TNPSC Thervupettagam

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 01

September 27 , 2024 69 days 512 0

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 01

(For English version to this please click here)

மீள்பார்வை

  • இந்தக் கட்டுரை 1991 பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்திய மாநிலங்களின் ஒப்பீட்டளவில் பொருளாதாரச் செயல்திறனை ஆராய்கிறது.
  • இது இரண்டு முதன்மைக் குறிகாட்டிகளில் கவனம் செலுத்துகிறது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு மற்றும் தனிநபர் வருமானம்.
  • 1960-61 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த பகுப்பாய்வு, மாநில வாரியாக-குறிப்பிட்டக் கொள்கைகள் மற்றும் தேசியச் சீர்திருத்தங்கள் பல்வேறு பிராந்தியங்களில் வளர்ச்சிப் பாதைகளை எவ்வாறு வடிவமைத்துள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பகுப்பாய்வுக் கட்டமைப்பு

பொருளாதாரச் செயல்திறன் குறிகாட்டிகள்

1. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலப் பங்கு

  • வரையறை: ஒரு மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) விகிதம் அனைத்து மாநிலங்களின் GSDPயின் கூட்டுத் தொகை.
  • நோக்கம்: இது மாநிலங்களின் ஒப்பீட்டுப் பொருளாதார முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • நிலைத்தன்மை குறிப்பு: குறிப்பாக முந்தைய தசாப்தங்களில் தேசிய GDP மதிப்பீடுகளுக்கும், மாநில GSDPயின் கூட்டுத் தொகைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன.
  • அனைத்து மாநிலங்களின் GSDPயின் கூட்டுத் தொகையானது, அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் நிலைத்தன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

2. தனிநபர் வருமானம்

  • வரையறை: மாநிலத்தின் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியின் (NSDP) மொத்த இந்திய தனிநபர் வருமானம் நிகர தேசிய உற்பத்தி (NNP) அல்லது தனிநபர் நிகர தேசிய வருமானம் (NNI).
  • தரவு பரிசீலனை: மாநிலங்களின் தனிநபர் வருமானம் NSDP என குறிப்பிடப்படுகிறது.
  • இந்த நடவடிக்கை கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களைக் கணிசமாகப் பாதிக்கும் பணப் பரிமாற்றத்தை கணக்கில் எடுக்காது.

வரலாற்றுச் சூழல் மற்றும் தரவு கிடைக்கும் தன்மை

பகுப்பாய்விற்கான தொடக்கப் புள்ளி

  • ஆண்டு: இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய ஒப்பிடக் கூடிய மாநில அளவிலான தரவுகள் இல்லாததால் 1960 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு தொடங்குகிறது.

வரலாற்றுத் தரவுத் தொகுப்பு

  • ஆரம்ப மதிப்பீடுகள்: 1948-49 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ மாநில GDP மதிப்பீடுகளை 1950 ஆம் ஆண்டில் தொகுத்த முதல் மாநிலம் பம்பாய் மாநிலம் ஆகும்.

அடுத்தடுத்த வளர்ச்சிகள்:

  • 1951 மற்றும் 1954 ஆம் ஆண்டு தேசிய வருமானக் குழு அறிக்கைகள் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை மதிப்பீடுகளைத் தொகுக்கத் தூண்டியது.
  • இதற்கான முறைகள் கணிசமாக வேறுபடுகின்றன என்பதனால் ஆரம்பத் தரவுகளை இதில் ஒப்பிட முடியாது.
  • தரநிலைப்படுத்தல் முயற்சிகள்: 1957 ஆம் ஆண்டு மத்தியப் புள்ளியியல் அலுவலகத்தால் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியை தொகுப்பதற்கான வழிமுறைகளைத் தரப்படுத்தத் தொடங்கியது.

மாநில எல்லைகள்

  • சரி செய்தல்: பகுப்பாய்வின் போது, ​​குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றில் மாநில எல்லைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கான தரவுகளை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தரவு ஆதாரம்

  • ஆதாரம்: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI).

இந்தியாவின் பொருளாதாரத்தில் பங்குகள்

தாராளமயமாக்கலுக்குப் பிந்தையப் பொருளாதாரச் செயல்திறன்

  • கர்நாடகம்: நடுத்தர மாநிலத்திலிருந்து வலுவான செயல்திறன் கொண்ட மாநிலமாக மாறியது.
  • பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம்: அதன் பொருளாதார நிலையில் மிகவும் கணிசமான ஒரு முன்னேற்றம் கண்டுள்ளது.

தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்கள்

  • மகாராஷ்டிரா: பல ஆண்டுகளாக நிலையான பொருளாதார செயல்திறன் கொண்ட மாநிலமாக உள்ளது.
  • குஜராத்: தனது வலுவான பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • டெல்லி: தொடர்ந்து பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • ஹரியானா: சீரான வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் கொண்ட மாநிலமாக உள்ளது.

குறைந்த செயல்திறன்

  • மேற்கு வங்கம்: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பொருளாதாரச் செயல்பாட்டில் தொடர் சரிவைச் சந்தித்துள்ளது.

1960களில் வரலாற்றுப் பொருளாதாரப் பங்குகள்

  • 1960களில், இந்தியாவின் மொத்த GDP-யில் பல மாநிலங்கள் குறிப்பிடத்தக்கப் பங்குகளை வைத்திருந்தன:
  • உத்தரப் பிரதேசம் (பிரிக்கப்படாதது): இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 14.4% பங்கினைக் கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிரா: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.5% பங்கினைக் கொண்டுள்ளது.
  • மேற்கு வங்காளம்: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5% பங்கினைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு: நான்காவது அதிகபட்சப் பங்குகளை வைத்திருந்தது.
  • பீகார் (பிரிக்கப் படாதது): மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8%, இது குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களை விட அதிகம் ஆகும்.

முக்கிய மாநிலங்களின் மொத்தப் பங்களிப்பு

  • இந்த ஐந்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த பொருளாதாரப் பங்களிப்பு 1960 களின் முற்பகுதியில் இந்தியாவின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 54% ஆக இருந்தது.

  • இந்தியாவின் சுதந்திரத்தின் போது, ​​மூன்று பிரசிடென்சி நகரங்கள் - பம்பாய், கல்கத்தா மற்றும் மதராஸ் - நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை தொகுப்புகளைச் செயல்படுத்தியது.
  • இந்தத் தொழில்துறை அடித்தளம் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை 1960 களின் முன்னணி பொருளாதார சக்திகளாக நிலைநிறுத்தியது.
  • இருப்பினும், அதன் பின்னர் அந்த மாநிலங்களின் பொருளாதாரப் பாதைகள் கணிசமாக வேறுபட்டன.

பொருளாதாரச் செயல்திறன் மீள்பார்வை

மகாராஷ்டிரா

  • நிலையான வளர்ச்சி: சுதந்திரத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மிக நிலையான பொருளாதாரச் செயல்திறனைப் பேணி வருகிறது.
  • தற்போதையப் பங்கு: கடந்த தசாப்தத்தில் அதன் GDP பங்கில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், அனைத்து இந்திய மாநிலங்களுக்கிடையில், அந்த மாநிலம் தொடர்ந்து அதிக பங்கைக் கொண்டுள்ளது.

மேற்கு வங்காளம்

  • வீழ்ச்சிப் பாதை: மேற்கு வங்கம் அதன் பொருளாதாரப் பங்கில் 1960களில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.
  • இந்த கீழ்நோக்கியப் போக்கு 1991 பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகும் நீடித்தது.
  • தற்போதையப் பங்கு: 2023-24 வாக்கில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்கு வெறும் 5.6% ஆகக் குறைந்தது.
  • 1960-61 ஆம் ஆண்டில் 10.5% ஆக இருந்த இந்த சரிவு குறிப்பிடத்தக்கது.
  • இது இந்திய மாநிலங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவைக் குறிக்கிறது.

தமிழ்நாடு

  • ஆரம்பச் சரிவு மற்றும் மீட்சி: 1960-61 ஆம் ஆண்டில் 8.7% ஆக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரப் பங்கு 1990-91 ஆம் ஆண்டில் 7.1% ஆக குறைந்தது.
  • இருப்பினும், 1991 தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்த மாநிலம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தைச் சந்தித்தது.
  • தற்போதையப் பங்கு: 2023-24 வாக்கில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 8.9% ஆக உயர்ந்துள்ளது என்பது இது வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது.

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் பொருளாதாரப் பாதைகள்

  • 1960களில் இந்தியாவின் முதல் ஐந்து பொருளாதார ஆற்றல் மையங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் இருந்தன.
  • இருப்பினும், இரு மாநிலங்களும் பல தசாப்தங்களாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் பங்குகளில் குறிப்பிடத் தக்கச் சரிவைச் சந்தித்துள்ளன.

பீகார்

  • தொடக்கப் பங்கு: 1960-61 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத பீகார் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% பங்களித்தது.
  • சரிவு காலம்: 2000-01 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.3 - 4.4% என்ற குறைந்தபட்ச நிலையை எட்டும் வரை மாநிலத்தின் பங்கு நான்கு தசாப்தங்களாக நிலையான சரிவைச் சந்தித்துள்ளது.
  • உறுதிப்படுத்தல்: 2000-01 ஆம் ஆண்டு முதல், பீகாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 4.3-4.4% வரம்பில் நிலை பெற்றுள்ளது என்பது இது முந்தைய கீழ்நோக்கிய ஒரு போக்கின் நிறுத்தத்தைக் குறிக்கிறது.

உத்தரப் பிரதேசம்

  • தொடக்கப் பங்கு: 1960-61 இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரிக்கப்படாத உத்தரப் பிரதேசம் 14.4% பங்கைக் கொண்டிருந்தது.
  • சரிவு: 2020-21 ஆம் ஆண்டில், இந்த பங்கு 9.3% ஆக குறைந்துள்ளது.
  • 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு சரிவு விகிதம் குறைந்தாலும், சமீப ஆண்டுகளில் இந்தப் பங்கு சிறிதளவு முன்னேற்றங்களைக் காட்டத் தொடங்கியது என்ற நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் இதன் பங்கு 9.5% ஆக இருந்தது.

பிரிவினை மற்றும் தற்போதையப் போக்குகள்

  • இந்த மாநிலங்களின் போக்குகள் தற்போதைய பிரிவுகளைப் பார்க்கும் போது அவை சீராகவே இருக்கின்றன.

உத்தரப் பிரதேசம் (பிரிவினைக்குப் பின்)

  • 2000-01 பங்கு: பிரிவினைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் பங்கு 2000-01 ஆம் ஆண்டில் 10.2% ஆக இருந்தது.
  • சரிவு: இந்தப் பங்கு 2010-11 ஆம் ஆண்டில் 8.7% ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் 8.2% ஆகவும் குறைந்தது.
  • இருப்பினும், சமீபத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதோடு 2023-24 ஆம் ஆண்டில் இதன் பங்கு 8.4% என்ற அளவை எட்டியது.

பீகார் (பிரிவினைக்குப் பின்)

  • 2000-01 பங்கு: ஜார்க்கண்டில் இருந்து பிரிந்த பிறகு, பீகாரின் பங்கு 2000-01 ஆம் ஆண்டில் 2.8% ஆக இருந்தது.
  • தேக்க நிலை: அப்போதிருந்து, பீகாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு, ஒப்பீட்டளவில் நிலையாக உள்ளது என்பது மேலும் சிறிய மாற்றத்தை மட்டுமே காட்டியுள்ளது.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் பொருளாதாரச் செயல்திறனில் நடந்து வரும் போக்குகள் இந்தியாவின் பிராந்திய பொருளாதார மாற்றங்களின் பரந்த விவரிப்பைப் பிரதிபலிக்கின்றன.
  • GDP பங்களிப்புகளில் ஒரு காலத்தில் முதன்மையாக இருந்த இந்த இரு மாநிலங்களும், பல தசாப்தங்களாக தங்கள் வளர்ச்சிப் பாதையை பாதித்த சவால்களை எதிர்கொண்டுள்ளன.

பொருளாதார வீழ்ச்சியின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு

பீகாரின் சரிவு மற்றும் நிலைப்படுத்துதல்:

  • நான்கு தசாப்தங்களாக சரிவைச் சந்தித்த பிறகு, பீகாரின் பங்கு தோராயமாக 4.3 - 4.4% ஆக நிலை பெற்றுள்ளது.
  • இந்தத் தேக்க நிலை, அரசு தனது கடந்த கால முக்கியத்துவத்தை மீண்டும் பெறாத நிலையில், பொருளாதாரச் செயல்பாடுகளை மேலும் சீரழிக்காமல் தக்க வைத்துக் கொள்ளும் நிலையைக் கண்டறிந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சரிவு மற்றும் சமீபத்திய மேம்பாடுகள்:

  • 1960-61 ஆம் ஆண்டில் 14.4% ஆக இருந்த உத்தரப் பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பொருளாதாரச் சரிவு, 2023-24 ஆம் ஆண்டில் 9.5% ஆக இருப்பது சிக்கலானப் பொருளாதார சவால்களைக் குறிக்கிறது.
  • சமீபத்திய ஆண்டுகளில் மாநிலத்தின் சிறு முன்னேற்றங்கள், 8.4% என்ற அளவை எட்டியுள்ளது, என்பதோடு மேலும் சாத்தியமான வளர்ச்சி உத்திகள் மெதுவாக இருந்தாலும் அவை நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

பிரிவினையின் தாக்கங்கள்

  • இந்த மாநிலங்களின் பிளவு பல்வேறு பொருளாதார நிலப்பரப்புகளுக்கு வழிவகுத்தது:
  • உத்தரப்பிரதேசம்: இந்தப் பிரிவினையானது கவனம் செலுத்திய நிர்வாகத்தை அனுமதித்தாலும், பொருளாதார வீழ்ச்சியின் நீடித்த விளைவுகள் அதன் பங்கில் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.
  • பீகார்: பீகார் ஜார்க்கண்டில் இருந்து பிரிந்ததால், ஆரம்பத்தில் பீகாரில் ஜிடிபியின் பங்கு கணிசமாகக் குறைந்தது, மேலும் பொருளாதார வேகத்தை மீண்டும் பெறுவதற்கான அதன் போராட்டம், இலக்கு வளர்ச்சி முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் மாறுபட்ட பொருளாதாரப் பாதைகள்

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில், ஒரே மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் மாறுபட்ட பாதைகளைக் கொண்டுள்ளன.
  • பல தசாப்தங்களாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அந்த மாநிலங்களின் பங்களிப்புகளில் இந்த வேறுபாடு குறிப்பாகத் தெரிகிறது.

வரலாற்றுப் பொருளாதாரச் செயல்திறன்

ஆரம்பப் பங்குகள் (1960-61)

  • பஞ்சாப்: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2% பங்கைக் கொண்டுள்ளது.
  • ஹரியானா: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% பங்கைக் கொண்டுள்ளது.

பசுமைப் புரட்சியின் தாக்கம்

  • பசுமைப் புரட்சியானது இரண்டு மாநிலங்களிலும் விவசாய உற்பத்தியைக் கணிசமாக உயர்த்தியது:
  • பஞ்சாப்: 1970-71 ஆம் ஆண்டில் பங்கினை 4.4% ஆக அதிகரித்தது.
  • ஹரியானா: 1970-71 ஆம் ஆண்டில் பங்கு 2.7% ஆக உயர்ந்தது.

பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய மாறுபட்டப் போக்குகள்

  • பஞ்சாப்
  • பீடபூமி பங்கு: ஆரம்ப கால ஊக்கத்திற்குப் பிறகு, பஞ்சாபின் GDP பங்கு, இரண்டு தசாப்தங்களாக 4.3 - 4.4% அளவில் இருந்தது.
  • சரிவு: 1990-91 ஆம் ஆண்டில் தொடங்கி, பஞ்சாபின் பங்கு படிப்படியாக குறையத் தொடங்கியது, 2023-24 ஆம் ஆண்டில் 2.4% ஐ எட்டியது.
  • இந்த சரிவு பல்வகைப்படுத்தல் மற்றும் விவசாய நிலைத்தன்மையில் உள்ள சிக்கல்கள் உட்பட, மாநிலம் எதிர்கொள்ளும் பல்வேறு பொருளாதாரச் சவால்களைப் பிரதிபலிக்கிறது.

ஹரியானா

  • நிலையான வளர்ச்சி: இதற்கு மாறாக, பசுமைப் புரட்சிக்குப் பிறகு ஹரியானாவின் பொருளாதாரப் பங்கு தொடர்ந்து உயர்ந்து வந்தது.
  • தற்போதையப் பங்கு: 2023-24 ஆம் ஆண்டில், ஹரியானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 3.6% ஆக இருந்தது.
  • 2010-11 ஆம் ஆண்டில் இருந்து ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானதாக இருந்தாலும், இந்த மாநிலத்தின் வளர்ச்சிப் பாதை நெகிழ்ச்சி மற்றும் தகவமைப்புத் தன்மையைக் குறிக்கிறது.
  • குருகிராமின் பங்கு: ஒரு பெரிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையமாக குருகிராமின் வெற்றி, ஹரியானாவின் அதிகரித்து வரும் GDP பங்கிற்கு கணிசமாகப் பங்களித்திருக்கலாம்.

மாச்சலப் பிரதேசம்

  • ஆரம்பப் பங்கு: பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம், 1970-71 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% பங்கைக் கொண்டிருந்தது.
  • நிலைத்தன்மை: அதன் பங்கு பொதுவாக அதன் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கணிசமான பொருளாதார வளர்ச்சியின் பற்றாக்குறையைக் குறிக்கிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்