TNPSC Thervupettagam
August 25 , 2018 2285 days 1866 0
கோபி அனான்
- - - - - - - - - - - -
  • கோபி அனான் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி கோல்டு கோஸ்ட்டில் (தற்போதைய கானா) பிறந்தார்.
  • அவருடைய முழுப்பெயர் கோபி ஆட்டா அனான். ‘கோபி’ என்ற பெயருக்கு ‘வெள்ளிக் கிழமையில் பிறந்த சிறுவன்’ என்று பொருள்.
  • கோபி அனான் மற்றும் இவருடைய சகோதரியான யூபா ஆகிய இருவரும் இரட்டைக் குழந்தைகள். இவருடைய சகோதரி யூபா 1991-இல் மறைந்தார்.
  • கானாவைச் சேர்ந்த ராஜதந்திரியான கோபி ஆட்டா அனான் 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். இவர் ஐ.நா.வின் ஏழாவது பொதுச் செயலாளர் ஆவார்.
  • அனான் ஆங்கிலம், பிரெஞ்சு, அகன், குரு மொழிகள் மற்றும் இதர ஆப்பிரிக்க மொழிகள் ஆகியவைகளில் புலமை பெற்றிருந்தார்.
  • அனான் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் மறைந்தார். அவருடைய வயது

கல்வி

  • அனான் 1954 முதல் 1957 வரை கேப் கோஸ்ட்டில் உள்ள பேன்சிப்பிம் பள்ளியில் பயின்றார்.
  • அனான் 1957 ஆம் ஆண்டு பேன்சிப்பிமில் படிப்பை நிறைவு செய்தார். அந்த ஆண்டில் கோல்டு கோஸ்ட்டானது ஐக்கிய இராஜ்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்று ‘கானா’ என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியது.
  • அனான் பேன்சிப்பிமில் படிப்பை நிறைவு செய்த பின், உள்ளூரில் உள்ள குமாசி அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார்.
  • அதன் பிறகு போர்டு பவுண்டேஷனின் நிதியுதவியைப் பெற்று 1961-ல் மக்காலெஸ்டர் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்தார்.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சர்வதேச வளர்ச்சி ஆய்வுகளுக்கான கிராஜுவேட் நிறுவனத்தில் பயின்றார். அங்கு அவர் DEA என்ற பட்டத்தைப் பெற்றார்.
  • இவர் மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று அறிவியல் துறையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

வாழ்க்கை – நெடும் பயணம்

  • கோபி அனான் 1972-ல் ஐ.நா.வின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனத்தில் (WHO – World Health Organizations) நிதித்துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார்.
  • இவர் 1974 முதல் 1976 வரை அக்ராவில் உள்ள கானா அரசின் கீழ் இயங்கும் கானா சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார்.
  • இவர் 1980-ல் ஜெனிவாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர் ஆணையத்தின் அலுவலகத்தில் தலைமைப் பணியாளராகப் (UNHCR – UN High Commission for Refugees) பணியாற்றினார்.
  • 1983-ல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தின் நிர்வாக மேலாண்மை சேவையகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
  • அனான் 1987-ல் மனித வள மேலாண்மைக்கான துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் ஐ.நா. அமைப்பிற்கான பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • இவர் 1990-ல் திட்டம் வகுத்தல், நிதிநிலை, நிதி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
  • 1992-ல் ஐ.நா.வின் அப்போதைய பொதுச் செயலாளரான பவுட்டுராஸ் பவுட்டுராஸ் – காலி அமைதியை நிலைநாட்டும் துறையை (DPKO – Department of Peace Keeping Operations) ஏற்படுத்தினார். இந்தப் புதிதாக எற்படுத்தப்பட்டுள்ள துறையில் Under Secretary General என்ற பதவியில் இருந்த மராக் கௌல்டிங்க் என்பவரின் கீழ் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • கோபி அனான் 1995 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1996 ஆம் ஆண்டு மார்ச் வரை முன்னாள் யூகோஸிலேவியாவின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரிதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

.நா.வின் பொதுச் செயலாளர் – கோபி அனான்

முதல் முறை

  • ஐ.நா. பாதுகாப்பு சபையானது 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி கோபி அனானின் பெயரைப் பரிந்துரை செய்தது.
  • 1997 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கோபி அனான் முதன்முறையாக ஐ.நா.வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
  • 1997 ஆம் ஆண்டில் பொதுச் செயலாளராக பதவியேற்றவுடன் மேலாண்மை சீர்திருத்தங்கள் மீதான இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அவையாவன

1)  மேலாண்மை மற்றும் நிறுவன நடவடிக்கைகள் (A/51/829)

2) ஐ.நா.வை புதுப்பித்தல் – சீர்திருத்தத்திற்கான ஒரு திட்டம் (A/51/950)

இரண்டாவது முறை

  • 2001 ஆம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி ஐ.நா.வின் பொதுச் செயலாளராக கோபி அனானை ஐ.நா. பாதுகாப்புச் சபை மீண்டும் பரிந்துரை செய்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் பரிந்துரையை 2001 ஆம் ஆண்டு ஜுன் 21-ல் ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.

சாதனைகள்

புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்

  • 2000 ஆம் ஆண்டு செப்படம்பரில் நடைபெற்ற புத்தாயிர மாநாட்டில் தேசியத் தலைவர்கள் புத்தாயிரத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • இதனையடுத்து 2001 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் செயலகம் புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகளை (MDG – Millennium Development Goals) செயல்படுத்தியது.

.நா. தகவல் தொழில்நுட்பச் சேவை

  • கோபி அனான் உயர் தொழில்நுட்ப தன்னார்வுப் படையின் கூட்டுச் சங்கமான ஐ.நா. தகவல் தொழில்நுட்பச் சேவையை உருவாக்க பரிந்துரை செய்தார். இந்த முயற்சியானது ஐ.நா. தன்னார்வலர்கள் மாநாட்டில் தொடங்கப்பட்டது. (UNITeS – United Nations Information Technology Services). இந்த UNITes ஆனது 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நடைமுறையில் இருந்தது.

.நா. உலக உடன்படிக்கை

  • நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் 2000 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் தேதி ஐ.நா. உலக உடன்படிக்கை அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த உடன்படிக்கையானது மனித உரிமைகள், தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகிய பிரிவுகளில் 10 கொள்கைகளை ஏற்படுத்தியது. இந்த உடன்படிக்கையின் கீழ் நிறுவனங்கள் இந்த 10 கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்களானது இந்த 10 கொள்கைகளை திறம்பட செயல்படுத்த ஐ.நா. நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

உலக நிதி

  • கோபி அனான் எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற பரவலாக இருக்கின்ற நோய்களைக் கட்டுப்படுத்த 5 அம்சத் திட்டமான ‘செயலுக்கான அறிவிப்பை’ (Call to Action) வெளியிட்டார்.
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் இதர தொற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதற்காக உலக எய்ட்ஸ் மற்றும் சுகாதார நிதியை (Global AIDS and Health Fund) ஏற்படுத்த கோபி அனான் பரிந்துரை செய்தார்.
  • ஐ.நா.வின் பொதுச் சபையானது எய்ட்ஸ் மீதான சிறப்பு அமர்வின்போது இந்த நிதியை ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக நிதிக்கான நிரந்தர தலைமையகம் ஏற்படுத்தப்பட்டது.

நோபல் அமைதிப் பரிசு

  • ஐ.நா.விற்கு புத்துயிர் அளித்ததற்காகவும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காகவும் கோபி அனானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • மேலும் நோபல் குழுவானது கோபி அனான் ஆப்பிரிக்காவில் எச்ஐவி வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றதையும் சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராடியதையும் அங்கீகரித்துள்ளது.

கோபி அனான் பவுண்டேஷன்

  • அனைத்து துறைகளிலும் தேவையான தலைமையை வழங்குவதற்கு திறமையுள்ள தலைவர்களை திரட்டுவதற்காக கோபி அனான் 2007 ஆண்டு கோபி அனான் பவுண்டேஷனை ஏற்படுத்தினார்.
  • வளர்ச்சி இல்லாமல் நீண்ட காலம் அமைதியை ஏற்படுத்த முடியாது மற்றும் அமைதியில்லாமல் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்ற அனுமானத்தில் இந்த பவுண்டேஷன் பணியாற்றுகிறது.

ரகைன் ஆணையம் (மியான்மர்)

  • 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் மியான்மரின் பிற்படுத்தப்பட்ட பகுதியான ரகைன் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ‘ஆலோசனைக் குழுவிற்கு’ கோபி அனான் தலைமை வகித்தார்.
  • இந்த ஆணையமானது ‘அனான் ஆணையம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மியான்மரைச் சேர்ந்த புத்தர்கள் ரோகிங்யாவுடன் உள்ள தொடர்பில் இந்த ஆணையம் குறுக்கிடுவதாகக் கருதி புத்தர்கள் இந்த ஆணையத்தை எதிர்த்தனர்.

புத்தகங்கள் – கோபி அனான்

                1) தலையீடு : போர் மற்றும் அமைதியில் வாழும் வாழ்க்கை

                2) மக்களாகிய நாம் : 20 ஆம் நூற்றாண்டிற்கான ஐ.நா.

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்