TNPSC Thervupettagam

முத்துவேல் கருணாநிதி

August 22 , 2018 2284 days 11717 0
முத்துவேல் கருணாநிதி

- - - - - - - - -

  • முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஒரு இந்திய அரசியல்வாதியும் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) தலைவரும் ஆவார்.
  • மு. கருணாநிதி ஜுன் 3, 1924-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குவளையில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
  • பிறந்தபொழுது இவருக்கு சிவனின் குரு வடிவமான தக்ஷினாமூர்த்தி எனும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இவர் பிராமண மற்றும் கடவுள்களின் பெயரை பயன்படுத்துவதை எதிர்க்கும் திராவிட மற்றும் பகுத்தறிவு இயக்கங்களின் தாக்கத்தினால் தனது பெயரை கருணாநிதி என்று பிறகு மாற்றி வைத்துக் கொண்டார்.
  • இவர் தனது ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் பயின்றார். பிறகு 1936-ல் தனது பள்ளி மேற்படிப்பை திருவாரூருக்கு மாற்றினார்.
  • தமிழ் இலக்கியத்துக்கு தனது கவிதைகள், எழுத்துக்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், வசனங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மு. கருணாநிதி அவர்கள் ’கலைஞர்’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
  • இவர் திராவிட இயக்கத்தின் நீடித்து நிலைத்த தலைவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவராக பத்து முறை பணியாற்றியவர் ஆவார்.
  • வயது தொடர்பான நீடித்த உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 7, 2018 அன்று சென்னையில் கருணாநிதி அவர்களின் இன்னுயிர் (94 வயதில்) அவர் உடலை விட்டுப் பிரிந்தது.
  • இதுவரை பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்திராத கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்முறையாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

வாழ்க்கை

  • கருணாநிதி அவர்கள் தனது வாழ்வை தமிழ் சினிமாத் துறையில் திரைக்கதை எழுத்தாளராகத் தொடங்கினார். இவருக்கு பெரும் புகழினைப் பெற்று தந்த இராஜகுமாரி (1947) எனும் திரைப்படம் இவர் திரைக்கதை எழுதிய முதல் திரைப்படம் ஆகும்.
  • அதன்பிறகும் அவர் நிறைய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத தொடங்கினார். 2011-ஆம் ஆண்டு வெளியான பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் இவர் பணியாற்றிய கடைசி திரைப்படம் ஆகும். இவர் ஆற்றிய பணி அவரை திராவிட இயக்கத்தின் தலைவராக உயர்வதற்கு உதவி புரிந்தது.
  • இவர் பொதுவாக வரலாறு மற்றும் சமூகம் (சீர்திருத்தவாதம்) தொடர்பான கதைகளையே எழுதுவார். இதுவும் திராவிட இயக்கத்தின் சமதர்மவாத மற்றும் பகுத்தறிவு  கொள்கைகளை பரப்புவதற்கு உதவியது.
  • பராசக்தி திரைப்படத்தின் மூலம் இவரது அரசியல் கொள்கைகள் பிரச்சாரப்படுத்தப்பட்டன.
  • கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்ட மற்ற இரண்டு திரைப்படங்கள் பணம் மற்றும் தங்கரத்தினம் ஆகியன ஆகும். இவரின் இரண்டு நாடங்கள் வலுவான சமூக கருத்துக்களை கொண்டிருந்ததால் 1950-ல் தடைசெய்யப்பட்டிருந்தது.

அரசியல்

  • திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் அரசியலில் நுழையும்பொழுது அவரின் வயது பதினான்கு ஆகும்.
  • இவர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனும் மாணவர் அமைப்பினை ஆரம்பித்தார். இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவ அமைப்பு ஆகும்.
  • பிற்காலத்தில் திமுக கட்சியின் அலுவல் பத்திரிகையான முரசொலி என்ற பத்திரிகையை மாணவர் சமூகத்தின் நலனுக்காக ஆரம்பித்தார்.
  • கள்ளக்குடியில் நடைபெற்ற கள்ளக்குடி கிளர்ச்சியில் இவரின் ஈடுபாடு தமிழ்நாடு அரசியலில் அவரை வேரூன்ற செய்தது.
  • கருணாநிதி அவர்கள் 1949-ல் திராவிட முன்னேற்ற கழகத்தினை (தி.மு.க) நிறுவுவதற்கு அண்ணாதுரை அவர்களுக்கு உதவினார்.
  • 1957-ல் கருணாநிதி அவர்கள் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1961-ல் இவர் தி.மு.கவின் பொருளாளராக பதவியமர்த்தப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பிறகு 1962-ல் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1967-ல் இவர் பொதுப்பணியின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 1969-ல் அண்ணாதுரை அவர்கள் காலமான பிறகு கருணாநிதி அவர்கள் பிப்ரவரி 10, 1969 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
  • இவரது 5 ஆட்சிக் காலம் 1969 – 1971, 1971-1976, 1989-1991, 1996-2001 மற்றும் 2006-2011 ஆகியன ஆகும்.
  • இவர் சட்டமன்ற உறுப்பினராக 12 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியவரும் ஆவார்.
வெற்றிப் பெற்ற தொகுதிகள்   வருடம்
குளித்தலை - 1957
தஞ்சாவூர் - 1962
சைதாப் பேட்டை - 1967
சைதாப் பேட்டை - 1971
அண்ணா நகர் - 1977
அண்ணா நகர் - 1980
துறைமுகம் - 1989
துறைமுகம் - 1991
சேப்பாக்கம் - 1996
சேப்பாக்கம் - 2001
சேப்பாக்கம் - 2006
திருவாரூர் - 2011
திருவாரூர் - 2016
  • கருணாநிதி அவர்கள் 2006-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அவர் தமிழ்நாட்டின் வயது முதிர்ந்த முதலமைச்சர் (82) ஆவார்.

அவரது அரசின் சாதனைகள்

1969 - 1971

  • பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் (1969)
  • கையினால் இழுக்கப்படும் ரிக்சாக்களுக்குத் தடை மற்றும் இலவச சைக்கிள் ரிக்சா வழங்கும் திட்டம் (1969).
  • தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச கான்கிரீட் வீடுகள் வழங்குதல் திட்டம்.
  • வீட்டுத் தளங்களின் உரிமையை வழங்குவதற்கான சட்டம் (குடியிருப்பு சட்டம்)
  • விவசாய ஊழியர்களுக்கான நியாயமான ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் சட்டம் (1971)
  • காவல்துறை ஆணையம் – இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்பட்டது.
  • பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தனிப்பட்ட அமைச்சகம்.
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதத்திற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்திற்கும் உயர்த்துதல்
  • இடைநிலைக்கல்வி (P.U.C) வரை அனைவருக்கும் இலவசக் கல்வி.
  • மே தினம் ஊதியத்துடன் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது (1969)
  • நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
  • ராஜமன்னார் குழு (1969).

1971 - 1976

  • முதல் வேளாண் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டது (1971)
  • அரசு ஊழியர்களுக்கான குடும்பநல நிதிஉதவித்திட்டம்.
  • குழந்தைகளுக்காக கோவில்களில் “கருணை இல்லம்” அமைக்கப்பட்டது.
  • தமிழ் பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இணைத்தது போல் உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்தல்.
  • தரிசு நிலங்கள் மீதான நிலவரி ஒழிப்பு
  • மனுநீதித் திட்டம்.
  • பூம்புகார் கப்பல் வாணிபக் கழகம் (1974)
  • பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் “கொங்கு வேளாளர்” வகுப்பு சேர்க்கப்பட்டது.
  • பசுமைப் புரட்சி
  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய முதல் தமிழ்நாடு முதலமைச்சர் (15 ஆகஸ்ட், 1974).
  • 1976ம் ஆண்டு மொத்த மாநிலத்திலும் பொது விநியோக திட்டம் அமல்படுத்தப்பட்டது.
  • 1961ம் ஆண்டின் தமிழ்நாடு நில சீர்திருத்த (நிலத்திற்கான உச்ச வரம்பினை நிர்ணயித்தல்) சட்டம் 1970 ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது. இதில் முன்பு நிர்ணயிக்கப்பட்ட 30 ஏக்கர்  நிலையான நில அளவு 15 ஏக்கராக குறைக்கப்பட்டது.
  • 1976ம் ஆண்டு மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் அமல்படுத்துதல்
  • மாநில தன்னாட்சிக்கான முதல் தீர்மானம் சட்ட சபையில் இயற்றப்பட்டது(1974).

 

1989 - 1991

  • தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இலவசக் கல்வி மற்றும் வருமான வரம்பு அடிப்படையிலான பெண்களுக்கான பட்டப்படிப்பு வரையிலான இலவசக் கல்வி.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் – இந்தியாவிலேயே முதன் முறையாக வழங்கப்பட்டது (1989)
  • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் (1989)
  • அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு.
  • முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகம் – ஆசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டது (1989).
  • ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவி.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவி.
  • பத்து லட்சம் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள்
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1990)
  • காவேரி தீர்ப்பாயம் அமைப்பதற்கான முயற்சிகள்
  • இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புக்குள்ளேயே குறிப்பிடப்படாத சமூகம் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது (1989).

1996 - 2001

  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு – இதில் 2 பெண் மேயர்கள் உட்பட 44, 143 பெண்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த இரண்டு பெண் மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்தவர் ஆவார்.
  • ‘மதராஸ்’ ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (1996)
  • வெளிப்படையான புதிய தொழிற்துறைக் கொள்கை
  • தொழில்களை தொடங்க அனைத்து உரிமங்களையும் பெறுவதற்கான ஒற்றை சாளர அமைப்பு.
  • இந்தியாவில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் (Member of Legislative Assembly – MLA) தொகுதி மேம்பாட்டு நிதி.
  • சாதிப் பாகுபாட்டினை ஒழிப்பதற்கான பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் (1998)
  • டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்முறையாக அமைக்கப்பட்டது (1997)
  • உலகத் தமிழர்களுக்கு உதவுவதற்கான தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம் (2001)
  • உழவர் சந்தைத் திட்டம் (1999)
  • பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம் (1999)
  • கன்னியாகுமரியில் 133 அடி உயர் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது (2000)
  • 1999-2000 வருடத்திலிருந்து 10வது மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்குதல்.
  • சென்னையில் உள்ள கோயம்பேட்டில் பேருந்து முனையம் அடித்தளமிடுதல் – இது ஆசியாவிலேயே பெரிய பேருந்து முனையம் ஆகும்.
  • தெற்கு மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்கள்.
  • சேமிப்புத் திட்டத்துடனான பெண்களின் சிறு வர்ததக கடன் திட்டம்.
  • தமிழ் அறிஞர்கள் மற்றும் தியாகிகளுக்கான மணிமண்டபம்.
  • முதன்முறையாக மதுரையில் உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  • அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (1997 – 1998)
  • ஏழைக் குடும்ப நலத் திட்டம்.
  • தமிழ் அறிஞர்களின் வேலைப்பாடுகளை தேசியமயமாக்கல்.
  • சமுதாயத்தின் சுய உதவி மற்றும் சுய நம்பிக்கை மனப்பான்மையை வலுப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் 1997-1998 வரவு செலவுத் திட்டத்தில் ‘நமக்கு நாமே திட்டம்’ (சாதாரணமாக ‘தன்னிறைவு’ என்று மொழிபெயர்க்கப்பட்ட) எனும் பங்களிப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • டைடல் பார்க் நிறுவப்பட்டது (1999)

2006  - 2011

  • வருமுன் காப்போம் (2006)
  • இலவச நிலம் வழங்கும் திட்டம் (2006)
  • ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் (2008)
  • 22,40,739 விவசாயக் குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ரூ.7000 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
  • 117 பழைய உழவர் சந்தைகளின் புதுப்பித்தல் மற்றும் 45 புதிய உழவர் சந்தைகள் அமைத்தல்.
  • மாநிலங்களுக்குள் நதிகளை இணைத்தல்; காவேரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.189 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
  • தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.369 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
  • காமராஜர் பிறந்த தினம் (ஜூலை 15) எல்லா பள்ளிகளிலும் ‘கல்வி மேம்பாட்டு தினம்’ ஆக கொண்டாடப்பட தொடங்கியது. இதற்காக சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது (2006)
  • எல்லா பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக அறிவிக்கப்பட்டது (2006)
  • பாரம்பரிய தமிழுக்கான மத்திய கல்வி நிறுவனம் மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
  • ஏழைப் பெண்களுக்கான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நிதி உதவித் திட்டத்தின் உதவித்தொகை ரூ.10,000-லிருந்து ரூ.25,000-க்கு உயர்த்தப்பட்டது.
  • ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் எழுபத்து ஏழு லட்சத்து ஐந்தாயிரத்து எட்டு நபர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பதினெட்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து இரண்டு முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
  • இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் மற்றும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘நலமான தமிழகம் திட்டத்தின்’ கீழ் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன (2010).
  • இதுவரை 8,08,907 நபர்களுக்கு நன்மை அளித்த, மேலும் 42,232 நபர்களின் உயிரைக் காப்பாற்றிய மத்திய அரசின் நிதி உதவி பெற்ற இலவச 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை திட்டம் (2009)
  • அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு.
  • சாதியற்ற சமுதாயத்தினை உருவாக்கும் பார்வையுடன், 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டடன. அதனுடன் 95 புதிய சமத்துவபுரங்கள் சேர்க்கப்பட்டன.
  • ரூ.1200 கோடி செலவில் ஓமந்தூர் அரசு எஸ்டேட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்பட்டது.
  • TESMA (Tamil Nadu Essential Service Maintenance Act) தமிழ்நாடு அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம் மற்றும் ESMA (Essential Service Maintenance Act) அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம் ஆகியன நீக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டன. 6வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகள் வருடத்திற்கு ரூ.5,155.79 கோடி செலவில் 01.01.2006லிருந்து அமல்படுத்தப்பட்டன.
  • முதல் உலக பாரம்பரிய தமிழ்நாடு மாநாடு ஜுன் 2010 கோயம்புத்தூரில் நடைபெற்றது.
  • ராஜராஜ சோழனின் 1000 வது பிறந்தநாள் நிறைவு விழா (சதய விழா) கொண்டாடப்பட்டது (2010). ஒற்றை நெல் சாகுபடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது (ராஜ ராஜன் ஆயிரம்).
  • இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்பின் இட ஒதுக்கீட்டின் 30% பங்கில் 5% உள் இட ஒதுக்கீடு முஸ்லீம் மற்றும் கிருத்துவ சமூகத்திற்கு வழங்கப்பட்டது (2007).

உலக பாரம்பரிய தமிழ் மாநாடு 2010

  • இம்மாநாடு தமிழ் மக்கள், தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் திரண்ட சர்வதேச கூட்டம் ஆகும்.
  • இம்மாநாடு, 500 கோடிக்கும் மேலான செலவில் ஜுன் 23, 2010 முதல் ஜுன் 27, 2010 வரை கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது.
  • இம்மாநாட்டின் கருத்துருப் பாடலான “செம்மொழியான தமிழ்மொழியாம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டு ஏ.ஆர். ரகுமானால் இசையமைக்கப்பட்டது.

விருதுகள்

  • அண்ணாமலை பல்கலைக்கழகம் 1971-ல் இவருக்கு கௌரவமிக்க டாக்டர் பட்டம் வழங்கியது.
  • ‘தென்பாண்டி சிங்கம்’ எனும் இவரது புத்தகத்திற்காக தஞ்சாவூரிலுள்ள தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு ‘ராஜராஜன்’ விருதினை வழங்கியது.
  • 15 டிசம்பர் 2006-ல் தமிழ்நாடு ஆளுநரும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா பல்கலைகழகத்தின் 40வது பட்டமளிப்பு விழாவின் போது முதலமைச்சரான கருணாநிதி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தினை வழங்கினார்.
  • ஜுன் 2007-ல் தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, மு. கருணாநிதி அவர்களுக்கு “முஸ்லீம் சமுதாயத்தின் நண்பன்” (யாரன்-ஈ-மில்லாத்) எனும் தலைப்பினை வழங்க உள்ளதாக அறிவித்தது.

புத்தகங்கள்

  • இனியவை இருபது
  • காலப்பேழையும் கவிதை சாவியும்
  • கலைஞர் சொன்ன கதைகள்
  • கலைஞரின் கவிதை மழை
  • கலைஞரின் கவிதை நடையில் தாய் காவியம்
  • கலைஞரின் பசுமை நினைவுகள்
  • கல்லக்குடி
  • குரலோவியம்
  • முத்துக்குளியல் (தொகுதி 1, 2)
  • நெஞ்சுக்கு நீதி
  • நெருக்கடி நெருப்பாறு
  • ஒரு தலை காதல்
  • பாயும் புலி பண்டார வன்னியன்
  • பொன்னர் சங்கர்
  • ரோமாபுரிப் பாண்டியன்
  • சங்கத்தமிழ்
  • சிந்தனையும் செயலும்
  • தேர் சென்ற பாதை
  • தென்பாண்டி சிங்கம்
  • திருக்குறள் உரை
  • வான்புகழ் கொண்ட வள்ளுவம்
  • வெள்ளிக்கிழமை

திரைக்கதைகள்

  • ராஜகுமாரி (1947) (முதல்படம்)
  • பராசக்தி (1952)
  • மனோகரா (1952)
  • மலைக்கள்ளன் (1954)
  • பூம்புகார் (1964)
  • பாசக்கிளிகள் (2006)
  • இளைஞன் (2011)
  • பொன்னர் சங்கர் (2011) (கடைசிப்படம்)

மேடை நாடகங்கள்

  • மணிமகுடம்
  • ஒரே ரத்தம்
  • பழனியப்பன்
  • தூக்கு மேடை
  • காகிதப்பூ
  • நானே அறிவாளி
  • வெள்ளிக்கிழமை
  • உதயசூரியன்
  • சிலப்பதிகாரம்

- - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்