TNPSC Thervupettagam
June 13 , 2019 2038 days 2947 0
தேர்தல்
  • 17வது மக்களவையின் உறுப்பினர்கள் அனைவரும் 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரையிலான காலகட்டத்தில் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

  • இதுவரையல்லாத அளவில் அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கையாக சுமார் 900 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இம்முறை வாக்குப் பதிவு 67 சதவீதமாகும். இதில் பெண் வாக்காளர்களின் பங்கு அதிகமாகும்.

  • 2014 பொதுத் தேர்தலின் போது 9 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2019 தேர்தலில் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலானது எந்த வாக்குச் சாவடியும் வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக இருத்தல் கூடாது எனக் குறிப்பிட்டது.
  • முதல்முறையாக “வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை சோதனை” (voter verifiable paper audit trail-VVPAT) முறையானது இம்முறை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டது.

  • மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் VVPAT ஆகியவற்றில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்குச் சாவடி என்ற முறையில் சரி பார்க்கப்படுகின்றன.
  • VVPATயில் ஒரு சிறிய கண்ணாடி வழியே சிறிய சீட்டு ஒன்று ஏழு வினாடிகளுக்குக் காட்சியளித்தப் பின்னர் அச்சீட்டு ஒரு பெட்டிக்குள் விழுந்துவிடும். வாக்காளர்கள் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது.
  • முதன்முறையாக, குற்றவியல் வரலாறு உடைய வேட்பாளர்கள் தங்கள் குற்றவியல் வரலாறு குறித்த விவரங்களை தங்களதுப் பிரச்சாரக் காலத்தில் மூன்று முறை செய்தித்தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் வெளியிட வேண்டும்.
  • முதன்முறையாக அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களை வாக்காளர்கள் அடையாளம் காணும் வகையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் அஞ்சல் வழி வாக்குப் பதிவு சீட்டுகளில் அவர்களின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தன.
  • இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஆண்கள் மற்றும் பெண்களின் வாக்கு சதவீதமானது ஏறக்குறைய சமமாக இருந்தது.
  • 66.79 சதவீத ஆண்களும் 66.68 சதவீத பெண்களும் வாக்களித்தனர்.

  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 73-ன் கீழ் தங்களால் வழங்கப்பட்ட அறிவிப்பின் நகலை இந்தியத் தேர்தல் ஆணையமானது குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
  • பிரிவு 73 ஆனது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முடிவுகள் மற்றும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை வெளியிடுதலைப் பற்றிக் கூறுகின்றது.
  • இந்த அறிவிப்பிற்குப் பின்பு சபை அல்லது அவை அதிகாரப் பூர்வமாக அமைக்கப்படும்.

 

தேர்தல் முடிவுகள்
  • ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்களவையில் முழு பெரும்பான்மையுடன் பதவியை தக்க வைத்துக் கொண்டுப் பதவியேற்கும் மூன்றாவது பிரதமராக நரேந்திர மோடி ஆகியுள்ளார்.

  • பாஜகவானது 13 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு விகிதத்தைப் பெற்றது. அரிதாக புதுச்சேரியில் மட்டுமே காங்கிரஸ் கட்சியானது வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
  • மேலும் பாஜகவானது உத்திரப்பிரதேசத்தில் 50 சதவீதத்திற்கும் சற்றே குறைவான வாக்குகளையும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், குஜராத், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், கோவா, கர்நாடகா, டெல்லி, சண்டிகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
  • பாஜக கட்சியானது 2014 தேர்தலில் அது பெற்ற 31.34 சதவீத வாக்குகளை விட ஆறு சதவீதம் அதிகரித்து தற்போது 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
  • 2014 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற 38 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அது 45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
  • மாறாக, இந்தியத் தேசியக் காங்கிரஸின் வாக்குப் பங்கானது மாறாமல்5 சதவீதமாகவே உள்ளது.
  • இந்தியாவின் 1.04 சதவீத வாக்காளர்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (None of The Above-NOTA) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிகபட்சமாக பீஹாரில் 2.08 சதவீதத்தினர் மேற்கண்ட விருப்பத்தை தேர்வு செய்துள்ளனர்.
  • நாட்டில் அதிகபட்சமாக பீஹாரில் இருந்து மட்டும் 17 லட்சம் வாக்காளர்கள் NOTAவைத் தேர்வு செய்துள்ளனர்.
  • காங்கிரஸ் கட்சியானது 18 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இது மக்களவைத் தேர்தலில் அதன் கடும் வீழ்ச்சியைக் குறிக்கின்றது.
  • காங்கிரஸ் கட்சியானது ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் லட்சத்தீவுகள், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
  • 2014 தேர்தலில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றதைப் போல் இந்த ஆண்டுத் தேர்தலில் 4 பேர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • அதிகபட்சமாக 1957 ஆம் ஆண்டில் 42 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், அதனையடுத்த அதிகபட்சமாக 1952 ஆம் ஆண்டில் 37 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
  • 303 உறுப்பினர்களுடன் பாஜகவானது இதுவரையல்லாத அளவில் அதிகபட்ச மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • தேர்தலில் வெற்றி பெற்ற 16 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியானது மொத்தமுள்ள 545 இடங்களில் 358 இடங்களை கைப்பற்றியது.
  • இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியானது 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது 91 இடங்களிலும் மற்ற கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும் 98 இடங்களிலும் வெற்றி பெற்றன.

  • 397 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 303 பேர் பாஜகவிலிருந்தும் 52 பேர் காங்கிரஸிலிருந்தும் 22 பேர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
  • மாநிலக் கட்சிகளான திமுக (23) மற்றும் YSR காங்கிரஸ் (22) ஆகியவை அதிக இடங்களில் வெற்றி பெற்றன.
  • 2014 ஆம் ஆண்டைப் போலவே, இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் மக்களவையில் இல்லை.
  • இந்த தகுதியைப் பெற மிகப்பெரிய எதிர்க்கட்சியானது குறைந்தபட்சமாக 10% (55) இடங்களில் வெற்றி பெறுதல் அவசியமாகும்.

 

சிறப்புத் தகவல்கள்
  • 267 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • கலைக்கப்பட்ட மக்களவையிலிருந்து 20 பேர் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • மேலும் 45 பேர் முன்னாள் மக்களவை உறுப்பினர்களாவர்.
  • 43 சதவீத மக்களவை உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • 2009 ஆம் ஆண்டிலிருந்து குற்றவியல் வழக்கு தொடர்புடைய மக்களவை உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அது 44% அதிகரித்துள்ளது.
  • புதிய மக்களவை உறுப்பினர்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 20.9 கோடி ரூபாயாகும்.
  • மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 54 ஆண்டுகளாகும்.
  • இதில் 12% பேர் 40 வயதிற்கும் குறைந்தவர்களாவர்.
  • 716 பெண் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
  • இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பெண் உறுப்பினர்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா 11 பேர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • பெண்கள் விகிதம் ஒட்டுமொத்தக் கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 14.6% ஆகும்.

  • 2014 ஆம் ஆண்டில் 62 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • முதல் மக்களவையில் 5% ஆக இருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து தற்போது 14% ஆக உள்ளது.
  • இதுவே பெண் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

  • நமது மக்களவையில் பல ஆண்டுகளாக பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தப் போதிலும் ருவாண்டா (61%) தென்னாப்பிரிக்கா (43%), ஐக்கியப் பேரரசு (32%), அமெரிக்கா (24%), வங்காள தேசம் (21%) போன்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவே உள்ளது.
  • ஒடிசாவின் கியோஞ்சிஹர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற பழங்குடியினப் பெண்ணான சந்திராணி முர்மு புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இவர் தனது 25 வயது 11 மாதத்தில் வெற்றி பெற்று மிகவும் இள வயது மக்களவை உறுப்பினராக ஆகியுள்ளார்.

 

சாதி மற்றும் மதம்
  • 6 சதவீத பாஜக உறுப்பினர்கள் இந்துக்களாக இருப்பதால் ஒட்டுமொத்தமாக 17வது மக்களவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்களாவர்.

  • இஸ்லாமியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எண்ணிக்கையை 23-லிருந்து இந்த மக்களவையில் 27 ஆக உயர்த்தியிருக்கின்றனர்.

 

கல்வித் தகுதி மற்றும் தொழில்
  • கல்வித் தகுதிகளின் அடிப்படையில் 67% உறுப்பினர்கள் பட்டதாரிகள் அல்லது முதுகலைப் பட்டதாரிகளாவர். மேலும் 4% உறுப்பினர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களாவர்.
  • 27% உறுப்பினர்கள் 12 ஆம் வரை மட்டுமே படித்துள்ளனர்.
  • 394 உறுப்பினர்கள் இளநிலைப் பட்டதாரிகளாவர்.

  • 39% உறுப்பினர்கள் தங்கள் தொழிலை அரசியல் அல்லது சமூக சேவை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
  • பட்டியலிடப்பட்ட இரண்டாவதுப் பொதுவான தொழில் விவசாயமாகும். இதில் 23% பேர் ஈடுபட்டுள்னர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 உறுப்பினர்களில் பாஜகவின் சாத்வி பிரக்யா சிங் தாகூரின் தொழில் மிகவும் சுவாரஸ்மானது. இவர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த தனது உறுதியளிப்புச் சான்றிதழில் “சந்நியாசி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பதவியேற்பு விழா
  • பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

  • 2014 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

முந்தையத் தேர்தல் தகவல்கள்
  • 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை சோதனை ஆனது குஜராத்தின் 8 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் NOTA வசதியானது முதன்முதலில் மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது.
  • முதல் மக்களவைத் தேர்தலானது 489 இடங்களுடன் நடத்தப்பட்டது. பின்னர் 1977 ஆம் ஆண்டுத் தொகுதிகளின் எண்ணிக்கையானது 543 ஆக உயர்த்தப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தேர்தல் ஆணையமானது ஆசியச் சிங்கங்களின் தாயகமான குஜராத்தின் கிர் காட்டில் ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியை அமைத்திருந்தது.
  • 2009 ஆம் ஆண்டில் முதல்முறையாக தேர்தல் ஆணையமானது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் வரைவுப் பட்டியலை உருவாக்கியது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்