TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சி இலக்குகள்

December 22 , 2017 2382 days 8517 0
நீடித்த வளர்ச்சி இலக்குகள்

- - - - - - - - - - - -

  • எதிர்கால சந்ததியினர் தங்களின் தேவைகளை தாங்களே சுயமாக பூர்த்தி செய்து கொண்டிடும் திறனை சமரசப்படுத்திடாமல் நிகழ்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வ மேம்பாட்டு நடவடிக்கைகளே நீடித்த மேம்பாடு (Sustainable Development) எனப்படும்.
  • உலக மக்களுக்காகவும், புவியின் நலனிற்காகவும், உள்ளடங்குத் தன்மையுடைய, நீடித்த, மீட்சித் திறனுடைய எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு திடமான முயற்சிகளை மேற்கொள்வதனை நோக்கி நீடித்த மேம்பாடானது  உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
  • நீடித்த மேம்பாட்டை அடைவதற்கு மூன்று முக்கிய கூறுகளில் ஒத்திசைவை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
  • பொருளாதார வளர்ச்சி
  • சமூக உள்ளடக்கம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • ஒன்றோடு ஒன்று உட்தொடர்புடைய இம்மூன்று கூறுகளும், தனி மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்விற்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

நீடித்த வளர்ச்சி இலக்குகளின் நோக்கங்கள்

  • ”நமது உலகை மாற்றியமைத்தல்; நீடித்த வளர்ச்சிக்கான 2030-ஆம் ஆண்டு வரையிலான திட்ட நிரல்கள்“ எனும் தலைப்புடைய புதிய நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (Sustainable Development Goals) நிரல்களை  2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நீடித்த வளர்ச்சி மாநாட்டில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளின் நிரலானது 17 இலக்குகளையும் (Goals), 169 குறிக்கோள்களையும் (target) கொண்டது.
  • அடுத்த 15 ஆண்டுகளில் (2015-2030) மிகவும் நீடித்தத் தன்மையுடைய உலகை கட்டமைப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் தேவையான செயற் நடவடிக்கைகளுக்கு உந்துதல் அளிப்பதே இந்த உலகளாவிய, ஒருங்கிணைந்த, மாற்றத்தை கொணரும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிரலின் நோக்கமாகும்.
  • 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டு காலத்தின் மேம்பாட்டிற்கு வழிகாட்டுவதற்கென 2000ஆம் கொண்டு வரப்பட்ட புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகளின் (Millenium Development Goals) அடைதலில்  உண்டான சாதனைகளின் மேல் நீடித்த வளர்ச்சி இலக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளின் இலக்குகளானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தால் (UNDP – United Nations Development Programme) நிர்ணயிக்கப்பட்டவை.

SDG காலம்

  • 2030ல் முழுவதும் அடைவதற்காக இலக்கிடப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளில், இலக்கின் மீதான செயல் நடவடிக்கைகள், 2016 ஜனவரி 7 துவங்கி, 2030 டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்படும்.

SDG-ம் சட்ட பிணைப்பும்

  • SDG-ஐ அடைதலானது உலக நாடுகளுக்கு சட்டப் பிணைப்பற்றதாகும்.
  • உலக நாடுகள் தன்னளவில் மேற்கொள்ளும் நீடித்த மேம்பாட்டு திட்டங்கள், கொள்கைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பொருத்து நாடுகளின் தனிப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளின் அமலாக்கமும், அவற்றை அடைவதிலுள்ள வெற்றியும் அமையும்.
  • இருப்பினும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு நாடுகள் தனிப்பட்ட அளவில் தேசிய மேம்பாட்டு கட்டமைப்பை ஏற்படுத்தி அவற்றிற்கு உரிமை கொண்டிடல் வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நீடித்த வளர்ச்சி இலக்குகளின் அவசியம்

  • போர், வன்முறை மோதல்களால் சிதிலமடைந்த, பலவீனமான நாடுகள் அதிகபட்ச வறுமை அளவை அனுபவித்து வரும் வேளையில் உலகில் 795 மில்லியன் மக்கள் பட்டினியுடனும், 800 மில்லியன் மக்கள் தீவிர வறுமையுடனும் தம் நாட்களை கழித்து வருகின்றனர்.
  • 2008 முதல் 2012-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்கைப் பேரிடர்களினால்  சுமார் 144 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த குடிமை இடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
  • உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • 946 மில்லியன் மக்கள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
  • பள்ளிகளில் பெண் குழந்தைகளின் வருகைப் பதிவு இருப்பினும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரிதிநிதித்துவம் முன்பைக் காட்டிலும் பெருமளவு இருப்பினும் தற்போது தொடர்ந்து பாலின சமமின்மை நிலையே நிலவி வருகின்றது.
  • உலகில் சுமார் 57 மில்லியன் குழந்தைகள் அவர்களின் தொடக்க கல்விக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலுள்ளனர்.

17 நீடித்த வளர்ச்சி இலக்குகள்

  1. உலகின் அனைத்து  இடங்களிலும், அனைத்து வடிவிலான வறுமைகளையும் ஒழித்தல்.
  2. பட்டினியைப் போக்குதல், நீடித்த வேளாண்மையை ஊக்குவித்தல், மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை அடைதல்.
  3. அனைத்து வயதினரினுடைய ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்தல் மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல்.
  4. அனைவருக்கும் உள்ளடக்குத் தன்மையுடைய, சமநிலையுடைய, நியாயமான, தரமுடைய கல்வியை உறுதி செய்தல்.
  5. அனைவருக்குமான வாழ்நாள் முழுவதுமான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
  6. பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரமளித்தல்.
  7. அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அவற்றின் நீடித்த மேலாண்மையையும் உறுதி செய்தல்.
  8. அனைவரும் மலிவான, நம்பகமான, நீடித்த, நவீன கால ஆற்றல்களை அணுகுவதை உறுதி செய்தல்.
  9. நீடித்த பொருளாதார வளர்ச்சி , உள்ளடக்குத் தன்மையுடைய, , முழுவதுமான, ஆக்கப்பூர்வ வேலை வாய்ப்பு மற்றும் கண்ணியமான வேலை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க அவற்றை ஊக்குவித்தல்.
  10. மீட்சித் திறமுடைய உள்கட்டமைப்பை கட்டமைத்தல், நீடித்த மற்றும் உள்ளடக்குத் தன்மையுடைய தொழிற்மயமாதலை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை வளர்த்தல்.
  11. நாடுகளுக்கிடையேயும், நாட்டினிற்குள்ளும் நிலவும் சமத்துவமின்மையை குறைத்தல்.
  12. உள்ளடங்குத் தன்மை, பாதுகாப்பு, மீட்சித்திறம் மற்றும் நீடித்தத் தன்மையுடையவையாய் நகரங்கள் மற்றும் மனித குடியேற்றங்களை உருவாக்குதல்.
  13. நீடித்த நுகர்வு மற்றும் நீடித்த உற்பத்தி முறைகளை உறுதி செய்தல்.
  14. கடல்கள், பெருங்கடல்கள் மற்றும் கடல் வளங்களை பாதுகாத்தல், அவற்றை நீடித்த முறையில் பயன்படுத்தல்.
  15. நீடித்த முறையில் காடுகளை நிர்வகித்தல், பாலைவனமயமாகலை தடுத்தல்,பல்லுயிர் பெருக்க அழிவு மற்றும் நிலச் சீர்கேட்டை தடுத்து அவற்றை மீட்டெடுத்தல்.
  16. நியாயமான, அமைதியான, உள்ளடங்கிய சமூகத்தை மேம்படுத்தல்.
  17. நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச ஒற்றுமைக்கு புத்துயிர் அளித்தல்.

நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத்  திட்டத்தின் (UNDP) பங்கு

  • MAPS அணுகுமுறையின் மூலம் 3 வேறுபட்ட வழிகளில்  ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டமானது  அனைத்து உலக நாடுகளுக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில்  ஆதரவளித்து வருகிறது.
  • MAPS அணுகுமுறையாவன
  • பிரதானப்படுத்துதல் (Main streaming)
  • விரைவுப்படுத்துதல் (Acceleration)
  • கொள்கை ரீதியிலான ஆதரவு (Policy Support)
  • தங்களின் தேசிய மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் புதிய உலகளாவிய நீடித்த வளர்ச்சி இலக்குகளை உலக நாடுகள் உட்புகுத்திட அவற்றிற்கு ஆதரவு அளித்தல்.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளித்தல்.
  • நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை நிபுணத்துவத்தை உருவாக்குதல்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP)

  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பானது (UNDP) ஆனது ஐநாவின் ஓர்  உலகளாவிய   வளர்ச்சி மேம்படுத்து  அமைப்பாகும்.
  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது நீடித்த வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து உள்ளது.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்முறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது உலக நாடுகளுக்கு  உதவி புரிகின்றது.
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டமானது 170 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் எதிர்கொள்ளக்கூடிய வளர்ச்சி  குறித்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் உலக நாடுகளுடன் இணைந்து இது  பணியாற்றுகிறது.
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது நாடுகளின் வளர்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளில் தீர்வுகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த உதவுகிறது.
  • நீடித்த வளர்ச்சி
  • ஜனநாயக ஆளுகை மற்றும் அமைதிக்கட்டமைப்பு
  • பருவநிலை மற்றும் பேரிடர் மீள் கட்டமைப்பு
  • இதன் தலைமையிடம் நியூயார்க் நகரம் ஆகும். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை உறுப்பு நாடுகள் தாமாக முன்வந்து வழங்குகின்றன.
  • இந்த நிறுவனமானது 177 நாடுகளில் இயங்கி வருகிறது. இது உள்ளூர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் அரசாங்கம் எதிர்கொள்ளக்கூடிய வளர்ச்சி குறித்த சவால்களை சரிசெய்யும் வகையிலும் உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
  • நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைவதற்கு உலகளாவிய அளவில் இது உதவுகிறது.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் வெளியிடப்படும் அறிக்கைகள்

  • மனித வளர்ச்சிக் குறியீடு
  • பாலின சமத்துவமின்மை குறியீடு

இந்தியா மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள்

  • நீடித்த இலக்குகளின் மீதான இந்தியாவின் செயல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நிதி ஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்