TNPSC Thervupettagam

தமிழ்நாடு சமூகநலத் திட்டங்கள்

August 9 , 2018 2302 days 12788 0

தமிழ்நாடு சமூகநலத் திட்டங்கள்

- - - - - - - - - - - - - - -

To read the article in English - Click Here

திட்டத்தின் பெயர்

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஏழ்மையான பெற்றோர்களுக்கு அவர்களது மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் நிதியளவில் உதவுவதற்கும், ஏழை பெண்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I :

  • திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.25,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.

திட்டம் – II :

  • திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.50,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • இவ்வுதவி பெண்களின் தந்தை (அ) தாயின் பெயரில் வழங்கப்படும்.
  • பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் இவ்வுதவி மணப்பெண்ணிடம் வழங்கப்படும்.

வருமான வரம்பு

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • மணப்பெண் திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
  • இதில் உச்ச வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி

திட்டம் – I :

  • பயனாளி கண்டிப்பாக 10வது வரை படித்திருக்க வேண்டும் (தேர்ச்சி பெற்றிருந்தாலும்/ பெறாவிட்டாலும்)
  • பயனாளி பழங்குடியினராக இருக்கும் பட்சத்தில் 5வது அவர் வரை படித்திருக்க வேண்டும்.

திட்டம் – II :

  • பயனாளி பட்டம் அல்லது பட்டயப் படிப்பு வரை படித்திருக்க வேண்டும்

 

திட்டத்தின் பெயர்

  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • விதவை மறுமணத்தினை ஊக்குவிப்பதும், விதவைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I :

  • திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.25,000 (ரூ.15,000 காசோலை மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.

திட்டம் – II :

  • திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.50,000 (ரூ.30,000 காசோலை மூலமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலமாகவும்) தொகையும் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள்.

வருமான வரம்பு

  • வருமான உச்ச வரம்பு கிடையாது.

வயது வரம்பு

  • மணப்பெண்ணின் வயது குறைந்தபட்சம் 20 ஆகவும், மணமகனுக்கு அதிகபட்சமாக 40 வயதாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

திட்டம் – I :

  • கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

திட்டம் – II :

  • பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்கள்.

 

திட்டத்தின் பெயர்

  • ஏழை விதவைப் பெண்களின் மகள்களின் திருமணத்திற்கானV.R. மணியம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் விதவை தாய்மார்களுக்கு அவர்களது மகள்களின் திருமணத்தை நடத்துவதற்கு தேவையான நிதி உதவியை வழங்குதல்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I :

  • ரூ.25,000 காசோலை மூலமாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கு தேவையான 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

திட்டம் – II :

  • ரூ.50,000 காசோலை மூலமாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கு தேவையான 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • மணமகளின் விதவை தாயாருக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் இறந்துவிட்ட நிலையில் மணமகளுக்கு வழங்கப்படும்.

வருமான வரம்பு

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • உச்ச வயது வரம்பு இதில் இல்லை.

கல்வித் தகுதி

திட்டம் – I :

  • கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

திட்டம் – II :

  • பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்கள்.

 

திட்டத்தின் பெயர்

  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஆதரவற்ற பெண்களுக்கு அவர்களின் திருமணத்திற்காக நிதியளவில் உதவி வழங்குதல்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I :

  • ரூ.25,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

திட்டம் – II :

  • ரூ.50,000 காசோலையாகவும் திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • ஆதரவற்ற பெண்கள்.

வருமான வரம்பு

  • உச்சகட்ட வரம்பு இல்லை.

வயது வரம்பு

  • திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • உச்ச வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி

திட்டம் – I :

  • கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

திட்டம் – II :

  • பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்கள்.

 

திட்டத்தின் பெயர்

  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு திருமண உதவி திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • பிறப்பு அடிப்படையிலான சாதி மற்றும் சமய உணர்வுகளை ஒழித்தல் மற்றும் சாதிகளுக்கிடையேயான திருமணத்தினை ஊக்குவிப்பதன் மூலம் பாகுபாட்டினை துடைத்தெறிதல்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I :

  • ரூ.25,000 தொகையும் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் (1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

திட்டம் – II :

  • ரூ.50,000 தொகையும் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழாகவும்) திருமாங்கல்யம் செய்வதற்கான 8 கிராம் ((1 சவரன் - 22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • சாதிகளுக்கிடையேயான திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்.

வருமான வரம்பு

  • வருமான வரம்பு இல்லை.

வயது வரம்பு

  • திருமணத்தின்போது மணமகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • உச்ச வயது வரம்பு இல்லை.

தகுதிகள்

திட்டம் 1

  • புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். இதில் ஒருவர் கண்டிப்பாக பட்டியலிடப்பட்ட அல்லது பழங்குடியினத்தவராகவும் மற்றொருவர் மற்றுமொரு சாதியினராகவும் இருத்தல் வேண்டும்.

திட்டம் 2

  • புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். இதில் ஒருவர் இதர அல்லது மேற்தட்டு வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி

திட்டம் – I :

  • கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.

திட்டம் – II :

  • பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவர்கள்.

 

திட்டத்தின் பெயர்

  • அரசு சேவை காப்பகம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • பொருளாதார மற்றும் சமூக அளவில் பின்தங்கிய விதவை பெண்கள், ஆதரவற்ற பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிப்பதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்குதல்.

வழங்கப்படும் உதவிகள்

  • தகுதியுடைய பயனாளிகளுக்கு இலவசமாக தங்கும் இடவசதி, உணவு, கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி, பாடப்புத்தகங்கள் சீருடைகள் மற்றும் குறிப்பேடுகள்.

வருமான வரம்பு

  • மாற்று திறனாளிகளைத் தவிர மற்றவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 14-லிருந்து 45 வயது வரை இருக்க வேண்டும்.

 

திட்டத்தின் பெயர்

  • சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஆதரவற்ற பெண்கள்/விதவைகள், கைவிடப்பட்ட மனைவியர்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் , சமூக அளவில் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் மற்றும் பொருளாதார அளவில் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் போன்றவர்களின் சுயவேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் இலவச தையல் இயந்திரத்தினை வழங்குதல்.

வழங்கப்படும் உதவிகள்

  • தையல் இயந்திரம் மற்றும் அதன் துணைக் கருவிகள்.

தகுதியுடைய பயனாளிகள்

  • ஆதரவற்ற பெண்கள்/விதவைகள், கைவிடப்பட்ட மனைவியர்கள், மாற்று திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக அளவில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதார அளவில் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்.

வருமான வரம்பு

  • ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 20-லிருந்து 40 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

  • கல்வித் தகுதி என்று எதுவும் தேவை இல்லை.

 

திட்டத்தின் பெயர்

  • ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • தனது வாழ்வாதார செலவுகளுக்கு பணம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேலுள்ள ஏழை மற்றும் ஆதரவற்ற திருநங்கைகளுக்கு உதவுதல்.

வழங்கப்படும் உதவிகள்

  • ஒரு திருநங்கைக்கு மாதத்திற்கு ரூ.1,000/- (வருவாய் துறை வழங்கும்).

தகுதியுடைய பயனாளிகள்

  • ஏழை மற்றும் ஆதரவற்ற 40 வயதிற்கு மேலுள்ள திருநங்கைகள்.

தகுதி

  • 40 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • திருநங்கைகள் நல கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவ கழகத்தினால் வழங்கப்பட்ட வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (அ) குடும்ப அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
  • உடல் உழைப்பின் மூலம் பணம் ஈட்ட இயலாத திருநங்கைகள்.
  • மற்ற குடும்ப உறுப்பினர் (அ) மற்ற நபரினால் உதவி வழங்கப்படாத திருநங்கைகள்.

 

திட்டத்தின் பெயர்

  • சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச உடை, உணவு, தங்கும் வசதி மற்றும் மருத்துவ பாதுகாப்பு வழங்குவதன் மூலம் கல்வியினை வழங்குதல்.

வழங்கப்படும் உதவிகள்

  • உணவு, தங்கும் இடவசதி, கல்வி, சீருடைகள், இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், மருத்துவ வசதிகள், காலணிகள் மற்றும் படுக்கைகள் ஆகியன.

தகுதியுடைய பயனாளிகள்

  • ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் அல்லாத (அ) ஒற்றை பெற்றோரை கொண்ட / நலிவுற்ற பெற்றோர்கள் மற்றும் கைதிகளின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்.

வருமான வரம்பு

  • ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 5-லிருந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் வளாகத்தின் பள்ளியினுள் பயில அனுமதிக்கப்படுவர் மற்றும் ஆண் குழந்தைகள் வளாகத்தினுள் 5-ஆம் வகுப்பு வரை பயில அனுமதிக்கப்படுவர்.
  • தந்தை மற்றும் தாயை இழந்த பெண் குழந்தைகள் அவர்களின் உயர் கல்விக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுவர்.

கல்வித் தகுதி

  • கல்வித் தகுதி என்று எதுவும் தேவை இல்லை.

 

திட்டத்தின் பெயர்

  • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.

திட்டத்தின் நோக்கங்கள்

  • பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்துதல்.
  • பெண் சிசுக் கொலையினை ஒழித்தல்.
  • ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமையினை குறைத்தல்.
  • சிறு குடும்ப கொள்கையை மேம்படுத்துதல்.
  • ஏழைக் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளின் தரத்தை உயர்த்துதல்.

வழங்கப்படும் உதவிகள்

திட்டம் – I : ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்

  • ஒரே ஒரு பெண் குழந்தையை கொண்ட குடும்பத்திற்கு 20 வருட காலத்திற்கு தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் நிரந்தர வைப்பு நிதியாக அந்த பெண் குழந்தையின் பெயரில் மொத்த தொகையாக ரூ.22,200 வழங்கப்படும்.
  • இத்தொகையானது, அப்பெண் குழந்தை 01-08-2011-க்கு பிறகு பிறந்திருந்தால் ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.

திட்டம் – II : இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம்

  • இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு 20 வருட காலத்திற்கு தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் உட்கட்டமைப்பு கழக மேம்பாட்டு கழக நிறுவனத்திடம் நிரந்தர வைப்பு நிதியாக அந்த ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் மொத்த தொகையாக ரூ.15,200 வழங்கப்படும்.
  • இத்தொகையானது, அப்பெண் குழந்தைகள் 01-08-2011 அன்று (அ) அதற்குப் பிறகு பிறந்திருந்தால் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

தகுதியுடைய பயனாளிகள்

  • ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகள்.

வருமான வரம்பு

  • திட்டம்-I–ன் கீழ் பயனைப் பெற ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • திட்டம்-II –ன் கீழ் பயனைப் பெற ஆண்டு வருமானம் ரூ.24,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதர தகுதிகள்

  • பெற்றோர்களில் யாராவது ஒருவராயினும் 35 வயதிற்குள்ளாக கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
  • தம்பதியினர் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக ஆண் குழந்தை பெற்றிருக்க கூடாது. எதிர்காலத்திலும் ஆண் குழந்தையை தத்தெடுக்க கூடாது.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சமயத்தில் குழந்தைகளின் பெற்றோர்/மூதாதையர்கள் கண்டிப்பாக 10 வருட காலத்திற்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
  • இத்திட்டம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.

 

திட்டத்தின் பெயர்

  • குழந்தை தத்தெடுப்புத் திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • அனாதையான, கைவிடப்பட்ட ஆதரவற்ற மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தினை ஏற்படுத்துதல்.

வழங்கப்படும் உதவிகள்

  • தத்தெடுக்கும் வரை குழந்தைகளுக்கான தங்குமிடம் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு.
  • ஆதரவற்ற மற்றும் பெற்றோர்கள் அல்லாத குழந்தைகளுக்கு குடும்பத்தினை ஏற்படுத்துதல்.

வருமான வரம்பு

  • தத்தெடுக்கும் நோக்கமுடைய பெற்றோர்கள் குழந்தைக்கு நல்ல வளர்ப்புச் சூழலை வழங்க போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

தொடர்புடைய சட்டங்கள்

  • இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956.
  • பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம், 1890.
  • 2006-ல் திருத்தப்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு (குழந்தைகளுக்கான அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000.

குழந்தைகளை தத்தெடுப்பதற்காக பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை

  • ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் மாநில அரசின் பெண் அரசாங்க ஊழியர்களுக்கு குழந்தை தத்தெடுப்பு விடுமுறையாக 180 நாட்கள் அளிக்கப்படும். இவ்விடுமுறை தத்தெடுப்பு சட்டப்பூர்வமாக்கப்படும் தேதியிலிருந்து மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்