TNPSC Thervupettagam

நெல்சன் மண்டேலா

July 27 , 2018 2315 days 7801 0
  • தென்னாப்பிரிக்காவின் மிசோ கிராமத்தில் ஜூலை 18, 1918 அன்று நெல்சன் மண்டேலா பிறந்தார்.
  • நெல்சன் மண்டேலா தனது 9வது வயதில் 1927ஆம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். அன்றிலிருந்து அவரது இயற்பெயரான ரோலிஹ்லகலா என்ற பெயரில் அழைக்கப்பட்டார். ரோலிஹ்லகலா என்றால் ‘மரத்தினுடைய கிளையை இழுப்பது‘ அல்லது ‘பிரச்சனையை உருவாக்குபவர்‘ என்று பொருள்.
  • நெல்சன் மண்டேலா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். நெல்சன் மண்டேலாவின் கடைசித் திருமணம் அவரது 81 வயதில் கிரேஸ் மிக்கேல் உடன் நடைபெற்றது.
  • நெல்சன் மண்டேலா ‘மிகவும் பிரபலமான அரசியல் கைதி’ என்று அறியப்படுகிறார். மேலும் இவர் ‘தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத்தினவர்களின் சிறந்த நம்பிக்கையாளராகவும்’ அறியப்படுகிறார்.
  • மகாத்மா காந்தியின் மனித விழுமியங்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக இவர் ‘தென்னாப்பிரிக்காவின் காந்தி’ என்று அழைக்கப்படுகிறார்.
  • நெல்சன் மண்டேலா 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது வயதில் காலமானார்.

கல்வி

  • குடும்பத்தில் முதலாவதாக முறையாக கல்வியைக் கற்றார் நெல்சன் மண்டேலா. அவர் தனது தொடக்கக் கல்வியை லோக்கல் மிஷனரி பள்ளியில் பயின்றார்.
  • 1939ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா போர்ட் ஹரேவின் (Fort Hare) எலைட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் மேலைநாட்டு உயர்கல்வியை தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத்தவர்களுக்கு அளிக்கும் ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும்.
  • இதற்கு அடுத்த ஆண்டு பல்கலைக்கழக கொள்கைகளை எதிர்த்து போராடியதற்காக இவரும், இவருடைய நண்பர் மற்றும் எதிர்கால வியாபார பங்குதாரருமான ஆலிவர் தம்போ உள்பட பல நண்பர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
  • 1944ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்கன் தேசியக் காங்கிரஸில் இணைந்தார் (ANC - African National Congress). தனது நண்பரான ஆலிவர் தம்போ உள்பட அக்கட்சியில் உள்ள சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
  • அவர் ANCYC (ANCYL - African National Congress Youth League) என்ற இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

நெல்சன் மண்டேலா மற்றும் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC)

  • 1948ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆப்பிரிக்கனிர் தலைமையிலான தேசியக் கட்சி வென்ற பின்னர் ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி மற்றும் நெல்சன் மண்டேலாவின் அரசியல் ஈடுபாடு தீவிரமடைந்தது. ஆப்பிரிக்கனிர் தலைமையிலான தேசியக் கட்சி இன வகைப்பாடு மற்றும் பாகுபாட்டின் முறையான அமைப்பை அறிமுகப்படுத்தியது.
  • 1952ஆம் ஆண்டு மண்டேலா மற்றும் அவருடைய நண்பர் தம்போ ஆகிய இருவரும் இணைந்து தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின சட்ட நிறுவனத்தைத் தொடங்கினர். இந்நிறுவனம் நிறவெறி சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மற்றும் குறைந்த செலவில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

நெல்சன் மண்டேலா மற்றும் ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம்

  • 1961ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் புதிய ஆயுதப் பிரிவான யும்கோன்டோ வி சிவ்வே (தேசத்தின் ஈட்டி) என்ற பிரிவை நிறுவியவர்களில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர் ஆவார். அவர் அப்பிரிவின் முதலாவது தலைவர் ஆவார். இப்பிரிவு எம்கே (MK) என்றும் அழைக்கப்படுகிறது.
  • எம்கே (MK) பிரிவு நெல்சன் மண்டேலாவின் தலைமையில் அரசுக்கு எதிராக நாசவேலை பிரச்சாரத்தைத் தொடங்கியது. அப்போது பதவியேற்றுள்ள அரசு தென்னாப்பிரிக்காவை குடியரசாக அறிவித்தது. தென்னாப்பிரிக்கா பிரிட்டிஷ் காமன்வெல்த்திலிருந்து வெளியேறியது.

நெல்சன் மண்டேலா சிறைச் சாலைகளில் இருந்த வருடங்கள்

  • 1962 ஆம் ஆண்டு முதல் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவற்றில் முதல் 18 ஆண்டுகள் ராபன் தீவுகள் சிறைச்சாலையில் இருந்தார்.
  • 1980ஆம் ஆண்டு ஆலிவர் தாம்போ ‘பிரி நெல்சன் மண்டேலா‘ (Free Nelson Mandela) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கினார். வளர்ந்து வரும் தென்னாப்பிரிக்காவின் இனவாத ஆட்சிக்கு எதிரான சர்வதேச கண்டனத்திற்கு இப்பிரச்சாரம் தூண்டுகோலாக அமைந்தது.
  • 1982ஆம் ஆண்டு மண்டேலா மெயின்லேண்டில் அமைந்துள்ள போல்ஸ்மோர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 1988ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பிப்ரவரி 11, 1990 அன்று மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா

  • நாட்டில் ஏப்ரல் 26, 1994 அன்று வரலாற்றில் முதன்முறையாக பல இனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு கொள்ளும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மே 10 அன்று தென்னாப்பிரிக்கா நாட்டின் முதல் கறுப்பின அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றார்.
  • தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான அரசு 1995ஆம் ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை நடத்தியது.
  • 1996ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நெல்சன் மண்டேலா தலைமை தாங்கினார். இந்த அரசியலமைப்பு பெரும்பான்மை ஆட்சியின் அடிப்படையிலான வலிமையான மத்திய அரசை உருவாக்கியது. வெள்ளையர்கள் உள்பட சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளைத் தடை செய்தது இந்த அரசியலமைப்பு.
  • 1999ஆம் ஆண்டு தனது முதலாவது அதிபர் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். அதற்குப் பின் துணை அதிபரான தபோ பேகி (தபோ (Thabo Mbeki) அதிபரானார்.

நெல்சன் மண்டேலா பவுண்டேசன்

  • நெல்சன் மண்டேலா 1999ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகியவுடன் நெல்சன் மண்டேலா பவுண்டேசனைத் தொடங்கினார்.

விருதுகள்

  • 1993ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா மற்றும்W. டி கிளர்க் ஆகியோருக்கு இனவெறி எதிர்ப்பு நடவடிக்கைக்காக நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. 1993-ல் நெல்சன் மண்டேலா நோபல் அமைதிப் பரிசை வென்ற போது அவர் தனது பரிசை மகாத்மா காந்திக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.
  • 1900ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா இரண்டாவது இந்திய குடியுரிமையற்றவராக இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்றார்.

நெல்சன் மண்டேலாவின் புத்தகங்கள்

  • சுதந்திரத்தை நோக்கிய நீண்ட பயணம்: நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை (Long walk to freedom: The Autobiography of Nelson Mandela).
  • என்னுடன் ஒரு உரையாடல் (Conversation with myself).

நெல்சன் மண்டேலா தினம்

  • ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டு ஜூலை 18-ஐ அலுவல் ரீதியாக நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது. இதன் மூலம் மனித சேவைக்கு அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது விழுமியங்களை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த அவர் ஆற்றிய பங்கினை ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக ஒரு மனிதனை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தினத்தை அறிவித்துள்ளது.

முடிவுரை

  • நெல்சன் மண்டேலாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பல தென்னாப்பிரிக்கர்கள் அவரை மடிபா (Madiba) என்று அழைக்கின்றனர்.
  • வெள்ளை நிறத்தவரின் சபையில் கறுப்பு மனிதன்’ - அக்டோபர் 1962-ல் பிரிடோரியாவில் நெல்சன் மண்டேலாவின் முதலாவது சபைப் பேச்சு.
  • ‘ஒரு சிறந்த மனிதனாக நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன்’ – என்ற பேச்சு ஏற்கெனவே இரண்டு வருட சிறைத் தண்டனைக்குப் பிறகு நெல்சன் மண்டேலாவின் சிறந்த பேச்சாகக் கருதப்படுகிறது.
 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்