TNPSC Thervupettagam

வருடாந்திர நிதிநிலை அறிக்கை 2019-2020 (பகுதி 1)

July 9 , 2019 1967 days 2818 0

 

  • மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது முதலாவது வருடாந்திர நிதி நிலை அறிக்கையை ஜூலை 05 அன்று தாக்கல் செய்தார்.
  • இது மத்திய அரசின் 89-வது வருடாந்திர நிதி நிலை அறிக்கையாகும்.
  • இது கடந்த ஆண்டின் வருவாய் மற்றும் செலவினங்களையும் வரவிருக்கும் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் மற்றும் கணிப்புகளையும் கொண்டுள்ளது.

  • நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக் காலத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதலாவது நிதி நிலை அறிக்கையாகும்.
  • 1970 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்குப் பிறகு வருடாந்திர நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி இவரேயாவார்.
  • ஆனால் இவரே இந்தியாவின் முதலாவது முழு நேர பெண் நிதி அமைச்சர் ஆவார்.
  • முதன்முறையாக வருடாந்திர நிதி நிலை ஆவணமானது வழக்கமாக பெட்டியில் கொண்டு வரப்படாமல் சிவப்பு நிற தோல் பையில் கொண்டு வரப்பட்டது.
  • முதன்முறையாக, நிதி அமைச்சர் வெவ்வேறு அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடுகளை அல்லது திட்டமிடப்பட்ட வருவாய் அல்லது செலவு போன்ற பொருளாதாரத் தொகைகளைப் படிப்பதைத் தவிர்த்தார்.
  • நிதி நிலை அறிக்கை ஆவணத்தின் இணைப்பில் அனைத்து தொகையின் எண்களும் குறிப்பிடப் பட்டுள்ளதாக அவர் மக்களவையில் தெரிவித்தார்.

தொலைநோக்குப் பார்வையின் 10 அம்சங்கள்
  • இந்தியாவின் “பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையின்” 10 அம்சங்கள் 2019 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காவோன், கரீப் மற்றும் கிசான் (கிராமம், ஏழை மற்றும் விவசாயி) ஆகியவை இந்த அரசின் அனைத்துக் கொள்கைகளின் மையக் கருத்தாக உள்ளது.
  1. கட்டிடங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்,
  2. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உள்ளடக்குதல்,
  3. பசுமையான பூமித்தாய் மற்றும் நீல வானங்களுடன் மாசுபாடு இல்லாத இந்தியா
  4. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் தொடக்கங்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்திகள், வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், நுண் சில்லுகள் & மின்கலங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றிற்கு இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முக்கியத்துவம் அளித்தல்,
  5. நீர், நீர்மேலாண்மை, சுத்தமான ஆறுகள்,
  6. நீலப் பொருளாதாரம்,
  7. விண்வெளித் திட்டங்கள், ககன்யான், சந்திராயன் மற்றும் செயற்கைக் கோள் திட்டங்கள்,
  8. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி.
  9. ஆரோக்கியமான சமூகம் – ஆயுஷ்மான் பாரத், நன்கு ஊட்டமளிக்கப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு.
  10. ஜன் பாகிதாரியுடன் இந்திய அணி - குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகை.

முக்கிய அறிவிப்புகள்
  • 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்காகும்.
  • இந்த நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரமானது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும்.
  • பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதனமாக்கலுக்கு 70,000 கோடி ரூபாய்.
  • இந்த ஆண்டில் 1.05 லட்சம் கோடி அளவில் முதலீட்டைத் திரும்பப் பெறுதல் (பங்குகளை விற்றுத் திரும்பப் பெறுதல்).
  • தனிநபர் வருமானம் 2 முதல் 5 கோடி வரை உள்ளோர் மற்றும் 5 கோடிக்கும் அதிக வருமானமுள்ளோருக்கான மிகைவரி முறையே 3% மற்றும் 7% என முன்மொழியப்பட்டுள்ளது.
  • தங்கம் மற்றும் பிற விலை மதிப்புள்ள உலோகங்கள் மீதான சுங்க வரி 10%லிருந்து 12.5% ஆக முன்மொழியப்பட்டுள்ளது.
  • மலிவு விலையில் வீட்டு வசதிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், வீடு வாங்குவதற்காக 2020 மார்ச் 31ஆம் தேதி வரை வாங்கப்படும் ரூ. 45 லட்சம் வரையிலான கடன்களுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டியில் 1.5 லட்சம் கூடுதலாக குறைப்பு.
    • 15 ஆண்டு கால கடன் காலத் திட்டத்தில் ஒட்டு மொத்தமாக 7 லட்சம் ரூபாய் அளவில் ஒவ்வொருவரும் நன்மையடையவர்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரியானது (செஸ் – வரியின் மேல் வரி) லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்படும்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்படும்.
  • மின் வாகனங்கள் மீதான GST வரி விகிதத்தை 12%லிருந்து 5% ஆக குறைக்க GST குழுமத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையானது 3.4%லிருந்து 3.3% ஆக குறைக்கப்படும்.
  • 400 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பெருநிறுவன வரி விகிதமானது இனி 25% ஆக இருக்கும். இது மொத்தமுள்ள நிறுவனங்களில் 99.3%ஐ உள்ளடக்கும்.
  • இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%க்கும் குறைவாகவே உள்ளது.
  • 2022ஆம் ஆண்டிற்குள் விருப்பமுள்ள அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் மின்சாரம் மற்றும் தூய்மையான சமையல் வசதி அளிக்கப் படும்.
  • காந்தியின் 150வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று, ராஜ்கோட்டின் காந்தி தர்ஷனில் ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திராவானது தொடங்கப்படவுள்ளது.
    • நேர்மறையான காந்திய விழுமியங்களைப் பற்றி இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் உணர்த்துவதற்காக அறிவியல் கண்காட்சிகளுக்கான தேசியக் குழுமத்தால் காந்திபீடியா உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.
மத்திய நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்
  • PAN மற்றும் ஆதார் அட்டைகள் ஒன்றுக்கொன்று மாற்றக் கூடியவைகளாக மாறும். எனவே வருமான வரித் தாக்கல் செய்ய மக்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.
  • 5 லட்சம் ரூபாய் வரி செலுத்துவோருக்கான குறைந்தபட்ச வரம்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
  • மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டியானது 5% ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை வாங்க பெறப்பட்ட கடன்கள் மீது செலுத்தப்பட்ட வட்டிக்கு 1.5 லட்சம் அளவிற்குக் கூடுதலாக வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
  • இந்திய கடவுச்சீட்டு வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியா வந்தவுடன் காத்திருப்புக் காலம் இல்லாமல் ஆதார் அட்டைகளை வழங்குவதற்கான முன்மொழிவு.
  • 20 ரூபாய் நாணயம் வெளியீடு.
  • ஏஞ்சல் வரி (தொழில் தொடக்கங்களுக்கான வரி) சிக்கலைத் தீர்க்க புதிய தொழில் தொடக்கங்களின் மதிப்பீடானது எந்தவொரு ஆய்விற்கும் உட்படுத்தப்படாது.
  • புதிய தொழில் தொடக்கங்களால் திரட்டப்படும் நிதிக்கு வருமான வரி துறையால் எவ்வித ஆய்வும் தேவையில்லை.
  • வணிக பணவழங்கீடுகளை ரொக்கமாக வழங்குவதைக் குறைக்க, வங்கிக் கணக்குகளில் இருந்து வருடத்திற்கு 1 கோடிக்கு மேல் பணத்தை எடுக்கும் போது 2 சதவிகிதம் அளவிற்கு வரிப் பிடித்தம் செய்யப்படும்.
  • புதிய தொழில் தொடக்கங்களில் முதலீடு செய்வதற்காக வீடு விற்பனை செய்ததிலிருந்துப் பெறப்படும் மூலதன ஆதாயங்களுக்கான விலக்கக் காலம் மார்ச் 2021 ஆம் ஆண்டு 31 வரை நீட்டிக்கப்படும்.
  • தொழில் தொடக்கங்களை ஊக்குவிப்பதற்கும் நிதிகளின் தரகுகளுக்காகவும் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று தொடங்கப்படும்.
  • புதிய தேசியக் கல்விக் கொள்கையானது வெளிநாட்டு மாணவர்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதுடன் இந்தியக் கல்வியை உலகின் மிகச்சிறந்த ஒன்றாக மாற்றும் என நம்புகிறது.
  • ரயில்வே உள்கட்டமைப்பிற்கென 50 லட்சம் கோடி ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளது.
  • சுதந்திரமடைந்ததிலிருந்து 75 வருடமான 2022 ஆம் ஆண்டில் மின்சாரம் மற்றும் தூய்மையான சமையல் இணைப்பைப் பெற விரும்பாதவர்களைத் தவிர அனைத்து கிராமப்புற குடும்பங்களும் மின்சாரம் மற்றும் தூய்மையான சமையல் வசதியைப் பெற்றிருக்கும்.
  • குறைந்தபட்ச வெளிப்புறத் தலையீட்டோடு சுயமான நீடித்த நடைமுறையிலான தோட்டக்கலை வடிவமான சுழிய செலவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • பிரதமரின் கரம் யோகி மான்தன் திட்டத்தின் கீழ் 3 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிக்கப்படும்.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
  • உள்கட்டமைப்பு கடன் நிதிகளின் கடன்பத்திரங்களில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீடு போன்றவை முதலீடு செய்ய அனுமதி
  • பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது மக்களுக்கான குறைந்தபட்ச பங்குகளை 25%லிருந்து 35% ஆக உயர்த்துதல்.
  • உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு இந்தியாவில் நடைபெறும்.
  • சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைப் பட்டியலிடுவதற்காக இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் வரம்பின் கீழ் ஒரு சமூகப் பங்குப் பரிமாற்றம் செய்யும் மின்னணு நிதி திரட்டும் தளத்தை உருவாக்குதல்.
  • காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்களில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
  • முக்கியத் திட்டமான பிரதமரின் மத்திய சம்பதா திட்டத்தின் வழியாக மீன்வளத் துறையானது ஒரு வலுவான மீன்வள மேலாண்மை கட்டமைப்பை நிறுவும்.
  • விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டிற்காக அனைத்து நிலைகளிலும் விளையாட்டுகளைப் பிரபலப்படுத்த கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
  • மாதிரி குத்தகைச் சட்டம் இறுதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்படும்.
  • 2019-2020 ஆம் ஆண்டுகளில் கடன் உத்திரவாத மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட உள்ளது.
  • ஒரு நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வழி முதலீட்டிற்கான சட்ட ரீதியான வரம்பானது 24% லிருந்து துறைரீதியான வெளிநாட்டு முதலீட்டு வரம்பின் அளவிற்கு உயர்த்தப்படும்.
  • வெளிநாடு வாழ் இந்தியரின் துறை ரீதியான முதலீட்டுத் திட்டத்தின் பாதையானது வெளிநாட்டுத் துறை ரீதியான முதலீட்டு வழிமுறைகளுடன் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2014-2019 ஆம் ஆண்டுகளின் சாதனைகள்
  • கடந்த 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்கள் இந்தியப் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. (முதல் டிரில்லியன் டாலரை அடைய எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் 55 ஆண்டுகள்)
  • 2014 ஆம் ஆண்டில் 1.85 டிரில்லியன் டாலராக இருந்த பொருளாதார நிலையானது தற்போது 2.7 டிரில்லியனை எட்டியுள்ளது.
  • ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 11 வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது 6வது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது.
  • இந்தியப் பொருளாதாரமானது உலகளாவிய அளவிலான வாங்கு திறன் சமநிலையில் சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து மூன்றாம் பெரிய நாடாக உள்ளது.
  • நிதி ஒழுங்குமுறைக்கென கடமையுடன் கூடிய அர்ப்பணிப்பு மற்றும் சக்தி வாய்ந்த மத்திய மாநில புத்துயிர்ப்பானது 2014-19 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
  • மறைமுக வரி விதிப்பு, திவால் நிலை, மனை வணிகம் ஆகியவற்றில் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • 2009-2014 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2014-2019 ஆம் ஆண்டுகளில் உணவுப் பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட சராசரி தொகையானது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை விட 2017-2018 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அளவில் வழங்கப்பட்டுள்ளது.
  • புதிய இந்தியாவை அடைய உதவ உந்து விசை நிதி ஆயோக்கால் திட்டமிடப்பட்டு உதவி செய்யப்படுகின்றது.
எதிர்காலத்திற்கான திட்டப் பாதை
  • நடைமுறைகளை எளிதாக்குதல்
  • செயல் திறன்களுக்கு ஊக்கமளித்தல்
  • கால தாமதமாக்கும் விதிமுறைகளைக் குறைத்தல்
  • தொழில்நுட்பங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்
  • இதுவரை தொடங்கப்பட்ட பெரிய திட்டங்கள் மற்றும் சேவைகளைத் துரிதப்படுத்துதல்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்