TNPSC Thervupettagam

தமிழ் நாடு பட்ஜெட் 2018-2019 : சிறப்பம்சங்கள்

March 30 , 2018 2285 days 1420 0
தமிழ் நாடு பட்ஜெட் 2018-2019 : சிறப்பம்சங்கள்

- - - - - - - - - - - - - - -

  பொதுவாக
  • 2018-2019  நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் மதிப்பீடுகளில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 27, 205.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பட்ஜெட்டில்புதிய வரிகள்  எதுவும்  குறிப்பிடப்படவில்லை.
  • 14-வது நிதிக்குழு காலத்தில் நிதிப் பகிர்வில் 89 சதவிகித உயர்வை மட்டுமே தமிழ்நாடு பெற்றுள்ளது.  கர்நாடகா 14%, மகாராஷ்டிரா 148.93%, குஜராத் 137.70%, கேரளா 149.82%  உயர்வுகளைப் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி ஒதுக்குவதில்தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசிடம் தமிழகம் சிறப்பு உதவி மானியம் வழங்கக் கோரியது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தப்  பதிலையும் அளிக்கவில்லை.
  • 2018-19 நிதியாண்டிற்கான  வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் ரூ.1,12,616 கோடியாக   மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது.
  • மாநிலப் பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறைக் காரணிகளால் வரி வருவாய் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • முதல் தலைமுறைத் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.43 கோடி செலவில் 7,000 ஏக்கரில் மிகப்பெரிய மரம் நடுதல் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  • மாநிலத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கு “விலையில்லா இலவச வேட்டி சேலைகள் விநியோகத் திட்டத்தை” செயல்படுத்த 2018-2019    நிதியாண்டில் ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரவிருக்கின்ற நிதியாண்டில் ரூ.23 கோடி செலவில் 20 இடங்களில் தீயணைப்பு நிலையக் கட்டிடங்கள் கட்டப்படும்.
  • உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தினுடைய நஷ்டம் அதிகரித்துள்ளது.
  • வருகிற நிதியாண்டில் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , சென்னையில் உள்ள பிரசிடன்சி கல்லூரியின் விக்டோரியா விடுதி மற்றும் குயின் மேரி கல்லூரி ஆகியவற்றின் பாரம்பரியக் கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 3000 புதிய பேருந்துகளை வாங்கி அவற்றைப் போக்குவரத்துப் பயன்பாட்டில் இணைக்க மாநிலப் போக்குவரத்து கழகங்களில் மாநில அரசு  600 கொடி ரூபாய் பங்கு மூலதனத்தை வழங்கும்.
  • இலவச, கட்டாய கல்விக்கான குழந்தைகள் உரிமைச் சட்டத்தினை  செயல்படுத்த ரூ.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயர்கல்வித் துறைக்கு ரூ.4,620.20 கோடி ரூபாய்   ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அண்மையில்  நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி,  மாநிலங்களுக்கான சுகாதாரக் குறியீடுகளில் அனைத்து மாநிலங்களுள்  தமிழ்நாடு 3 வது இடத்தையும் ,உயர் கல்விச் சேர்க்கைப் பதிவில்  முதலிடத்தையும் வகிக்கிறது.
  • 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு முன்மொழிவை வழங்கியுள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.750 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும் 1000 கோடி ரூபாயை துணைக் கடனாகவும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • அத்திக்கடவு அவினாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். இதற்காக  1789 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போக்குவரத்துத் துறைக்குமொத்தமாக 2,717.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தமாக 11,073.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறைக்கு 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பட்ஜெட்டில் காவல்துறைக்கு 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபானக் கடைகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் வருவாய் குறைந்துள்ளது.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ. 1,03,219 ஆக இருந்தபோதிலும் தமிழகத்தில் ரூ. 1,53,263 ஆக உள்ளது.
  • 2018-2019 ஆம் ஆண்டில் காவல் துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்காக 35 கட்டிடங்களுடன் 15 காவல் நிலையக் கட்டிடங்களும்,543 குடியிருப்புகளும் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • இணைய வழிக் குற்றங்களை திறம்படக் கண்டறிய, அனைத்து மாவட்டங்களிலும் ஆணையகரங்களிலும் தலா ஒரு இணைய வழி குற்றத் தடுப்புக் காவல் நிலையம் 28 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • 2018-2019 ஆம் ஆண்டில், 3 இலட்சம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஏழைக் குடும்பங்களுக்கு  வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வட சென்னை மற்றும் தென் சென்னைப் பகுதிகளுக்கான விரிவான வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டங்கள், முறையே 2,055.67 கோடி ரூபாய் மற்றும் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு, நிதி உதவிக்காக மத்திய அரசிடம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • உலக வங்கியால் நிதி உதவி அளிக்கப்பட்ட தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்தின் செயல்பாட்டினை  தமிழகத்தில் உள்ள  26 மாவட்டங்களில்  ரூ.920.63 கோடி ரூபாய் செலவில்  அரசு துவங்கும்.
  • 2018 - 2019 ஆண்டில் மொத்த வருவாய் வரவுகள் 1,76,251.48 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய்ச் செலவினங்கள் 1,93,742.06 கோடி ரூபாயாகவும், இதனால் வருவாய் பற்றாக்குறை 17,490.58 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஜி.எஸ்.டி  தமிழகத்தின் பொருளாதாரத்தை  தற்காலிகமாகப்  பாதித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் வேகமாக வளரும் எனவும் இதன்மூலம் 9% என்ற அளவிலான வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு அடையும் எனவும்  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
. வேளாண் துறை
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், வேளாண்மைத் துறைக்கு ஒட்டு மொத்தமாக 8,916.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை 2018-2019 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும்.
  • விவசாயிகளின் பயன்பாட்டிற்காக  “ உழவன்” என்ற பிரத்தியேக கைபேசி  செயலி ஒன்று  அறிமுகப்படுத்தப்படும்.
  • வருகிற நிதி ஆண்டில் விவசாயிகளுக்குக் கூட்டுறவு நிறுவனங்கள்  மூலம்  ரூ. 8,000 கோடிக்குப் புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கு ,  110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய மாநில அரசு  அடைய இலக்கு  நிர்ணயித்துள்ளது.
  • சென்னை கிண்டியில் ரூ. 20 கோடிமதிப்பீட்டில் ‘அம்மா பசுமைப் பூங்கா’ புதிதாக அமைக்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் ஒன்று புதிதாக அமைக்கப்படும்.
  • கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்து நிலையம்  ஒன்று அமைக்கப்படும்.
  • தோவாளையில் மலர்களுக்கான பின்சார் அறுவடை  பதப்படுத்து நிலையம்  ஒன்று அமைக்கப்படும்.
. பெண்கள் நலன்
  • மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்’ கீழ் ஓர் பயனாளிக்கான நிதியுதவியை 12,000 ரூபாயிலிருந்து  18,000 ரூபாயாக   ஏற்கனவே அரசு உயர்த்தியுள்ளது.
  • சென்னையில் வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்கள் தங்குவதற்காக, மகளிர் விடுதி ஒன்று அரசு நிதி உதவியுடன் வரும் நிதி ஆண்டில் கட்டமைக்கப்படும்.
  • மகப்பேறுப் பெண்களிடையே பரவலாகக் காணப்படும்  இரத்த சோகையை போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய ‘அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகத்தை ’ வழங்க  4,000 ரூபாய் அளிக்கப் படும் .
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், திருமண உதவித் திட்டத்திற்காக ரூ.724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அம்மா இருசக்கர வாகன மானிய நிதியுதவித் திட்டத்திற்காக ரு.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இது தவிர, மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள்  வழங்கும் திட்டத்தின் அமல்பாட்டிற்காக   58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
. தகவல் தொழில் நுட்பத்துறை
  • 2018-2019 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு ரூ 158.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு ஒளியிழை இணைய வலையமைப்பு நிறுவனத்தின் மூலம் ஒளியிழை வடப்  பிணையம் வழியே  மண்டலத் தலைமையகங்களுடன் கிராமங்களை இணைப்பதற்கு பாரத் வலையமைப்புத் திட்டத்தை 1230 கோடி  ரூபாய் செலவில் அரசு செயல்படுத்தும்.
  • இதேபோல், பொது மற்றும் தனியார் கூட்டிணைவு முறையில் தமிழ் வலையமைப்புத் திட்டத்தின் கீழ் ஒளியிழை வடம்  (ஆப்டிகல் பைபர்)  என்ற வலையமைப்பின் மூலம் மாநிலத் தலைமையகம் மாவட்டத் தலைமையகங்கள்  மற்றும் மண்டலத்  தலைமையகங்களுடன் இணைக்கப்படும்.
. சுகாதாரத்துறை
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சுகாதாரத் துறைக்கு ரூ. 11,638.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமது மக்களுக்குக் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் எப்பொழுதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
  • பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் நாட்டிலேயே 2வது சிறந்த மாநிலமாகத்  தமிழகம் திகழ்கிறது.
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக’ ரூ. 1,361.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.24 கோடி ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள்  பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்.
  • ரூ.34 கோடி ரூபாய் செலவில்  புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் சிகிச்சை மையங்கள்  விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்படும்.35 கோடி   ரூபாய் செலவில் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்  தற்போது உள்ள  கோபால்ட் புற்றுநோய் சிகிச்சை சாதனங்கள் மாற்றி அமைக்கப்படும்.
  • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் 50 கோடி ரூபாய் செலவில் இரண்டு நேரியல் முடுக்கிகளும் (Linear accelerator), 6 சி.டி. ஸ்கேன்களும், 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களும் வழங்கப்படும்.
. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
  • அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மத்திய அரசின் நிதி உதவியைப் பெற வழிவகை செய்யும் விதமாக அவற்றின் கட்டமைப்பில் உள்ள  குறைபாடுகள் 30 கோடி ரூபாய் செலவில் நிவர்த்தி செய்யப்படும்.
  • தொழிற் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், 20 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 38 கோடி ரூபாய் செலவில் மருத்துவ மின்னணுவியல், மேம்பட்ட இயந்திரவியல், கருவியியல் மற்றும் அச்சு உருவாக்கம், மின்சார மின்னணுவியல் மற்றும் கட்டிட வடிவமைப்பு போன்ற  புதிய தொழிற்கல்விப்  பிரிவுகள் தொடங்கப்படும்.
 . தமிழ் மேம்பாடு
  • சர்வதேச அளவில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாத்துப்  பரப்புவதற்காக, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கென தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ஆண்டு மானியமாக 2 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
  • வருடாந்திர 1 கோடி ரூபாய் மானியத்தோடு  தமிழ் கலாச்சார  மையமும் அமைக்கப்படும்.
  • வறிய சூழ்நிலையில் வாழும் கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவித் தொகை ரூ.500ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
. ஜெயலலிதா
  • மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவாக பெரும் நினைவு மண்டபம் ஒன்று    ரூ.80 கோடி செலவில் மெரினாவில் அமைக்கப்படும்.
  • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்  அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா  பெரும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும்.
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.    

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்