TNPSC Thervupettagam

மழையின் பிழையன்று

December 16 , 2017 2564 days 1864 0
மழையின் பிழையன்று

 - அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்

- - - - - - - - - - - - - - - -

  • சமீபத்தில், மழை மீண்டும் தலைப்புச் செய்திகளைத் தனதாக்கிக் கொண்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு சகோதரிகளும் மற்றச் சகோதரிகளான கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களுடன் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு மழை விடுமுறையைக் கொண்டாடினர். ஆனால், பாவம்! மக்கள் தான் என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடினர்.
  மழை மானி:  (Rain Gauge)
  • எத்தனை மி.மீ மழை பெய்தது என்பதினைத் தெரிந்து கொள்ள எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றோம். பொழிகின்ற மழையை எவ்வாறு கணக்கிடுகின்றார்கள் தெரியுமா? புனல் போன்ற வட்ட வடிவம் கொண்ட மழைமானியில் மில்லி மீட்டரில் அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். அது திறந்த வெளியில் வைக்கப்படும் பொழுது எத்தனை மி.மீ மழை பெய்துள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம்.
  • இது ஊடோ மீட்டர் (Udo Meter), புளுவியோ மீட்டர் (Pluvio Meter) மற்றும் ஓம்ப்ரோ மீட்டர் (Ombro Meter) எனவும் அழைக்கப்படுகின்றது.
  • முதன் முதலில் மழைப் பொழிவு பற்றிய பதிவுகள் கி.பி. 500 ஆம் ஆண்டு முதல் பண்டைய கிரேக்கர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்தியர்கள் மழைப்பொழிவு பற்றிய பதிவுகளை கி.பி. 400 ஆம் ஆண்டில் பதியத் துவங்கி விட்டார்கள்.
  • மேலும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் “தானியங்களின் உற்பத்திக்கு எனத் துல்லியமான அளவீடுகள்” குறிக்கப்பட்டிருந்தன. எப்படி தெரியுமா? நிலங்களை வரிவசூலிக்கவும் வகைப்படுத்துவதற்கும் மழைமானிகள் பயன்படுத்தப்படுவதன் மூலமாகத் தான்.
  • ஏறத்தாழ 300 கி.மீ அளவுள்ள வட்ட வடிவமான காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுமானால் அவ்விடம் ‘காற்றழுத்தத் தாழ்வு மையம்’ (Low Pressure Zone) என அழைக்கப்படுகின்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மையமானது செயற்கைக்கோள் புகைப்படத்தில் நிலா போன்று தோற்றம் அளிக்கும். தாழ் மேகங்கள் தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கிச் செல்லும் காரணத்தினால், பகுதியளவில் ஈர்க்கப்படுகின்றது. இதர பகுதி தாழ்வழுத்த மண்டலத்தினை அடைகின்றது.
மேகங்கள்: (Clouds)
  • மேகங்கள் எனப்படுவது மிக நுண்ணிய நீர்த்துளிகள் மற்றும் பனிப்படிகங்களால் ஆனது. உயரம், அளவு, அடர்த்தி மற்றும் ஒளி புகும் அளவு ஆகியவற்றைக் கொண்டு சிர்ரஸ் (Cirrus), கியுமுலஸ் (Cumulus), ஸ்ட்ரேட்டஸ் (Stratus), நிம்பஸ் (Nimbus) என நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றது.
  • சிர்ரஸ் மேகமானது 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. அவை மெல்லிய மேகங்களாக காணப்படுகின்றன. பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் இறகுகள் போன்று காணப்படும்.
  • கியுமுலஸ் மேகங்கள் 4000 முதல் 7000 மீட்டர் உயரம் வரையிலான பகுதியில் காணப்படுகின்றது. இவை பார்ப்பதற்கு பருத்தி நூல் போன்று இங்கும் அங்குமாய் சிதறிக் காணப்படும்.
  • ஸ்ட்ரேட்டஸ் மேகங்கள் இழை போன்று வானத்தின் பெரும்பான்மையான இடத்தினை ஆக்கிரமிக்கின்றது. வெப்ப இழப்பின் காரணமாக இவை உருவாகின்றன.
  • நிம்பஸ் மேகங்கள் பூமிக்கு மிக அருகில் உருவாகின்றன. இவை கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். மிக அடர்த்தியாகவும் சூரிய ஒளி உட்புகக்கூடியதாகவும் உள்ளது. இந்த மேகங்களானது தரையைத் தொடுவது போன்று பூமிக்கு மிக அருகில் காணப்படும்.
மழைப் பொழிதல்: (Rainfall)
  • ஈரப்பதமான காற்று மூன்று முக்கிய வழிகளில் மேகமாக மாறுகின்றன. வெதுவெதுப்பான, ஈரப்பதமான காற்று குளிர்ந்து சுருங்கி மழையாகப் பொழிகின்றது. வெதுவெதுப்பான காற்று குளிர்ந்த காற்றினை விட அதிக நீரினைத் தன்னுள் கொண்டிருக்கும் காரணத்தால் குளிர்ந்து சுருங்கி மழையாகப் பொழிகின்றது. மழை என்பது நீர்த்துளிகளால் ஆனது. புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மழைத்துளிகள் ஈர்க்கப்படும் அளவுக்குப் பெரிதாகும் பொழுது தான் மழையாகப் பொழிகின்றது. இது நீர் சுழற்சிக்கு மிக முக்கியக் காரணியாகின்றது.
  • இரண்டு காற்றுப்பகுதிகள் ஒன்றொடொன்று இணையும் பொழுது முன்மழை பெய்கின்றது. வெதுவெதுப்பான காற்றும் (Warm air) குளிர்ந்த காற்றும் (cold air) நெருங்கி வரும்பொழுது அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஒன்றோடொன்று கலப்பதில்லை. மாறாக அடர்த்தி குறைந்த வெதுவெதுப்பான காற்று அடர்த்தி மிகுந்த குளிர்ந்த காற்றின் மேல் விசையினைச் செலுத்துவதால் முகப்பினை (Front) உருவாக்குகின்றது. மேலெழும்பும் குளிர்ந்த காற்று சுருங்கி மழையாகப் பொழிகின்றது.
  • மலைத்தடுப்புமழையானது (Orographic Rainfall) மிகப்பெரியஅளவிலானகாற்றுமேலேஉந்தப்பட்டுஉயர்மலைத்தொடர்கள், பீடபூமிகள்ஆகியவற்றின்குறுக்கேமேலேஎழும். உயர்ந்த காற்றானது மழையைக் கொடுத்து விட்டு மறுபுறத்தில் வறண்ட காற்றாக வெளிவருகின்றது. அது ‘மழை மறைவுப் பிரதேசம்’ (Rain Shadow Region) என அழைக்கப்படுகின்றது. இந்த மழை மறைவுப் பிரதேசங்கள் பெரும்பாலும் பாலைவன நிலையை அடைந்து விடுகின்றன.
 
  • வெப்பச்சலன மழையானது (Convectional Rainfall) பூமியின் மேற்பகுதி வெப்பமடையும் பொழுது எழும் வெப்பக் காற்றில் உள்ள ஈரப்பதத்தினால் ஏற்படுகின்றது. பூமி வெப்பமடையும் பொழுது அதன் மேல் உள்ள காற்று  வெப்பமடைந்து மேலே உந்தப்படுகின்றது. காற்று மேலே எழும் பொழுது குளிர்ச்சியடைந்து, பூரித நிலைக்குச் (Saturated Point) சென்று நீராவியானது நீர்த் தன்மையை அடைகின்றது. பின் மேகமாக மாறி மழை பொழிகின்றது. வெப்பச் சலன மழைக்கு இரண்டு காரணிகள் மிக அவசியம். அதாவது பூமி வெப்பமடைந்து காற்று உயரே செல்லும் அளவிற்கு வெப்பம் நிலவ வேண்டும் மற்றும் காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருக்க வேண்டும் .
  • ”அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்பார்கள். ஆம்! அது போன்று மழையின்றி உயிர்கள் மண்ணில் வாழாது எனலாம்.
  • ஏரிகளை ”ஏரியா”வாக மாற்றி விட்டு இன்று தண்ணீர் வெள்ளமாய் சூழ்ந்து விட்டது என்று துள்ளிக் கொண்டிருக்கின்றோம். யார் மேல் தவறு என்று ஆராய்ந்தால் எல்லோரும் அதில் உள்ளடங்கி விடுகின்றோம். என்ன செய்வது? நிலைமை நம் கைக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. பிறர் மீது பழியிடாமல் வரும் முன் காப்போம்!

- - - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்