TNPSC Thervupettagam
March 16 , 2018 2474 days 5813 0
கிருஷ்ணா ஆறு

  • பிறப்பிடம் : மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள ஜோர் கிராமம்.
  • குறிப்பு : இந்த இடம் மகாபலேஸ்வருக்கு வடக்கே உள்ள மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

.

உயரம் சுமார் 1300 மீட்டர்கள்
நீளம் சுமார் 1300 கிலோமீட்டர்கள்
நதி பாயும் மாநிலங்கள்
  • ஆந்திரப்பிரதேசம்
  • தெலுங்கானா
  • மஹாராஷ்டிரா
  • கர்நாடகா
கலக்கும் இடம் வங்காள விரிகுடா (ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஹம்சலாதேவி எனுமிடத்திற்கருகே கடலில் கலக்கிறது)

எல்லைகள்  

கிழக்கு கிழக்குத் தொடர்ச்சிமலைகள்
மேற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள்
தெற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
வடக்கு பாலாகாட் வரம்பு (Balaghat Range)

கிளை ஆறுகள்

இடது வலது
பீமா கட்டப் பிரபா
முசி மலப் பிரபா
முன்னேரு துங்கபத்ரா
பாலேரு கொய்னா

பீமா

  • பீமஷங்கர்  குன்றுகளிலிருந்து பிறக்கிறது. இது பீமஷங்கரா வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக பாய்கிறது .
  • பீமா கிருஷ்ணாவில் நுழைவதற்கு முன்  தென் கிழக்காக 861 கி.மீ. தூரம் மகாராஷ்டிரா , கர்நாடகா மற்றும் தெலுங்கானா வழியாக பாய்கிறது.

முசி

  • கிருஷ்ணாவின் கிளை நதியான முசி தக்காணத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பாய்கிறது. ஹைதராபாத் முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

துங்கபத்ரா

  • கங்கமுலாவில் பிறக்கும் துங்கா மற்றும் பத்ரா ஆகியவை இணைந்து துங்கபத்ராவை உருவாக்குகின்றன. கூட்லி எனுமிடத்தில் இவ்விரு ஆறுகள்  இணைந்து துங்கபத்ரா உருவாகிறது.
  • துங்கபத்ரா அணை கட்டும் திட்டமே, கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களுக்கிடையேயான (கர்நாடகா – ஆந்திர பிரதேசம்)  திட்டமாகும்.
  • கர்நாடக-ஆந்திரா எல்லையை அடைவதற்கு முன் தனது பயணத்தின் பெரும்பகுதியை இது கர்நாடகாவில் கழிக்கிறது. இறுதியில் ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது.

கொய்னா

  • மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள பிரபலமான மலை வாழிடம் (Famous Hill station)
  • கொய்னா அணை கொய்னா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. கொய்னா நீர் மின் திட்டத்தின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால்  இது  மகாராஷ்டிராவின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.
  • மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள கொய்னா, நீர்த்தேக்கத்தினால் தூண்டப்பட்ட அதிர்வுப் பகுதியாகவும் கருதப்படுகிறது.
  • கொய்னா அணை கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  1967ல் 5 என்ற அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • அணையினால் தூண்டப்பட்ட நிலநடுக்க நிகழ்வு ஆனது  நீர்த்தேக்கத்தினால் தூண்டப்பட்ட நிலநடுக்கம் எனவும் அறியப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வைப்  பற்றிய  அதிகபட்ச தகவல்கள் எதுவும் அறியப்படவில்லை.

முக்கியத் தரவுகள்

பாசன திட்டங்கள்
  • பிரகாசம் தடுப்பணை திட்டம்
  • பட்டிசீமா திட்டம்
மிகப்பெரிய கிளைநதி  
  • துங்கபத்ரா ஆறு
  • சுமார் 531 Km தூரம் பாய்கிறது
மிக நீளமான கிளை நதி  
  • பீமா  ஆறு
  • சுமார் 861 Km தூரம் பாய்கிறது
கிருஷ்ணாவிலுள்ள அணைகள்  
  • நாகார்ஜுன சாகர் அணை
  • ஸ்ரீசைலம் அணை
  • அல்மட்டி அணை
  • துங்கபத்திரா அணை
  • தோம்  அணை
கிருஷ்ணாவிலுள்ள நீரூற்றுகள்  
  • சிரிமனே நீரூற்று
  • பர்கானா நீரூற்று
  • பர்கானா நீரூற்று - அகும்பே குன்றுகளில்  அமைந்துள்ளது.
  • கோகக் நீரூற்று – கட்டப்பிரபா ஆற்றில் அமைந்துள்ளது.

விழாக்கள்

  • கிருஷ்ணா புஷ்கரம்

கிருஷ்ணாவிலுள்ள நகரங்கள்

  • விஜயவாடா (கிருஷ்ணாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் )
  • அமராவதி
  • ஸ்ரீசைலம்
  • ஹைதராபாத் – முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
  • ஹம்பி மற்றும் கர்நூல் - துங்கபத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளன

முக்கியத்துவம்       

  • கிழக்கே பாயும் ஆறு
  • நீரோட்டம் மற்றும் ஆற்றுப்படுகையின் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கங்கை, கோதாவரி, பிரம்மபுத்திரா ஆகியவற்றிற்குப் பிறகு கிருஷ்ணா  நான்காவது இடத்தில் உள்ளது .
  • சுமார் 1300 கி.மீ தூரம் பாயும் கிருஷ்ணாவிற்கு கிருஷ்ணவேணி  எனும் வேறு பெயரும் உண்டு.
  • கோதாவரிக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் கிழக்கே பாயும் நதிகளில் மிகப்பெரியது கிருஷ்ணா ஆகும்.

புலிகள் காப்பகங்கள்

  • நாகார்ஜுனா சாகர் - ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்.

தேசிய பூங்காக்கள்

  • சந்தோலி தேசிய பூங்கா
  • குதிரமூக் தேசிய பூங்கா
  • காசு பிரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா
  • மகாவீர் ஹரினா வனஸ்தலி தேசிய பூங்கா
  • முருகவாணி தேசிய பூங்கா

வனவிலங்கு சரணாலயங்கள்

  • ரொள்ளபாடு வனவிலங்கு சரணாலயம்
  • பத்ரா வனவிலங்கு சரணாலயம்
  • கொய்னா வனவிலங்கு சரணாலயம்
  • ராதாநகரி வனவிலங்கு சரணாலயம்
  • பாஹல் வனவிலங்கு சரணாலயம்
  • ஷெட்டிஹல்லி வனவிலங்கு சரணாலயம்

பறவைகள் சரணாலயங்கள்

  • கட்டப் பிரபா பறவைகள் சரணாலயம்
  • குதாவி பறவைகள் சரணாலயம்
  • பெரிய இந்திய பறவைகள் (Great Indian Bustard) சரணாலயம்

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்