-
ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம்
- ஊசுட்டேரி ஏரியானது ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியிலும் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலும் பரவியுள்ளது.
- இது புதுச்சேரியின் மிகப்பெரிய நன்னீர் பிடிப்புப் பகுதியாகவும் புலம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான குளிர்கால தளமாகவும் விளங்குகிறது.
- ஆசியாவின் மிக முக்கியமான சதுப்பு நிலங்களில் ஒன்றான இந்த ஏரியானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் பாரம்பரியமிக்க தளமாக கருதப்படுகின்றது.
- இந்த ஏரியானது பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தினால் பறவைகளுக்கான முக்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆசிய சதுப்பு நில அமைப்பின் (Asian Wetlands Bureau) முக்கியமான 93 சதுப்பு நிலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 40 அரிய இனங்களைச் சேர்ந்த 20000 புலம்பெயர் பறவைகளை இந்த ஏரி ஈர்க்கின்றது.
-
புலிக்காடு ஏரி பறவைகள் சரணாலயம்
- புலிக்காடு ஏரி பறவைகள் சரணாலயமானது ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியிலும் அமைந்துள்ளது.
- இந்த ஏரியானது ஒடிசாவில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத்து இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர்ச் சூழலியல் அமைப்பு ஆகும்.
- இந்த காயல் பகுதியானது கீழ்க்காண்பனவற்றிற்கு முக்கியமான உறைவிடமாகத் திகழ்கிறது.
- 160 வகை மீனினங்கள்
- 25 முட்களுடைய இருபால் புழு இனங்கள்
- 12 இறால் இனங்கள்
- 19 முதுகெலும்பற்ற உயிரினங்கள்
- 100 தரைவாழ் மற்றும் நீர்வாழ் பறவையினங்கள்
- இந்த சரணாலயமானது பூநாரைகளுக்கு மிகவும் புகழ்பெற்றதாகும்.
- இந்த ஏரியின் பல்லுயிர்த் தன்மையானது, வருடந்தோறும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
- புலம்பெயர் பறவைகளானது, முக்கியமாக மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.
- ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 3 நாட்கள் பூநாரைகள் திருவிழா இங்கு கொண்டாடப்படுகின்றது.
உயிர்க்கோள பாதுகாப்பகங்கள்
- உயிர்க்கோள பாதுகாப்பகங்களானது யுனெஸ்கோவின் முதன்மைத் திட்டமான “மனிதர்கள் மற்றும் உயிர்க்கோளம்” எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச அளவில் நியமிக்கப்பட்ட நிலப்பரப்பு/கடற்பரப்பு அலகுகளாகும்.
- இயற்கை மற்றும் சமூக மூலதனத்தினை அறிவார்ந்த மற்றும் நியாயமான முறையிலான பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு பிராந்தியத்தின் இயற்கை, பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்த பல்லுயிர்த்தன்மை பாதுகாப்பகங்கள் உதவுகின்றன.
- உயிர்க்கோள பாதுகாப்பகங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் எவ்விதமான சட்ட முறைகளும் இல்லை.
- உயிர்க்கோளப் பாதுகாப்பகங்கள் மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கியப் பகுதி, இடைநிலை மண்டலம், மற்றும் வெளிப்புற பகுதி என அழைக்கப்படுகின்றன.
- முக்கியப் பகுதி
- முக்கியமான அல்லது இயற்கை மண்டலப் பகுதியான இப்பகுதியில் மனித நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை.
- சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படும் இந்தப் பகுதியானது பாதிப்படையாத சுற்றுச்சூழல் ஆகும்.
- இடைநிலை மண்டலம்
- முக்கியப் பகுதியை சுற்றியுள்ள பகுதி இடைநிலை மண்டலம் ஆகும்.
- இங்கு ஆராய்ச்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலோபாயம் போன்ற வரையறுக்கப்பட்ட மனித நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன.
- வெளிப்புற பகுதி
- இது உயிர்க்கோள பாதுகாப்பகத்தின் கடைநிலை அல்லது புறப்பரப்பு பகுதியாகும்.
- பாதுகாப்பு மேலாண்மை மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன், குடியேற்றங்கள், பயிரிடுதல், பொழுதுபோக்கு மற்றும் வனவியல் போன்ற மனித நடவடிக்கைகள் சுற்றுச்சூழலைத் தொந்தரவு செய்யாமல் மேற்கொள்ளப்படுகின்றன.
இனி தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோள பாதுகாப்பகங்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம்.
-
நீலகிரி உயிர்க்கோள பாதுகாப்பகம்
- நீலகிரி உயிர்க்கோள பாதுகாப்பகமானது 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுனெஸ்கோவால் நிறுவப்பட்டது. மேலும் இது 2012 ஆம் ஆண்டு ஒரு உலக பாரம்பரியத் தளமாகவும் அறிவிக்கப்பட்டது.
- இந்தப் பாதுகாப்பகமானது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
- இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள பாதுகாப்பகமாகும். மேலும் உலகமெங்கிலும் இது போன்ற பல்லுயிர்த்தன்மை வாய்ந்த முக்கிய தளங்கள் 34 மட்டுமே உள்ளன.
- இந்தப் பாதுகாப்பகமானது 4 புலிகள் பாதுகாப்பகங்கள், 2 தேசிய பூங்காக்கள் மற்றும் ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இது 100-க்கும் அதிகமான பாலூட்டிகள், 350 வகையான பறவையினங்கள், 80 வகையான ஊர்வன இனங்கள், 39 வகையான மீனினங்கள், 31 ஈரிட வாழ்விகள் மற்றும் 316 வகையான பட்டாம்பூச்சியினங்கள் ஆகியனவற்றிற்குத் தாயகமாக உள்ளது.
- மேலும் இங்கு 3300 வகையான பூக்கும் தாவர இனங்களைக் காணலாம். இந்த 3300 இனங்களில் 132 இனங்கள் நீலகிரி உயிர்க்கோள பாதுகாப்பகத்தின் உள்ளூர் அல்லது வட்டார இனங்களாகும்.
- இந்தப் பாதுகாப்பகமானது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களுக்கு மிகவும் பிரபலமானதாகும்.
- இந்த பாதுகாப்பகமானது தோடர்கள், கோடர்கள், இருளர்கள், குறும்பர்கள், பனியர்கள், அதியன்கள், எடநாதன் செட்டிகள், அல்லர்கள், மலையர்கள் மற்றும் பல பழங்குடியினர்களுக்குத் தாயகமாகும்.
-
மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பகம்
- மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பகம் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள லட்சத்தீவு கடலின் ஒரு மிகப்பெரிய ஆழமற்ற வளைகுடாப் பகுதியாகும்.
- இது ஆசியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோள பாதுகாப்பகமாகும்.
- இது இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் இந்தியாவின் தென்கிழக்கு முனை ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ளது.
- இந்தப் பாதுகாப்பகமானது கடல் பரப்பில் 10,500 சதுர கிலோமீட்டர், 21 தீவுகள் மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கியது.
- இதனில் கடற்கரை, முகத்துவாரங்கள் மற்றும் பெரிய இலைகளைக் கொண்ட வெப்ப மண்டல உலர் காடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தீவுகள் மற்றும் கடலோர இடைநிலைப் பகுதி மண்டலமும் கடற்பாசி குழுமங்கள், பவளப்பாறைகள், உப்பங்கழிகள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கிய கடல்சார் சூழலியலும் அடங்கும்.
- இது இந்தியாவின் உயிரியல் ரீதியில் மிகவும் வளமிக்க பகுதியாகும். 3600 வகையான தாவர மற்றும் விலங்கினங்கள் இதன் எல்லைப் பகுதிக்குள் வசிக்கின்றன.
- மேலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பகமானது பின்க்டடா ரேடியட்டா மற்றும் பின்க்டடா பக்கடா ஆகியவற்றின் முத்து வளங்களினால் ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மிகவும் புகழ் பெற்றதாகும்.
-
அகத்தியர் மலை உயிர்க்கோள பாதுகாப்பகம்
- 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அகத்தியர் மலை உயிர்க்கோள பாதுகாப்பகமானது கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
- 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது யுனெஸ்கோவின் உயிர்க்கோள பாதுகாப்பகத்திற்கான உலகளாவிய அமைப்பில் இணைக்கப்பட்டது.
- இது கேரளாவின் பத்தனம்திட்டா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுடனும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.
- இந்த பாதுகாப்பகமானது கீழ்க்காணும் இனங்களுக்குத் தாயகமாக விளங்குகின்றது.
- 400 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 2254 வகையான ஓங்கி வளரும் தாவர இனங்கள்,
- 20 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 79 வகையான பாலூட்டியினங்கள்,
- 45 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 88 வகையான ஊர்வன இனங்கள்,
- 30 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 45 ஈரிட வாழ்வினங்கள்,
- 10 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 46 வகையான மீனினங்கள் மற்றும்
- 20 வகையான உள்ளூர் அல்லது வட்டார இனங்கள் உட்பட மொத்தமாக 331 வகையான பறவையினங்கள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
- IUCN-ன் சிவப்பு பட்டியலில் உள்ள சுமார் 400 வகையான தாவர இனங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
- சுமார் 125 வகை அரிதான, வட்டார மற்றும் அச்சுறு நிலையிலுள்ள ஆர்க்கிட் (மல்லிகை) இனங்கள் இந்தப் பாதுகாப்பகத்தில் உள்ளன.
- மேலும் குறிப்பாக ஏலக்காய், ஜாமுன் (நாவல் பழம்), ஜாதிக்காய், மிளகு மற்றும் உணவுக்கான வாழை மரங்கள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்ட தனித்தன்மை வாய்ந்த மரபியல் பாதுகாப்பகத்தையும் இது கொண்டுள்ளது.
- இது செந்தூர்னீ, பெப்பரா மற்றும் நாயர் ஆகிய 3 வனவிலங்கு சரணாலயங்களையும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தையும் உள்ளடக்கியது.
- மேலும் இது உலகின் மிகப்பழமையான பழங்குடியினங்களில் ஒன்றான காணிக்காரன் எனும் பழங்குடி இனத்திற்குத் தாயகமாகவும் உள்ளது.
- - - - - - - - - - - - - - -