத்துவம்
- காவேரி தேசியச் சொத்து
- 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய இயலாது.
- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
- - - - - - - - - - - - - - - -