TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - I

May 17 , 2019 2019 days 34374 0
  • இந்திய நாடு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் நாடாகும்.
  • இருப்பினும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானதாகும்.
  • 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்ந்த போதிலும், ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த சமயத்தில் அதன் மகிமையை இழந்திருந்தது.
  • சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவில் உயர் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல சீர்திருத்தங்களை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.
  • அந்த நேரத்தில் இந்தியாவானது தொழிற்புரட்சியின் முன்னணியில் இல்லை என்பதை அவர் தெளிவாக புரிந்திருந்தார்.
  • எனவே இந்தியாவில் உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம்
  • 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாளன்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research-CSIR) எனும் தன்னாட்சி அமைப்பு செயல்பாட்டிற்கு வந்தது.
  • ஆரம்ப காலத்தில் கீழ்க்காணும் 8 தேசிய அளவிலான ஆய்வகங்கள் CSIR-ன் கீழ் தொடங்கப்பட்டன.
    • தேசிய வேதியியல் ஆய்வுக் கூடம் – புனே
    • தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடம் – புதுடெல்லி
    • தேசிய உலோகவியல் ஆய்வுக் கூடம் – ஜாம்ஷெட்பூர்
    • மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் – ஜார்க்கண்ட்
    • மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் – லக்னோ
    • மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் – கொல்கத்தா
    • மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை
    • மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாட்டின் காரைக்குடி
  • மேற்கண்ட அனைத்து நிறுவனங்களும் 1940 – 1950க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் தொடங்கப்பட்டன.
  • தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்காக பேராசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட 22 பேர் கொண்ட குழுவினால் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (Indian Institute of Technology-IIT) உருவாக்கும் திட்டம் உருவானது.
  • 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் நாள் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) திறக்கப்பட்டது.
  • 1950-களின் பிற்பகுதி மற்றும் 1960-களின் முற்பகுதிகளில் பம்பாய், மெட்ராஸ், கான்பூர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் மேலும் பல இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
  • 1954 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆணை மூலம் அணுசக்தி ஆற்றல் துறை (Department of Atomic Energy-DAE) நிறுவப்பட்டது.
  • மேம்படுத்தப்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களுக்காக 1958 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation-DRDO) சோவியத் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.
விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு
  • இந்திய விண்வெளித் திட்டத்தினை உருவாக்குவதற்காக டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையின் கீழ் விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு (Indian National Committee for Space Research - INCOSPAR) 1962 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக (Indian Space Research Organisation-ISRO) இது மாற்றியமைக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது (Department of Science & Technology-DST) 1971 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுவப்பட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இந்தத் துறையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.
  • நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்பான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான முதன்மை துறையாக இது செயல்படுகின்றது.

 

ஐந்தாண்டுத் திட்டங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டக் குழுவானது முதலீட்டு அளவை முடிவு செய்தல், முன்னுரிமைகளைப் பரிந்துரைத்தல், விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கிடையே நிதிகளைப் பிரித்து வழங்குதல் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கிடையே வளங்களைப் பிரித்து வழங்குதல் ஆகிய பணிகளை செய்கிறது.
  • ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பது இதன் பிரதானமான பொறுப்பாகும்.
  • இது ஏறக்குறைய அனைத்து ஐந்தாண்டுத் திட்டங்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியே வகுத்தது.
  • இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) திறமையான நபர்களைக் கண்டறிய திறன் வாய்ந்த மனிதவளக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • தொழில்நுட்பத்தில் திறன்மிகு நபர்களின் தன்னார்வ பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இத்திட்டம் அதன் இலக்கை அடையத் தவறியது.
  • பின்னர் இந்த திறன் விவரங்களானது 1961 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்துப் பெறப்பட்டது.
  • மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் போது (1961-66) அரசானது ஈர்த்தல் மற்றும் உந்துதல் என இருவகையான ஆய்வுகளை உருவாக்கத் திட்டமிட்டது.
    • கல்வியியல் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் ஈர்த்தல் வகை ஆராய்ச்சியாகும்.
    • தொழிலகங்கள் மற்றும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் உந்துதல் வகை ஆராய்ச்சியாகும்.
  • நான்காவது மற்றும் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் (1969-1974 & 1974-1979) CSIR-ன் கட்டுப்பாட்டிற்கு வெளியில் இயங்கும் பின்வரும் இரு அறிவியல் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.
    • இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்.
    • இந்திய விண்வெளி ஆராய்ச்சி வாரியம்.
  • ஏழாவது ஐந்தாண்டுத் திட்டக் காலமானது (1985 -1990) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கான தாயாக கருதப்படுகிறது.
  • இந்தக் காலத்தில் தான் நானோ தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் இதர பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன.
  • எட்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது (1992 -1997) அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவற்றைத் தவிர இதர போர்த்தி றன் சாராத அறிவியல் & தொழில்நுட்ப பகுதிகள் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டை தனியார் மயமாக்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1992-1997) கல்வி மற்றும் தொழில்துறைகளின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
  • ஆனால் ஆறாவதுத் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஏற்பட்ட தவறை நிவர்த்தி செய்ய தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இடைமுக நிறுவனம் (Industrial Science and Technology Interfacing Institution -ISTIIS) உருவாக்கப்பட்டது.
  • இந்தக் காலகட்டத்தில் தான் சர்வதேச அறிவியல் திட்டங்களில் குறிப்பாக செர்ன் (European Organisation for Nuclear Research-CERN) என்ற அமைப்பிற்கு அணுசக்தித் துறையானது கணிசமான அளவில் பங்களிப்பை அளித்தது.

  • இந்த பங்களிப்பானது சர்வதேச அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு புகழடையச் செய்யப் பட்டது.
  • பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-2012) அரசானது அந்த பத்தாண்டுக் காலத்தை (2010-2020) புத்தாக்கத்திற்கான பத்தாண்டாக அறிவித்தது.
  • மேலும் இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பாலினச் சமநிலையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியப் பிரச்சினை என்பது “அறிவுடையோர் வெளியேற்றம்” என்பதாகும்.
  • பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டமானது (2012-2017) புத்தாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அறிவுடையோர் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
  • மேலும் இது கீழ்க்காண்பவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது.
    • R &D துறையில் தேசிய அளவிலான வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டு வளர்ச்சியை வலியுறுத்துதல்.
    • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் (கூட்டு முறையில்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்தல்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்