TNPSC Thervupettagam
August 2 , 2018 2160 days 1677 0
விம்பிள்டன்
  • உலகில் மிகவும் போற்றப்படும் டென்னிஸ் கோப்பைகளில் ஒன்று விம்பிள்டன் ஆகும். ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் 4 டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன்னும் ஒன்றாகும்.
  • விம்பிள்டன் டென்னிஸ் ஆனது 1877ஆம் ஆண்டு அனைத்து இங்கிலாந்து க்ரோகியூட் மற்றும் லான் டென்னிஸ் சங்கத்தில் தொடங்கப்பட்ட உலகின் பழமையான டென்னிஸ் விளையாட்டாகும். (AELTC - All England Croquet and Lawn Tennis Club)
  • இவ்விளையாட்டுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. காலவரிசைப்படி,
    • ஆஸ்திரேலியன் ஓபன்
    • பிரெஞ்சு ஓபன்
    • விம்பிள்டன் மற்றும்
    • அமெரிக்க ஓபன்
  • விம்பிள்டன் டென்னிஸ் 2 வாரங்களுக்கு 5,00,000 பார்வையாளர்களுடன் லண்டனில் உள்ள அனைத்து இங்கிலாந்து டென்னிஸ் சங்கத்தில் நடைபெறுகிறது.
  • விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டு புல்தரையில் விளையாடப்படும் ஒரேயொரு கிராண்ட் ஸ்லாம் விளையாட்டாகும்.
  • இவ்விளையாட்டு மைதானத்தில் உள்ள புற்கள் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகின்றன. இவ்விளையாட்டு நடைபெற இருக்கும் போது துல்லியமாக 8 மி.மீ உயரத்திற்கு மேல் உள்ள புற்கள் வெட்டப்படுகின்றன.
  • மைதானத்தில் வேகமாக செல்லும் டென்னிஸ் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் கடினமான வேலைக்கு 250க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் உள்ளனர். இவர்கள் BBGs என்றும் அழைக்கப்படுகின்றனர்.
  • 1877ஆம் ஆண்டு முதல் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டி உலகின் பழமையான டென்னிஸ் விளையாட்டுப் போட்டியாகும்.
  • 1877ஆம் ஆண்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் மட்டுமே நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மற்றும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் 1884ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
  • 1877ஆம் ஆண்டு கிரேட் பிரிட்டனின் ஸ்பென்சர் கோர் முதலாவது கோப்பையினை வென்றார். 1884 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மவ்டு வாட்சன் வெற்றி பெற்றார்.
  • 1913ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பெண்களுக்கான இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் சேர்க்கப்பட்டன.
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விளையாடும் அனைத்து வீரர்களும் வெள்ளை உடை அணிந்து விளையாட வேண்டும் என்று விம்பிள்டன் விதிகள் கூறுகின்றன. இப்போட்டியில் உடை கட்டுப்பாட்டை மீறும் வீரர்களை நடுவர் வெள்ளை உடை அணிந்து வரச் சொல்வார்.
  • இதுவரை நடந்த போட்டிகளில் 54,250 பந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் ஒவ்வொரு 7 முதல் 9 வது போட்டிகளின் போது மாற்றப்படுகின்றன. மேலும் இப்பந்துகளின் வடிவத்திற்காக இவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுகின்றன.
  • முன்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வெள்ளைப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1986ஆம் ஆண்டில் தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியில் பந்துகளை தெளிவாக காண்பதற்காக மஞ்சள் நிற பந்துகளுக்கு மாற்றப்பட்டன.
  • புறாக்களற்ற மைதானத்திற்கு RuFus என்ற பெயர் கொண்ட ஹாரிஸ் ஹாக் எனும் பருந்து பயன்படுத்தப்படுகிறது.

விம்பிள்டன் பதிவுகள்

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நீண்ட ஆட்டம் 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் இஸ்நீர் பிரெஞ்சு வீரர் நிக்கோலஸ் மஹத் ஐ வீழ்த்தி வெற்றி பெற்ற போட்டி 11 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்றது. இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான பட்டங்களைப் பெற்றவர் ஓய்வு பெற்ற செக் மற்றும் அமெரிக்க வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா ஆவார். இவர் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார்.
  • மேலும் இவர் வயதான வெற்றியாளர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். அப்போது அவருடைய வயது 46 ஆண்டுகள் 261 நாட்கள் ஆகும்.
  • வரலாற்றில் இளம் வயதில் விம்பிள்டனில் வெற்றி பெற்றவர் மார்ட்டினா ஹிங்கிஸ் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அப்போது அவருடைய வயது 15 ஆண்டுகள், 282 நாட்கள் ஆகும்.
  • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான பட்டங்களை ரோஜர் பெடரர் வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டனின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று, 8 முறை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  • மேலும் அவரது கிராண்ட் ஸ்லாமின் வெற்றி 19 ஆக உயர்ந்துள்ளது.
  • 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஜோர்ன் போர்க் தொடங்கியதிலிருந்தே ஒரு செட்டில் கூட தோல்வி அடையாமல் வெற்றி பெற்ற முதல் வீரர் ஆவார். அவருக்குப் பின் இரண்டாவதாக ரோஜர் பெடரர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • அதிக வயதில் விம்பிள்டனின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள வீரர் ரோஜர் பெடரர் ஆவார். அவர் வெற்றி பெற்ற போது அவருக்கு வயது 35 ஆண்டுகள் 342 நாட்கள் ஆகும். 1975ஆம் ஆண்டு 31 ஆண்டுகள் 355 நாட்கள் வயதுடன் ஆர்துர் ஆஷி பட்டம் வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான போட்டியில் வேகமாக செர்வ் (Serve) அடித்த வீரர் அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் டெண்ட் ஆவார். அவர் அடித்த பந்தின் வேகம் மணிக்கு 238 கிலோமீட்டர் ஆகும்.
  • விம்பிள்டனில் பெண்களுக்கான போட்டியில் வேகமாக செர்வ் (Serve) அடித்த வீராங்கனை அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் ஆவார். அவர் அடித்த பந்தின் வேகம் மணிக்கு 205 கிலோ மீட்டர் ஆகும்.
  • விம்பிள்டன் போட்டியின் போது உரத்த குரலில் உறுமும் வீராங்கனை ரஷ்யாவின் மரியா சரபோவா ஆவார். அவர் இதை 2009ஆம் ஆண்டில் நிகழ்த்தினார்.
  • அவரது உறுமல் சத்தம் 105 டெசிபல் ஆகும். இவரது உறுமல் சத்தம் நின்று கொண்டிருக்கும் உந்துவண்டியின் முடுக்கத்திற்கு இணையான சத்தத்தைக் கொண்டிருக்கும்.

ராயல் பெட்டிக்கு மரியாதை செலுத்துதல்

  • விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்கு நடுவே செல்லும் போதும் வெளியேறும் போதும் ராயல் பெட்டிக்கு மரியாதை செலுத்துவார்கள். 2003ஆம் ஆண்டில் அனைத்து இங்கிலாந்து சங்கத்தின் தலைவர் தி டியூக் ஆப்  கென்ட் இந்த நடைமுறையை கைவிட முடிவு செய்தார்.
  • தற்போது வேல்ஸ் இளவரசர் அல்லது மாட்சிமை பொருந்திய ராணி இருக்கும் சமயத்தில் மட்டும் வீரர்கள் அந்த ராயல் பெட்டிக்கு மரியாதை அளித்தால் போதும்.
  • இந்தப் புதிய நடைமுறை ராணி பார்வையிட்ட 2010ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியின் போது பின்பற்றப்பட்டது.

ஒரு விம்பிள்டனில் அடிக்கப்பட்ட (Serve) அதிகமான ஏஸ் புள்ளிகள் (ACES)

  • ஒரு விம்பிள்டனில் அடிக்கப்பட்ட அதிகமான ஏஸ் புள்ளிகள்
    • ஆண்கள் பிரிவில் 212 - கோரன் இவானிசெவிக் (குரோஷியா) 2001.
    • பெண்கள் 102 - செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2012.

விம்பிள்டன்னைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள்

  • முதன்முறையாக 1937ஆம் ஆணடு 21 ஜூன் அன்று நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பிபிசி ஒளிபரப்பியது.
  • 2017ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியை பிபிசி விளையாட்டு மற்றும் பிபிசி i பிளேயர் மூலம் நேரலையாக 24.1 மில்லியன் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். விம்பிள்டன் விளையாட்டிலேயே இது தான் முதன் முறையாக அதிக நபர்கள் பார்வையிட்ட விளையாட்டுப் போட்டியாகும்.
  • 1922ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து விம்பிள்டன் வானிலை பதிவுகளின்படி, ஏழு சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற்றுள்ளது.
  • 1940ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது விளையாட்டு மைதானத்தின் நடுப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இதில் மைதானத்தில் உள்ள 1200 இருக்கைகள் சேதமடைந்தன.
  • முதன்முறையாக 2007ஆம் ஆண்டு பரிசுத் தொகையினை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பெற்றனர்.

விம்பிள்டன் 2018

  • 2018ஆம் ஆண்டு போட்டியானது சாம்பியன்ஷிப் போட்டியின் 132வது தொடராகும். இது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டியின் 125-வது தொடராகும். இப்போட்டி ஓபன் போட்டி வரிசையின் 51வது ஆட்டம் மற்றும் இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி ஆகும்.
  • விம்பிள்டன் 2018-ன் மொத்த பரிசுத் தொகையானது  34,000,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டை விட 7.6 சதவிகிதம் ஆகும்.
  • பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்  2.25 மில்லியன் பவுண்டுகள் பரிசுத் தொகையினைப் பெறுவார்கள்.
  • 2018ஆம் ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு மற்றும் சக்கரநாற்காலி வீரர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கான போட்டியில் நோவாக் ஜோகோவிக் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை நேர் செட் கணக்கில் வீழ்த்தி நான்காவது விம்பிள்டன் பட்டத்தைப் பெற்றார். இது அவரது 13வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.
  • ரோஜர் பெடரர் முன்னிலை வகிக்கின்ற மற்றும் தற்போதைய சாம்பியன் ஆவார். ஆனால் கால் இறுதியில் கெவின் ஆண்டர்சனிடம் தோல்வியுற்றார்.
  • அரை இறுதி ஆட்டம் ஆண்டர்சன் மற்றும் ஜான் இஸ்நீர் ஆகியோருக்கிடையே 6 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்றது. இப்போட்டி விம்பிள்டனின் ஆண்களுக்கான ஒற்றைப் பிரிவில் இரண்டாவது நீண்ட போட்டியாகும். டென்னிஸ் வரலாற்றின் ஆண்களுக்கான ஒற்றைப் பிரிவு ஆட்டத்தில் இது மூன்றாவது நீண்ட போட்டியாகும்.
  • 1921ஆம் ஆண்டு பிரெய்ன் நார்ட்டன்க்குப் பிறகு விம்பிள்டனின் ஆண்களுக்கான ஒற்றைப் பிரிவு இறுதிப் போட்டி வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் சார்பாக பங்கு பெற்ற முதல் விளையாட்டு வீரர் ஆண்டர்சன் ஆவார்.
  • 2016ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்திற்கான மறுபோட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ஆஞ்சலிக் கெர்பர் தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தைப் பெற்றார். இது அவரது முதலாவது விம்பிள்டன் பட்டமாகும்.
  • 1996ஆம் ஆண்டு ஸ்டெபி கிராபின் வெற்றிக்குப் பிறகு கோப்பையை வென்ற முதல் ஜெர்மன் வீரர் கெர்பர் ஆவார்.
  • கர்பைன் முகுரூசா (ஸ்பெயின்) என்பவர் நடப்பு சாம்பியன் ஆவார். ஆனால் அவர் இரண்டாவது சுற்றில் அலிசன் வான் யுட்வான்க்கிடம் (பெல்ஜியம்) தோல்வியுற்றார்.
  • இது நடப்பு சாம்பியன் மிகவும் முன்கூட்டியே ஆரம்ப நிலையிலேயே வெளியேறுவதாகும். இதற்கு முன் 1994ஆம் ஆண்டு முதல் சுற்றில் ஸ்டெபி கிராப் தோல்வியுற்று வெளியேறினார்.
  • அமெரிக்க ஜோடிகளான மைக் பிராயான் மற்றும் ஜேக் சோக் ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் கிளாசென் மற்றும் நியூசிலாந்தின் வீனஸ் ஆகியோரை வீழ்த்தி ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று பட்டத்தினை வென்றனர்.
  • பர்போரா கிரஸிகோவா (செக் குடியரசு) மற்றும் கேட்ரீனா சினியகோவா (செக் குடியரசு) ஆகியோர் நிக்கோல் மெலிச்சர் (அமெரிக்கா) மற்றும் கெவேடா பெஸ்சிகி (செக் குடியரசு) ஆகியோரை வீழ்த்தி பெண்களுக்கான இரட்டையர் பட்டத்தினை வென்றனர்.
  • அலெக்சாந்தர் பேயா (ஆஸ்திரியா) மற்றும் நிக்கோல் மெலிச்சர் (அமெரிக்கா) ஆகியோர் முர்ரே (ஐக்கிய இராஜ்ஜியம்) மற்றும் விக்டோரியா அஸர்ரென்கா (பெலாரஸ்) ஆகியோரை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பட்டத்தினை வென்றனர்.
 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்