TNPSC Thervupettagam

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 02

October 1 , 2024 65 days 286 0

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 02

(For English version to this please click here)

தென் மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன்

கர்நாடகா

  • ஆரம்ப காலப் பங்கு: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்கானது 1960-61 ஆம் ஆண்டில் 5.4% ஆக இருந்தது என்பதோடு, மேலும் இந்தப் பங்குகள் 1990-91 வரை நிலையானதாக இருந்தது.
  • தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய வளர்ச்சி: தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, கர்நாடகா விரைவான வளர்ச்சியைக் கண்டது:
  • 2000-01: GDP இன் பங்கு 6.2% ஆக அதிகரித்தது.
  • 2023-24: மேலும் GDP இன் பங்கு 8.2% ஆக உயர்ந்து, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக கர்நாடக மாநிலத்தை நிலைநிறுத்தியது.

பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம்

  • தற்போதைய பங்கு: 2023-24 வரை, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் பங்கானது (தெலுங்கானா உட்பட) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7% ஆகும்.
  • 1990-91 முதல் வளர்ச்சி:
  • இது 1990-91 முதல் 2.1 சதவீதப் புள்ளிகள் பெற்று வளர்ச்சியினைக் குறிக்கிறது.
  • இந்த வளர்ச்சி பெரும்பாலும் தெலங்கானாவின் பொருளாதார செயல்திறனைக் குறிக்கிறது.
  • பிரிக்கப் பட்டதற்குப் பிறகு நிலைத் தன்மை:
  • பிரிக்கப் பட்டதற்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசத்தின் பங்கு பெரும்பாலும் நிலையாகவே இருக்கிறது.

தமிழ்நாடு

  • சரிவிலிருந்து மீண்டது: தமிழ்நாடு 1991 ஆம் ஆண்டிற்கு முந்தைய GDP சரிவை, தனது GDP பங்கை அதிகரிப்பதன் மூலம் மாற்றி அமைத்தது.
  • 1990 - 91: 7.1% ஆக இருந்தது.
  • 2023 - 24: வளர்ச்சி விகிதம் 8.9% ஆக உள்ளது என்பது, வெற்றிகரமான தொழில்துறை மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது.

கேரளா

  • ஆரம்ப வளர்ச்சி மற்றும் சமீபத்திய சரிவு: 1960-61 ஆம் ஆண்டில் 3.4% ஆக இருந்த கேரளாவின் பங்கு 2000-01 ஆம் ஆண்டில் 4.1% ஆக உயர்ந்தது.
  • தற்போதையப் பங்கு: 2023-24 ஆம் ஆண்டிற்குள், இது 3.8% ஆகக் குறைந்துள்ளது, மேலும் இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவைச் சந்திக்கும் ஒரே தென் மாநிலமாக உள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம்

குஜராத் மற்றும் டெல்லியின் பொருளாதார வளர்ச்சி

குஜராத்

  • வரலாற்றுப் பங்கு: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு 1960-61 ஆம் ஆண்டில் 5.8% ஆக இருந்தது, மேலும் 1970-71 ஆம் ஆண்டில் இதன் பங்கு 6.7% ஆக அதிகரித்தது.
  • தேக்கம் மற்றும் வளர்ச்சி: 2000-01 வரை ஒப்பீட்டளவில் சமமாக இருந்த பிறகு, குஜராத்தின் பொருளாதாரப் பங்கு வேகமாக உயரத் தொடங்கியது என்பதோடு இது 2022-23 ஆம் ஆண்டில் 8.1% ஐ எட்டியது.
  • அமைப்பு: குறிப்பிடத்தக்க வகையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா 1960 ஆம் ஆண்டு வரை ஒன்றாக பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
  • மகாராஷ்டிரா தனது பொருளாதாரப் பங்கைத் தக்க வைத்துக் கொண்டாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் குஜராத் அதன் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முன்பு ஒரு தேக்க நிலையை அடைந்திருந்தது.

டெல்லி

  • ஈர்க்கக்கூடிய வளர்ச்சி: அளவில் சிறிதாக இருந்தபோதிலும், தில்லி அதன் பொருளாதாரப் பங்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, என்பதோடு 1960-61 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4% ஆக இருந்து 2023 ஆம் ஆண்டில் 3.6% ஆக உயர்ந்துள்ளது.
  • இது அதன் பொருளாதார உற்பத்தியை ஹரியானா மற்றும் கேரளா போன்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகிறது என்பதோடு இது டெல்லியின் விரைவான நகர்ப்புற மற்றும் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

ஒப்பீட்டுத் தனிநபர் வருமானம்

  • தனிநபர் வருமானம் என்பது தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, ஒரு மாநிலத்திற்குள் தனி நபர்களின் பொருளாதார நலனை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான குறிகாட்டியாகும்.

1960-61 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம்

  • டெல்லி: பெரிய மாநிலங்களில் பெரும் பணக்காரர், தனிநபர் வருமானம் ஆகியன தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • மகாராஷ்டிரா: தேசிய சராசரியில் 133.7% தனிநபர் வருமானத்துடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மேற்கு வங்காளம்:
  • தனிநபர் வருவாயில் 127.5% கொண்டு, மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இது குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை விட அதிகமாகும்.
  • பஞ்சாப்: தனிநபர் வருமானம் 119.6% கொண்டு, நான்காவது இடத்தில் உள்ளது.
  • குஜராத்: தனிநபர் வருமானம் 118.3% கொண்டு, ஐந்தாவது இடத்தில் உள்ளது.

குறைவான ஒப்பீட்டுத் தனிநபர் வருமானம்

  • பீகார் மற்றும் ஒடிசா: இவ்விரு மாநிலங்களும் மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தன என்பதோடு இது தேசியச் சராசரியில் தோராயமாக 70-71%, குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சவால்களைப் பிரதிபலிக்கிறது.

தனிநபர் வருமானத்தின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு: மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பல தசாப்தங்களாக வலுவான பொருளாதாரச் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்பதோடு 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து தங்கள் தனிநபர் வருமானத்தினை தேசியச் சராசரியை விட அதிகமாக நிலைநிறுத்தியுள்ளது.
  • இருப்பினும் குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் அவற்றின் பாதைகள் கணிசமாக வேறுபட்டு உள்ளன.

வரலாற்றுத் தனிநபர் வருமானத்தின் செயல்திறன்

1960-61

  • மகாராஷ்டிரா: தேசிய சராசரியின் 133.7% தனிநபர் வருமானத்தைக் கொண்டு, அதைப் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது.
  • குஜராத்: தனிநபர் வருமானம் 118.3% உடன் பின்தங்கியுள்ளது, இது இரு மாநிலங்களுக்கு இடையே கணிசமான பொருளாதார இடைவெளியைக் குறிக்கிறது.

1970 ஆம்  ஆண்டு மு தல் 2000-01 ஆம் ஆண்டு வரை

  • குஜராத்தின் சரிவு: 1970களின் போது, ​​குஜராத்தின் தனிநபர் வருமானம் குறைந்து 2000-01 வரை ஒப்பீட்டளவில் சமமாக இருந்தது என்பதோடு இது தேசியச் சராசரியை விட 100% அதிகமாக இருந்தது.
  • இந்த தேக்க நிலையானது, இந்த காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

2000-01 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய எழுச்சி

  • குஜராத்தின் மீள் எழுச்சி: 2000-01 ஆம் ஆண்டில் தொடங்கி, வலுவான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி உத்திகளால், உந்த ப்பட்ட தனிநபர் வருமானத்தில் குஜராத் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கொண்டிருந்தது.
  • சமீபத்தியத் தரவுகளின்படி தற்போதைய மதிப்புகள்:
  • குஜராத்: தனிநபர் வருமானமானது, தேசிய சராசரியில் 160.7% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிரா: தனிநபர் வருமானமானது, தேசிய சராசரியில் 150.7% ஆக உள்ளது.

பொருளாதாரச் செயல்திறன் மற்றும் தனிநபர் வருமானம்: டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

  • டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பொருளாதாரப் பாதைகள் தனிநபர் வருமானம் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதார ஆரோக்கியம் ஆகியவற்றில், குறிப்பாக சமீபத்தியத் தசாப்தங்களில் குறிப்பிடத் தக்க வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றது.

தனிநபர் வருமானத்தின் போக்குகள்

டெல்லி

  • வரலாற்று அமைப்பு: 1960களில் இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவிலான தனிநபர் வருமானம் டெல்லியில் இருந்தது.
  • சமீபத்திய வளர்ச்சி: சில ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், டெல்லியின் தனிநபர் வருமானம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • தற்போதைய நிலை: 2023-24 நிலவரப்படி, டெல்லியின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் 250.8% ஆக உள்ளது, அதாவது டெல்லியின் சராசரி வருமானம் சராசரி இந்தியரை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
  • இருப்பினும், இப்போது சிக்கிம் மற்றும் கோவாவால் இது முறியடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம்

  • ஆரம்ப வெற்றி: மேற்கு வங்கம் 1960-61 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது, இது தேசிய சராசரியை விட 27% வருமானம் அதிகமாக இருந்தது.
  • சரிவு: 1980-81 வாக்கில், மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசியச் சராசரியை விடக் குறைந்து விட்டது, மேலும் இது குறிப்பிடத்தக்கப் பொருளாதாரச் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
  • 1990-91 தரவு: மேற்கு வங்காளத்தின் தனிநபர் வருமானமானது, தேசியச் சராசரியில் 82.4% ஆக இருந்தது, அடுத்த பத்தாண்டுகளில் சுருக்கமான மீட்சிக்குப் பிறகு மேலும் சரிவைக் கண்டது.
  • தற்போதைய நிலை: 2023-24 நிலவரப்படி, மேற்கு வங்காளத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் 83.7% ஆகும் என்பதோடு இது 1960-61 ஆம் ஆண்டை விடக் குறைவாக உள்ளது, இது மாநிலத்தின் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களைப் பிரதிபலிக்கிறது.

ஒடிசா

  • வரலாற்று அமைப்பு: பாரம்பரியமாக பின்தங்கிய ஒரு மாநிலமாக பார்க்கப்படும் ஒடிசா 2000 களில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
  • குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: ஒடிசாவின் தனிநபர் வருமானம் 2000-01 ஆம் ஆண்டில் 55.8% ஆக இருந்து, 2023-24 ஆம் ஆண்டில் 88.5% ஆக அதிகரித்துள்ளது.
  • இது தேசிய சராசரிக்குக் கீழே இருந்தாலும், இந்த வளர்ச்சியானது இரண்டு தசாப்தங்களில் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • மேற்கு வங்காளத்துடன் ஒப்பிடுதல்: மேற்கு வங்காளத்தின் தனிநபர் வருமானமானது, ஒடிசாவை விட இப்போது குறைவாக உள்ளது.

பொருளாதார செயல்திறன் மற்றும் தனிநபர் வருமானம்: அசாம், பஞ்சாப் மற்றும் ஹரியானா

  • அஸ்ஸாம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொருளாதாரப் பாதைகள், வரலாற்றுக் கொள்கைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சிகள், குறிப்பாக தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பல்வேறு விளைவுகளைப் பிரதிபலிக்கின்றன.

தனிநபர் வருமானப் போக்குகள்

அசாம்

  • 1960-61 அமைப்பு: 1960-61 ஆம் ஆண்டில், அசாமின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட சற்று அதிகமாக, அதாவது 103% ஆக இருந்தது.
  • சரிவு: அடுத்த தசாப்தங்களில், அசாமின் தனிநபர் வருமானம் சீராக குறைந்து, 2010-11 ஆம் ஆண்டில் 61.2% என்ற குறைந்த நிலையை எட்டியது.
  • சமீபத்திய மீட்சி: அதன் பின்னர், அஸ்ஸாம் ஒரு மறுமலர்ச்சியை கண்ட வகையில், அதன் தனிநபர் வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் 73.7% ஆக உயர்ந்துள்ளது என்பதோடு இது பொருளாதாரச் செயல்திறனில் ஒரு சாதகமான திருப்பத்தைக் குறிக்கிறது.

பஞ்சாப்

  • ஆரம்ப வளர்ச்சி: 1960களில் பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து, பஞ்சாப்பின் தனிநபர் வருமானத்தில் விரைவான அதிகரிப்பைக் கண்டது என்பதோடு, 1960-61 ஆம் ஆண்டில் தேசிய சராசரியின் 119.6% இல் இருந்து, 1970-71 ஆம் ஆண்டில் 169% ஆக உயர்ந்தது.
  • ஹரியானாவிலிருந்து விலகல்: இருப்பினும், இந்தப் பிரிவினை காலகட்டத்திற்குப் பிறகு, பஞ்சாபின் பொருளாதாரப் பாதை ஹரியானாவிலிருந்து கணிசமாக வேறுபடத் தொடங்கியது.
  • 1980-81 வாக்கில், பஞ்சாபின் தனிநபர் வருமானம் 146.1% ஆகக் குறைந்து, 2000-01 ஆம் ஆண்டு வரை ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது.
  • சமீபத்திய சரிவு: 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பஞ்சாபின் தனிநபர் வருமானம் மீண்டும் குறையத் தொடங்கிய நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் தேசிய சராசரியில் 106.7% மட்டுமே எட்டியது என்பதோடு, இது 1960-61 ஆம் ஆண்டில் இருந்த அளவை விடவும் குறைவானதாகும்.
  • இந்தத் தேக்கம், பசுமைப் புரட்சியின் ஆரம்ப ஆதாயங்களுக்கு அப்பால் குறிப்பிடத்தக்கப் பொருளாதார உந்துதல் அல்லது GSDP வளர்ச்சியின் பற்றாக்குறையைப் பிரதிபலிக்கிறது.

ஹரியானா

  • வலுவான செயல்திறன்: பஞ்சாப்பைப் போலவே, ஹரியானாவும் பசுமைப் புரட்சியால் பயனடைந்தது என்ற நிலையில், 1960-61 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 106.9% ஆக இருந்து 1970-71 ஆம் ஆண்டில் 138.5% ஆக உயர்ந்தது.
  • தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய வளர்ச்சி: 1990-91 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஹரியானாவின் தனிநபர் வருமானம் வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் அது அதன் வெற்றிகரமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி உத்திகளைப் பிரதிபலிக்கிறது.
  • தற்போதைய நிலை: 2023-24 வாக்கில், ஹரியானாவின் தனிநபர் வருமானம் 176.8% ஐ எட்டியது, என்பதோடு அது டெல்லி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பெரிய மாநிலங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

தென்னிந்தியாவின் முக்கியப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் போக்குகள்

  • தென் மாநிலங்கள் பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளன.
  • 1960-61 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% ஆக இருந்த கர்நாடக மாநிலம், தாராளமயமாக்கலுக்குப் பிறகு செழித்து, 2023-24 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 8.2% ஆக உயர்ந்துள்ளது.
  • தெலுங்கானாவின் வளர்ச்சியால் பயனடைகிறது என்ற வகையில் பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் 9.7% என்ற வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு 8.9% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு மீட்சியடைந்துள்ளது என்ற நிலையில் கேரளாவின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக சரிந்தது.
  • இந்த மாறுபாடுகள் தெற்கின் பொருளாதார நிலப்பரப்பில் தனித்துவமான பிராந்தியப் பலங்களையும், சவால்களையும் பிரதிபலிக்கிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்