TNPSC Thervupettagam

மேகாலயன் காலம்

July 25 , 2018 2168 days 1507 0

  • உலகம் அதிகாரப்பூர்வமாக ஹோலோசீன் (Holocene) சகாப்தத்தின் மேகாலயன் காலத்தில் இருக்கிறது. தற்பொழுது நாம் உறைபனிக்குள்ளான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  • ஹோலோசீன் ஏறத்தாழ 11,700 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
  • ஹோலோசீன் சகாப்தத்தின் சமீபத்திய துணைப் பிரிவான மேகாலயன் காலம் 4200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
  • இந்தக் காலம் தொடங்கியபோது கடும் வறட்சி ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாகரிகங்களை நாசப்படுத்தியது.
  • புவியியல் நேர அளவின் மிக சமீபத்திய அலகு என்று இந்தக் காலம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டது.
  • பாறை அடுக்கியலுக்கான சர்வதேச ஆணையம் ஹோலோசீனை மூன்று கட்டமாகப் பிரித்துள்ளது.

ஏன் மேகாலயன் காலம்?

  • உலகம் முழுவதும் கடல் அடித்தளம், ஏரியின் அடித்தளம், பனியாறு மற்றும் சுண்ணக்கல் விழுதுப் பாறை பொங்கூசிப் பாறை ஆகியவற்றில் படிவுகள் குவிக்கப்பட்டுள்ளதை ஹோலோசீன் சகாப்தத்தின் மூன்று துணைப் பிரிவுகள் குறிக்கின்றன.
  • ஹோலோசீன் சகாப்தத்தின் மூன்று துணைப்பிரிவுகளாவன
    • கிரீன்லேண்டியன் காலம்
    • நார்த் கிரிப்பியன் காலம்
    • மேகாலயன் காலம்
  • ஹோலோசீனின்பழமையான காலகட்டம் கிரீன் லேண்டியன் ஆகும். இது பனிக்காலத்தின் முடிவு ஆகும்.
  • ஹோலோசீனின் இடைக்காலகட்டம் நார்த் கிரிப்பியியன் காலம் ஆகும். இது மேகாலயன் காலம் தொடங்குவதற்கு முன்பு 8,300 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
  • மேகாலயன் காலம் 1950ஆம் ஆண்டுவாக்கில் 4200 ஆண்டுகளைக் கடந்த இளமையான காலமாகும்.
  • மவ்முல்லாக் குகையின் பொங்கூசிப் பாறையில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இந்த மேகாலயன் காலம் விவரிக்கப்படுகிறது.

  • மேகாலயாவின் சிரபுஞ்சியில் அமைந்துள்ள மவ்முல்லாக் குகை இந்தியாவின் நீளமான மற்றும் ஆழமான குகையாகும்.

சர்வதேச பாறை அடுக்கியலுக்கான கால வரைபடம்

  • வரைபடத்தில் உள்ள நெடுவரிசையானது இடப்புறத்தில் இருந்து யுகம், சகாப்தம், காலம், அமைப்பு, தொடர்/காலகட்டம் மற்றும் நிலை/வயது ஆகியவற்றைக் குறிக்கும்.
  • இதில் யுகம் சகாப்தமாகவும், சகாப்தம் காலமாகவும், காலம் காலகட்டமாகவும், காலகட்டம் வயதாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
  • நாம் தற்பொழுது ஹோலோசீன் சகாப்தத்தின் மேகாலயன் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  • புவியியல் நேரத்தின் ஒவ்வொரு துணைப்பிரிவின் எண்ணிக்கையும் மெகா வருடம் அல்லது மில்லியன் ஆண்டுகள் (Ma) அளவில் அளவிடப்படுகிறது.
  • மேகாலயன் காலம்0042 ma ஆகும். நார்த்கிரிப்பியன் மற்றும் கிரீன் லேண்டியன் காலத்திற்கு அடுத்து வருவது மேகாலயன் காலம் ஆகும்.
  • அதன் பிறகு ஹோலோசீன் காலம் முடிவுற்றது மற்றும் பெலிஸ்டோசீன் காலம் தொடங்குகிறது.
  • நியோஜீன் மற்றும் குவார்ட்டானர் காலம் ஆகிய இரண்டும் செனோசோயிக் சகாப்தத்தின் பிரிவுகள் ஆகும். இவை முழுவதுமாக காட்டப்படவில்லை. மேலும் இவை பெனரோசோயிக் யுகமும் இல்லை. பெனரோசோயிக் யுகம் செனோசோயிக் சகாப்தம் மற்றும் மெசோசோயிக் சகாப்தம் ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச பாறை அடுக்கியலுக்கான வரைபடம் காம்பிரியன் யுகத்திற்கு முன்பிருந்தே தொடங்குகிறது. அதாவது6 பில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது.
  • வரைபடத்தின் வண்ணமானது உலக புவியியல் வரைபடத்திற்கான ஆணையத்தை பின்தொடர்கிறது. (CGMW - Commission for the Geological Map of the World).

மவ்மலுக் பொங்கூசிப் பாறையின் சிறப்பு  என்ன?

  • புவியியல் கால அளவீட்டின் பல இடைவெளிகளுக்கிடையே மேகாலயன் காலம் என்பது தனித்துவம் வாய்ந்தது. உலக காலநிலை நிகழ்ச்சியை உருவாக்கிய கலாச்சார நிகழ்ச்சியுடன் மேகாலய காலத்தின் தொடக்கம் ஒன்றிப் பொருந்துகிறது.

பாறை அடுக்கியலுக்கான சர்வதேச ஆணையம் (International Commission on Stratigraphy)

  • புவியியல் அறிவியலுக்கான சர்வதேச சங்கத்தில் (IUGS - International Union of Geological Sciences) உள்ள மிகப்பெரிய மற்றும் பழமையான அறிவியல் அமைப்பு பாறை அடுக்கியலுக்கான சர்வதேச ஆணையம் (International Commission on Stratigraphy) ஆகும்
  • இவற்றின் முதன்மையான நோக்கம் சர்வதேச பாறை அடுக்கியலுக்கான வரைபடத்திற்காக உலக அலகை வரையறுப்பது ஆகும்.

புவியியல் அறிவியலின் சர்வதேசச் சங்கம் (IUGS - International Union of Geological Science)

  • உலகில் உள்ள புவியியல் அறிவியலின் சர்வதேசச் சங்கமானது (IUGS - International Union of Geological Science) மிகப்பெரிய மற்றும் அரசு சாரா அறிவியல் நிறுவனம் ஆகும்.
  • இது 1961-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அறிவியலுக்கான சர்வதேச ஆணையத்தில் உறுப்பினராக உள்ளது.
  • உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் பிரச்சனைகளை ஆய்வு செய்ய IUGS நிறுவனம் ஊக்கப்படுத்துகிறது. புவியியல் அறிவியலில் சர்வதேச மற்றும் பல்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது மற்றும் உதவி செய்வது இதன் பணிகளாகும்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்