TNPSC Thervupettagam

முக்கிய தினங்கள் - ஜனவரி

April 16 , 2018 2443 days 21817 0
வரிசை எண் தேதி முக்கிய தினம்
1 ஜனவரி 4 உலக பிரெய்லி தினம் (லூயிஸ் பிரெய்லியின் பிறந்த தினம்) நோக்கம் : கண் பார்வையற்றோர் எழுத மற்றும் வாசிக்க ஏதுவான பிரெய்லி மொழியை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் முயற்சியை அங்கீகரித்தல்.
2 ஜனவரி 6 போரில் பெற்றோரை இழந்தோருக்கான உலக தினம் நோக்கம்: குறிப்பிட்ட பாதிக்கப்பட்டோரின் அவலநிலையை நிலையை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச சமூகங்களை இயலச் செய்தல்.
3 ஜனவரி 9 பிரவாஸி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) நோக்கம் : இந்தியாவின் வளர்ச்சிக்கான வெளிநாடு வாழ்  இந்தியர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்துதல். அதோடு, ஜனவரி 9, 1915 அன்று காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியதனை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்திய அரசு.
4 ஜனவரி 10 உலக இந்தி தினம் நோக்கம்: 1975 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற உலக இந்தி மாநாட்டை  குறித்தல்  மற்றும்  உலகளவில் இந்தி மொழியை பரப்புதல்.  கடைபிடிக்கும் அமைப்பு : வெளியுறவுத்துறை அமைச்சகம்
5 ஜனவரி 11 லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்
6 ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம் நோக்கம் : சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
7 ஜனவரி 15 இந்திய இராணுவ தினம் நோக்கம் : ஜனவரி 15, 1949 அன்று இந்தியாவிற்கான கடைசி ஆங்கிலேயே ராணுவத் தளபதியான சர் பிரான்சிஸ் பட்செர்ரிடமிருந்து, லெப்டினன்ட் ஜெனரல், K.M.கரியப்பா இராணுவத் தளபதி பொறுப்பைப் பெற்றுக் கொண்டதை அங்கீகரித்தல் கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
8 ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்/ நாட்டுப் பற்றுக்கான தேசிய தினம் / தேஷ் பிரேம் திவாஸ் கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
9 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம் நோக்கம் : சமூகத்தில் பெண் குழந்தைகள் சந்திக்கும் சமத்துவமின்மையைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
10 ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் (2011லிருந்து) நோக்கம் : அரசியல் செயல்முறைகளில் அதிக அளவில் பங்கெடுப்பதற்காக இளைஞர்களை  ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா   தேசிய சுற்றுலா தினம் நோக்கம் : நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் முக்கியவத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
11 ஜனவரி 26 சர்வதேச சுங்கத் தீர்வை தினம் நோக்கம் : எல்லைப் பாதுகாப்பை நிர்வகித்தலில் சுங்க அமைப்புகள்  மற்றும் அதிகாரிகளின் செயல்பாட்டை அங்கீகரிப்பதற்காக கடைபிடிக்கும் அமைப்பு : உலக சுங்க அமைப்பு   குடியரசு தினம் (1950லிருந்து) நோக்கம் : ஜனவரி 26, 1950 அன்று செயல்பாட்டிற்கு வந்த இந்திய அரசியலமைப்பைப் பெருமைப்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
12 ஜனவரி 27 யூதப் படுகொலையினை   நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் நோக்கம்: இரண்டாம் உலகப்போரின்போது நடந்த யூதப் படுகொலையை நினைவு கூர்தல்   கடைபிடிக்கும் அமைப்பு : யுனெஸ்கோ
13 ஜனவரி 28  தரவு பாதுகாப்பிற்கான தினம் நோக்கம்: தரவுகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த செயல்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றை ஊக்குவித்தல் கடைபிடிக்கும் அமைப்பு : அமெரிக்கா, கனடா, இந்தியா, 47 ஐரோப்பிய நாடுகள்   லாலா லஜபதி ராய் பிறந்த நாள்
14 ஜனவரி 30 தியாகிகள் தினம் நோக்கம் : இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரை மாய்த்தவர்களை பெருமைப்படுத்துதல் & மகாத்மா காந்தியடிகளின் இறந்த தினத்தை அனுசரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா
15 ஜனவரி 31 தேசிய பேரிடர் மீட்புப்படை தோன்றிய தினம் நோக்கம் : தேசிய பேரிடர் மீட்புப்படையின் பேரிடர் கால செயல்பாடுகளை அங்கீகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்திய அரசு
16 ஜனவரி 11 - 17 சாலை பாதுகாப்பு வாரம் நோக்கம் : சாலைப் பாதுகாப்பு, வாகன ஒட்டு விதிகள் மற்றும் எச்சரிக்கைகளைப் பற்றிய அறிவை வளர்த்தல் கடைபிடிக்கும் அமைப்பு : சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
17 ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை உலக தொழுநோய் தினம் நோக்கம் : உலக தொழுநோய் அல்லது ஹான்சனின் நோய் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : அரசு சாரா நிறுவனங்கள்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்