TNPSC Thervupettagam

தியாகராய செட்டியார்

June 20 , 2019 2031 days 4657 0
  • இந்திய வழக்கறிஞரான சர் பிட்டி தியாகராய செட்டியார், தொழிலதிபரும் முந்தைய மதராஸ் மாகாணத்தின் பிரபலமான அரசியல் தலைவருமாவார்.

  • சி. நடேச முதலியார், டாக்டர் T.M. நாயர் ஆகியோருடன் இணைந்து 1916 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவராவார்.
  • தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோருக்கான இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இந்த இயக்கத்தை வழி நடத்தியதில் முதல் நபராகவும் இவர் கருதப்படுகின்றார்.
இளமைக்கால வாழ்க்கை
  • தியாகராயச் செட்டியார்மதராஸ் மாகாணத்தின் ஏகாட்டூரில் தெலுங்கு மொழி பேசும் தேவாங்க குடும்பத்தில் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று பிறந்தார்.
  • 1873 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த இவர் பொது வாழ்வில் நுழைந்து 1882 ஆம் ஆண்டு முதல் 1922 ஆம் ஆண்டு வரை மதராஸ் மாநகராட்சியில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • இவர் 1882 முதல் 1922 வரை மதராஸ் மாநகராட்சியில் உறுப்பினர் அல்லது கவுன்சிலராக சுமார் 40 ஆண்டுகள் வரை பணியாற்றினார்.
  • மேலும் இவர் 1920 ஆம் ஆண்டு முதல் 1923 வரை மதராஸ் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
  • மதராஸ் மாநகராட்சியின் முதல் அலுவல் சாராத தலைவர் இவரேயாவார்.
  • 1910 ஆம் ஆண்டு இவர் மதராஸ் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தென்னிந்திய வர்த்தக சபையின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 1910 முதல் 1921 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகப் பணியாற்றினார்.
  • இவர் இந்திய தேசபக்தி (Indian Patroit) செய்தித்தாள் மற்றும் அதன் பதிப்பாசிரியரான கருணாகர மேனனின் சார்பாக டாக்டர் TM நாயருக்கு எதிராக வழக்காடினார். பின்னாளில் அவர் நாயரின் நெருங்கிய நண்பரானார்.
  • தியாகராயச் செட்டியார் 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவுவதற்கு முன்பு இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக பணியாற்றினார்.
மீள் இணைப்பு
  • 1912 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சி ஆணையத்தில் இரண்டு விதமான குழுக்கள் இருந்தன.
  • பிராமணரல்லாதோர் குழுவிற்கு சர் பிட்டி தியாகராயச் செட்டியார் தலைமை தாங்கினார்.
  • மற்றொரு குழுவிற்கு டி.எம். நாயர் தலைமை தாங்கினார்.
  • இந்த இரு குழுவினரும் பிராமணரல்லாதோராக இருந்த போதிலும் அவைக் கூட்டங்களில் இதன் இரு தலைவர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
  • இந்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்திருந்தால் பிராமணரல்லாதோர் இயக்கத்தினை வேகமாக முன்னேற்றலாம் என்பதனை நடேச முதலியார் உணர்ந்தார்.
  • இதனால் தான் நடேச முதலியாரால் இவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைச் சரி செய்ய முடிந்தது.
திராவிட இயக்கம்
  • 1909 ஆம் ஆண்டில் P. சுப்பிரமணியம் மற்றும் M. புருஷோத்தம் எனும் இரு மதராஸ் நகர வழக்கறிஞர்களால் பிராமணரல்லாதோர் சங்கமானது தோற்றுவிக்கப்பட்டது.
  • 1912 ஆம் ஆண்டு மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்படும் வரை தியாகராயச் செட்டியார் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
  • அதிருப்தி அடைந்த பிராமணரல்லாத அதிகார வர்க்கத்தின் உறுப்பினர்களான சரவணப் பிள்ளை, G. வீராச்சாமி நாயுடு, துரைசாமி நாயுடு மற்றும் நாராயண சாமி நாயுடு ஆகியோரால் மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்பட்டது C. நடேச முதலியார் அதன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • பின்னர் 1912 ஆம் ஆண்டிலேயே (அக்டோபர்) மதராஸ் ஒருங்கிணைந்த லீக் ஆனது மதராஸ் திராவிடச் சங்கம் என மறுபெயரிடப்பட்டது.
  • திராவிடம் எனும் சொல் ஒரு அரசியல் அமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
  • பின்னாளில் பனகல் ராஜா என்றழைக்கப்பட்ட பனகந்தி ராமராயநிங்கார் அதன் தலைவராகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அந்த அமைப்பின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக மதராஸ் திராவிடச் சங்கமானது “திராவிட இல்லம்” எனும் விடுதியை நடத்தியது.
  • சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக விடுதிச் சலுகைகள் கிடைக்கப் பெறாத பிராமணரல்லாத மாணவர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டது.
  • 1914 ஆம் ஆண்டில் மதராஸின் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடேசன் அத்தகைய விடுதிகளை நடத்தினார்.
  • 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தியாகராயச் செட்டியார் மற்றும் நாயர் உட்பட முப்பது பேர் கொண்ட குழுவின் கூடுகை ஒன்று நடத்தப் பட்டது.
  • பிராமணரல்லாதவர்களின் குறைகளை அறியப்படுத்த ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி செய்தித்தாள்களை வெளியிட தென்னிந்திய மக்கள் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.
  • தியாகராயச் செட்டியார் இந்த அமைப்பின் செயலாளரானார்.
  • “நீதி” எனும் பெயரிடப்பட்ட ஒரு செய்தித் தாளானது, 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் வெளிவரத் தொடங்கியது.

  • நாயர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார்.
  • இந்தக் கூடுகையானது மேலும் தென்னிந்திய தாராளவாதிகள் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் சங்கத்தினையும் உருவாக்கியது.
  • “நீதி” என்ற பத்திரிக்கையை இது வெளியிட்டதால் பின்னாளில் இந்தச் சங்கமானது “நீதிக்கட்சி” என பிரபலமாக அழைக்கப்பட்டது.

  • தியாகராயச் செட்டியார் 1917 ஆம் ஆண்டிலிருந்து 1925 ஆம் ஆண்டு தனது மறைவு வரை இந்தக் கூட்டமைப்பின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
  • இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை வெகு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீதிக் கட்சி அப்பிரச்சினைகளுக்கானத் தீர்வினைக் கோரியது.
  • திராவிடர் கழகத்தினை உருவாக்க நீதிக்கட்சியுடன் 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈவெரா பெரியாரின் சுய மரியாதை இயக்கமும் கை கோர்த்தது. இது பிராமண எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு உதவியது.
தேர்தல் முடிவுகள்
  • மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 98 இடங்களில் நீதிக்கட்சியானது 63 இடங்களில் வென்று போதுமான பெரும்பான்மையைப் பெற்றது.
  • அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநரான வெல்லிங்டன் பிரபு அரசினை அமைக்க தியாகராயச் செட்டியாருக்கு அழைப்பு விடுத்தார்.
  • இருப்பினும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அமைச்சரவையில் ஒரு பதவியையும் வகிக்க முடியாது என்ற நெறிமுறை விதியின் காரணமாக இவர் அதனை மறுத்துவிட்டார்.
  • இதன் விளைவாக A. சுப்புராயலு ரெட்டியார் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
  • சுப்புராயலு ரெட்டியாருக்கு பனகல் ராஜா மற்றும் வெங்கட ரெட்டி நாயுடு என இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் இருந்தனர்.
 இறுதிக் காலம்
  • 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் தியாகராயச் செட்டியார் காலமானார்.

  • இவருக்குப் பின் நீதிக்கட்சியின் தலைவராக பனகல் ராஜா நியமிக்கப்பட்டார்.
நினைவுச் சின்னங்கள்
  • 1909 ஆம் ஆண்டில் ராவ் பகதூர், 1919 ஆம் ஆண்டில் திவான் பகதூர் மற்றும் 1921 ஆம் ஆண்டில் சர் ஆகிய பட்டங்களை வழங்கி அரசு இவரை கௌரவித்தது.
  • 1920 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நீதிக்கட்சியின் வெற்றிக்கு இவரே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறார்.
  • பின்தங்கிய உள்ளூர் மக்களுக்காக சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு மதராஸ் இந்து மேல்நிலைப் பள்ளியானது 1897 ஆம் ஆண்டில் தியாகராயச் செட்டியார் மற்றும் அவரின் தந்தையால் திறக்கப்பட்டது.
  • பின்னர் 1950 ஆம் ஆண்டில் அவரின் பேரனால் அப்பள்ளி சர் தியாகராய கல்லூரியாக மாற்றப்பட்டது.
  • சென்னையில் முதல் மதிய உணவுத் திட்டம் 1920 ஆம் ஆண்டு சென்னையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்டது.
  • உலகின் இரண்டாவதுப் பழமையான மாநகராட்சியான சென்னை மாநகராட்சியின் அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் சர் தியாகராயச் செட்டியாருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.

  • மதராஸ் மாகாணத்தின் பனகல் ராஜா அரசால் 1923 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரையில் சென்னையின் ஒரு பகுதியில் நிறுவப்பட்ட ஒரு இடத்திற்கு தியாகராய நகர் என இவரின் பெயர் சூட்டப்பட்டது.
  • வெள்ளை ஆடைகள் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக, தியாகராயச் செட்டியார் வெள்ளுடை வேந்தர் என்று மாகப் பொருத்தமாக அழைக்கப்படுகின்றார்.

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்