TNPSC Thervupettagam

தங்கத்தை விலை கொடுத்து வாங்காமல், உழைத்துப் பெற வேண்டும் - மேரி கோம்

November 27 , 2018 2236 days 2735 0
To read this article in English, Click Here
மேரி கோம்
  • மேரி கோம் என்பவர் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய குத்துச் சண்டை வீரராவார்.
  • இவர் 1983 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று இந்தியாவில் மணிப்பூரின் கங்காத்தேயில் பிறந்தார்.
  • மேரி கோமின் முழுப் பெயர் மேன்க்டே சன்ங்நேய்ஜாங்க் மேரி கோம் என்பதாகும்.
  • மேன்க்டே டோன்பா கோம் மற்றும் மேன்க்டே அஹம் கோம் ஆகியோர் மேரி கோமின் பெற்றோர்கள் ஆவர்.
  • கால்பந்தாட்ட வீரரான கருங் ஆன்லெர் என்பவர் மேரி கோமின் கணவர் ஆவார்.
  • மேரி கோம், ரெச்சுங்வர் மற்றும் குப்னெய்வர் ஆகிய இரட்டைக் குழந்தைகளுக்கும் (2007 ஆம் ஆண்டில் பிறந்த), பிரின்ஸ் (2013 ஆம் ஆண்டில் பிறந்த) என்ற மகனுக்கும் தாயாராவார்.

 

கல்வி
  • குத்துச் சண்டை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மேரி கோம் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யவில்லை.

  • சிறிது காலத்திற்குப் பின்பு மாற்று வழிகளின் மூலம் தனது பள்ளிப் படிப்பை மேரி கோம் நிறைவு செய்தார். மேலும் இவர் பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார்.

 

வாழ்க்கை - குத்துச் சண்டை
  • இவர் தனது 18-வது வயதில் தான் சர்வதேச அளவிலான குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு பெற்று குத்துச் சண்டை வாழ்நாளைத் தொடங்கினார்.
  • 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திங்கோ சிங்கின் வெற்றியானது மேரிகோமிற்கு உத்வேகம் அளித்து தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய நிகழ்ச்சியாக அது அமைந்தது.
  • உலக அமெச்சூர் (முறைசாரா அல்லது துறைசார்பற்ற) குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை 6 முறை வென்ற ஒரே பெண் வீராங்கனை மேரி கோம் ஆவார். மேலும் 7 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் வென்ற ஒரே பெண் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் ஆவார்.

  • பெண்களுக்கான உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை மேரி கோம் வென்றுள்ளார்.
  • 2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற AIBA (The International Boxing Association) உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

விருதுகள்
  • இவர் 2003 ஆம் ஆண்டில் அர்ஜூனா விருதையும் 2013 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதையும் 2006 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
  • 2009 ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் இரத்னா விருது வழங்கப்பட்டது. இவ்விருது அதிகாரப்பூர்வமாக விளையாட்டுத் துறையில் இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது.
  • மேரி கோம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையின் உறுப்பினராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். (2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 வரை)
  • 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது அஹில் குமாருடன் மேரி கோமையும் சேர்த்து குத்துச் சண்டைக்கான தேசியக் கண்காணிப்பாளர்களாக நியமித்தது.
  • 2008 ஆம் ஆண்டில் மேரி கோமின் திறமையான மற்றும் நிலைத் தன்மையான செயல்பாடுகள் அவருக்கு “சிறப்பு வாய்ந்த மேரி” (Magnificient Mary) என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
  • 35 வயதான குத்துச் சண்டை வீரரான மேரி கோம் தனது மாநிலமான மணிப்பூரில் “மேரி கோம் பிராந்திய குத்துச்சண்டை அறக்கட்டளை” என்ற தனது சொந்த குத்துச் சண்டை அகாதெமியை நடத்தி வருகிறார்.

 

சுயசரிதை மற்றும் திரைப்படம்
  • இவரது சுயசரிதையான “அன்பிரேக்கபிள்” (Unbreakable) 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹார்பர் கோலின்ஸ் என்ற பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இவரது சுயசரிதையை இவரும் தீனா செர்டோ என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
  • மேரி கோமின் வாழ்க்கையைப் பற்றி இந்தி மொழியில் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த சுயசரிதைத் திரைப்படமான “மேரி கோமில்”, குத்துச் சண்டை வீரரான மேரி கோமின் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தத் திரைப்படமானது ஓமுங் குமார் என்பவரால் இயக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 அன்று வெளியிடப்பட்டது.

  • 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள முக்கிய தடகள வீரர்களை விட அதிக ஊதியம், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் பெறும் முதலாவது தடகள வீராங்கனையாக மேரி கோம் உருவெடுத்தார்.
  • பத்ம பூஷண் விருதினை வென்ற முதலாவது அமெச்சூர் (முறைசாரா) தடகள வீராங்கனை மேரி கோம் ஆவார்.

 

இவரது செயல்பாடுகள்
  • மேரி கோம் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் நடைபெற்ற பெண்களுக்கான உலக அமெச்சூர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார். அப்போட்டியில் மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • 2002 ஆம் ஆண்டில் துருக்கியின் அந்தாலயாவில் நடைபெற்ற AIBA (The International Boxing Association) சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் இவர் சீனாவில் நடைபெற்ற AIBA பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பின்ஷிப் போட்டியில் தொடர்ந்து 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். இவர் 2009 ஆம் ஆண்டில் வியட் நாமில் நடைபெற்ற ஆசியான் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 2010 ஆம் ஆண்டில் கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் பார்படாசில் நடைபெற்ற AIBA பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.

  • இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மிகக் குறைந்த எடைப் பிரிவான 51 கிலோ எடைப் பிரிவில் பங்கு பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 03 அன்று புது தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவின்போது அரசியின் செங்கோலினை மைதானத்தைச் சுற்றி எடுத்துச் சென்ற பெருமையை சஞ்சய் மற்றும் ஹர்ஷித் ஜெயின் ஆகியோருடன் இணைந்து மேரி கோமும் பெற்றார்.
  • மேரி கோம் 2011 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஆசிய மகளிர் கோப்பைப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
  • 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடைக் கால ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற ஒரே பெண் குத்துச் சண்டை வீரர் மேரி கோம் ஆவார். இவர் இப்போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கு பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய பெண் குத்துச் சண்டை வீரர் மேரி கோம் ஆவார்.
  • 2014 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் இன்ச்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேரி கோம் 51 கிலோ எடைப் பரிவில் கஜகஸ்தானைச் சேர்ந்த ஜெய்னா ஜெகர்பெகோவை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியப் பெண் குத்துச் சண்டை வீரராக உருவெடுத்தார்.
  • மேலும் 2014 ஆம் ஆண்டில் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்திய பெண் வீரராக  உருவெடுத்தார்.
  • மேரி கோம் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கு பெற முனைப்பாக இருந்தார். ஆனால் இவரால் அப்போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.
  • 2017 ஆம் ஆண்டு நவம்பர் 08 அன்று வியட்நாமின் ஹோ சி மின்க்கில் நடைபெற்ற ASBC ஆசியக் கூட்டமைப்பின் பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் 48 கிலோ எடைப் பரிவில் ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 48-வது எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்திய பெண் குத்துச் சண்டை வீரராக  மேரி கோம் உருவெடுத்தார்.
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 24-ல் புது தில்லியில் நடைபெற்ற 10-வது AIBA பெண்களுக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 6 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற முதலாவது பெண்ணாக மேரி கோம் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இவர் இப்போட்டியில் உக்ரைனைச் சேர்ந்த ஹானா ஒக்கோட்டாவை வீழ்த்தினார்.
  • மேரி கோம் AIBA உலக பெண்களுக்கான மிதமான எடைப் பிரிவில் முதலிடத்தில் உள்ளார்.
மேரி கோம் – பங்கேற்புகள்
சர்வதேச பட்டங்கள்
ஆண்டு தர வரிசை எடைப் பிரிவு போட்டி நடைபெற்ற இடம்
2001  2 48 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் ஸ்க்ரன்டன், பென்சில்வேனியா, அமெரிக்கா
2002  1 45 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் அந்தாலயா, துருக்கி
2002  1 45 விட்ச் கோப்பை பெக்ஸ், ஹங்கேரி
2003  1 46 ஆசிய பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் ஹிசார், இந்தியா
2004  1 41 பெண்களுக்கான உலக கோப்பை டோன்ஸ்பெர்க், நார்வே
2005  1 46 ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் கோசியுங், தைவான்
2005  1 46 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போடோல்ஸ்க், ரஷ்யா
2006  1 46 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் புது தில்லி, இந்தியா
2006  1 46 வீனஸ் பெண்களுக்கான குத்துச் சண்டை கோப்பை வேஜ்லே, டென்மார்க்
2008  1 46 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் நிங்போ, சீனா
2008  2 46 ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் கௌகாத்தி, இந்தியா
2009  1 46 ஆசிய உள்ளரங்க விளையாட்டுகள் ஹனோய், வியட்நாம்
2010  1 48 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
2010  1 46 ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் அஸ்தானா, கஜகஸ்தான்
2010  3 51 ஆசிய விளையாட்டுகள் குவான்சோ, சீனா
2011  1 48 ஆசிய பெண்களுக்கான கோப்பை ஹைய்கோ, சீனா
2012  1 41 ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் உலன் பட்டோர், மங்கோலியா
2012  3 51 கோடைக் கால விளையாட்டுகள் இலண்டன், ஐக்கிய ராஜ்ஜியம்
2014  1 51 ஆசிய விளையாட்டுகள் இன்சியான், தென் கொரியா
2017  1 48 ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் ஹோ சி மின்க் நகரம், வியட்நாம்
2018  1 45-48 காமன்வெல்த் விளையாட்டுகள் கோல்டு கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
2018  1 45-48 AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் புது தில்லி, இந்தியா
தேசியப் போட்டிகள்
  • 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது பெண் மேரி கோம் ஆவார்.
  • கிழக்கு ஓபன் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், வங்காளம், 2001, டிசம்பர்.
  • 2-வது மூத்த உலக பெண்கள் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், புது தில்லி, 2001 டிசம்பர்.
  • 32-வது தேசிய விளையாட்டுகள், ஹைதராபாத், 2002.
  • 3-வது மூத்த உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், அய்சாவல், மிசோரம், 2003, மார்ச்.
  • 4-வது மூத்த உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், கோக்ராஜர், அஸ்ஸாம், 2004, பிப்ரவரி.
  • 5-வது மூத்த உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், கேரளா, 2004, டிசம்பர்.
  • 6-வது மூத்த உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப், ஜாம்ஷெட்பூர், 2005 (நவம்பர் முதல் டிசம்பர் வரை).

 

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
  • 2000 ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த குத்துச் சண்டை வீரருக்கான விருது.
  • சர்வதேச குத்துச் சண்டை மன்றமானது (AIBA) “நம்பிக்கைக்குரிய குத்துச் சண்டை வீரர்” என்பதற்காக அந்த அமைப்பின் முதல் “AIBA புகழ்பெற்ற நபர்கள்” என்ற விருதை மேரி கோமிற்கு அளித்தது.
  • சர்வதேச குத்துச்சண்டை மன்றமானது 2016 ஆம் ஆண்டு AIBA பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான விளம்பரத் தூதராக மேரி கோமை அறிவித்தது.
  • பத்ம பூஷன் (விளையாட்டுகள்), 2013.
  • அர்ஜூனா விருது (குத்துச் சண்டை) 2003.
  • பத்ம ஸ்ரீ (விளையாட்டுகள்), 2006.
  • ஆண்டிற்கான சிறந்த மனிதர் - லிம்கா சாதனை புத்தகம், 2007.
  • சிஎன்என் - ஐபிஎன் & ரிலையன்ஸ் தொழிற்சாலையின் உண்மைத் தலைவருக்கான விருது
  • பெப்சி எம்டிவி இளைஞர் அடையாளம் அல்லது யூத் ஐகான், 2008.
  • “சிறப்பு வாய்ந்த மேரி”, AIBA 2008.
  • இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருது, 2009.
  • 2009 ஆம் ஆண்டின் பெண்கள் குத்துச் சண்டை போட்டிக்கான சர்வதேச குத்துச்சண்டை மன்றத்தின் தூதர்.
  • 2010 ஆம் ஆண்டின் விளையாட்டு வீராங்கனை சஹாரா விளையாட்டு விருது.

----------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்