TNPSC Thervupettagam

வருடாந்திர நிதிநிலை அறிக்கை 2019-2020 (பகுதி 2)

July 17 , 2019 2004 days 2686 0

சில அடிப்படையான புகைப்பட புள்ளிவிபரத் தகவல்கள்

   

துறைவாரியான சிறப்பம்சங்கள்
விவசாயம்
  • விவசாயிகளுக்குப் பொருளாதார அளவை அதிகப்படியாக உறுதி செய்வதற்காக 10,000 புதிய விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
  • விவசாயிகள் அனைவரும் தேசிய மின்னணு விவசாயச் சந்தை மூலமாக பயனடைவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும்.
  • சுழிய செலவு வேளாண்மையில் ஏற்கனவே சில மாநிலங்களின் விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • 10,000 கோடி ரூபாய் அளவில் உர மானிய ஒதுக்கீட்டில் உயர்வு செய்யப்படும்.
  • நமது நீர் வளங்கள் மற்றும் தண்ணீர் விநியோகத்தைப் புதிய ஜல் சக்தி மந்த்ராலயாவானது ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான முறையில் நிர்வகிக்கும்.

 

வேலை வாய்ப்பு
  • கிராமப்புற வேளாண் தொழில்களில் 75,000 திறமையான தொழில்முனைவோரை உருவாக்க ASPIRE (A Scheme for Promotion of Innovation, Rural Industries and Entrepreneurship) என்ற திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் ஆண்டில் 80 வாழ்வாதார தொழில் மேம்பாட்டு மையங்களும் 20 தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையங்களும் அமைக்கப் படவுள்ளன.
  • மொழித் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்குத் தேவையான திறன் தொகுப்புகளில் கவனம் செலுத்துதல்.
  • பிரத்தியேகமாக புதிய தொழில் தொடக்கங்களுக்காக தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியானது புதிய தொழில் தொடக்கங்களால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும்.
  • பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொழிலாளர்கள் நலச் சட்டத் தொகுப்புகளாக நெறிப்படுத்தப்படும்.
  • புதிய காலகட்டத்தின் திறன்களான செயற்கை நுண்ணறிவு, பெருந் தரவுகள், மெய்நிகர் தோற்றம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் இணைய தள விவகாரங்கள் போன்றவை மேம்படுத்தப்படும்.

 

பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • இந்தியாவில் உள்ள பெண்களின் கவனத்தை ஈர்க்க “நாரி து நாராயணி” எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பெண் தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிப்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வட்டிக் குறைப்புத் திட்டமானது இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

 

  • சரிபார்க்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவில் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 5000 ரூபாய் அளவில் மிகைப் பற்று வசதி அனுமதிக்கப்படும்.
  • ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண் “முத்ரா” திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் கடன் பெறத் தகுதியுடையவர் ஆவார்.

 

வங்கிகள் மற்றும் நிதி
  • படிப்படியாக நிதி சாராத பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள உரிமையாளர் பங்குகளில் 51%க்கும் குறைவாக ஒரு பொருத்தமான நிலைக்குச் செல்ல அரசு கருதுகின்றது.
  • மூலதனத்தை உயர்த்தவும் கடன் வசதியை மேம்படுத்தவும் பொதுத் துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

  • ஒரு பொதுத் துறை வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் அணுகி அனைத்துச் சேவைகளையும் பெற்றிடத் தேவையான தொழில்நுட்பங்களைப் பொதுத் துறை வங்கிகள் பயன்படுத்தும்.
  • வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மீதான ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
  • வீட்டு வசதி நிதித்துறை மீதான ஒழுங்குமுறை அதிகாரங்கள் தேசிய வீட்டு வசதி வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு திரும்ப அளிக்கப்படும்.

 

வெளிநாட்டு முதலீடுகள்
  • விமானப் போக்குவரத்து, ஊடகங்கள், அனிமேசன் (காட்சிகளுக்கு உயிரூட்டுதல்), காட்சிப் படங்கள், விளையாட்டு, நகைச்சுவைப் புதினங்கள் (AVGC - Animation, Visual Effects, Gaming and Comics) மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடானது பல்வேறு பங்குதாரர்களின் சோதனைகளுக்குப் பிறகு மேலும் திறக்கப்படலாம்.
  • 100% அந்நிய நேரடி முதலீட்டைக் காப்பீட்டு இடைத்தரகர் நிறுவனங்கள் பெறுவர்.

  • ஒற்றை மதிப்பு சில்லறை விற்பனைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உள்ளூர் கொள்முதல் ஆதார விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.
  • உலகளாவிய நிறுவனங்களின் ஓய்வூதியம், காப்பீடு மற்றும் அரசுரிமை பெற்ற செல்வ நிதிகள் ஆகிய மூன்று விதமான வசதிகளையும் பெறுவதற்கு தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியத்தை ஒரு தொகுப்பாளராகப் பயன்படுத்தி இந்தியாவில் ஆண்டுதோறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு ஏற்பாடு செய்யும்.
  • சட்ட ரீதியான வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டிற்கான வரம்பானது 24% லிருந்து துறைரீதியான வெளிநாட்டு முதலீட்டு வரம்பின் அளவிற்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு குறைந்தபட்ச வரம்பின் விருப்பத் தெரிவை தேர்ந்தெடுக்கும் வசதி அளிக்கப்படும்.
  • நில மனை முதலீட்டு நிதி (ReITs - Real Estate Investment Trusts) மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி (InvITs- Infrastructure Investment Trusts) ஆகியவற்றால் வழங்கப்படும் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டாளர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் தொகுப்பு முதலீட்டு திட்டப் பாதையை வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டுப் பாதையுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே
  • 2018 முதல் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 50 லட்சம் கோடி அளவில் இரயில்வேயின் உள்கட்டமைப்பிற்கு முதலீடு தேவைப்படும்.
  • பொது-தனியார் பங்களிப்பு முன்முயற்சிகள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை வழங்குவதற்கும் விரைவாக மேம்பாட்டை கொண்டு வருவதற்கும் பயன்படுத்தப் படவுள்ளது.
  • ரயில்வே துறையானது விரைவான பிராந்தியப் போக்குவரத்து அமைப்பு போன்ற சிறப்பு நோக்கம் கொண்ட கட்டமைப்புகள் மூலம் புற நகர் ரயில்வேயில் அதிக முதலீடுகளைச் செய்ய ஊக்குவிக்கப்படும்.
  • ரயில்வே துறையில் அதிக பொது-தனியார் கூட்டு முன்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • மிகப்பெரிய அளவிலான ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ளது.

 

வரிகள்
  • 400 கோடி ரூபாய் வரை வருடாந்திர வரவு செலவு செய்யும் நிறுவனங்களுக்கான வரி விகிதமானது 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • வரி செலுத்தக்கூடிய வருமானமானது 2 கோடியிலிருந்து 5 கோடி வரை பெறும் தனிநபர்கள், 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையைப் பெறும் தனிநபர்கள் ஆகியோருக்கு வரி மீதான கூடுதல் வரியானது உயர்த்தப்பட்டுள்ளது.
  • வரி செலுத்துதல் எனும் பிரிவின் கீழ் தொழில் தொடங்குதலுக்கு உகந்த நாடுகளின் தர வரிசையில் 2017 ஆம் ஆண்டில் 172வது இடத்தில் இருந்த இந்தியா 2019ல் 121 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

  • கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாயானது 78% அளவிற்கும் மேலாக உயர்ந்து 11.37 லட்சம் கோடியாக உள்ளது.
  • வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் அட்டை பரிமாற்ற முறை
    • PAN அட்டை இல்லாதவர்கள் வரித் தாக்கல்களை ஆதார் அட்டையைப் பயன்படுத்திச் செய்யலாம்.
    • PAN அட்டை தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம்.

 

இணைப்பு உள்கட்டமைப்பு
  • நிதியளிப்பு மாதிரியைப் பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை உறுதி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலைத் திட்டமானது மறுசீரமைக்கப்படல் வேண்டும்.

  • நாட்டில் 657 கி.மீ. அளவிற்கு மெட்ரோ ரயில் வசதி செயல்பட்டு வருகின்றது.
  • கீழ்க்காண்பனவற்றின் மூலம் அனைத்து வகையான இணைப்புகளை ஏற்படுத்த மிகப்பெரிய உந்துதல் ஏற்படுத்தப்படும்.
    • பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா
    • தொழிலக வழித் தடங்கள், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித் தடங்கள்
    • பாரத் மாலா மற்றும் சாகர் மாலா திட்டங்கள், ஜல்மார்க் விகாஸ் மற்றும் உடான் திட்டங்கள்
    • பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மாநில சாலை வலையமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

எரிசக்தித் துறை

  • “ஒரு நாடு ஒரு கட்டமைப்பு” என்ற திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் வழங்கப்படும்.
  • எரிவாயு கட்டமைப்பு, நீர் கட்டமைப்பு, இணைய வழிகள் மற்றும் பிராந்திய விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கான செயல்திட்டங்கள் கிடைக்கும் வகையில் செய்யப்படும்.
  • உயர்மட்ட அதிகாரக் குழுவின் கீழ்க்காணும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
    • பழைய மற்றும் திறன் குறைந்த உற்பத்தி நிலையங்களை மூடுதல்
    • இயற்கை எரிவாயுவின் பற்றாக்குறை காரணமாக குறைந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகளைப் பயன்படுத்துதல்.
    • அணுமின் நிலையங்களுக்குத் தேவையான சில மூலப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் மீதான சுங்க வரிக் குறைப்புக்கு முன்மொழியப் பட்டுள்ளது.
    • நிகர மானிய கூடுதல் கட்டணம், திறந்த அணுகல் விற்பனை அல்லது தொழில்துறை மற்றும் பிற மொத்த மின் நுகர்வோர்களின் உள்ளக உற்பத்தி மீதான தேவையில்லா வரிகள் பிடித்தம் ஆகியவை உஜ்வால் டிஸ்காம் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அகற்றப்படல் வேண்டும்.

சுங்க வரி

  • இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் இலக்கை மேம்படுத்துவதற்காக சில பொருட்களின் அடிப்படை சுங்க வரிகள் அதிகரிக்கப்படும்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • உள்நாட்டுப் பதிப்பகம் மற்றும் அச்சுத் தொழிலகங்களை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% சுங்க வரி விதிக்கப்படுகின்றது.

தூய்மை பாரதம் திட்டம்

  • திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேற்கொள்வதற்காக தூய்மை பாரதம் திட்டத்தை அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவு.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20 தேதிக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுதல்.

  • இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அதே நாளில் ராஜ்காட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா திறக்கப்படவுள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி

  • நாட்டில் ஆராய்ச்சிக்கு நிதியளித்து அதை ஒருங்கிணைக்கவும் ஊக்குவிக்கவும் ஒரு தேசிய ஆய்வு அமைப்பை (National Research Foundation - NRF) நிறுவுதல்.
  • அனைத்து அமைச்சகங்களின் கீழ் உள்ள நிதிகளையும் மேற்கண்ட அமைப்புடன் ஒருங்கிணைத்தல்.
  • இந்தியக் கல்வி முறையை மாற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்.
  • உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி அமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

  • 2019-2020 ஆம் ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட மூன்று மடங்கு அதிகமான அளவாக 400 கோடி ரூபாய் அதற்கென்று ஒதுக்கப்படும்.
  • வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவின் உயர்கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதற்காக “இந்தியாவில் படிப்போம்” என்ற திட்டம் தொடங்கப் படவுள்ளது.
  • திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டமானது 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் பண வழங்கீட்டு முறை

  • பிரதம மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சார்த்த அபியான் திட்டத்தின் கீழ் இரண்டு கோடிக்கும் அதிகமான கிராமப்புற இந்தியர்கள் டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்றுள்ளனர்.
  • கிராமப்புற – நகர்ப்புற இடைவெளிகளைக் குறைக்க பாரத் நெட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இணைய இணைப்பு.
  • பாரத் நெட் திட்டத்தை வரைவுபடுத்துவதற்காக பொது-தனியார் கூட்டின் கீழ் உலகளாவிய பொறுப்பு நிதி உருவாக்கம்.
  • வணிக பணவழங்கீடுகள் ரொக்கமாக வழங்கப் படுவதைக் குறைப்பதற்காக, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு 1 கோடியைத் தாண்டிய பண எடுப்பிற்கு மூலத் தொகையில் 2% வரியாக விதிக்கப்படும்.
  • 50 கோடிக்கும் மேல் வருடாந்திர வரவு செலவு கொண்ட வணிக நிறுவனங்கள் குறைந்த கட்டண டிஜிட்டல் முறை பணவழங்கீடு வழங்கக் கூடும்.
  • இதற்காக வாடிக்கையாளர்கள் அல்லது வணிகர்கள் மீது எவ்வித கட்டணமோ அல்லது வணிகத் தள்ளுபடி விகிதங்களோ விதிக்கப்படாது.

கிராமப்புற வளர்ச்சி
  • 2022 ஆம் ஆண்டில் மின்சார மற்றும் எரிவாயு இணைப்பைப் பெற விரும்பாதவர்களைத் தவிர ஒவ்வொரு கிராமப்புற குடும்பமும் மின்சாரம் மற்றும் தூய்மையான சமையல் வசதியைக் கொண்டிருக்கும்.
  • PMAY – கிராமின் திட்டத்தின் 2வது கட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள் 2019-2020 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.

  • மேலும் அவர்கள் சமையல் எரிவாயு, மின்சாரம் மற்றும் கழிவறை போன்ற வசதிகளையும் பெறுவர்.
  • 50,000 கைவினைஞர் கலைஞர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவிட “பாரம்பரியத் தொழில்களை மீளுருவாக்கம் செய்வதற்கான நிதித் திட்டம்” 2019-20 ஆம் ஆண்டில் 100 புதிய தொழிலகத் திரள்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் வழங்கப்படுதல் (ஹர் கர் ஜல்) என்ற நிலையை அடைய ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஓய்வூதியம்
  • பிரதம மந்திரியின் கரம் யோகி மன் தன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் சுமார் 3 கோடி சில்லறை வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ஓய்வூதிய வசதி வழங்கப்படும்.
  • ஆதார், வங்கிக் கணக்கு மற்றும் சுய உறுதியளிப்பு ஆகியவை மட்டும் இதற்கு தேவைப்படும் அளவிற்கு இதற்கான சேர்க்கை மிகவும் எளிமையாக வைக்கப்படும்.

MSME துறை

  • அரசாங்க பண வழங்கீடுகளில் ஏற்படும் கால தாமதங்களை நீக்குவதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் ரசீதுக்களைத் தாக்கல் செய்து அதற்கான பணத்தை வழங்குவதற்கு பணவழங்கீட்டுத் தளங்கள் உருவாக்கப்படும்.

 

வெளிநாட்டு உறவுகள்
  • இந்தியக் கடவுச் சீட்டு வைத்துள்ள அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு 180 நாட்கள் காத்திருப்பு காலம் இன்றி இந்தியாவிற்கு வந்த உடனேயே அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.
  • அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியப் பங்குகளில் தடையற்ற அணுகல்களை வழங்க அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான தொகுப்பு முதலீட்டு வழிமுறையானது வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டு வழிமுறைகளுடன் இணைக்கப்படும்.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்பிரிக்காவில் 18 புதிய இந்தியத் தூதரகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் 5 தூதரகங்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டு விட்டன. மற்ற 4 புதிய தூதரகங்கள் 2019-20 ஆம் ஆண்டில் திறக்கப்படும்.
  • இந்திய மேம்பாட்டு உதவித் திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான முன்மொழிதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • 17 சுற்றுலாத் தள சின்னங்கள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தள மாதிரிகளாக உருவாக்கப்படும்.
  • பழங்குடியினரின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் களஞ்சியத்தை வழங்குதல்.

விண்வெளித் துறை

  • விண்வெளித் துறையின் புதிய வணிகக் குழுவாக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் எனும் பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

  • ஏவு வாகனங்களின் வணிக மயமாக்கல், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் விண்வெளிச் சாதனங்களின் வணிகம் போன்ற இஸ்ரோ மேற்கொண்டு வந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் விளைவுகளை அந்நிறுவனம் வணிகப்படுத்தும்.

மின்சார வாகனம்

  • அரசாங்கமானது மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12%லிருந்து 5% ஆக குறைக்க ஜிஎஸ்டி குழுமத்தைக் கோரியுள்ளது.
  • மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கப்பட்ட கடன்களின் வட்டிகளில் 1.5 லட்சம் அளவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

  • FAME II திட்டமானது சரியான சலுகைகள் மற்றும் மின்னேற்ற உள்கட்டமைப்புகளின் மூலம் மின் வாகனங்கள் ஏற்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின் வாகனங்களுக்கு மாறுதலை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனங்களின் சில பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்