TNPSC Thervupettagam

முக்கியத் தினங்கள் - ஜூலை

November 13 , 2018 2250 days 19483 0
To read this article in English - Click Here
ஜூலை - 01
தேசிய மருத்துவர்கள் தினம்
  • தனி மனிதர்கள் மற்றும் சமூகத்திற்கு மருத்துவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நாட்டுக்கு நாடு இத்தினத்தை அனுசரிப்பதற்கான தேதி மாறுபடும். இது பெரும்பாலும் சுகாதார நல அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.
  • புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான பி.சி. ராயை கௌரவிப்பதற்காக இந்தியாவில் ஜூலை 01 அன்று தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பி.சி. ராய் 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2018ம் ஆண்டின் கருத்துரு: “மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான சகிப்புத் தன்மையற்ற நிலை” என்பதாகும்.
GST தினம்
  • புதிய மறைமுக வரியை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளதை அனுசரிக்கும் விதமாக மத்திய அரசானது ஜூலை 01 ஆம் தேதியை GST தினமாக அனுசரித்தது.

  • ஜூன் 30 மற்றும் ஜூலை 01 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் பாராளுமன்ற மத்திய மன்றத்தில் நடைபெற்ற விழாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அறிமுகப்படுத்தப்பட்டது.
பட்டயக் கணக்காளர்கள் தினம்
  • ICAI நிறுவனம் (Institute of Chartered Accountants of India) தொடங்கப்பட்ட தினமான ஜூலை 01 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஜூலை 01, 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் விளைவாக ICAI தொடங்கப்பட்டது.
  • பட்டயக் கணக்காளர் என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொழிலாகும். இது கணக்கு வைக்கும் அமைப்பை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட முதலாவது கணக்காளர்கள் அமைப்பாகும். இது முதன்முறையாக 1854 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டது.
சர்வதேச வேடிக்கைப் பேச்சு தினம்
  • ஜூலை 01 ஆம் தேதி சர்வதேச வேடிக்கைப் பேச்சு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தின் நோக்கம் தனது நண்பர்களுடனும் நெருக்கமானவர்களிடமும் வாய்விட்டு சிரித்து மகிழ்வதாகும்.
  • சர்வதேச வேடிக்கைப் பேச்சு தினம் என்பது நகைச்சுவையான வேடிக்கைப் பேச்சுகளைப் பகிர்தல், நகைச்சுவையான காணொலிகள் மற்றும் மகிழ்ச்சி நிரம்பிய அஞ்சல்முறை ஆகியவற்றை வரவேற்கும் நகைச்சுவைத் திருவிழாவாகும்.
  • பழங்கால கிரீஸில் பாலமிடிஸால் முதன்முறையாக நகைச்சுவைப் பேச்சு என்ற கருத்துருவானது தொடங்கியது என்று நம்பப்படுகிறது.
வன் மகோத்சவ் (ஜூலை 1 முதல் 10)
  • வனப் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1950 ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சரான ஸ்ரீ கன்னய்யாலால் எம் முன்சி என்பவரால் வன் மகோத்சவ் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்தியா முழுவதும் ஒரு வாரகாலம் நடைபெறும் மரம் நடும் திருவிழாவான வன் மகோத்சவ் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி தினம்
  • 1955 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று வர்த்தக வங்கியின் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய இம்பிரியல் வங்கியானது நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியாக மாற்றப்பட்டது.
  • நாட்டில் வங்கித் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியதை இத்தினம் குறிக்கிறது.
ஜூலை - 02
உலக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம்
  • விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களின் சேவைகளை குறிப்பதற்காக ஜூலை 02 அன்று உலக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1924 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின்போது சர்வதேச விளையாட்டுகள் பத்திரிக்கை மன்றம் உருவாக்கப்பட்டதை குறிப்பிடும் விதமாக அதிகாரப்பூர்வமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • விளையாட்டு ஊடகங்களின் உறுப்பினர்கள் தங்களின் துறை சார்ந்த பணிகளில் சிறந்து விளங்குவதை ஊக்குவிப்பதற்காக உலக விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 உலக UFO (Unidentified Flying Objects / அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்) தினம்
  • அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் இருப்பதை அங்கீகரிப்பதற்காக உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • முதன்முறையாக 2001 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்ட இத்தினம் உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தின அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.
  • உலக அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தின அமைப்பானது ஜூலை 2 ஆம் தேதியை இத்தினத்தை அனுசரிப்பதற்கான அதிகாரப்பூர்வ நாளாக அறிவித்தது.
  • ஜூலை 2 ஆம் தேதியானது ரோஸ்வெல்லின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் விபத்தின் நினைவைக் குறிக்கிறது. இச்சம்பவம் 1947-ல் நிகழ்ந்தது.
ஜூலை - 03
செயிண்ட் தாமஸ் தினம்
  • செயிண்ட் தாமஸ் யூதராகப் பிறந்தார். இயேசுவின் சீடர்களான 12 நபர்களில் இவரும் ஒருவராவார்.
  • இவரது பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் தெரியவில்லை.
  • ஆனால் அவரது விருந்து தினம் ஜூலை 3 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • ஜூலை 3ம் தேதியன்று அவரது உடல் இந்தியாவின் மைலாப்பூரிலிருந்து மெசபடோமியாவின் எடேசா நகரத்திற்கு மாற்றப்பட்டது.
  • இவர் கத்தோலிக்க தேவாலயம் முறையாக அமைப்பதற்கு முன்பு வாழ்ந்தவர். ஆனால் இவர் துறவிகளை கட்டமைத்தவராக அங்கீகரிக்கப்படுகிறார்.
ஜூலை - 04
அமெரிக்க சுதந்திர தினம்
  • 1776 ஆம் ஆண்டு ஜூலை 04 என்ற தினமானது சுதந்திரப் பிரகடனத்தையும் அமெரிக்காவானது சுதந்திர நாடாக பிறப்பு எடுத்ததையும் குறிக்கிறது.
ஜூலை - 06
விலங்கு வழிப் பரவும் நோய்களுக்கான சர்வதேச தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 அன்று விலங்கு வழிப் பரவும் நோய்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் திறனுடைய விலங்கு வழிப் பரவும் நோய்கள் வளர்ச்சி அடைவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
முத்தமிடுதலுக்கான சர்வதேச தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 அன்று முத்தமிடுதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் முத்தமிடுதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. இருந்த போதிலும் முத்தக் கலாச்சாரம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை.
ஜூலை - 07
உலக சாக்லெட் தினம்
  • உலக சாக்லெட் தினமானது ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஜூலை 7 அன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் சர்வதேச சாக்லெட் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இத்தினத்தின் கொண்டாட்டத்தில் சாக்லெட் உட்கொள்வதும் இதில் அடங்கும்.
கூட்டுறவுகளுக்கான சர்வதேச தினம் (ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமை)
  • சர்வதேச கூட்டுறவு கூட்டிணைவு உருவாக்கப்பட்டதின் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 47/90 என்ற தீர்மானத்தின் மூலம் 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமையை கூட்டுறவுகளுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
  • 1995 ஆம் ஆண்டுமுதல் சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைந்து ஐ.நா-வின் கூட்டுறவுகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “ஒத்துழைப்பின் மூலம் நீடித்த சமூகங்களை உருவாக்குவது” என்பதாகும்.
ஜூலை - 11
உலக மக்கள் தொகை தினம்
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நாளும் மக்கள் தொகை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் முன் முயற்சியாகும்.

  • 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக ஆணையமானது ஜூலை 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்க பரிந்துரைத்தது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான கருத்துருவானது, “குடும்பக் கட்டுப்பாடு என்பது மனித உரிமை” என்பதாகும்.
ஜூலை - 12
சர்வதேச மலாலா தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதி ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்ற மலாலா தினம் ஆகும்.

  • பெண்களுக்கு கல்வியில் சம உரிமை அளிப்பதற்காக குரல் கொடுத்த பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாயின் வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபார்டு தொடக்க தினம்
  • விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியானது நாட்டிற்கு சேவையாற்றுவதில் கடந்த 36 வருடங்களை நிறைவு செய்து இருக்கின்றது. இவ்வங்கியானது இவ்வருடம் (2018) ஜூலை 12 ஆம் தேதியன்று 37வது ஆண்டின் தொடக்க தினத்தை கொண்டாடியது.
  • இதனோடு தொடர்புடைய வகையில் “கூட்டுறவுக் கொள்கை மற்றும் சந்தை இணைப்புகள்: விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” மீதான தேசியக் கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றது.
ஜூலை - 14
பிரான்சு தேசிய தினம் (பாஸ்டைல் தினம்)
  • விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த கொள்கைகளை உலகிற்கு அர்ப்பணித்த பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தை பாஸ்டைல் தினம் குறிக்கிறது.
  • பிரெஞ்சுப் புரட்சியின் ஒரு திருப்பு முனை நிகழ்வான 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி அன்று பாஸ்டைல் சிறையை உடைத்ததன் நினைவு தினம் பிரான்சு தேசிய தினமாகும்.
ஜூலை - 15
உலக இளைஞர்களின் திறன்களுக்கான தினம்
  • இளைஞர்களுக்கான திறன்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது A/RES/69/145 என்ற தீர்மானத்தின் மூலம் ஜூலை 15 ஆம் தேதியை உலக இளைஞர்களின் திறன்களுக்கான தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
கல்வி வளர்ச்சி நாள்
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான K. காமராசரின் 116-வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
  • தமிழகமானது காமராசரின் பிறந்த தினத்தை ‘கல்வி தினம்’ அல்லது ‘கல்வி வளர்ச்சி தினமாக’ அனுசரிக்கிறது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கல்வி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப் படுகிறது.
உலக பாம்புகள் தினம்
  • ஜூலை 16 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட உலக பாம்புகள் தினத்தின் நோக்கங்களுள் ஒன்று பாம்புகள் குறித்து மக்களிடையே நிலவும் பயம் மற்றும் மாயையை நீக்குவதாகும்.
  • உலகம் முழுவதும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களால் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை - 17
சர்வதேச நீதி தினம்
  • சர்வதேச குற்றவியல் நீதி அமைப்பு வளர்ச்சியடைவதை அங்கீகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் ஜூலை 17 அன்று சர்வதேச நீதி தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினம் நீதிக்கான உலக தினம் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிக்கான தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாகக் காரணமாக இருந்த ரோம் விதியை ஏற்றுக் கொண்டதின் நினைவாகவும் ஜூலை 17 என்ற தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு ஜூன் 01 அன்று கம்பாலாவில் ரோம் விதியை மறு ஆய்வு செய்வதற்கான கருத்தரங்கு நடைபெற்ற போது உறுப்பு நாடுகளின் சபையானது ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச குற்றவியல் நீதிக்கான தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
ஜூலை - 18
சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
  • 2018 ஆம் ஆண்டின் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமானது நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தைக் குறிக்கிறது (18 ஜூலை 1918).
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.நா.வால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் மண்டேலா தினம் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

  • நெல்சல் மண்டேலா பவுண்டேசன் ஆனது இந்த வருட (2018) நெல்சன் மண்டேலா தினத்தை “வறுமைக்கு எதிரான நடவடிக்கை” என்ற முழக்கத்தோடு அனுசரித்தது.
ஜூலை - 26
கார்கில் விஜய் திவாஸ்
  • விஜய் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்பு கார்கில் விஜய் திவாஸ் என்று பெயரிடப்பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் கைப்பற்றிய மிக உயர்ந்த பகுதிகளை இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றியது.

  • கார்கில் போர் நிறைவடைந்த அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
சதுப்பு நிலக் காடுகளின் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச தினம்
  • 2015 ஆம் ஆண்டில் சதுப்புநிலக் காடுகளின் சுற்றுச்சூழலுக்கான சர்வதேச தினமானது யுனெஸ்கோவின் பொதுக் கருத்தரங்கினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 26 ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தனித்துவம் வாய்ந்த, சிறப்பான மற்றும் பாதிக்கக்கூடிய சதுப்புநிலக் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சதுப்பு நிலக் காடுகளின் நீடித்த மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் ஆகியவைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்தவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை - 27
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் தொடக்க தினம்
  • மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படையில் மிகப் பெரியது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையாகும்.
  • இப்படையானது மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் முக்கியப் பணி மாநில/யூனியன் பிரதேசங்களில் கலவரத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட காவல் நடவடிக்கைகளில் உதவுவதாகும்.
  • 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அரசுப் பிரதிநிதிக் காவலராக இப்படை நடைமுறைக்கு வந்தது.
  • இந்திய விடுதலைக்குப் பின், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைச் சட்டத்தின் மூலம் இது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையாக உருவெடுத்தது.
ஜூலை - 28
உலக இயற்கை பாதுகாப்பு தினம்
  • இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • காடுகள் அழிப்பு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், மாசுபாடு, பிளாஸ்டிக் பயன்பாடு, இரசாயனங்கள் போன்றவை இயற்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடியவையாகும்.
உலக கல்லீரல் அழற்சி தினம்
  • கல்லீரல் அழற்சி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக நோபல் பரிசு பெற்றவரான பரூச் சாமுவேல் புளும்பெர்கின் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதி உலக கல்லீரல் அழற்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் (2018) கருத்துரு “பரிசோதனை செய், கல்லீரல் அழற்சிக்கு சிகிச்சை செய்” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் உலக கல்லீரல் அழற்சி தினத்தை கொண்டாடுவதற்காக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மங்கோலிய அரசு ஆகிய இரண்டும் இணைந்து மங்கோலியாவின் உலன்பட்டரில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தியது.
  • உலகெங்கிலும் 325 மில்லியன் மக்களை பாதிக்கக் கூடிய முக்கிய சுகாதார சவாலாக கல்லீரல் அழற்சி B மற்றும் கல்லீரல் அழற்சி ஆகியவை உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் புற்றுநோயினால் 1.34 மில்லியன் மக்கள் இறப்பதற்கு முக்கியக் காரணமாக கல்லீரல் அழற்சி இருக்கிறது.
ஜூலை - 29
சர்வதேச புலிகள் தினம்
  • 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் சர்வதேச புலிகள் தினம் உருவாக்கப்பட்டது முதல் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தின் நோக்கம் புலிகள் எண்ணிக்கை குறைவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

  • இந்தியா நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கிறது. புலிகளின் எண்ணிக்கையானது 2006 ஆம் ஆண்டில் 1411 என்பதிலிருந்து 2014 ஆம் ஆண்டில் 2226 ஆக உயர்ந்துள்ளது.
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின்படி, உலக அளவில் புலிகளின் எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 3900 ஆக உள்ளது.
ஜூலை - 30
ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்
  • ஐ.நா.வின் உறுப்பினர் நாடுகள் A/RES/68/192 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, ஜூலை 30 ஆம் தேதியை ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினமாக தேர்ந்தெடுத்துள்ளன.

  • ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் ஊக்கப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கங்களாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகமானது (UNODC) “குழந்தைகள் மற்றும் சிறு வயதினரின் கடத்தலுக்கு பதில் அளித்தல்” என்பதில் கவனத்தை செலுத்துகிறது.
சர்வதேச நண்பர்கள் தினம்
  • அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவை ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமரசம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகள், செயல்முறைகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகியவற்றை நடத்த ஐ.நா. ஊக்கப்படுத்துகிறது.
  • சர்வதேச நண்பர்கள் தினத்தை ஐ.நா. அனுசரிக்கிறது. ஆனால் இத்தினம் பொது விடுமுறை தினம் அல்ல.
ஜூலை - 31
உலக வனப் பாதுகாவலர் தினம்
  • பணியின்போது மரணமடைந்த அல்லது காயமுற்ற வனப் பாதுகாவலர்களை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதியன்று உலக வனப் பாதுகாவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச வனப் பாதுகாவலர் மன்றத்தின் 54 உறுப்பினர்கள் கூட்டமைப்பினால் (IRF - International Ranger Federation) இத்தினம் ஊக்கப் படுத்தப்படுகிறது.
  • சர்வதேச வனப் பாதுகாவலர் மன்றம் தொடங்கப்பட்ட 15வது நினைவு தினமான 2007 ஆம் ஆண்டு முதலாவது உலக வனப் பாதுகாவலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

முக்கிய திருவிழாக்கள்
டிரி திருவிழா - அருணாச்சலப் பிரதேசம்
  • விவசாயத் திருவிழாவான டிரி திருவிழா அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பதானி பழங்குடியின மக்களால் கொண்டாடப்படுகிறது.

  • டிரி திருவிழாவானது அப்பதானி பழங்குடியின மக்களின் மிகப்பெரிய திருவிழாவாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி டிரி திருவிழா கொண்டாடப்படுகிறது. இது ஜூலை 4 ஆம் தேதி மாலை பாரம்பரிய சடங்குகளுடன் இத்திருவிழாவின் கொண்டாட்டங்கள் தொடங்கும்.
துலுனி திருவிழா
  • துலுனி திருவிழாவானது நாகாலாந்தின் சுமி நாகா பழங்குடியின மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியத் திருவிழாவாகும்.
  • துலுனி என்பது சுமி பழங்குடியின மக்கள் அருந்தும் மதுபானத்தின் பெயராகும்.
  • துலுனி என்பது சுமி பழங்குடியின மக்களின் அறுவடைத் திருவிழா ஆகும்.
  • இவ்வருடம் இது ஜூலை 8ம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
போரி திருவிழா
  • ஒவ்வொரு ஆண்டும் போரி திருவிழா இமாச்சலப் பிரதேசத்தில் லாஹுல் பள்ளத்தாக்கில் கொண்டாடப்படுகிறது.
  • இத்திருவிழா திரிலோகிநாத் கோவிலில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப் படுகிறது.
ஹரிலா மேளா
  • ஒவ்வொரு ஆண்டும் ஹரிலா திருவிழாவானது ஜூலை 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை உத்தரகாண்டின் குமாவோன் பகுதியில் பீம்டாலின் ராம்லீலா மைதானத்தில் கொண்டாடப்படுகிறது.
கர்ச்சி பூஜை
  • கர்ச்சி பூஜையானது திரிபுரா மாநிலத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகும்.
  • ஜூலை மாதத்தில் இந்த பூஜையானது ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
  • அகர்தலாவில் (புராண அகர்தலா) 14 கடவுள்கள் அமைந்துள்ள கோயிலில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

………………..

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்