TNPSC Thervupettagam

மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்

October 3 , 2018 2291 days 4384 0
  • மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17-ல் இலங்கையின் கண்டியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது பெற்றோர் மேல்காத் கோபால மேனன் மற்றும் மருதூர் சத்ய பாமா ஆவர்.
  • இவர் எம்.ஜி.ஆர் என்று வெகுவாக அறியப்படுகிறார்.
  • இவர் ஒரு இந்திய நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் 1977 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய அரசியலாளர் ஆவார்.
  • இந்தியாவில் மாநில முதலமைச்சராக பணியாற்றிய முதலாவது புகழ்பெற்ற திரைப்பட நடிகர் எம்ஜிஆர் ஆவார்.
  • இவர் 1935 ஆம் ஆண்டில் மேடை நாடகம் மூலம் காலடி எடுத்து வைத்து 1977 ஆம் ஆண்டு வரை நடித்து வந்தார்.
  • இவர் ‘மக்கள் திலகம்’ என்று வெகுவாக அறியப்படுகிறார்.
  • இவர் ஒரு கொடையாளர் மற்றும் மனிதநேயத்தின் அடையாளச் சின்னம் ஆவார்.
  • 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று முன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் அஇஅதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.  இராமச்சந்திரனின் 100 வது பிறந்த தினத்தை தமிழ்நாடு கொண்டாடியது.
  • எம்ஜிஆர்–ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டமானது தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் நடைபெற்றது.
  • எம்ஜிஆர் ன் நூற்றாண்டு விழாவானது இறுதியாக சென்னையில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று நடைபெற்றது.
  • தமிழக அரசானது முன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் அஇஅதிமுக – வின் நிறுவனரான எம்.ஜி. இராமச்சந்திரனின் 100 வது பிறந்த தினமான ஜனவரி 17 (2017) – ஐ மாநில பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இளமைக் காலம்

  • எம்.ஜி.ஆர் பார்கவி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். ஆனால் திருமணம் முடிந்து மூன்று மாத காலத்திற்குள் உடல்நலக் குறைபாடு காரணமாக பார்கவி இறந்து விட்டார்.
  • இவர் சதாநந்தாவதி என்ற மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்தார். சதாநந்தாவதி காச நோயினால் மரணமடைந்தார்.
  • எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியின் பெயர் V.N. ஜானகி ஆவார். இவரும் ஒரு திரைப்பட நடிகை ஆவார்.

வழிகாட்டி

  • தமிழ் மேடை நாடகத்தின் முன்னோடியான நாராயண படையாட்சி இரத்தினம் மற்றும் கே.பி. கேசவன் ஆகியோர் இராமச்சந்திரனின் நடிப்பு வாழ்க்கையின் வழிகாட்டிகள் ஆவர்.

நடிப்பு வாழ்க்கை

  • இராமச்சந்திரன் 1936 ஆம் ஆண்டில் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
  • எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜகுமாரி என்ற திரைப்படமாகும்.
  • 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த மலைக்கள்ளன் என்ற திரைப்படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் புகழின் உச்சியை அடைந்தார்.

  • 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படத் துறையின் முதலாவது ஜீவா வண்ணத் திரைப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தார்.
  • இவர் திருடாதே, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, மகாதேவி, பணம் படைத்தவன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

  • இவரது இறப்பிற்கு முன்பு கதாநாயகனாக நடித்து வெளியான கடைசித் திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978) என்ற திரைப்படமாகும்.
  • 1967 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று எம்.ஆர். இராதா எம்.ஜி.ஆரின் இடப்புற காதில் இருமுறை துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆர் தனது இடப்புற காதின் கேட்கும் திறனை இழந்தார்.
  • அவசர போலீஸ் 100 மற்றும் நல்லதை நாடு கேட்கும் ஆகிய திரைப்படங்கள் எம்.ஜி.ஆர் மரணமடைந்து மூன்று ஆண்டுகள் கழித்து 1990-ல் வெளி வந்தன. இவர் 1977-ல் தமிழ்நாடு முதலமைச்சரான பின்பு நடிப்பைக் கைவிட்டார். இந்த இரு திரைப்படங்களும் எம்.ஜி.ஆர்-ஆல் முழுவதுமாக முடிக்கப்படாத திரைப்படங்களாகும்.

அரசியல் வாழ்க்கை

  • எம்.ஜி.ஆர் 1953 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான சி.என். அண்ணாதுரையின் ஈர்ப்பைப் பெற்று எம்.ஜி.ஆர் 1953 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
  • எம்.ஜி.ஆர் 1962 ஆம் ஆண்டில் தமிழக சட்ட மேலவை உறுப்பினரானார்.
  • 1967 ஆம் ஆண்டில் தன்னுடைய 50 வது வயதில் எம்.ஜி.ஆர் தமிழக சட்டசபைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தனது வழிகாட்டியான அண்ணாதுரையின் மறைவுக்குப் பின்பு எம்.ஜி.ஆர் 1969 ஆம் ஆண்டில் திமுகவின் பொருளாளரானார். அண்ணாவின் மறைவுக்குப் பின்பு முத்துவேல் கருணாநிதி தமிழக முதலமைச்சரானார்.

திமுகவில் பிளவு

  • 1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர், அண்ணாதுரையின் மறைவுக்குப் பின்பு கட்சியில் ஊழல் வளர்ந்துவிட்டதாக கூறத் தொடங்கினார். மேலும் பொதுக் கூட்டங்களில் கட்சியின் வரவு-செலவு கணக்குகளை வெளியிடுமாறு எம்.ஜி.ஆர் கூறினார்.
  • இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
  • தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தனது புதிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

  • 1976 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • எம்.ஜி.ஆர் நேற்று இன்று நாளை (1974), இதயக்கனி (1975), இன்று போல் என்றும் வாழ்க (1977) போன்ற திரைப்படங்களின் மூலம் தனது கட்சிக் கொள்கைகளைப் பரப்பினார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்கள்

  • தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் அஇஅதிமு.க பங்கு பெற்றது.
  • அஇஅதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் 144 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

  • 1979 ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆரின் கட்சியைச் சேர்ந்த சத்யவாணி முத்து மற்றும் அரவிந்த பால பஜனோர் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவையில் அமைச்சரான முதலாவது காங்கிரஸ் கட்சி அல்லாத அரசியல் தலைவர்கள் ஆவர்.
  • எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து சட்டசபைத் தேர்தல்களிலும் அஇஅதிமுக வெற்றி பெற்றது.
  • 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று, அப்பொழுது முதலமைச்சராக பதவியிலிருந்த எம்.ஜி.ஆர் இத்தேர்தல் வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • கே. காமராஜருக்குப் பிறகு மறுதேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான முதல் அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார்.
  • 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அஇஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி 195 இடங்களில் வெற்றி பெற்றது.

சாதனைகள்

  • மிகவும் வெற்றி பெற்ற திட்டங்களுள் ஒன்றான காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட “மதிய உணவுத் திட்டத்தை” எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் உள்ள அரசாங்க மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துருண்டையுடன் கூடிய “எம்.ஜி.ஆரின் ஊட்டசத்து உணவுத் திட்டமாக” 1982 – ல் மாற்றினார்.
  • மேலும் இவர் பெண்களுக்கான சிறப்புப் பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்.
  • இவர் மாநிலத்தில் மதுவிலக்கை 1987 ல் அறிமுகம் செய்தார்.

  • பழங்கால கோவில்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல்.
  • இவர் பெண்களுக்கு 30 சதவிகித பணி இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார். பின்னாளில் இந்திய அரசாங்கத்தால் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • 1980 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசானது பொது வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இடங்களையும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவிகித இடங்களையும் மீதமுள்ள 32 சதவிகித இடங்களை தகுதி அடிப்படையில் நிரப்பவும் ஆணை பிறப்பித்தது.
  • 1981 ஆம் ஆண்டு செப்டம்பரில் தஞ்சாவூரின் புறநகரப் பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபையானது தமிழ் பல்கலைக்கழகச் சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
  • பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம், 1981 ஆம் ஆண்டுச் சட்டவிதிகளின்படி 1982 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு அரசாங்கத்தால் கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • தமிழ்நாடு சட்டத்தினால் 1984 ஆம் ஆண்டில் மதர் தெரஸா பெண்கள் பல்கலைக்கழகம் கொடைக்கானலில் அமைக்கப்பட்டது.
  • 1978 - 79 ஆம் ஆண்டுகளில் விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 1981 - 82 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது.
  • 1983 ஆம் ஆண்டு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதை எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்து வைத்தார்.
  • தமிழ்நாட்டின் சென்னை நகரத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தெலுங்கு கங்கைத் திட்டம் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1977 ஆம் ஆண்டு ஒப்புதலைப் பெற்றது.
  • தமிழ்நாடு சட்டம் 1978-ன் மூலம் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை அமைத்தது.
  • 1981 ஆம் ஆண்டு மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாடு எம்.ஜி.ஆரால் நடத்தப்பட்டது.
  • கல்வித் துறையில் இவர் 1978 ஆம் ஆண்டு 10+2+3 அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
  • 1983 ஆம் ஆண்டு கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தின் முதலாவது பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது.
  • மக்கள் பணிபுரிந்த கிராம கர்ணம் என்ற பதவி 1980 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டு, அப்பதவி வகித்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டனர்.

சட்ட சபையின் உறுப்பினர்

ஆண்டு முடிவு இடம் கட்சி
1967 தேர்வு செய்யப்பட்டார் செயிண்ட் தாமஸ் மவுண்ட் திமுக
1971 மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் செயிண்ட் தாமஸ் மவுண்ட் திமுக
1977 தேர்வு செய்யப்பட்டார் அருப்புக் கோட்டை அதிமுக
1980 தேர்வு செய்யப்பட்டார் மதுரை மேற்கு அதிமுக
1984 தேர்வு செய்யப்பட்டார் ஆண்டிப்பட்டி அதிமுக

முதல் அமைச்சர்

காலம் வெற்றி
1977 - 1980 தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், 1977
1980 - 1984 தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், 1980
1984 - 1987 தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், 1984

விருதுகள்

  • பிலிம்பேர் சிறப்பு விருது - எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்திற்காக.
  • அடிமைப்பெண் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறப்புத் திரைப்பட விருது.
  • 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ரிக்ஷாக்காரன் திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது.
  • எம்.ஜி.ஆர் மதராஸ் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1974 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகத்திலிருந்து (அரிசோனா) முனைவர் பட்டம் பெற்றார்.
  • அரசியல் மற்றும் சினிமாத் துறையில் எம்.ஜி.ஆர்-இன் பங்களிப்பிற்காக இவரது இறப்பிற்குப் பின்பு இந்திய அரசாங்கத்தால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • குடியிருந்த கோவில் திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது.
  • 2017 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகமானது புகழ்பெற்ற அரசியல் தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி. இராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக அவரது பெயரில் ரூ.100 மற்றும் ரூ.5 ரூபாய் நாணயங்கள் அச்சிடுவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

சுயசரிதை

  • இராமச்சந்திரனின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” 2003 ஆம் ஆண்டில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

இறப்பு

  • 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் பதவியேற்றார்.
  • எம்ஜிஆர் உடல்நலக் குறைபாட்டிலிருந்து முழுவதுமாக மீளாமல் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று சென்னையின் அப்பல்லோ மருத்துவமனையில் தன்னுடைய 70 வது அகவையில் காலமானார். இவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக இராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

  • முதலமைச்சராக பதவியிலிருக்கும் போது காலமான இரண்டாவது முதலமைச்சர் எம்ஜிஆர் ஆவார்.
  • 1989 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நினைவாக டாக்டர் எம்.ஜி.ஆர் இல்லம் மற்றும் கேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளி சென்னையின் இராமாவரத்தில் அமைக்கப்பட்டது.
  • தி நகரில் உள்ள இவர் வாழ்ந்த இல்லம் “எம்.ஜி.ஆர் நினைவு இல்லமாக” மாற்றப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
  • இவரது திரைப்பட படப்பிடிப்புக் கூடமான கோடம்பாக்கத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோஸ் பெண்கள் கல்லூரியாக மாற்றப்பட்டது.

* * * * * *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்