TNPSC Thervupettagam

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்

April 10 , 2018 2274 days 2299 0
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்

- - - - - - - - - - - - - - -

தோற்றம் 8 ஜனவரி 1942 ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து
மறைவு 14 மார்ச், 2018 கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
 
  • ஆங்கில கோட்பாட்டியல் இயற்பியலாளரான (Theoretical Physicist) ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய வெடிக்கும் கருந்துளைகள் கோட்பாட்டை பொதுச்சார்பு கோட்பாடு (General Relativity Theory) மற்றும் குவாண்டம் இயங்கியல் (Quantum Mechanics) கோட்பாடுகள் மூலம் விளக்கினார்.
  • ஹாக்கிங் முதன்மையாக (Primarily), பொதுச்சார்பு இயற்பியல் மற்றும் குறிப்பாக கருந்துளைகள் இயற்பியல் (Physics of Black holes) ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
  • 1960களில் ஹாக்கிங் Amyotrophic Lateral Sclerosis எனும் குணப்படுத்த முடியாத கொடிய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோயால் பாதிக்கப்பட்டார்.
  • ஹாக்கிங் அரிதான மெதுவாக வளர்ச்சியடையும் வகையான நரம்பு சார்ந்த நோயினால் (ALS or லூ கேக்ரிக்ஸின் நோய்) பாதிக்கப்பட்டார். ஹாக்கிங்கை இளமைக் காலத்திலேயே பாதித்த இந்நோய் படிப்படியாக வளர்ச்சியடைந்து ஆண்டுக் கணக்கில் ஹாக்கிங்கை முடக்கியது.
  • இந்நோய், ஹாக்கிங்கின் செயல்பாட்டை படிப்படியாக குலைத்துக் கொண்டிருந்த வேளையிலும் ஹாக்கிங் தன் ஆராய்ச்சிப் பணியை தொடர்ந்தார்.
  • பொதுச் சார்புக்கான கட்டமைப்பில், புவியீர்ப்பு ஒருமை நிலைக்கோட்பாடுகள் (Gravitational Singularity theorems) மீதான அறிவியல் ஆய்வு மற்றும் கருந்துளைகள் கதிர்வீச்சை வெளியிடும் எனும் கருத்தியல் கணிப்பு (Theoretical Prediction) ஆகியவை அறிவியலாளர் ரோஜர் பென்ரோசுடன் இணைந்து ஹாக்கிங் மேற்கொண்ட பணிகள் ஆகும். கருந்துளைகள் கதிர்வீச்சு ஹாக்கிங்கின் கதிர் வீச்சு எனவும் அழைக்கப்படும்.

குறிப்பிடத்தக்க சிறப்புகள்

நன்மதிப்புத் துணைக்கான விருது

  • நன்மதிப்புத் துணைக்கான விருது என்பது காமன்வெல்த் பகுதிகளில் வழங்கப்படும் விருது.

பிரிட்டிஷ் பேரரசின் விருது

  • மிகச்சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் விருது என்பது வீரதீரச் செயல்களுக்கான பிரிட்டிஷ் விருது ஆகும். கலை, அறிவியல், அறக்கட்டளைகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றல், குடிமைப்பணிக்கு அப்பாற்பட்ட பொதுச் சேவைகள் ஆகியவற்றில் ஒருவரின் பங்களிப்பு ஆகியவற்றிற்காக ஒருவரை  கவுரவப்படுத்துவதற்கான விருதாகும்.

இராயல் சொசைட்டியின் உறுப்பினர்

  • இராயல் சொசைட்டியின் உறுப்பினர் `என்பது தனிநபர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். கணிதம், பொறியியல் அறிவியல், மருத்துவ அறிவியல் ஆகியவற்றில் இயற்கை அறிவாற்றலை மேம்படுத்த கணிசமான பங்களிப்பை மேற்கொண்டவர்களை இராயல் சொசைட்டி மதிப்பிட்டு அவர்களுக்கு இவ்விருதை வழங்குகிறது.

கலைகளுக்கான இராயல் சொசைட்டியின் உறுப்பினர்

  • கலைகளுக்கான இராயல் சொசைட்டியின் உறுப்பினர் எனும் தனி நபர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, கலைகள், உற்பத்தி மற்றும் வணிகம் ஆகியவற்றில் சிறப்பான சாதனையை மேற்கொண்டவர்களுக்கு கலைகளுக்கான ராயல் சொசைட்டியால் மதிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க பதவிகள்

  • 1974-ல் ராயல் சொசைட்டி ஹாக்கிங்கை அதன் இளைய உறுப்பினர்களுள் ஒருவராகத் தேர்வு செய்தது.
  • 1977ஆம் ஆண்டு இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவிஈர்ப்பு விசை இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 1979ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதத்திற்கான லூக்காஸியன் இருக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசக் நியூட்டனும் இப்பதவியில் இருந்துள்ளார்.

பிரபலமான புத்தகங்கள்

  • காலத்தின் சுருக்கமான வரலாறு (1988)
  • கருந்துளைகள் மற்றும் குழந்தை பிரபஞ்சங்கள் மற்றும் பிற கட்டுரைகள் (1993)
  • இரத்தினச் சுருக்கத்தில் பிரபஞ்சம் (2001)
  • ஜாம்பவான்களின் தோள்களின் மேல் (2002)
  • கடவுள் உருவாக்கிய முழு எண்கள்: வரலாற்றை மாற்றிய கணிதக் கண்டுபிடிப்புகள் (2005)
  • The Dreams That Stuff Is Made of: The Most Astounding Papers of Quantum Physics and How They Shook the Scientific World (2011)
  • என்னுடைய சுருக்கமான வரலாறு (2013)
  • 1988-ல் ஹாக்கிங் வெளியிட்ட அவருடைய காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் 10 மில்லியன் பிரதிகளைத் தாண்டியும் விற்பனையானது.

குறிப்பிடத்தக்க விருதுகள்

விருதுகள் வழங்கிய நிறுவனங்கள்
ஆதம்ஸ் பரிசு (1966) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
எடிங்டன் பதக்கம் (1975) இராயல் வானியல் சொசைட்டி, இலண்டன்
மேக்ஸ்வெல் பதக்கம் மற்றும் பரிசு (1976) இயற்பியல் நிறுவனம், இலண்டன்
ஹெய்னிமேன் பரிசு (1976) அமெரிக்கன் இயற்பியல் சொசைட்டி மற்றும் அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஆகியவை கூட்டிணைந்து வழங்கின.
ஹக்கஸ் பதக்கம் (1976) இலண்டன் இராயல் சொசைட்டி
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் விருது (1978) லீவிஸ் மற்றும் ரோசா ஸ்ட்ராஸ் நினைவு நிதியம்
RAS தங்கப் பதக்கம் (1985) இராயல் வானியல் சொசைட்டி, இலண்டன்
டிராக் பதக்கம் (1987) பேராசிரியர் பால்டிராக் பெயர்  கொண்ட வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.
ஒல்ஃப் பரிசு (1988) ஒல்ஃப் அறக்கட்டளை, இஸ்ரேல்
ஆஸ்டூரியஸ் மகாராணி விருது (1989) ஆஸ்டூரியா மகாராணி அறக்கட்டளை, ஸ்பெயின்
ஆன்ட்ரூ ஜிமெண்ட் விருது (1998) அமெரிக்க இயற்பியல் கழகம்
நெய்லர் பரிசு மற்றும் விரிவுரையாளர் பரிசு (1999) இலண்டன் கணித சொசைட்டி
லிலியென்பெல்டு பரிசு (1999) அமெரிக்க இயற்பியல் சொசைட்டி
ஆல்பெர்ட் பதக்கம் (1999) கலைகளுக்கான ராயல் சொசைட்டி
காப்லே பதக்கம்  (2006) இங்கிலாந்து ராயல் சொசைட்டி
விடுதலைக்கான ஜனாதிபதி விருது (2009) அமெரிக்க அதிபர்
அடிப்படை இயற்பியல்  கண்டுபிடிப்புகளுக்கான  பரிசு (2012) அடிப்படை இயற்பியல் அமெரிக்க அறக்கட்டளை
BBA அறக்கட்டளை விருது (2015) பிரிமியர் அறக்கட்டளை BBVA Fronteras del Conocimiento
  • அமெரிக்காவின் உயர்ந்தபட்ச குடிமக்கள் விருதான விடுதலைக்கான ஜனாதிபதி விருது அமெரிக்க அதிபரால் வழங்கப்படுகிறது.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்