TNPSC Thervupettagam

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் – இந்தியா

January 9 , 2018 2522 days 29071 0
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் – இந்தியா

- - - - - - - - - - - - - -

 
  • இந்தியாவில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் அங்கீரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியச் சின்னங்கள், ஜூலை 2017 நிலவரப்படி, 36 தளங்கள் (28 கலாச்சாரம், 7 இயற்கை, 1 கலப்பு) உள்ளன.
  • 1972ல் ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோ உலகக் கலாச்சார மாநாட்டில், இந்த இடங்கள் கலாச்சார மற்றும் இயற்கையான பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என அறிவிக்கப்பட்டன.
  • இந்தியாவில் ஆக்ரா கோட்டை மற்றும் அஜந்தா குகைகள் முதல் இரண்டு தளங்களாக 1983ம் ஆண்டு பட்டியலில் இணைக்கப்பட்டன.
  • இந்தியாவால் 44 தளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் அடங்கிய தற்காலிக பட்டியல், யுனெஸ்கோ அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கலாச்சார இடங்கள் கல்லால் செய்யப்பட்ட மிகவும் புகழ்வாய்ந்த வேலைப்பாட்டிற்காக அறியப்படுகின்றன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவில்களில் பெரும்பாலானவை கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. எந்த சாந்து கலவையும் இல்லாமல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

.

மூன்று புதிய தளங்கள்

  • பீஹாரின் நாளந்தாவில் உள்ள தொல்பொருள் தளமான நாளந்தா மகாவிஹரா (நாளந்தா பல்கலைக்கழகம்), சண்டீகரில் உள்ள லீ கார்பயிசரால் நிர்மாணிக்கப்பட்ட தலைநகரக் கட்டிட வளாகம் மற்றும் சிக்கிமில் உள்ள கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா ஆகிய மூன்றும் 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவின் வரலாற்று நகரமான அகமதாபாத் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய நகரமாக ஜுலை, 2017-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

.

1. மகாபோதி கோயில், புத்த கயா பீஹார் (2002)

  • இதன் முதல் கோயில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசன் அசோகனால், புனித போதிமரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது (கோயிலுக்கு அருகே மேற்குபுறத்தில் உள்ளது)
  • இங்கு தான் சித்தார்த்த கெளதம புத்தர் ஞானமடைந்தார்.
  • இந்தியக் கலாச்சாரத்தின் பொற்காலமாக கருதப்பட்ட குப்தர்கள் காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் இதுவாகும்.
  .

2. உமாயூனின் சமாதி - டெல்லி - 1993

  • இது ஆடம்பரமான, நீர் கால்வாய்களுடன் கூடிய தோட்டங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட பல புதுமைகளைக் கொண்ட முதல் கல்லறை ஆகும். இது தாஜ்மஹாலுக்கு முன்னோடி நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது.
  • இது கி.பி. 1569-70-ம் ஆண்டில் இரண்டாம் முகலாய மன்னர் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகத்தால் (ஹாஜி பேகம்) கட்டுவிக்கப்பட்டது.
  • இதன் முகலாய கட்டிடக் கலை இதனுடைய சத்ரிகளைக் கொண்ட இரண்டு உயர் கோபுரங்களுக்காக “முகலாய வம்சத்தின் புராணம்” என்று பாராட்டப்படுகிறது.
  • கல்லறையின் இரண்டு வாயிற்கதவுகள் நான்கு அடுக்குகளைக் கொண்டது. இதில் ஒன்று தெற்கிலும் மற்றொன்று மேற்கிலும் உள்ளது.
  • இதில் நிறைய கால்வாய்கள், கூடார மண்டபம் மற்றும் குளியல் தொட்டிகள் உள்ளன.
. 3. குதுப்மினார் நினைவுச் சின்னங்கள் டெல்லி, 1993
  • 13-ம் நூற்றாண்டின் தெரடக்க காலத்தில் கட்டப்பட்ட இது பல சிக்கலான கட்டமைப்பை உடைய பயணத்தடம், அலாய் தர்வாஸா வாயில் (1311), அலாய் மினார் (திட்டமிடப்பட்ட சுவர் அல்லது கோபுரத்தின் கட்டி முடிக்கப்படாத குவியல்) குப்பத்-உல்-இஸ்லாம் மசூதி (இந்தியாவின் பழைமை வாய்ந்த மசூதி), இல்மூமிம் கல்லறை மற்றும் ஒரு இரும்புத் தூண் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • வளாகத்தின் நடுவில் இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கொண்ட பளபளக்கும் இரும்புத் தூண் சர்ச்சைக்குரிய சான்றாக விளங்குகிறது.
  • இதன் கட்டுமானம், 1192-இல் குத்புதீன் ஐபக் ஆல் தொடங்கப்பட்டு இல்துமிஷ் (1211-36) மூலம் முடிக்கப்பட்டு அலாவுதீன் கால்ஜியால் (1296-1316) ஆம் ஆண்டில் நிறைவுற்றதாக வரலாறு இதனை ஆவணப்படுத்துகிறது.
  . 4. செங்கோட்டை வளாகம், தில்லி 2007
  • டெல்லி கோட்டை, லால் குயிலாஹ் அல்லது லால் குயிலா என்று அழைக்கப் படுகிறது. அரண்மனை கோட்டையான இது ஷாஜஹானால் அவரது ஷாஜஹான்பாத்தின் புதிய தலைநகரத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது.
  • இது இந்தியாவின் தலைநகரான டெல்லியின் தெற்கே அமைந்துள்ளது.
  • கோட்டையின் உட்புறத்தில் உள்ள அமைப்புகளின் கட்டிட வடிவமைப்பு பாரசீகம், தைமூரிய மற்றும் இந்திய கட்டிடக் கலைகளின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பாரசீகத் தலைநகரான இஷ்ஃபகான், செங்கோட்டை வளாகத்தைக் கட்ட உத்வேகம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
  • இந்த அரண்மனை வளாகமானது, சிவப்பு மண் கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவரைக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது (எனவே செங்கோட்டை என்று அழைக்கப் படுகிறது).
. 5. கோவாவின் தேவாலயங்கள், மடங்கள், 1986
  • கோவாவின் தேவாலயங்கள் மற்றும் மடங்கள் கோவாவில் போர்ச்சுகீசிய காலனித்துவ ஆட்சியர்களால் உருவாக்கப்பட்டன.
  • இந்த நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் முன்னாள் தலைநகரமான பழைய கோவா (அ) வெலா கோவாவில் உள்ளன.
  • இங்கே உள்ள நினைவுச் சின்னங்களில் குழந்தை இயேசு தேவாலயம் (பாம் இயேசு பசிலிக்கா), மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் செயின்ட் பிரான்சிஸ் சேவியரின் உடலடங்கிய கல்லறை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
  • கோவாவின் இந்த நினைவுச் சின்னங்கள் "கிழக்கு ரோம்" (Rome of the Orient) என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்த நினைவுச் சின்னங்கள் செம்மண்ணாலும் உடைந்த கிளிஞ்சல்கள் அடங்கிய சுண்ணாம்புக் கலவை பூச்சு அடங்கிய சுவர்கள் கொண்டும் கட்டப்பட்டுள்ளன.
  • இந்தக் காரணங்களினால், இந்த நினைவுச் சின்னமானது பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சீர்குலைந்து போவதில் இருந்து தடுக்க தகுந்த பாதுகாப்பு தரப்பட்டு அவற்றின் நிலை மாறாமல் நல்ல நிலையில் காக்கப்படுகிறது.
. 6. சம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத், 2004
  • சம்பானேர் - பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும்.
  • பாவாகேத் மலையின் மேல் இருக்கும் காளிகா மாதா கோவில் மற்றும் ஜெயின் கோவில் ஆண்டு முழுவதும் அதிக யாத்ரீகர்கள் வந்து செல்லும் முக்கிய கோயில்களாகும்.
  • இந்தத் தளம் மட்டுமே முழுமையான மற்றும் மாற்றமில்லாத இஸ்லாமிய, முகலாயருக்கு முந்தைய நகரம் ஆகும்.
. 7. ஹம்பியிலுள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா, 1986
  • ஹம்பி, கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமையப்பெற்ற ஊர் ஆகும்.
  • ஹம்பி, பலம் வாய்ந்த விஜயநகரப் பேரரசின் முன்னாள் தலைநகரமான விஜய நகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது.
  • திராவிட கட்டிடக்கலைக் கோயில்கள் மற்றும் அரண்மனைகள் ஹம்பியைச் சுற்றி அமைந்துள்ளது.
  • ஹம்பியில் விருபாட்சர் கோயில் (பட்டாடக்கல்லில் உள்ள விருபாக்க்ஷா கோவிலிலிருந்து இது வேறுபட்டதாகும்) மற்றும் பல நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன.
.

8. பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா, 1987

  • பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச் சின்னங்கள், வட கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க 9 இந்துக் கோயில்கள் மற்றும் ஒரு ஜெயின் கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்தக் கோவில்களில், தெற்கில் உள்ள பல்லவ மன்னர்களின் மீது போரிட்டு வென்ற தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்யனின் நினைவாக அவரது மனைவி ராணி லோகமகாதேவியால் 740ம் ஆண்டில் கட்டப்பட்ட விருபாக்ஷா கோவில் கட்டிடக் கலையின் சிறந்த பங்களிப்பிற்கான சான்றாகும்.
  • இவை அய்ஹோல், பாதாமி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் 6 முதல் 8ம் நூற்றாண்டு வரை சாணக்கிய அரசால் கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கோவில்களின் கலவையாகும். பின் நாட்களில் பட்டாடக்கல் மாணிக்கங்களின் கிரீடம் என அழைக்கப்பட்டது. இக்கோயில்கள் கட்டிடக்கலையானது வட மற்றும் தென் இந்தியக் கட்டிடக்கலையினுடைய (திராவிட கட்டிடக்கலை) சிறப்பம்சங்களின் கலவை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பட்டாடக்கல் இந்து புனித நகரமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாரம்பரிய வளாகத்தினுள் உள்ள எட்டுக்கோவில்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவதாக பாபனாதா கோவில் என்று அழைக்கப்படும் சைவ சமயக் கோவிலும் பத்தாவதாக ஜெயின் நாராயண கோவிலும் இவ்வளாகத்தில் உள்ளது.
. 9. சாஞ்சி பெளத்த நினைவுச் சின்னங்கள், மத்தியப் பிரதேசம், 1989
  • சாஞ்சியிலுள்ள பெளத்த நினைவுச் சின்னங்கள் கி.மு. 200 முதல் கி.மு. 100 வரையிலான பெளத்த நினைவுச் சின்னங்களாகும்.
  • இந்த ஸ்தூபி கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகனால் நிறுவப்பட்டது ஆகும்.
  • முக்கிய நினைவுச் சின்னமான முதல் ஸ்தூபி ஆனது கி.மு. 2வது மற்றும் முதல் நூற்றாண்டு காலகட்டத்தைச் சார்ந்ததாகும்.
. 10. பிம்பேட்கா பாறை வாழிடங்கள் - மத்தியப் பிரதேசம் - 2003
  • இது விந்திய மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று முந்தைய கால இந்தியாவில் இருந்த மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக உள்ளது.
. 11. கஜீராஹேர நினைவுச் சின்னங்கள் - மத்தியப் பிரதேசம், 1986
  • சந்தேலா வம்சத்தால் கட்டப்பட்ட கஜீராஹே நினைவுச் சின்னங்கள், குர்ஜார் பிரதிஹாராக்களின் தலைமையின் கீழ் புகழின் உச்சத்தை அடைந்தது.
  • இங்கு மீதமிருக்கும் நினைவுச் சின்னங்கள் இந்து மற்றும் ஜைன மதங்களுக்கு சொந்தமானவை ஆகும்.
  • இந்தச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களின் சிறந்த உதாரணமாக கந்தாரியா கோவில் உள்ளது.
. 12. அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா, 1983
  • அஜந்தா குகைகள் பெளத்த குகைகள் ஆகும்.
  • இங்கு காணப்படும் வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இலங்கையிலுள்ள சிகிரியா சித்திரங்களை நினைவூட்டுகின்றன.
  • ஒட்டு மொத்தமாக புத்தமதத்தை பறைசாற்றும் 31 குடைவரைக் குகைகள் இங்கு காணப்படுகின்றன.
. 13. எல்லோரா குகைகள், மஹாராஷ்டிரா, 1983
  • எல்லோரா குகைகள் எல்லோரா வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இது புத்த, இந்து மற்றும் சமண மத கலாச்சாரங்களின் கலப்பு மையம் ஆகும்.
  • செங்குத்தான கருங்கல் பாறைச் சுவர்களின் நடுவே மொத்தம் 34 மடாலயங்களும் கோவில்களும் அடுத்தடுத்து 2 கிலோமீட்டர் நீளத்திற்கு செதுக்கப்பட்டுள்ளன.
  • கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கும் 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்ட இவை பண்டைய கால இந்தியாவின் கலையைப் பிரதிபலிகின்றது.

. .

14. எலிபண்டா குகைகள், மஹாராஷ்டிரா, 1983
  • எலிபண்டா குகைகளானது, மும்பை நகரத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் மும்பைத் துறைமுகத்தில் இருக்கும் எலிபண்டா தீவு (அ) காராபூரில் அமையப்பெற்ற குகைச்சிற்பங்களின் தொடர் அமைப்பாகும். காராபூர் குகைகளின் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இத்தீவானது அரபிக்கடலின் பிரிவில் அமைந்துள்ளது. இங்கு 2 வகையான குகைகள் உள்ளன. முதலாவதாக 5 பெரிய இந்து குகைகள் இரண்டாவதாக 2 சிறிய புத்த குகைகள் உள்ளன.
  • இந்துக் குகைகளானது, சிவனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட, சைவ இந்து சமயத்தை பிரதிபலிக்கும் குகைச்சிற்பங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தக் குகைகள் எரிமலை பாறை வகையால் வெட்டப்பட்டவையாகும்.
. 15. சத்ரபதி சிவாஜி முனையம் முன்னதாக (விக்டேரரியா முனையம்) மஹாராஷ்டிரா, 2004
  • சத்ரபதி சிவாஜி முனையம் என்பது மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது.
  • இது இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். மேலும் மும்பையின் புறநகர் ரயில்கள் மற்றும் மத்திய இரயில்வே ரயில்கள் ஆகியவற்றின் முனையமாக செயல்படுகிறது.
  • 1887-1888ஆம் ஆண்டில் பிரெட்ரிக் வில்லியம் ஸ்ட்வென்ஸ் என்ற பொறியாளரால் கட்டப்பட்டது.
  • அரசி மற்றும் பேரரசி விக்டேரரியாவிற்கு மதிப்பளிக்கும் விதத்தில் இதற்கு விக்டேரரியா முனையம் எனப் பெயரிடப்பட்டது.
  • இதை கட்டி முடிப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகின. இது விக்டேரரியாவின் பொன்விழா ஆண்டான 1887-ல் திறக்கப்பட்டது.
  • இந்தியத் தீபகற்ப இரயில்வேயின் தலைமையிடமாக கட்டிடக்கலைகளில் சிறப்புத் தன்மை வாய்ந்த கோதிக் முறையில் இது கட்டப்பட்டது.
. 16. சூரியக் கோவில், கொனார்க், ஒரிஸா, 1984
  • இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கருப்பு பகோடா எனவும் அழைக்கப்படும்.
  • இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும், கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது.
  • வங்காள விரிகுடாவின் கிழக்குக் கடற்கரையில் மகாநதி டெல்டாவில் இது அமைந்திருக்கிறது. இது சூரியக் கடவுளின் ரத (ஆர்கா) வடிவத்தில் 24 சக்கரங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஆறு குதிரைகளின் தலைமையில் நடக்கும் அணிவகுப்பைப் போன்ற காட்சியையுடைய அதிக வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்ட சிற்பக் கலை இதுவாகும்.
  • கீழைக் கங்கா வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னரால் வளிமண்டலக் காற்று மூலம் பாதிக்கப்பட்ட மணற்கல்லால் உருவாக்கப்பட்டது.
. 17. ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர்
  • ஜந்தர் மந்தர், 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜா என்னும் அரசரால், அவரது அப்போதைய தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும்.
  • இது அப்போதைய மொகலாய தலைநகரான தில்லியில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது ஆகும்.
  • அவர் டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் சேர்த்து மொத்தமாக 5 இடங்களில் இத்தகைய கட்டமைப்புகளைக் கட்டியுள்ளார்.
  • இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும். இது கட்டுமானத்தின் சில 20 முக்கிய கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
.. 18. அழியாத சோழர் பெருங்கோயில்கள், தமிழ்நாடு, 1987
  • தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மூன்று சோழர் காலத்து கோவில்களும், திராவிட வகை கோயிலின் சிறந்த படைப்பாற்றல் மிக்க கட்டிடக் கலையை பிரதிபலிக்கின்றன.
  • தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், சோழர்காலக் கோவில்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பிற இரண்டு கோவில்களும் இவர்தம் கட்டிடக்கலைக்குச் சான்றாக அமைகின்றன.
  • மூன்று சிறந்த சோழர் கோயில்களும் தனித்துவம் கொண்டிருப்பதோடு சோழ சாம்ராஜ்ஜியத்தின் தொழில்நுட்பக் கட்டிடக்கலை மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நகர வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க சான்றுகளாக விளங்குகிறது.
  • சோழர்காலக் கோவில்கள் அமைந்த தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஆகிய இடங்கள் சோழர்காலக் கட்டடவியல் சித்தாந்தங்களைப் பறைசாற்றுகின்றன.
. 19. மாமல்லபுர மரபுச் சின்னங்கள், தமிழ்நாடு, 1984
  • மகாபலிபுரத்தின் தொல்லியல் சின்னங்கள் ஆனது, தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து 58 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 7 மற்றும் 8ம் நூற்றாண்டில் பல்லவ அரசர்களால் கட்டமைக்கப்பட்டது.
  • இது தமிழ்நாட்டில் 7ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசின் துறைமுகமாக விளங்கியது. மகாபலிபுரத்தின் தொல்லியல் எச்சங்களாக நிற்கும் சிற்பங்கள், திராவிட கட்டிடக்கலை பாணிக்கு மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு ஆகும்.
  • இங்குள்ள சிற்பங்கள் பலவும் ஒற்றைக் கல் (Monolithic) சிற்பங்களே ஆகும். அதாவது ஒரே பாறையில் செதுக்கப்பட்டவை.
  • 9 ஒற்றைக்கல் கோவில்கள் மகாபலிபுரத்தில் காணப்படுகின்றன. இதில் முக்கியமானது, பஞ்சரதக் கோவில்கள். இது மகாபாரதப் புகழ் பஞ்சபாண்டவர்கள் பெயரால் அறியப்படுகிறது.
  • பல்லவர்கள் ஏழு விகாரங்கள் என்று அழைக்கப்படும் ஏழு கருங்கல் கோயில்களை கட்டியுள்ளனர்.
  • வராகமண்டபம், மஹிசாசுர மர்த்தினி மண்டபம், பரமேஸ்வர மகாவராக விஷ்ணுகிரகா (ஆதிவராக குகை) ஆகியவை முக்கியமான குடைவரைக் கோவில்களாகும்.
. 20. ஆக்ரா கோட்டை, உத்திரப் பிரதேசம், 1983
  • யமுனை நதியின் வலது கரையில் அமைந்த இக்கோட்டையானது சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது ஆகும்.
  • காஸ் மஹால், ஷிஸ்மஹால், முசம்மன் புர்ஜ் (எண் கோண கோபுரம்), திவான்-இ-காஸ் (1637), திவான்-இ-அம், வெள்ளை பளிங்குகல் மசூதி மற்றும் நஜீனா மஸ்ஜித் போன்றவை கோட்டையின் சுற்றாடலில் கட்டப்பட்ட ஈர்க்கக்கூடிய அமைப்புகள் ஆகும்.‘
  • இவை இந்து தைமூரிய பாரசீக மற்றும் இந்தியக் கலவையில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நினைவுச் சின்னங்களாகும்.
  • இது புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு அருகில் இரண்டு நினைவுச் சின்னங்களை பிரிக்கும் இடைப்பகுதியைக் கொண்டு அமைந்துள்ளது.
.

21. பதேபூர் சிக்ரிஉத்திரப்பிரதேசம் 1986

  • 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை முகலாயப் பேரரசைக் கட்டமைத்து ஆட்சி புரிந்த பேரரசர் அக்பரால் 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் “வெற்றியின் நகரம்” (The City of Victory) என்றழைக்கப்படும் பதேபூர் சிக்ரி நகரம் கட்டப்பட்டது.
  • இந்நகரின் கட்டிட வடிவமைப்புகளோடு சேர்த்து இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான ஜூம்மா மசூதி, புலந்த் தார்வாசா, பஞ்ச் மகால், சூஃபி சலிம் சிஸ்தியின் கல்லறை போன்றவை உட்பட அனைத்து நினைவுச் சின்னங்களும், கோயில்களும் ஒரே விதமான முகலாயக் கட்டிடக்கலை வடிவமைப்பிலேயே கட்டமைக்கப்பட்டு உள்ளது.
  • 1585-ஆம் ஆண்டில் இந்நகரைக் கண்ட ஆங்கிலப் பயணி ரால்ப் பிட்ச் பதேப்பூர் சிக்ரியை “இலண்டனை விட பெரிய, அதிக மக்கள் தொகையுடைய நகரென” புகழாரம் சூட்டினார்.
  • இதன் வடிவமும் அமைப்பும் பிற்காலத்தில் இந்திய நகர வடிவமைப்பில் குறிப்பாக ஷாஜகானின் ஷாஜகனாபாத் (பழைய டெல்லி) நகர வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை செலுத்தியது.
.

22. தாஜ்மகால், உத்திரப் பிரதேசம் 1983

  • ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் ஓர் பளிங்குக் கல்லறையாகும்.
  • 1631 ஆம் ஆண்டு இயற்கை எய்திய தன் மனைவி பேகம் மும்தாஜ் மகாலின் நினைவாக பேரரசர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்பட்டது.
  • பெர்ஷிய, இஸ்லாமிய மற்றும் இந்திய கட்டிடக்கலைகளின் கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய முகலாய கட்டிடக்கலையின் வடிவமைப்பில் வெள்ளைப் பளிங்குகள் கொண்டு இப்பெரும் கம்பீர பளிங்குக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
  • உஸ்தாத் அஹ்மது லாஹௌரி எனும் தலைமை கட்டிடக்கலைஞரின் தலைமையின் கீழ் கி.பி. 1631 முதல் கி.பி. 1648 வரை சுமார் 16 ஆண்டு காலத்தில் இக்காதல் கலைக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
  • ஆக்ரா நகரில் யமுனை நதியின் வலக்கரையில் 17 ஹெக்டர் பரப்புடைய முகலாயத் தோட்டத்தின் இடையே தாஜ்மகால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • எண்கோண தளவமைப்பு உடைய தாஜ்மகாலின் நான்கு கோண மூலைகளிலும் நான்கு அழகிய பிரத்யேக உயரக் கோபுரங்கள் (மினாரட்கள்) உள்ளன. மேலும் முதன்மை கலைக்கூடத்தின் உச்சமாக பெரும் அழகு வேலைப்பாடுகளுடைய மத்திய குவிமாடமும் (Central bulbous dome) அதன் கீழ் அமைந்துள்ள நிலவறைகளில் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் மண்ணறை சமாதிகளும் உள்ளன.
  • பாலிகுரோமேடிக்-கினால் ஆன பிதுரா துரா (Pierradura) எனும் அலங்கார பட்டைகளும், அழகிய பூப்பின்னல்களும் அடங்கிய வேலைப்பாடுகளில் (decorative bands and floral arabesque) அழகூட்டு கையெழுத்து சித்திர வடிப்புகள் (Calligraphic Inscription) பொதிக்கப்பட்ட அசாத்திய பளிங்கு வேலைப்பாடுகள் கொண்டு இக்காதல் கலைக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் மாயம் இதனிடம் உள்ளது.
.

23. இந்திய மலை இரயில்வே

  • இந்திய மலை இரயில்வேயில் 3 மலை இரயில்வே பிரிவுகள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்ன அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன.
    • டார்ஜிலிங் இமாலய இரயில்வே (1999).
    • நீலகிரி மலை இரயில்வே (2005).
    • கல்கா – சிம்லா இரயில்வே (2008).
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய மலைப் பிரதேசங்களில் ஐந்து மலை இரயில்வே பிரிவுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கங்களில் அமைக்கப்பட்டன. இவை இன்றளவும் இயக்கப்பட்டு வருகின்றன. அவையாவன
    • டார்ஜிலிங் இமாலய இரயில்வே (1881)
    • கல்கா சிம்லா இரயில்வே (1898)
    • கங்கா பள்ளத்தாக்கு இரயில்வே (1924)
  • இவை மூன்றும் வட இந்தியாவின் இமயமலைத் தொடரின் கரடுமுரடான மலைப் பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
  • நீலகிரி மலை இரயில்வே மற்றும் மதேரன் மலை இரயில்வே ஆகியவை முறையே தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னமாக டார்ஜிலிங் இமாலய இரயில்வே முதன் முறையாக 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. பின் 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டு முறையே நீலகிரி மலை இரயில்வே மற்றும் கல்கா – சிம்லா இரயில்வேக்களும் யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச்சின்ன மலை இரயில்வேக்களாக அங்கீகரிக்கப்பட்டன.
.

24. இராஜஸ்தானின் மலைக்கோட்டைகள், சித்தோர்கர் 2013

  • இராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரின் புறப்பரப்பு பாறைகளின் [Rocky outcrops] மேல் கட்டப்பட்ட கோட்டைத் தொடர்களே இராஜஸ்தானிய மலைக்கோட்டைகளாகும்.
  • இராஜஸ்தானின் பல்வேறு புவியியற் மற்றும் கலாச்சார மண்டலங்கள் முழுவதும் நிலைத்திருந்த இராஜபுதன இராணுவத்தின் வலிமையினை இம்மலைக் கோட்டைகள் பிரதிபலிக்கின்றன.
  • சித்தோர்கார் கோட்டை, கும்பல்கர் கோட்டை, ரன்தம்போர் கோட்டை, காக்ரோன் கோட்டை, ஆம்பர் கோட்டை, ஜெய்சல்மர் கோட்டை போன்ற பல்வேறு கோட்டைகளை இம்மலைக் கோட்டைத் தொடர் உள்ளடக்கியுள்ளது.
  • அரண்மனைகள், இந்து மற்றும் சமணக் கோயில்கள், நகர மையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் போன்றவற்றை ஒவ்வொரு கோட்டை வளாகங்களும் உள்ளடக்கியுள்ளன.
.

25.  ராணி கி வாவ் (அரசியின் படிக்கிணறு) குஜராத், 2014

  • தன்னுடைய பிரம்மாண்ட அளவிற்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்