TNPSC Thervupettagam

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 03

October 4 , 2024 99 days 311 0

1991க்குப் பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி பாகம் – 03

(For English version to this please click here)

பொருளாதாரச் செயல்திறன் மற்றும் தனிநபர் வருமானம்: தென் மாநிலங்கள்

  • இந்தியாவின் தென் மாநிலங்கள் 1990களில் இருந்து தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கின்றன.
  • இந்த வளர்ச்சியானது வலுவான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளால் எளிதாக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் தனிநபர் வருமானப் போக்குகள்

வரலாற்றுச் சூழல்

  • 1990-91 அடிப்படை ஆண்டு: 1990-91 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட அனைத்து தென் மாநிலங்களிலும் தனிநபர் வருமானமானது, தேசிய சராசரியை விடக் குறைவாகவே இருந்தது, இதன் விளைவாக தனிநபர் வருமானம் 100க்கும் குறைவாக இருந்தது.

தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய வளர்ச்சி

  • தேசிய சராசரியைத் தாண்டியது: பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து முதல் தசாப்தத்தில், ஒவ்வொரு தென் மாநிலத்தின் தனிநபர் வருமானமும் தேசிய சராசரியை விட அதிகம் பெற்று, தொடர்ந்து வேகமாக உயர்ந்தது.

தற்போதைய தனிநபர் வருமானம்

  • தெலுங்கானா: தற்போது, ​​தெலுங்கானாவின் சராசரி வருமானம் தேசிய சராசரியில் 193.6% ஆக உள்ளது என்பது அதன் பிரிவினைக்குப் பிந்தைய அதன் குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
  • கர்நாடகா: தேசிய சராசரியின் 181% தனிநபர் வருவாயுடன் கர்நாடகா, சிறந்த செயல்திறன் மிக்க மாநிலங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு: நம் மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் 171% ஆக உள்ளது, இது வலுவான பொருளாதார ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • கேரளா: கேரளாவின் தனிநபர் வருமானம் 2023-24 ஆம் ஆண்டில், தேசிய சராசரியில் 152% ஆக அதிகரித்துள்ளது.

  • 1991 ஆம் ஆண்டு முதல், அயலகத்தில் இருந்து பணத்தைப் பெறும் ஒரு முக்கிய மாநிலமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை உண்மையான வருமான அளவைக் குறைத்து மதிப்பிடக் கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஆந்திரப் பிரதேசம்: பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசத்தின் தனிநபர் வருமானம் இப்போது 131.6% ஆக உள்ளது என்பதோடு இது தெலுங்கானாவுடன் ஒப்பிடும்போது மெதுவான வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • பீகாரின் பொருளாதாரச் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் மோசடைந்துள்ளது, என்பதோடு இது தொடர்ந்து இந்தியாவில் மிகக் குறைவான தனிநபர் வருமானத்தினை பதிவு செய்துள்ளது.
  • சில சமீபத்திய நிலைத் தன்மையை அடைந்தபோதிலும், பீகார் அதன் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது.

தனிநபர் வருமானப் போக்குகள்

வரலாற்றுச் சூழல்

  • ஆரம்ப நிலை: 1960-61 ஆம் ஆண்டில், பிரிவினைக்கு முந்தைய பீகாரின் தனிநபர் வருமானமானது, தேசிய சராசரியில் 70.3% என்ற அளவில் மிகக் குறைவாக இருந்தது.
  • சரிவு: இந்த எண்ணிக்கையானது அடுத்த தசாப்தங்களில் கடுமையாக மோசமடைந்தது, 2000-01 ஆம் ஆண்டில் 31.2% என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது என்பதோடு  இது அம்மாநிலத்தின் பிரிவினைகளின் விளைவுகளுடன் ஒத்துப் போகிறது.

சமீபத்திய மேம்பாடுகள்

  • பிரிவினைக்குப் பிந்தைய வளர்ச்சி: 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து, பீகாரின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தேசிய சராசரியை விட சற்று அதிகமாகவோ அல்லது ஒத்துப் போகும் அளவிற்கு உள்ளது.
  • இருப்பினும், இது தனிநபர் வருமான மட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப் படவில்லை.
  • நிலைப்படுத்தல்: ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிதமான முன்னேற்றத்திற்குப் பிறகு, பீகாரின் தனிநபர் வருமானம் 2000-01 ஆம் ஆண்டில் 31.2% இல் இருந்து, 2010-11 ஆம் ஆண்டில்  35.4% ஆக அதிகரித்தது.
  • தற்போது, ​​இது 33% ஆக உள்ளது என்ற நிலையில் இது ஒரு குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • தற்போதைய நிலை: அதாவது பீகாரில் உள்ள சராசரி நபரின் வருமானம், சராசரி இந்தியரை விட 77% குறைவாக உள்ளது.

பணத்தைப் பெறுதல் மற்றும் பொருளாதாரச் சூழல்

  • பணத்தைப் பெறுதலின் பங்கு: பணத்தைப் பெறுதலின் மூலம் குடும்ப வருமானத்தை ஓரளவு அதிகரிக்க முடியும் என்றாலும், தனிநபர் வருமானத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஏற்றத் தாழ்வானது தொடர்ச்சியான பொருளாதாரச் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • தேசிய சராசரியிலிருந்து வேறுபாடு: இந்தப் போக்கு தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது தனிநபர் வருமான அளவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் குறிக்கிறது என்பதோடு இது அம்மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றிய ஒரு கவலையோடு தொடர்புடையதாகும்.

பொருளாதாரச் செயல்திறன் மற்றும் தனிநபர் வருமானம்: உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்

  • உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரப் பாதைகள் பல தசாப்தங்களாக தனிநபர் வருமானத்தில் பல்வேறு அளவில் முன்னேற்றம் மற்றும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.

உத்தரப் பிரதேசம்

வரலாற்றுச் சூழல்

  • ஆரம்ப நிலை: 1960-61 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத உத்தரப் பிரதேசத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் 82.4% ஆக இருந்தது.
  • சரிவு: தனி நபர் வருமானத்தில் உத்தரப் பிரதேசம் கீழ்நோக்கிய சரிவை எதிர்கொண்டது என்பதோடு இது அம்மாநிலத்தின் பிரிவினைக்குப் பிறகும் தொடர்ந்தது.
  • 2000-01 வாக்கில், தனிநபர் வருமானம் 55.3% ஆகக் குறைந்தது என்பதோடு, மேலும் இது 2010-11 ஆம் ஆண்டில் 49.4% ஆகக் குறைந்தது.

சமீபத்திய மேம்பாடுகள்

  • நிலைப்படுத்துதல்: சமீபத்திய ஆண்டுகளில்உத்தரப் பிரதேசத்தின் தனிநபர் வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய சராசரியில் 50.8% ஆகச் சற்று நிலையாக மேம்பட்டுள்ளது.
  • இந்த சிறு முன்னேற்றம் அங்கு இருந்தபோதிலும், உத்தரப் பிரதேசத்தின் சராசரி தனிநபர் வருமானம், இந்தியா முழுவதும் உள்ள சராசரி வருமானத்தில் ஒருவர் அங்கு பாதி மட்டுமே சம்பாதிக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
  • பணத்தைத் திரும்பப் பெறுதல்: பீகார் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில், பணத்தைத் திரும்பப் பெறுவதால், இந்த புள்ளி விவரங்கள் குறிப்பிடுவதை விட குடும்ப வருமானம் அங்கு அதிகமாக இருக்கலாம்.

மத்தியப் பிரதேசம்

மீட்பு மற்றும் வளர்ச்சி

  • திருப்பம்: மத்தியப் பிரதேசம் 2010 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்பதோடு தனிநபர் வருமானத்தில் ஐந்து தசாப்த காலமாக இருந்த சரிவை அது மாற்றியமைத்தது.
  • சமீபத்தியப் புள்ளிவிவரங்கள்: தனிநபர் வருமானம் 2010-11 ஆம் ஆண்டில் 60.1% ஆக இருந்து, 2020-21 ஆம் ஆண்டில் 80.2% ஆக உயர்ந்துள்ளது என்பதோடு இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.
  • இது 2023-24 ஆம் ஆண்டில் 77.4% ஆக நிலையாக உள்ளது என்பது ஒரு பலமான மீட்பைக் குறிக்கிறது.

ராஜஸ்தான்

வரலாற்றுச் செயல்திறன்

  • ஆரம்ப வளர்ச்சி மற்றும் சரிவு: ராஜஸ்தானின் தனிநபர் வருமானம் 1960-61 ஆம் ஆண்டு முதல் 1970-71 ஆம் ஆண்டு வரை 10 சதவீதப் புள்ளிகள் வரையில் அதிகரித்தது, ஆனால் அடுத்த மூன்று தசாப்தங்களில் அது குறைந்து, 2000-01 ஆம் ஆண்டில் அது 75.6% ஆக இருந்தது.
  • சமீபத்திய மேம்பாடுகள்: கடந்த இரண்டு தசாப்தங்களில், ராஜஸ்தானின் தனிநபர் வருமானம் மேம்பட்டு, 2022-23 ஆம் ஆண்டில் 91.2% ஆக உயர்ந்துள்ளது.
  • இருப்பினும், முழு காலக் கட்டத்தையும் கருத்தில் கொள்ளும்போது, ​​தனிநபர் வருமானம் 1960-61 ஆம் ஆண்டில் இருந்த அதே அளவில்தான் உள்ளது.

சிறு மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன்: சிக்கிம் மற்றும் கோவா

  • இந்தியாவின் சிறு மாநிலங்களில், சிக்கிம் மற்றும் கோவா ஆகியன பொருளாதார வெற்றியின் முக்கிய உதாரணங்களாக மாறியுள்ளன.
  • கடந்த சில தசாப்தங்களில் ஒப்புரு வருமானத்தில் முக்கியமான முன்னேற்றங்களை அவை காட்டுகின்றன.

சிக்கிம்

வரலாற்றுச் சூழல்

  • ஆரம்ப நிலை: 1990-91 ஆம் ஆண்டில், சிக்கிமின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் வெறும் 93% மட்டுமே இருந்தது.

குறிப்பிடத்தக்க வளர்ச்சி

  • வருவாயில் அதிகரிப்பு: 2023-24 ஆம் ஆண்டில் சிக்கிமின் தனிநபர் வருமானம் ஈர்க்கக்கூடிய வகையில் 319% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த வியத்தகு அதிகரிப்பு என்பது அந்த மாநிலத்தின் வெற்றிகரமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு உத்திகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கோவா

வரலாற்றுச் செயல்திறன்

  • ஆரம்ப நிலை: கோவாவின் தனிநபர் வருமானம் ஏற்கனவே வலுவாக இருந்தது என்பதோடு  1970-71 ஆம் ஆண்டில் அது தேசிய சராசரியில் 144% ஆக இருந்தது.

தொடர் முன்னேற்றம்

  • இரட்டிப்பு வருமானம்: 2023-24 ஆம் ஆண்டில், கோவாவின் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 290% ஆக உள்ளது.
  • இந்த நீடித்த வளர்ச்சி கோவாவின் துடிப்பான சுற்றுலாத் துறையையும், மிகவும் திறமையான நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது.

முக்கிய விவரங்கள்

வலுவான செயல்திறன் கொண்ட மாநிலங்கள்

  • மேற்கத்திய மாநிலங்கள்: மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை பல ஆண்டுகளாக வலுவான பொருளாதாரச் செயல்திறனைக் காட்டுகின்றன.
  • கோவாவும் பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்பதோடு அதன் தனி நபர் வருமானமும் இரட்டிப்பானது.
  • தென் மாநிலங்கள்: பொருளாதாத்ர தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தென் மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட கணிசமாக முன்னேறியுள்ளன என்ற நிலையில் இது ஒட்டு மொத்தமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆகும்.

வடக்கில் குறிப்பிடத்தக்கச் சாதனைகள்

  • டெல்லி மற்றும் ஹரியானா: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதிக தனிநபர் வருமானத்தில் டெல்லி தனித்து நிற்கிறது.
  • குறிப்பாகப் பஞ்சாபின் கடந்த கால உயர்வைக் கருத்தில் கொண்டு, ஹரியானாவின் ஈர்க்கக் கூடிய வளர்ச்சியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவாதம் அளிக்கிறது.
  • பஞ்சாப் 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து தனிநபர் வருமானத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.

கிழக்கில் சவால்கள்

  • மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் பல தசாப்தங்களாக அதன் பொருளாதாரச் செயல்பாட்டில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.
  • இந்தப் போக்கு மாநிலத்தின் எதிர்காலப் பாதையைப் பற்றிய கவலையை எழுப்புகிறது.
  • பீகார்: கடந்த இரண்டு தசாப்தங்களில் பீகாரின் ஒப்பீட்டு நிலை உறுதிப்படுத்தப்பட்டாலும், அது மற்ற மாநிலங்களை விட கணிசமாக பின்தங்கி உள்ளது என்பதோடு அதனை அடைய ஓர் விரைவான வளர்ச்சி அதற்குத் தேவைப்படுகிறது.
  • ஒடிசா: பாரம்பரியமாக பின்தங்கிய நிலையில் உள்ள ஒடிசா, சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்பது அதன் எதிர்கால வளர்ச்சிக்கான அதன் திறனை எடுத்துக்காட்டுகிறது.

ஒட்டுமொத்த மதிப்பீடு

  • மேற்கு வங்கம் தவிர, கடல்சார் மாநிலங்கள் மற்ற பிராந்தியங்களை விடத் தெளிவாகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
  • கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒடிசா போன்ற பாரம்பரியமாக பின்தங்கிய கடலோர மாநிலங்கள் கூட மேம்பட்ட செயல்திறனைக் காட்டியுள்ளன.
  • ஒப்பிடக் கூடிய புவியியல் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் மாறுபட்ட முடிவுகள், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்த தனிப்பயனாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
  • இந்தியா முழுவதும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், சமச்சீர் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • ஒட்டு மொத்தமாக, இந்திய நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விடச் சிறப்பாக செயல்படுகின்றன என்பதோடு, வடக்கின் சில பகுதிகளிலும் குறிப்பிடத் தக்க வெற்றிகள் காணப்படுகின்றன.
  • ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவற்றுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு அதன் கொள்கை தாக்கங்களை புரிந்து கொள்ள ஒரு ஆழமான பகுப்பாய்வினைக் கோருகிறது.
  • அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதி தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது என்ற வகையில் அங்கு பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தென்னிந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமான போக்குகள்

  • தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ளன என்பதோடு தெலுங்கானா 193.6% என்ற அளவிலும் கர்நாடகா 181% என்ற அளவிலும் தேசிய சராசரியைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு 171% என்ற அளவிலும், கேரளா 152% என்ற அளவிலும் உள்ளது.
  • இந்த முன்னேற்றங்கள் வலுவான கொள்கைகளைப் பிரதிபலிக்கின்றன, இருப்பினும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி மெதுவாக 131.6% என்ற அளவில் உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, தாராளமயமாக்கலுக்குப் பிறகு தென் மாநிலங்கள் தங்கள் பொருளாதார நிலைகளைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளன.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்