TNPSC Thervupettagam

முக்கிய தினங்கள் - மார்ச்

April 19 , 2018 2265 days 16677 0

வரிசை எண்

தேதி

முக்கிய தினங்கள்

1 மார்ச் 1 பூஜ்ஜிய வேறுபாடு தினம் (2014லிருந்து) நோக்கம்: சட்டத்தின் முன்பும், செயல் முறையிலும் அனைவரும் சமம் என்பதை ஐ.நாவின் அனைத்து உறுப்பினர் நாடுகளிலும் ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா. மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள்
2 மார்ச் 3 உலக வனவிலங்குகள் தினம் நோக்கம்: உலகின் தாவர & விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர்கள்
3 மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம் நோக்கம்: இந்திய மக்களின் பாதுகாப்பிற்கும், அமைதியை தொடர்ந்து  நிலை நிறுத்துவதற்கும் தன் பங்களிப்பை மேற்கொள்ளும் பாதுகாப்புப் படையினரின் பணியை போற்றுதல். கடைபிடிக்கும் அமைப்பு: இந்தியா
4 மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் நோக்கம்: சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் பெண்களின் மகத்தான சாதனையை கொண்டாடுதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா
5 மார்ச் 14 உலக பை (π) தினம் நோக்கம்: கணிதவியல் நிலை எண்ணான பையைக் (π) கொண்டாடுதல்.
6 மார்ச் 15 உலக நுகர்வோர் உரிமை தினம் நோக்கம்: அனைத்து நுகர்வோர்களின் அடிப்படை உரிமையை ஊக்குவித்தல் மற்றும் அவ்வுரிமைகள் யை மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுதலை வேண்டுதல். கடைபிடிக்கும் அமைப்பு: சர்வதேச நுகர்வோர் அமைப்பு - கன்சியூமர் இண்டர்நேஷனல்
7 மார்ச் 20 உலக சிட்டுக் குருவிகள் தினம் நோக்கம்: மாறுபடும் சுற்றுச்சூழல் மற்றும் குருவிகள் சந்திக்கும் இடர்களை குறிப்பிடுவதற்காக வீட்டுக் குருவிகள் மற்றும் பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். கடைபிடிக்கும் அமைப்பு: நேச்சர் பார் எவர் சொசைட்டி (Nature Forever Society) என்ற அமைப்பு பிரான்சின் எகோ – சிஸ் ஆக்சன் பவுண்டேஷன் (Eco-Sys Foundation) மற்றும் உலகின் மற்ற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து.   சர்வதேச மகிழ்ச்சி  தினம் நோக்கம்: மகிழ்ச்சியை அடிப்படை மனித இலக்காக அங்கீரித்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அதிகப்படியான, உள்ளார்ந்த, நியாயமான, சரிசமமான அணுகலை ஏற்படுத்தல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.
8 மார்ச் 21   இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நோக்கம்: இனப்பாகுபாட்டின் தீய விளைவுகளைப் பற்றி மக்களிடத்தில் நினைவூட்டுதல் மற்றும் மக்களுக்கு இனப்பாகுபாட்டிற்கெதிராக செயல்படுவதற்கான  அவர்களின் கடமைகள் மற்றும் தீர்மானங்களை நினைவுபடுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.   உலக மனவளர்ச்சி குறை தினம் நோக்கம்: மனவளர்ச்சி குறையுடையவர்களின் உரிமை, அவர்களை சமூகத்திற்குள் இணைத்தல் மற்றும் அவர்களின் உரிமை ஆகியவற்றிற்காக உதவி புரிவதற்காக குரல் கொடுத்தல் மற்றும் இந்நோயினைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக சுகாதார நிறுவனம்   சர்வதேச வன தினம் நோக்கம்: அனைத்து வகையான வனங்கள் மற்றும் வனங்களுக்கு வெளியே உள்ள மரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.வின் உறுப்பினர்கள்   உலக கவிதை தினம் நோக்கம்கவிதைகளை வாசித்தல், எழுதுதல், பதிப்புகளை வெளியிடல் மற்றும் கற்று கொடுத்தல் ஆகியவற்றை உலகம் முழுவதும் ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: யுனெஸ்கோ
9 மார்ச் 22 உலக நீர் தினம் நோக்கம்: நன்னீரின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் காட்டுதல். நன்னீர் வளங்களின் நீடித்த மேலாண்மைக்கான ஆலோசனை வழங்கவும் இத்தினம் பயன்படுத்தப் படுகிறது. கடைபிடிக்கும் அமைப்பு: உலகிலுள்ள அனைத்து மக்கள் மற்றும் நிறுவனங்கள் & ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர் நாடுகள்.
10 மார்ச் 23 உலக வானிலை ஆராய்ச்சி தினம் நோக்கம்: உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தினத்தை நினைவு கூறல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா.வின் அனைத்து உறுப்பினர்கள்.
11 மார்ச் 24 உலக காசநோய் தினம் நோக்கம்: காசநோயின் உலகளாவிய பரவல் மற்றும் காசநோயை ஒழிப்பதற்கான முயற்சி எடுத்தலைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக சுகாதார நிறுவனம்.
12 மார்ச் 27 உலக நாடகக் கலை தினம் நோக்கம்: நாடகக் கலையின் பல்வேறு தன்மைகளை உலகளவில் ஊக்குவித்தல் & அதன் மதிப்புகள் பற்றி மக்களுக்கு அறியச் செய்தல். கடைபிடிக்கும் அமைப்பு: சர்வதேச நாடகக் கலை நிறுவன மையம் மற்றும் சர்வதேச நாடகக் கலை சமூகம்.
 

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் கடைபிடிக்கப்படும் தினங்கள்

1 மார்ச் 14,2018 புகை பிடித்தல் எதிர்ப்பு தினம் நோக்கம்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐக்கியப் பேரரசு குறிப்பு : ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் 2வது புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது
2 மார்ச் 16,2018 உலக உறக்க தினம் நோக்கம்: நல்ல மற்றும் ஆரோக்கியமான உறக்கத்தின் பயன்களைக் கொண்டாடுதல் மற்றும் உறக்கம் தொடர்பான பிரச்சினைகள்,  அவற்றின் மருத்துவம், கல்வி & சமூக அம்சங்கள் மீது சமூகத்தின் கவனத்தை கவர்தல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக உறக்க சங்கத்தின் உலக உறக்க தினக்குழு. குறிப்பு : ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் வட துருவத்தில் வசந்த கால சம இரவு பகல் தினத்திற்கு  முன்பான வெள்ளிக் கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது
3 மார்ச் 8,2018 உலக சிறுநீரக தினம் நோக்கம்: சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுநீரக நோய் மற்றும் அது தொடர்பான நோய்கள் தொடர்ந்து ஏற்படுதலை மற்றும்  அதன் விளைவுகளைக் குறைத்தல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக சுகாதார நிறுவனம் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் 2 ஆவது வியாழன் அன்று கடைபிடிக்கப்படுகிறது
4 மார்ச் 24,2018   பூமி தினம் (2007 லிருந்து) நோக்கம்: புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் இத்தினம் தனிநபர், சமூகங்கள் மற்றும் வணிகர்களை அவசியமற்ற மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அனைத்து வைப்பதை ஊக்குவிக்கிறது. (8.30 pm to 9.30 pm) கடைபிடிக்கும் அமைப்பு: இயற்கைக்கான உலகளாவிய நிதியம். குறிப்பு : ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் ஒரு குறிப்பிட்ட தேதியில் கடைபிடிக்கப்படுகிறது
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்