To read this article in English: Click Here
செப்டம்பர் - 02
உலக தேங்காய் தினம்
- தேங்காய்களின் பயன்களை சுட்டிக் காட்டுவதற்காக 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 02 ஆம் தேதி உலக தேங்காய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- வேலைவாய்ப்பை உருவாக்குதல், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை மற்றும் தேங்காயின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கங்களாகும்.
- உலக தேங்காய் தினமானது இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் (Asian and Pacific Coconut Community - APCC) ஏற்படுத்தப்பட்டது.
செப்டம்பர் - 05
தேசிய அறக்கட்டளை தினம்
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய அறக்கட்டளை தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
- உலகம் முழுவதும் அறக்கட்டளை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான ஒரு பொதுத் தளத்தை ஏற்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இத்தினத்தின் நோக்கங்களாகும்.
- கொல்கத்தாவில் மறைந்த அன்னை தெரசாவின் நினைவாக செப்டம்பர் 05 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா 1979 ஆம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார்.
தேசிய ஆசியர்கள் தினம்
- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 07
உலக தாடி தினம்
- உலக தாடி தினம் என்பது உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நாடுகளிலும் கண்டங்களிலும் வாழுகின்ற தாடியுடன் கூடிய மக்கள் ஒன்று கூடுகின்ற சர்வதேச அளவிலான வருடாந்திர நிகழ்ச்சியாகும்.
- இத்தினமானது செப்டம்பர் மாதத்தின் முதலாவது சனிக் கிழமை ஏற்படுகிறது.
செப்டம்பர் – 08
சர்வதேச கல்வி தினம்
- 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற்ற யுனெஸ்கோ பொதுக் கருத்தரங்கின் 14-வது பதிப்பின்போது செப்டம்பர் 08 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.
- இத்தினம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- இதன் நோக்கம் தனி நபர்கள், சமுதாயம் மற்றும் சமூகங்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக் காட்டுவதாகும்.
- இந்த ஆண்டு இத்தினமானது 52வது சர்வதேச கல்வி தினத்தைக் குறிக்கிறது.
- யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டிற்கான கருத்துருவானது, எழுத்தறிவு மற்றும் திறன்மேம்பாடு என்பதாகும்.
- இந்தியாவில் இத்தினத்தை அனுசரிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய எழுத்தறிவுத் திட்ட ஆணையத்தினால் (National Literacy Mission Authority) ஒருங்கிணைக்கப்பட்டன.
செப்டம்பர் - 10
உலக தற்கொலை தடுப்பு தினம்
- உலக சுகாதார அமைப்புடன் (WHO - World Health Organisation) இணைந்து சர்வதேச தற்கொலை தடுப்பு மன்றத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட உலக தற்கொலை தடுப்பு தினமானது (WSPD- World Suicide Prevention Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- தற்கொலை தடுக்கப்படக் கூடியது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தற்கொலை என்பது 15 வயது முதல் 29 வயதுடைய இளைஞர்களின் இறப்பிற்கு இரண்டாவது முக்கியக் காரணமாகும்.
- உலகளவில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொள்ளுதல், தூக்கிட்டு தற்கொலை செய்தல் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்கொலை செய்தல் ஆகியவை மிகவும் பொதுவான தற்கொலை முறைகளாகும்.
- 2018 ஆம் ஆண்டிற்கான உலக தற்கொலை தடுப்பு தினத்தின் கருத்துருவானது, “தற்கொலைகளைத் தடுப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுதல்” என்பதாகும்.
செப்டம்பர் - 11
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-வது நினைவு தினம் (2018)
- 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று சிகாகோவின் உலக மதங்கள் காங்கிரஸில் சுவாமி விவேகானந்தர் தனது முதலாவது உரையை நிகழ்த்தினார்.
- வேதாந்தா மற்றும் யோகா போன்ற தத்துவங்களை மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய முக்கியமான நபர்களுள் இவரும் ஒருவராக நினைவு கூறப்படுகிறார்.
செப்டம்பர் - 12
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐ.நா. தினம்
- தெற்கு - தெற்கு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதற்காக ஐ.நா. பொதுச் சபையானது 58/220 என்ற தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 ஆம் தேதியை “தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐ.நா. தினமாக” அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
- தெற்கில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிகளை இத்தினம் அனுசரிக்கிறது. மேலும் வளரும் நாடுகளில் தொழில்நுட்பம் மீதான ஒத்துழைப்புப் பணிகளில் ஐ.நா. வின் முயற்சிகளை இத்தினம் சுட்டிக் காட்டுகிறது.
செப்டம்பர் - 14
இந்தி திவாஸ்
- நாடெங்கிலும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
- 1949 ஆம் ஆண்டு இத்தினத்தில் இந்திய அரசியலமைப்புச் சபையானது தேவ நாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை நாட்டின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டது.
செப்டம்பர் - 15
சர்வதேச ஜனநாயக தினம்
- ஜனநாயகக் கொள்கைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது செப்டம்பர் 15 ஆம் தேதியை சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. மேலும் ஐ.நா. பொதுச் சபையானது பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது உறுப்பு நாடுகள் மற்றும் நிறுவனங்களை இத்தினத்தை அனுசரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “ஜனநாயகம் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது: மாறிவரும் உலகத்திற்கான தீர்வுகள்” என்பதாகும்.
பொறியாளர்கள் தினம்
- 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்த மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஹைதராபாத் நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர் இவராவார். அந்த காலகட்டத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நீர்பிடிப்புப் பகுதியான மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டுவதில் தலைமைப் பொறியாளராக இவர் செயல்பட்டார்.
சர்வதேச சிவப்புப் பனிக்கரடி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்புப் பனிக்கரடி தினம் அனுசரிக்கப்படுகிறது. சிவப்புப் பனிக்கரடியின் எண்ணிக்கையானது குறைந்து வருவதைக் குறிப்பிடும் விதமாக சிவப்புப் பனிக்கரடி அமைப்பினால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
- தற்பொழுது ஏறத்தாழ 10,000க்கும் குறைவான சிவப்புப் பனிக் கரடிகளே உள்ளன. இதன் பொருள் அழிவு நிலையில் உள்ள இந்த இனமானது முற்றிலும் மறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாகும்.
சஞ்சயிகா தினம்
- மாணவர்களிடம் நிதி சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி சஞ்சாயிகா தினம் (பள்ளி வங்கியியல்) அனுசரிக்கப்படுகிறது.
- 1970களின் ஆரம்பத்தில் தேசிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களுக்கு வங்கி வசதியை ஏற்படுத்தும் பொருட்டு இந்திய அரசால் சஞ்சயிகா என்ற வசதி உருவாக்கப் பட்டது.
- சஞ்சயிகா திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பண சேமிப்புத் திட்டமாகும்.
செப்டம்பர் - 16
ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான சர்வதேச தினம்
- ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் (உலக ஓசோன் தினம்) அனுசரிக்கப்படுகிறது.
- 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “நிதானமாக பணியைச் செய்: மாண்ட்ரியல் நெறிமுறை” என்பதாகும்.
- 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
- ஓசோன் அடுக்கைப் பாதிப்படையச் செய்யும் பொருட்கள் மீதான 1987 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட மாண்ட்ரியல் நெறிமுறையை நினைவுகூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 18 முதல் 24 வரை –சர்வதேச காதுகேளாதோருக்கான வாரம்
- சர்வதேச காதுகேளாதோருக்கான வாரமானது காதுகேளாதோருக்கான உலக மன்றம் (WFD - World Federation of the Deaf), அதன் தேசிய மன்றங்கள் மற்றும் உலகளவில் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றால் அனுசரிக்கப்படுகிறது. இது செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 20
பல்கலைக் கழக விளையாட்டுகளுக்கான சர்வதேச தினம்
- பல்கலைக்கழக விளையாட்டுகளுக்காக சர்வதேச அளவில் ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுகள் மன்றமானது (FISU - International University Sports Federation) யுனெஸ்கோவிற்கு ஒரு பரிந்துரை செய்தது.
- 2015 ஆம் ஆண்டு நவம்பரில் பாரீசில் நடைபெற்ற பொதுக் கருத்தரங்கின் 38-வது பதிப்பில் யுனெஸ்கோவின் உறுப்பினர் நாடுகள் இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 20 ஆம் தேதியை பல்கலைக்கழக விளையாட்டுகளுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
செப்டம்பர் - 21
சர்வதேச அமைதி தினம்
- உலக அமைதி தினம் என்றழைக்கப்படும் சர்வதேச அமைதி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினமானது ஐ.நா.வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடுமுறை தினமாகும்.
- போர் இல்லாத மற்றும் வன்முறையற்ற உலக அமைதிக்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது 1982 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
உலக அல்சைமர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதியன்று உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் உலகெங்கிலும் உள்ள அல்சைமர் மற்றும் மறதி நோய் நிறுவனங்கள் அல்சைமர் மற்றும் மராத்தி நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் கவனத்தை செலுத்துகின்றன.
- மறதி நோயின் மிகவும் பொதுவான வடிவமே அல்சைமர் நோயாகும்.
செப்டம்பர் - 22
உலக காண்டாமிருக தினம்
- உலக காண்டாமிருக தினமானது 2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தினால் (WWF - World Wide Fund for Nature) முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.
- இதற்கு அடுத்த ஆண்டில் உலக காண்டாமிருக தினமானது வளர்ச்சி பெற்று சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய காண்டாமிருக வகைகளை உள்ளடக்கியுள்ளது.
- இத்தினமானது கருப்பு, வெள்ளை, ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம், சுமத்ரா இனம் மற்றும் ஜாவா இனம் ஆகிய காண்டாமிருகத்தின் அனைத்து ஐந்து இனங்களையும் பெருமைப்படுத்துகிறது.
உலக ரோஜா தினம்
- ரோஜா என்பது அன்பு, நலம் மற்றும் அக்கறை ஆகியவற்றின் குறியீடாகும்.
- உலகெங்கிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ரோஜா தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் தங்களின் மனநிலை மற்றும் மன உறுதி ஆகியவற்றின் மூலம் இந்நோயை எதிர்த்து போராட முடியும் என்பதை நினைவுபடுத்துவதாகும்.
உலக மகிழுந்து பயன்பாடற்ற தினம்
- மகிழுந்து உபயோகிப்பவர்கள் தங்களின் மகிழுந்துகளை ஒரு நாள் முழுமைக்கும் பயன்படுத்தாமல் இருப்பதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக மகிழுந்து பயன்பாடற்ற தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலாவது மகிழுந்து பயன்பாடற்ற தினம் அனுசரிக்கப்பட்டது.
செப்டம்பர் - 23
சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம்
- உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினத்தின் நோக்கமானது காது கேளாதவர்களின் சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவதாகும்.
- 2018 ஆம் ஆண்டானது சைகை மொழிகளுக்கான சர்வதேச தினத்தை அனுசரிப்பதன் முதலாவது ஆண்டாகும்.
- இத்தினத்தின் கருத்துருவானது, ”சைகை மொழியின் மூலம் அனைவரையும் உள்ளடக்கல்” என்பதாகும்.
- 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் A/RES/72/161 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
செப்டம்பர் - 25
அந்த்யோதயா திவாஸ்
- பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினத்தின் (1916) நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி அந்த்யோதயா திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
- இது 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகிறது.
செப்டம்பர் - 26
சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம்
- உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- உலகளாவிய அளவில் அணுசக்தி ஆயுதங்களைக் குறைப்பதே மிக முக்கியம் என்பதை உலக சமுதாயத்திற்கு மீள்வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினமானது 2013 ஆம் ஆண்டில் டிசம்பரில் 68/32 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பறைசாற்றப்பட்டது.
சிஎஸ்ஐஆர் (CSIR) தினம்
- இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தனிச் சுதந்திரமுடைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றமானது தனது 76-வது நினைவு தினத்தை அனுசரித்தது. இம்மன்றமானது 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது (CSIR - Council of Scientific & Industrial Research).
- விண்வெளிப் பொறியியல், கட்டுமானப் பொறியியல், கடல் அறிவியல், வாழ்க்கை அறிவியல், உலோகவியல், இராசாயனத் துறை, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் ஆகியவை CSIR-ன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளில் உள்ளடங்கும்.
உலக கருத்தரிப்பு தினம்
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலக கருத்தரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- நடைமுறையில் உள்ள அனைத்து விதமான கருத்தரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.
செப்டம்பர் – 27
உலக சுற்றுலா தினம்
- ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பானது (UNWTO – United Nations World Tourism Organization) செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று உலக சுற்றுலா தினத்தை அனுசரித்தது.
- 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ல் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் காரணமாக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது உலக சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
- சர்வதேச சமூகத்தில் சுற்றுலாத் துறையின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். மேலும் சுற்றுலாத் துறையானது எவ்வாறு சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார விழுமியங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இத்தினம் வெளிப்படுத்துகிறது.
- 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது,” சுற்றுலாத் துறை மற்றும் டிஜிட்டல் உருமாற்றம்” என்பதாகும்.
உலக கடல்சார் தினம்
- கடல்சார் தொழிற்துறையை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை உலக கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இத்தினமானது பாதுகாப்பான கடற்பயணம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.
- இத்தினமானது, “ஐஎம்ஓ 70: நமது பாரம்பரியம் - சிறந்த எதிர்காலத்திற்கான சிறந்த கடற்பயணம்” என்பதாகும்.
- உலக கடல்சார் தினமானது (IMO – International Maritime Organization) 1958 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பின் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியைக் குறிக்கிறது. இத்தினம் 1978 ஆம் ஆண்டு முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
செப்டம்பர் - 28
அனைத்துவித தகவலையும் பெறுவதற்கான சர்வதேச தினம்
- அனைத்துவித தகவலையும் பெறுவதற்கான சர்வதேச தினம் (பொதுவாக தகவலைப் பெறுவதற்கான தினம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தினமாகும். இத்தினமானது யுனெஸ்கோவின் பொதுக் கருத்தரங்கினால் ஏற்படுத்தப்பட்டது. இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது. இத்தினமானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
- இத்தினமானது 2002 ஆம் ஆண்டு முதல் அறிந்து கொள்வதற்கான சர்வதேச தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இத்தினமானது சர்வதேச சமூக மன்றத்தினால் மேம்படுத்தப்பட்டது.
சர்வதேச வெளிநாய்க்கடி நோய் தினம்
- வெறிநாய்க்கடி நோயைத் தடுப்பது குறித்தும் இந்த கொடிய நோயை குணப்படுத்தும் செயல்பாடுகளைச் சுட்டிக் காட்தவும் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- மேலும் இத்தினமானது முதன்முறையாக வெறிநாய்க்கடி நோய் மருந்தைக் கண்டுபிடித்த பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநரான லூயிஸ் பாஸ்டரின் இறந்த தினத்தைக் குறிக்கிறது.
- 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “வெறிநாய்க்கடி நோய் : தகவலைப் பகிர்ந்து கொள், உயிரைப் பாதுகாத்துக் கொள்” என்பதாகும். இது விலங்கின் மூலம் ஏற்படக்கூடிய நோயாகும்.
துப்பாக்கி சுடுபவர்கள் தினம்
- “துப்பாக்கி சுடுபவர்கள் தினம்” என்று அழைக்கப்படும் “எழுச்சி தினமானது” முதலாவது பீரங்கிப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டதைக் குறிப்பதற்காக செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- மேலும் பீரங்கிப் படையானது போரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நவீன கால போர் முறையில் இது தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
செப்டம்பர் - 29
உலக இருதய தினம்
- உலக இருதய தினம் என்பது மக்களின் இறப்பிற்கு காரணமான இருதய நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 29 அன்று நடைபெறும் சர்வதேச பிரச்சாரமாகும்.
- இது உலக இருதய மன்றத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
செப்டம்பர் - 30
சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர் தினம்
- சர்வதேச மொழிபெயர்ப்பாளர் தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப்பட்டது. மேலும் இத்தினமானது 2017 ஆம் அண்டு செப்டம்பர் 30 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
- உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த பேச்சு வார்த்தைக்கு வழிவகை செய்து வளர்ச்சிக்கு வழிவகுக்கின்ற சர்வதேச இராஜதந்திர பணிகளில் மொழி வல்லுனர்களாக பணியாற்றுகின்ற போற்றப்படாத மொழி பெயர்ப்பாளர்களின் பங்களிப்பை இத்தினம் அங்கீகரிக்கிறது.
- சர்வதேச மொழிபெயர்ப்பு தினமானது 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 71/288 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐ.நா.பொதுச் சபையினால் ஏற்படுத்தப்பட்டது.
தேசிய ஊட்டச்சத்து மாதம்
- ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்காக நாடெங்கிலும் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.
- உயரம் குறைவாக இருத்தல், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, இரத்த சோகை மற்றும் பிறப்பின் போது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் போன்றவை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமானது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
உலக முதலுதவி தினம்
- 2000 ஆம் ஆண்டில் பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் (The International Federation of Red Cross and Red Crescent Societies) உலக முதலுதவி தினத்தை ஏற்படுத்தியது.
- உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று 100க்கும் மேற்பட்ட செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கங்களினால் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது நெருக்கடி காலங்களில் முதலுதவி செய்வது எவ்வாறு ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நதிகள் தினம்
- உலக நதிகள் தினம் என்பது உலகின் நீர்வழிகளை பெருமைப்படுத்துவதற்காக அனுசரிப்பதாகும்.
- இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
- கடந்தாண்டு, 60 நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்கள் நீர்வழிப் பாதைகளின் விழுமியங்களைக் கொண்டாடினர்.
பிராந்திய திருவிழாக்கள்
சொலுங் திருவிழா
- புகழ்பெற்ற வேளாண் திருவிழாக்களில் ஒன்றான சொலுங் திருவிழாவானது அருணாச்சலப் பிரதேசத்தில் ஆதி என்ற பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.
- பயிர்கள் நடவு செய்த பின்பு, செப்டம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
அமாங்மாங் திருவிழா
- அமாங்மாங் திருவிழாவானது நாகாலாந்தில் வசிக்கும் சங்கம் பழங்குடியினரால் அறுவடைக்கு முன்பு கொண்டாடப்படும் திருவிழாவாகும். இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் ஒற்றுமையை ஊக்குவித்தலாகும்.
பர்யூசனா திருவிழா
- பர்யூசனா திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சமணர்களின் முக்கியத் திருவிழாவாகும். இத்திருவிழாவானது வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
- இத்திரு