பாரத ரத்னா டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்தியாவில் சமூக சமத்துவமின்மையை ஒழிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அறிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஒரு உன்னத தலைவராவார்.
இவர் நன்கு அறியப்பட்ட ஒரு அரசியல் தலைவர், சிறப்பறிவு வாய்ந்த நீதியாளர், புத்தமத ஆதரவாளர், தத்துவ ஞானி, மானுடவியலாளர், வரலாற்று அறிஞர், நாவன்மையுள்ளவர், எழுத்தாளர், பொருளாதார அறிஞர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் என பல்வேறு சிறப்பம்சங்களை உடையவர்.
இவர் வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு நாடாக ஒரு சமத்துவமிக்க இந்தியாவை நிறுவினார்.
இவர் தலித் இன பெளத்த இயக்கங்களுக்கு ஆதரவளித்தார். மேலும் இவர் தீண்டத் தகாதவர்களுக்கு (தலித்துகள்) இழைக்கப்பட்ட சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
மேலும் இவர் பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவளித்தார்.
இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பாளரான இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராவார்.
நவீன கால மனு என்றறியப்படும் இவர் இந்தியக் குடியரசை தோற்றுவித்தவர் அல்லது இந்திய அரசியலமைப்பின் தந்தையாவார் என அறியப்படுகின்றார்.
இந்தியாவிலும் மற்ற இதர இடங்களிலும் மராத்தி மற்றும் இந்தி மொழியில் “மரியாதையுடைய தந்தை” எனும் பொருள்படும் பாபாசாஹிப் எனும் பெயரால் இவர் அழைக்கப்படுகின்றார்.
மேலும் இவர் “பீம்” என்றும் அழைக்கப்படுகின்றார்.
1990 ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பின் இந்தியாவில் குடிமகன்களுக்கான மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதானது அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.
தொடக்கக்கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தற்போது மத்தியப் பிரதேசமாக உள்ள மத்திய மாகாணத்தின் மாவ் எனும் இராணுவ கண்டோன்மென்ட் நகரத்தில் (தற்போது டாக்டர் அம்பேத்கர் நகர்) 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அவர் பிறந்தார்.
இவர் ராம்ஜி மலோஜ் சுக்பால் மற்றும் பீமாபாய் சக்பாலுக்குப் பிறந்த 14-வது மற்றும் கடைசிக் குழந்தையாவார்.
இவரின் உண்மையான குடும்பப் பெயர் சக்பால் என்பதாகும். ஆனால் இவரின் தந்தை பள்ளியில் அவரது பெயரை அம்பாடாவேகர் எனப் பதிவு செய்தார். இந்தப் பெயர் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான அம்பாடாவேவிலிருந்து வந்ததாகும்.
இவரின் அம்பாடாவேகர் எனும் குடும்பப் பெயரை மாற்றி இவரது தேவ்ருகோ பிராமண ஆசிரியரான கிருஷ்ண கேசவ் அம்பேத்கர் என்பவர் தனது துணைப் பெயரான அம்பேத்கரை அவரது பெயருடன் சேர்த்து பள்ளிப் பதிவேடுகளில் அவரது பெயரைப் பதிவு செய்தார்.
1906 ஆம் ஆண்டு 15 வயதான அம்பேத்கருக்கும் 9 வயதான ரமா பாய்க்கும் திருமணம் நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு இவர் தனது மனைவி ரமா பாயை இழந்தார்.
பின்னர் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் புதுடெல்லியில் உள்ள அவரின் வீட்டில் டாக்டர் சாரதா கபீர் எனும் சரஸ்வத் பிராமணப் பெண்ணை திருமணம் செய்தார்.
பாகுபாடுகள்
தீண்டத் தகாதவர்களாக நடத்தப்படுகின்ற மற்றும் சமூகப் பொருளாதாரப் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப் படுகின்ற மஹர் (தலித்) எனும் சாதியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் அம்பேத்கர் பிறந்தார்.
இவர்கள் பள்ளிக்குச் சென்ற போதிலும் அம்பேத்கர் மற்றும் இதர தீண்டத்தகாத மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டும் ஆசிரியர்களால் குறைவாக கவனிக்கப்பட்டும் வந்தனர்.
இவர்கள் வகுப்பறைக்குள் உட்கார அனுமதிக்கப்படவில்லை.
தண்ணீரையோ அல்லது தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தையோத் தொடுவதற்கு இவர்களுக்கு அனுமதியில்லாததால் இவர்களுக்கு குடிநீர் தேவைப்படும் போது உயர்சாதியினரில் ஒருவர் தண்ணீரை உயரத்திலிருந்து இவர்களுக்கு ஊற்றுவர்.
இந்தப் பணியானது அம்பேத்கருக்கு பொதுவாகப் பள்ளியின் உதவியாளரால் செய்யப்பட்டது. ஒருவேளை பள்ளியின் உதவியாளர் இல்லையெனில் இவர்கள் தண்ணீர் குடிக்காமல் போக வேண்டிருந்தது.
பின்னர் இவர் இந்த சூழ்நிலையை “பள்ளியின் உதவியாளர் இல்லையேல் நீர் இல்லை” என தனது எழுத்துகளில் விவரித்தார்.
இவர் ஒரு கோணிப் பையை தனது வீட்டிலிருந்துப் பள்ளிக்கு கொண்டுச் சென்று அதிலேயே உட்கார வேண்டியிருந்தது.
கல்வி
1987 ஆம் ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. அங்கு உள்ள எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஒரே ஒரு தீண்டத் தகாதவராக அம்பேத்கர் இருந்தார்.
1908 ஆம் ஆண்டில் மஹர் சாதியிலிருந்து முதன்முதலில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் நுழைந்த முதல் நபரும் இவரேயாவார்.
1912 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக் கழகத்திலிருந்துப் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பட்டம் பெற்று பரோடா மாநில அரசில் பணியாற்றுவதற்காக அவர் தயாரானார்.
1913 ஆம் ஆண்டில் தனது 22 ஆம் வயதில் அம்பேத்கர் அமெரிக்காவிற்கு சென்றார்.
இவர் பரோடாவைச் சேர்ந்த கெய்குவாடான மூன்றாம் சாயாஜி ராவ் என்பவரால் நிறுவப்பட்ட பரோடா மாநிலத்தின் கெய்குவாட் உதவித் தொகையை வழங்கப் பெற்றார்.
இது நியூயார்க் நகரத்தின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலைக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
1915 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இவர் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட பிரிவோடு இதர பாடங்களான சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட பிரிவுகளையும் சேர்த்து முதுகலை கலையியல் தேர்வில் வெற்றி பெற்றார்
இவர் “பண்டைய இந்திய வணிகம்” எனும் தலைப்பில் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
1916 ஆம் ஆண்டில் இவர் “இந்திய தேசத்தின் பங்கு: ஒரு வரலாற்று மற்றும் பகுப்பாய்வுக் கட்டுரை” எனும் தலைப்பில் தனது இரண்டாம் ஆய்வுக் கட்டுரையை மற்றொரு முதுநிலை கலையியல் படிப்பிற்காகச் சமர்ப்பித்தார்.
இறுதியாக 1927 ஆம் ஆண்டில் இவரின் மூன்றாவது ஆய்வுக் கட்டுரைக்காக பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் லண்டன் சென்றார்.
இவ்வகையில் வெளிநாட்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வென்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார்.
மே 9 ஆம் தேதியன்று மானுடவியலாளர் அலெக்சாண்டர் கோல்டன் வெய்சர் நடத்திய ஒரு கருத்தரங்கில் “இந்தியாவில் உள்ள சாதிகள்: அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி” எனும் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
1916 ஆம் ஆண்டு அக்டோபரில் “கிரேஸ் இன்” என்ற கல்வி நிலையத்தில் (Gray's Inn) அவர் வழக்கறிஞர் படிப்பிற்காகப் பதிவு செய்தார். அதே வேளையில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து முனைவர் பட்டத்திற்கானப் பணியையும் அவர் தொடங்கினார்.
இவ்வகையில் பின்தங்கிய வகுப்பினரிலிருந்து உருவான முதல் வழக்குரைஞர் பாபா சாஹிப் ஆவார்.
1917 ஆம் ஆண்டு பரோடாவின் உதவித் தொகை முடிவுற்றதால் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.
ஆனால் பின்னர் அவர் நான்கு ஆண்டுகளுக்குள் லண்டனுக்குத் திரும்பி தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றார்.
லண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஒரு நாளைக்கு 21 மணிநேரங்கள் படித்து 8 வருட கால அளவிலான படிப்பினை வெறும் 2 வருடம் 3 மாதங்களில் பாபா சாஹிப் நிறைவு செய்தார்.
இவர் தமது முதல் வாய்ப்பிலேயே தனது முதுகலை பட்டப் படிப்பை 1921 ஆம் ஆண்டில் முடித்தார்.
1922 ஆம் ஆண்டில் கிரேஸ் இன் என்ற கல்வி நிலையத்தால் வழக்கறிஞர் மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1923 ஆம் ஆண்டில்” ரூபாயின் பிரச்சினைகள்: அதன் தோற்றம் மற்றும் தீர்வு” எனும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கொரு முறை நாட்டின் பணமானது பண மதிப்பிழப்பு செய்யப்பட வேண்டுமென தனது புத்தகத்தில் அவர் விவரித்துள்ளார்.
இவர் தனது அறிவியல் முனைவர் பட்டத்தைப் பொருளாதாரத்தில் அதே ஆண்டில் நிறைவு செய்தார்.
லண்டன் பொருளாதாரப் பள்ளியில் புகழ்பெற்ற “அனைத்து அறிவியல் முனைவர்” எனும் பட்டம் பெற்ற உலகின் முதல் மற்றும் ஒரே நபர் உலகில் பாபா சாஹிப் ஆவார்.
இவரது மூன்றாவது மற்றும் நான்காம் முனைவர் பட்டங்கள் (LL. D, கொலம்பியா-1952 மற்றும் Litt., ஒஸ்மானியா-1953) கௌரவ முனைவர் பட்டங்களாக அவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இளமைக்கால பணி
1918 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சிடான்ஹெம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக இணைந்தார்.
1919 ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அது குறித்து சான்றளிக்க அச்சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சவுத்போரோ குழு முன்பாக இவர் அழைக்கப்பட்டார்.
இந்த விவாதத்தின் போது தீண்டத்தகாதவர்கள் மற்றும் இதர மதச் சமூகத்தினருக்கு என்று தனியாக வகுப்புவாரி தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டை வழங்க ஆதரவாக அம்பேத்கார் வாதிட்டார்.
1920 ஆம் ஆண்டில் கொல்ஹாபூரின் ஷாகுவான நான்காம் ஷாகுவின் உதவியுடன் “மூக்நாயக்” (அமைதியின் தலைவர்) எனும் வாராந்திரப் பத்திரிக்கையை மும்பையில் அவர் தொடங்கினார்.
1935 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார்.