TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள் 2018

September 28 , 2018 2296 days 9860 0

To read this article in English language - Click Here

  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
  • இவ்விருதுகளானது ஒவ்வொரு வருடமும் இந்திய தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று வழங்கப்படும். இத்தினம்  பழம்பெரும் ஹாக்கி நட்சத்திர வீரரான தயான் சந்தின் பிறந்த தினமாகும்.
  • ஆனால் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுகள் காரணமாக விருது வழங்கும் நிகழ்ச்சியானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமானது ஆசிய விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் உயர்ந்த விளையாட்டு விருதான 2018 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி மற்றும் உலக சாம்பியன் பளுதூக்கும் வீரரான மீராபாய் சனு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பரிசீலனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பெற்றது.
  • முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், அர்ஜூனா விருது பெற்றவர்கள், துரோணாச்சாரியா விருது பெற்றவர்கள், தயான் சந்த் விருது பெற்றவர்கள், விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்கள், வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகத்தினர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும்.

2018 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றவர்கள்

வ.எண் விளையாட்டு வீரின் பெயர் விளையாட்டு
1. S. மீராபாய் சனு பளு தூக்குதல்
2. விராட் கோலி கிரிக்கெட்
  • பழம்பெரும் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு (1997) அடுத்து மூன்றாவது இந்திய வீரராக விராட் கோலி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறுகிறார். மகேந்திர சிங் தோனி 2007 ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றார்.

  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும்.
  • 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இந்தியப் பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தியின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருதைப் பெறுபவர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சர்வதேச அளவில் “நான்கு ஆண்டுக் காலகட்டத்தில் விளையாட்டுத் துறையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்களை” கௌரவிப்பதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இந்த விருது அணியக்கூடிய பதக்கம், சான்று மற்றும் ரூபாய் 7.5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

2018 ஆம் ஆண்டிற்கான துரோணாச்சாரியா விருதைப் பெற்றவர்கள்

வ.எண் பயிற்சியாளரின் பெயர் விளையாட்டு
1. சுபேதார் செனந்தா அச்சய்யா குட்டப்பா குத்துச்சண்டை
2. விஜய் சர்மா பளு தூக்குதல்
3. A. ஸ்ரீனிவாச ராவ் டேபிள் டென்னிஸ்
4. சுகுதேவ் சிங் பனு தடகளம்
5. கிளாரென்ஸ் லோபோ ஹாக்கி (வாழ்நாள் சாதனை)
6. தாரக் சின்ஹா கிரிக்கெட் (வாழ்நாள் சாதனை)
7. ஜைவான் குமார் சர்மா ஜுடோ (வாழ்நாள் சாதனை)
8. V.R. பீடு தடகளம் (வாழ்நாள் சாதனை)
  • இந்திய விளையாட்டுப் பயிற்சியாளர்களை கௌரவிப்பதற்காக துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.
  • பழங்கால இந்தியாவின் சமஸ்கிருத காவியமான மகாபாரதத்தில் இடம்பெறும் பாத்திரமான ‘துரோணாச்சாரியா’ அல்லது ‘குரு துரோணா’ என்பவரின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருதைப் பெறுபவர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்விருது 4 ஆண்டு காலகட்டத்தில் “சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுதல் மற்றும் சிறப்பான, தகுதி வாய்ந்த விளையாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல்” ஆகியவற்றிற்காக பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
  • இவ்விருது துரோணாச்சாரியா உருவம் பொதித்த வெண்கலப் பதக்கம், ஒரு சான்று, விழா ஆடை மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதைப் பெற்றபவர்கள்

வ.எண் விளையாட்டு வீரரின் பெயர் விளையாட்டு
1. நீரஜ் சோப்ரா தடகளம்
2. ஜின்சன் ஜான்சன் தடகளம்
3. ஹீமா தாஸ் தடகளம்
4. நீலகுர்த்தி சிக்கி ரெட்டி பேட்மின்டன்
5. சதீஷ் குமார் குத்துச்சண்டை
6. ஸ்மிர்தி  மந்தானா கிரிக்கெட்
7. சுபன்கர் சர்மா கோல்ப்
8. மன்பிரீத் சிங் ஹாக்கி
9. சவிதா ஹாக்கி
10. ரவி ரத்தோர் போலோ
11. ராகி சர்னோபா துப்பாக்கி சுடுதல்
12. அன்குர் மிட்டல் துப்பாக்கி சுடுதல்
13. சிரியாசி சிங் துப்பாக்கி சுடுதல்
14. மணிக்கா பத்ரா டேபிள் டென்னிஸ்
15. G. சத்யன் டேபிள் டென்னிஸ்
16. ரோகன் போபண்ணா டென்னிஸ்
17. சுமித் மல்யுத்தம்
18. பூஜா கடியன் உஷூ
19. அன்குர் தாமா பாரா - தடகளம்
20.  மனோஜ் சர்கார் பாரா - பேட்மின்டன்
  • தேசிய விளையாட்டுகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிப்பதற்காக அர்ஜுனா விருதுகள் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
  • அர்ஜுனா விருது 1961 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இவ்விருதானது ரூபாய் 5 இலட்சம் ரொக்கப் பரிசு, அர்ஜுனா உருவம் பொரித்த வெண்கலம் மற்றும் சான்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

2018 ஆம் ஆண்டில் தயான் சந்த் விருது பெற்றகள்

வ.எண் விளையாட்டு வீரரின் பெயர் விளையாட்டு
1. சத்திய தேவ் பிரசாத் வில்வித்தை
2. பாரத் குமார் சேத்திரி ஹாக்கி
3. போபி அலோசியுஸ் தடகளம்
4. சௌகேல் டாடு டட்டாடிரே மல்யுத்தம்
  • தயான் சந்த் விருதானது இந்திய விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை படைத்தற்காக வழங்கப்படுவதாகும்.
  • இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த் என்பவரின் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.

  • இவ்விருது பெறுபவர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட குழுவினால் தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்கள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் விளையாடிக் கொண்டிருக்கும்போதும் விளையாட்டில் பங்களிப்பை செலுத்தியதற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
  • இவ்விருது உருவப் பதக்கம், ஒரு சான்று, விழா ஆடை மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

 

2018 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய கேல் புரோட்சஹன் புரஸ்கர் விருது பெறுபவர்கள்

வ.எண் பிரிவுகள் நிறுவனத்தின் பெயர்
1. இள வயது திறனுடையவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஊக்குவித்தல் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட்
2. பெரு நிறுவன சமூக பொறுப்புடைமையின் மூலம் விளையாட்டுகளை ஊக்குவித்தல் ஜெஎஸ்யூ விளையாட்டுகள்
3. வளர்ச்சிக்கான விளையாட்டுகள் இசா அவுட்ரீச்
  • விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய பெருநிறுவனங்கள் (தனியார் மற்றும் பொதுத்துறை) மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ராஷ்டிரிய கேல் புரோட்சஹன் புரஸ்கர் விருது வழங்கப்படுகிறது.
  • ராஷ்டிரிய கேல் புரோட்சஹன் புரஸ்கர் விருதைப் பெறுபவர்கள் கோப்பைகள் மற்றும் சான்றுகளைப் பெறுவார்கள்.

 

மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை 2017 - 18

  • 2017 - 18 ஆம் ஆண்டிற்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருதுக்கு அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை வகித்த பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது வழங்கப்படுகிறது.

  • ஒட்டுமொத்தமாக முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழகம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை, ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் ஒரு சான்று ஆகியவற்றைப் பெறும்.

- - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்