TNPSC Thervupettagam

முக்கிய தினங்கள் - பிப்ரவரி

April 16 , 2018 2443 days 16023 0
வரிசை எண் தேதி முக்கிய தினங்கள்
1 பிப்ரவரி 1 இந்தியக் கடலோரக் காவல் படை தினம் நோக்கம்: இந்திய கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் பிராந்திய கடல்பகுதிகள் (Territorial Waters), தொடர்ச்சியான மண்டலம் (Contiguous Zone), பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கடல்சார் சட்டங்களை அமல்படுத்தல் கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு
2 பிப்ரவரி 2 உலக ஈரநிலங்கள் தினம் நோக்கம்: ஈரான் நாட்டிலுள்ள ராம்சார் (காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள நகரம்) நகரில் 1971, பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற ஈர நிலங்கள் மீதான மாநாட்டில் (ராம்சார் மாநாடு) கையெழுத்திட்ட தினத்தைக் குறித்தல்.
3 பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம் நோக்கம்: புற்றுநோயை தடுத்தல், கண்டறிதல் மற்றும் புற்றுநோய்க்கான மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக சுகாதார நிறுவனம்
4 பிப்ரவரி 5 பாதுகாப்பான  இணைய தினம் நோக்கம்:  ஆன்லைன் தொழில்நுட்பங்கள் மற்றும் கைபேசி ஆகியவற்றில் பாதுகாப்பான மற்றும் மிகவும்  பொறுப்புடைமையுடைய பயன்பாட்டை குறிப்பாக குழந்தைகள்  மற்றும் இளைஞர்களிடையே ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: Insafe - INHOPE நெட்வொர்க்
5 பிப்ரவரி 6 பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம் நோக்கம்: பெண் பிறப்புறுப்பு சிதைப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இந்நடைமுறையை ஒழித்தலை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: UNICEF (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்)
6 பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 தேசிய குடற்புழு நீக்க தினம் நோக்கம்: பள்ளிகள் மற்றும்  அங்கன்வாடிகளிலுள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழுவை நீக்கல். கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு
7 பிப்ரவரி 11 அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான (Women & Girls) சர்வதேச தினம் நோக்கம்: அறிவியல் துறையில் பெண்களின் சாதனை; சமமான அணுகல் (Equal access) மற்றும் பங்களிப்பை சிறப்பித்துக் காட்டுதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.
8 பிப்ரவரி 12 தேசிய உற்பத்தித் திறன் தினம் நோக்கம்: தற்காலத்திற்குத் தொடர்புடைய கருத்துருக்களுக்கேற்ப உற்பத்தி உபகரணங்கள் & தொழில் நுட்பங்களை செயலாக்கம் செய்வதற்குப் பங்குதாரர்களை ஊக்கப்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: தேசிய உற்பத்திக் கழகம்
9 பிப்ரவரி 13 உலக வானொலி  தினம் நோக்கம்: நம் வாழ்க்கையில் வானொலியின்  பங்களிப்பை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு: யுனெஸ்கோ   சரோஜினி நாயுடு  பிறந்த தினம் – இந்தியாவின் நைட்டிங்கேல் என அறியப்படுபவர்.
10 பிப்ரவரி 20 சமூக நீதிக்கான உலக தினம் நோக்கம்: வறுமை, விலக்கல் (Exclusion), வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.
11 பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினம் நோக்கம்: மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மை & பன்மொழி ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். கடைபிடிக்கும் அமைப்பு: யுனெஸ்கோ
12 பிப்ரவரி 22 உலக சிந்தனை தினம் நோக்கம்:  உலக நாடுகள் அனைத்திலுமுள்ள தங்களது சகோதரிகளைப் (மற்றும் சகோதரர்கள்)  பற்றி   எண்ணுதல்,  அதனை வழிகாட்டுதல் பற்றிய பொருள், மற்றும் அதன் உலகளாவிய விளைவுகளைப் பற்றி சிந்தித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: வாக் (World Association for Girl Guides and Girl Scouts - WAGGG)
13 பிப்ரவரி 24 மத்திய கலால் தீர்வை தினம் நோக்கம்: ஊழலை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாக பணி மேற்கொள்வதற்காக கலால் தீர்வைத் துறையினரை ஊக்குவித்தல் கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு
14 பிப்ரவரி 27 உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம் நோக்கம்: உலகம் முழுவதும்  அரசு சாரா நிறுவனங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவைகளினுடைய முக்கியத்துவத்தை அங்கீகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: அரசு சாரா நிறுவனங்கள்
15 பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம் நோக்கம்: 1982ல் சர்.சி.வி.இராமனால் கண்டுபிடிக்கப்பட்ட ராமன் விளைவை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு
16 பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் உலக அரிதான நோய்கள் தினம் நோக்கம்: அரிதான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரிதான நோய்களுடைய தனிநபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றிற்கான அணுகலை மேம்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: யூராய்ட்ஸ் (அரிதான நோய்களுக்கான ஐரோப்பிய நிறுவனம் - EURORDIS )
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்