TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்கள் - தமிழ்நாடு

December 29 , 2017 2376 days 7221 0
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்கள் - தமிழ்நாடு

– – – – – – – – – – – – – – –

தமிழகத்தில் உள்ள யுனெஸ்கோ பகுதிகள்

  • யுனெஸ்கோ உலகப்பாரம்பரியமிக்க பகுதிகளாக, 29 இடங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் 4 இடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
  • இந்த நான்கு இடங்களும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களும் வாழும் மாபெரும் சோழக் கோவில்கள் என்றும் மற்றுமொரு இடம் மகாபலிபுரம் நினைவுச் சின்னங்கள் என்றும் வழங்கப்படுகிறது.
  • இவை தவிர 2 இடங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவையும் யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  1. ஐராவதீஸ்வரர் கோவில் - கும்பகோணம், 1987
  2. பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்) தஞ்சாவூர் - 1987.
  3. கங்கை கொண்ட சோழபுரம் - ஜெயம்கொண்டம் - 1987.
  4. மகாபலிபுர சிற்பங்கள், சென்னை - 1984.

.

வாழும் மாபெரும் சோழக் கோவில்கள்

  • 13ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை மிக நீண்ட காலம் ஆண்ட பேரரசுகளுள் சோழப்பேரரசும் ஒன்று. சோழர்களது கட்டிடக்கலை குறிப்பிடத்தக்தாகும்.  அவர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கோவில்களுள் 3, கோவில்கள் காலத்தையும் கடந்து, நிலைத்து நிற்பவை.  அவை புகழ்மிகு சோழர்காலக் கோவில்கள் எனப்படுகிறது.

.

வாழும் சோழர்கால கோவில்களின் கூறுகள்

  • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற 3 சோழர்கால கோவில்கள், திராவிட வடிவ கட்டிடக் கலையின் மிகச்சிறந்த வடிவமாகக் கருதப்படுகின்றன.
  • தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், சோழர்கால கோவில்கள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பிற இரண்டு கோவில்களும் இவர்தம் கட்டிடக்கலைக்குச் சான்றாக அமைகின்றன.
  • இந்த 3 கோவில்களும் தனித்துவம் மிக்கவை. அசாத்தியமான கட்டிடக்கலைக்கான சான்றாகவும், தென்னிந்தியாவின் தமிழர் நாகரிகம் மற்றும் சோழப்பேரரசின் கட்டிடக்கலைக்கு சான்றாகவும் விளங்குகின்றன.
  • சோழர்கால கோவில்கள் அமைந்த தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஆகிய இடங்கள் சோழர்கால கட்டடவியல் சித்தாங்களைப் பறைசாற்றுகின்றன.

.

1. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

  • தஞ்சாவூர், கலை மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற நகரமாகும்.
  • 1987-ல் யுனெஸ்கோ, பெரியகோவிலை உலகப் பாரம்பரியப் பட்டியலில் இணைத்தது. இது தஞ்சையின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது.
    • இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உலகில் மிக உயரமான கோபுரம், (விமானம்) என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
    • இதுவே உலகின் முதல் கருங்கல் கோவிலாகும். இது சோழர்கால கட்டிடக்கலையை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.
  • இந்தக் கோயில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • இந்தக் கோவிலில் அமைந்துள்ள முக்கியத் தெய்வம் "பெருவுடையார்" ஆகும். இக்கோவிலுக்கு “ராஜராஜேஸ்வரம்” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • இக்கோவிலில் அமைந்த மிகப்பெரிய நந்தி, 25 டன் எடையுடையது.
  • இந்தக் கோவில் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதன்  அழகைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
  • இது தென்னிந்தியக் கட்டிடக்கலையின் ஓர் மைல்கல் ஆகும். இதன் விமானம், இந்தியக் கட்டிடக்கலையின் மகுடமாக விளங்குகிறது.

.

2. ஐராவதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

  • 2004-ம் ஆண்டில், ஐராவதீஸ்வரர் ஆலயம், யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • இது ஓர் இந்து, சைவக் கோவில் ஆகும். 12ம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழன் – ஆல் கட்டப்பட்டது.
  • இது கும்பகோணத்திற்கு அருகில் அமைந்த தாராசுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • இதன் விமானம் 24 மீ உயரத்தில் உள்ளது. முகப்பில் அமைந்துள்ள மண்டபம், ஒரு பெரிய தேரை குதிரைகள் இழப்பது போல அமைந்துள்ளது. இந்தக் கோவில், “நித்யவிநோதா” எனும் “முடிவுற்ற மகிழ்ச்சியுடைய மனது” எனும் அடிப்படையில் கட்டப்பட்டது.
  • இக்கோயிலின் முக்கியத் தெய்வம் சிவன் இவர் ஐராவதீஸ்வரர் எனப்படுகிறார்.
  • இக்கோவிலின் தலப்புராணப்படி இந்திராவின் வெள்ளை யானையான ஐராவதம் துர்வாசமுனிவரின் சாபத்தால் நிறமாற்றம் அடைந்தது. ஐராவதம் சிவனை வழிபட்டு, கோவில் குளத்தில் குளித்து தன் நிறம் பெற்றது.  எனவே இங்குள்ள கடவுள் “ஐராவதீஸ்வரர்” என்றும், இந்தக் கோவில் “ஐராவதீஸ்வர்” ஆலயம் எனவும் பெயர் பெற்றது.

.

3. கங்கை கொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம்

  • கங்கை கொண்ட சோழபுரம், புகழ்பெற்ற சோழப்பேரரசன் ராஜராஜ சோழனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழனால், சோழர்களின் தலைநகரமாக நிறுவப்பட்டது.
  • கங்கைப் பேரரசை முதலாம் ராஜேந்திரசோழன் வெற்றி பெற்றதன் நினைவாக எழுப்பப்பட்ட கோவிலாகும்.
  • இந்தக் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைப் போன்றே, ஆனால் அதைவிட சிறியதாக எழுப்பப்பட்டது.

.

4. மகாபலிபுர புராதான சின்னங்கள்

  • மகாபலிபுரத்தின் தொல்லியல் சின்னங்கள் ஆனது, தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து 58 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 7 மற்றும் 8ம் நூற்றாண்டில் பல்லவ அரசர்களால் கட்டமைக்கப்பட்டது.
  • மகாபலிபுரம் ஆனது, மாமல்லபுரம் என்றும் அழைக்கப்படும்.
  • தென்னிந்தியாவின் மிக அழகுவாய்ந்த சுற்றுலாத்தலங்களுள் ஒன்று.
  • இங்குள்ள சிற்பங்களில் பலவும் ஒற்றைக் கல் சிற்பங்களே ஆகும். அதாவது ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை.
  • இது பல்லவப் பேரரசின் துறைமுகமாக விளங்கியது. தமிழ்நாட்டில் 7-ம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஆட்சிபுரிந்தனர்.
  • மகாபலிபுரத்தின் தொல்லியல் எச்சங்களாக நிற்கும் சிற்பங்கள், திராவிட கட்டிடக்கலை பாணிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
  • இங்குள்ள தொல்லியல் சிற்பங்கள் “ரதக்கோவில்கள்” எனப்படும். இங்குள்ள கோவில்கள் தேர்வடிவில் அமைந்துள்ளன.  மண்டபங்களும். 11 குகைவரைக் கோயில்கள், கங்கை உருவாதல் சிற்பம், போன்றவை மிகப் புகழ்பெற்றவையாகும்.  இதிலுள்ள பாறை சிற்பம் அர்ச்சுணன் தவம் அல்லது பகீரதன் தவம் எனப்படும்.
  • 9 ஒற்றைக்கல் கோவில்கள் மகாபலிபுரத்தில் காணப்படுகிறது. இதில் முக்கியமானது, பஞ்சரதக் கோவில்கள். இது மகாபாரதத்தின் பஞ்சபாண்டவர்கள் பெயரால் எழுதப்பட்டது.
  • இந்த நினைவுச் சின்னங்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை எந்த உயரத்திலிருந்து பார்க்கவும், சரியான திட்டமிடல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.  தருமன், அர்ஜூணன் மற்றும் துரெளபதி ஆகியோரின் ரதங்கள் சதுரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.  பீமன் மற்றும் கணேச ரதம் செவ்வக வடிவிலும், சகாதேவரின் ரதம் கவியமாட வடிவிலும் அமைந்துள்ளது.
  • பல்லவர்கள் கருங்கற்களான ஏழு விகாரங்களை அமைத்துள்ளனர். இவை "ஏழு விகாரங்கள்" எனப்படும்.
  • இதில் 6 கோவில்கள் கடற்கோளால் அழிந்துள்ளது. ஒன்று மட்டும் எஞ்சியுள்ளது.
  • வராகமண்டபம், மஹிசாசுர மர்த்தினி மண்டபம், பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிரகா (ஆதிவராககுகை) ஆகியவை முக்கியமான குடைவரைக் கோவிலாகும்.
  • முதலாம் நரசிம்மவர்மனின் மற்றொருபெயர் “மாமல்லன்” என்பதாகும். இவரது நினைவாக மாமல்லபுரம் எனப் பெயர் பெற்றது.  இங்குள்ள முக்கியக் கட்டமைப்புகளின் வரிசை பின்வருமாறு.
    • திருக்கடல்மல்லை
    • கங்கை உருவாக்கம்
    • அர்ச்சுனன் தவம்
    • வராக குகைக்கோவில்
    • பஞ்ச ரதங்கள்
  • மகாபலிபுரம் சிற்பங்களின் தாக்கம், கம்போடியா, அன்னம், ஜாவா போன்ற தீவுகளில் கூட பரவியுள்ளது.

.

இந்திய மலை ரயில்

நீலகிரி மலை ரயில் (2005), உதகமண்டலம்

  • இந்திய மலை ரயில் சேவை என்பது மொத்தமாக டார்ஜிலிங் இமாலய ரயில்வே, நீலகிரி மலை ரயில்பாதை மற்றும் கல்கா - சிம்லா ரயில்பாதை ஆகியவற்றைக் குறிக்கும். இவை யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • பிரிட்டிஷ் காலத்தில் 19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் 5 மலை ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன.  இவை இந்திய ரயில்வேயால் இன்றும் இயக்கப்பட்டு வருகின்றன.
  • 2005-ல் யுனெஸ்கோ, நீலகிரி மலை ரயில் பாதையை, டார்ஜிலிங்கின் நீட்சியாக, இணைத்துக் கொண்டது.
  • நீலிகிரி மலை ரயில் என்பது 1000mm (சுமார் 3அடி 33/8 அங்குலம்) மீட்டர்கேஜ் ரயில் பாதை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. பிரிட்டிஷாரால், 1908-ல் கட்டப்பட்டு, தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கியது.  1908-ல் கட்டுமானப் பணிகள் துவங்கின.  இதுவே இந்தியாவில் இயங்கும் ஒரே பற்சக்கர ரயில் பாதையாகும்.
  • துவக்கத்தில் குன்னூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஆனால் 1908 செப்டம்பரில் பேர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது.  பின்னர் 15-அக்டோபர் -1908 முதல் உதகமண்டலம் வரை இயக்கப்பட்டது.

.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் சஹயாத்திரி மலைகள் எனப்படும்.
  • இது இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள மலைத்தொடர்.
  • உலகின் பத்து உயிர்பன்மயப் பாதுகாப்பு பகுதிகளுள் இதுவும் ஒன்று (துணைக் குழும பரிந்துரை அடிப்படையில்)
  • இதில் மொத்தம் 39 பண்புகள் (தேசியப்பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், காப்புக்காடுகள் உட்பட) அமைந்துள்ளன. இது உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 20 பகுதிகள் கேரளாவிலும், 10 கர்நாடாகாவிலும், 5 தமிழ்நாட்டிலும் 4 மகாராஷ்டிராவிலும் அமைந்துள்ளது.
  • இமயமலையைவிட பழமையானது. இந்த மலைத்தொடரின் அமைவால், அடர்ந்த புவியியல் பண்புளும், தனித்த உயிர் இயற்பியலும் மற்றும் சூழியல் செயல்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன.
  • இப்பகுதியின் உயர்ந்த காடுகளின் சூழல், இந்திய பருவ மழையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • இது வெப்பமண்ட காலநிலையை மிதமாக வைத்து, உலகிலேயே சிறந்த பருவநிலை அமைப்பாக வெளிக்கொணரப்படுகிறது.
  • இதில் மிக அதிக அளவு உயிர்பன்மயம் மற்றும் தனி சிறப்பை பெற்றுள்ள உலகின் சிறந்த எட்டுப் பகுதிகளுள் ஒன்றாகும்.
  • தமிழ்நாட்டின் பகுதிகள்,
    • களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்,
    • ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயம்,
    • சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்,
    • சின்னார் வனவிலங்கு சரணாலயம் மற்றும்
    • மூக்குர்த்தி தேசியப்பூங்கா

.

வழிமொழிவதற்கு

  • இவையனைத்தும் யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழகப் பகுதிகளாகும். இவை அமைந்துள்ள மாவட்டங்களை கண்டறிந்து, அங்கு ஆட்சி புரிந்த மன்னர்களுடன் தொடர்புடைய தகவல்களையும் கட்டிடங்களையும் தொடர்புபடுத்துக.

.

– – – – – – – – – – – – – – –

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்