41 கூடுதல் நாட்கள் அதிக வெப்பம்: காலநிலை மாற்றம் உலகளாவிய அபாயங்களைத் தீவிரப்படுத்துகிறது
(For English version to this please click here)
2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பம் மற்றும் காலநிலை மாற்றம்:
- உலகளவில் காலநிலை மாற்றம் 2024 ஆம் ஆண்டில் கடுமையாக வெப்பத்தை அதிகரித்தது என்ற நிலையில் இது பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாகும்.
- மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக 41 கூடுதல் நாட்கள் ஆபத்தான வெப்ப நாட்களாக உலக சராசரியில் சேர்க்கப் பட்டது.
2024 - சாதனை படைத்த ஆண்டு:
- 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 2023 முதல் 13 மாதங்கள் வரை தொடர்ந்து அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
- ஜூலை 22 ஆம் நாள் வரலாற்றில் அதிக வெப்பமான நாளாகக் குறிக்கப்பட்டது, இது ஒரு புதிய உலகளாவிய வெப்பநிலைச் சாதனையை உருவாக்கியுள்ளது.
- உலக வானிலை பண்புக்கூறு (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ஆகியவற்றின் பகுப்பாய்வு, வெப்ப அலைகள், வறட்சிகள், சூறாவளிகள் மற்றும் வெள்ளத்தால் குறிப்பிடத்தக்க சேதம் மற்றும் உயிர் இழப்பை ஏற்படுத்தும் மோசமான காலநிலைத் தாக்கங்களை எடுத்துக் காட்டுகிறது.
- புவி வெப்பமடைதல் 2°C ஐ எட்டினால், குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில், அது வெள்ளம் மற்றும் அதிக மழை போன்ற தீவிர நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
ஆபத்தான வெப்ப நாட்கள்:
- ஆபத்தான வெப்ப நாட்களானது 1991-2020 வரையிலான வெப்பமான 10% வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் நாட்கள் என வரையறுக்கப் படுகிறது.
- இந்த நாட்கள் உள்ளூர் குறைந்தபட்ச இறப்பு வெப்பநிலையுடன் தொடர்புடைய மனித ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்து விளைவிக்கக் கூடியதாக தொடர்புபடுத்தப் பட்டுள்ளன.
- ஜூலை 21 அன்று, 5.3 மில்லியன் மக்கள் காலநிலை மாற்றத்தின் காரணமாக குறைந்தபட்சம் இரண்டு மடங்கு வெப்பத்தை அனுபவித்தனர்.
வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில் மோசமான வெப்பம்:
- குறைவான மேம்பாடு உடைய நாடுகள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஆபத்தான வெப்ப நாட்களை எதிர்கொள்கின்றன.
- வெப்பம் தொடர்பான இறப்புகள் பெரும்பாலும் குறைவாகவே பதிவாகி விடுகின்றன, இதனால் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது கடினமாகிறது.
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் புவி வெப்பமடைதல்:
- 2024 ஆம் ஆண்டின் தீவிர வெப்பம் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும், ஏனெனில் பூமியானது பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 ° C வெப்பமயமாதல் வரம்பை நெருங்குகிறது.
- அதிகாரப்பூர்வமாக அது இன்னும் மீறப்படவில்லை என்றாலும், புவி வெப்பமடைதல் என்பது நிலையான தாக்கங்களை மாற்ற முடியாத ஒரு புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வளர்ச்சி அடைந்து வரும் சிறு தீவு நாடுகளில் (SIDS) தாக்கம்:
- SIDS நாடுகள், குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள், 130 கூடுதல் ஆபத்தான வெப்ப நாட்களை அனுபவித்தது.
- உலகளாவிய உமிழ்வுகளில் 0.02% மட்டுமே பங்களிப்பு செய்தாலும், கடல் மட்ட உயர்வு, தீவிரச் சூறாவளிகள், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி போன்ற காலநிலை ஆபத்துகளுக்கு SIDS நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடியது.
- பனாமாவில் உள்ள கார்டி சுக்துப் என்ற தீவானது, கடல் மட்ட உயர்வு மற்றும் தீவிரமானப் புயல்கள் காரணமாக தீவிர இடம்பெயர்வை எதிர்கொள்கிறது, இது சமூகத்தையும், அதன் கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.
உலகளாவிய தாக்கங்கள்:
- 2024 ஆம் ஆண்டில் உலகளவில், 219 தீவிர வானிலை நிகழ்வுகள் அடையாளம் காணப் பட்டன, இதன் விளைவாக குறைந்தது சுமார் 3,700 இறப்புகள் ஏற்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள்:
வெப்ப அலைகள்:
- இத்தாலி போன்ற பகுதிகளில், கடுமையான வெப்பம் தீவிரமடைந்துள்ளது, இது இறப்புகள், இடப்பெயர்வு மற்றும் விவசாய இழப்புகளுக்கு வழி வகுக்கிறது.
காட்டுத் தீ:
- பாண்டனல் சதுப்பு நிலங்கள், அமேசான் படுகை, கனடா மற்றும் மேற்கு அமெரிக்கா ஆகியவை 2024 ஆம் ஆண்டில் பெரிய காட்டுத்தீயை எதிர்கொண்டன, அவை விதி விலக்காக வறட்சி நிலைமைகளால் அதிகரித்தன.
புயல்கள் மற்றும் சூறாவளி:
- அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளி மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கெய்மி சூறாவளி ஆகியன வெப்பமான கடல்களால் மேலும் வேகமடைந்து, குறிப்பிடத்தக்க உயிர் இழப்புகள் மற்றும் சேதத்தை ஏற்படுத்தியது.
- இந்தப் புயல்கள் 300+ இறப்புகளுக்கு வழி வகுத்தது மற்றும் கிட்டத்தட்ட US$60 பில்லியன் என்ற அளவிலான மதிப்பிற்குச் சேதங்களை உண்டாக்கியது.
வெள்ளம்:
- பிரேசில், ஸ்பெயின், மத்திய ஐரோப்பா, நேபாளம், வங்கதேசம், கென்யா மற்றும் தான்சானியா போன்ற நாடுகளை வரலாறு காணாத மழை மற்றும் கொடிய வெள்ளம் பாதித்தது.
- சூடான், நைஜீரியா, நைஜர் மற்றும் சாட் போன்ற பிராந்தியங்களில், மிகவும் ஆபத்தான வெள்ள பாதிப்பு 2,000க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியது.
புவி வெப்பமடைதல் மற்றும் 1.5°C வரம்பு:
- 2024 ஆம் ஆண்து பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக மாறியது, இது தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 ° C ஐ தாண்டியது.
- இந்த வரம்பு மீறல் ஒரு எச்சரிக்கையாகும் என்பதோடு இது ஒரு நிரந்தர மீறலைக் குறிக்க வில்லை என்றாலும், மனிதகுலம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக வெப்பமயமாதலின் ஆபத்தான நிலைகளை நெருங்குகிறது என்பதை இது அறிவுறுத்துகிறது.
தீவிர நிகழ்வுகளின் வழக்கு ஆய்வுகள்
- ஆப்பிரிக்காவில் வெள்ளம்: சூடான், நைஜீரியா மற்றும் கேமரூன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம் 2,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மில்லியன் கணக்கானவர்களை இடம் பெயரச் செய்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.
- இந்த நிகழ்வுகளானது புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் அடிக்கடி நிகழலாம்.
- அமெரிக்காவில் ஹெலீன் புயல்: அமெரிக்காவின் 6 மாநிலங்களை தாக்கிய ஹெலேன் புயல், கடல் வெப்ப அதிகரிப்பால் தீவிரமடைந்து, மேலும் 200 முதல் 500 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாறியது.
- இந்தப் புயலானது 230 இறப்புகளை ஏற்படுத்தியதோடு, இது 2005 ஆம் ஆண்டில் கத்ரீனாவுக்குப் பிறகு, இரண்டாவது மிகக் கொடிய அமெரிக்கச் சூறாவளியாக உருவெடுத்துள்ளது.
- அமேசான் வறட்சி: அமேசானில் ஏற்பட்ட வரலாற்று வறட்சி, புவி வெப்பமடைதலால் தீவிரமடைந்தது என்பதோடு, கார்பன் மூழ்கியாகச் செயல்படும் அக்காடுகளின் திறனை அது அச்சுறுத்துகிறது மற்றும் அதன் பல்லுயிரியலை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
முக்கிய தாக்கங்கள் மற்றும் நிகழ்வுகள்:
- வடக்கு கலிபோர்னியா, இறப்புப் பள்ளத்தாக்கு, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களில் வரலாறு காணாத வெப்பநிலை ஏற்பட்டது.
- மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பா உட்பட பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் கடுமையான வெப்பத்தைத் தாங்கின என்பதோடு, கிரீஸ் போன்ற இடங்கள் (அக்ரோபோலிஸ் அருகே) அதிக வெப்பநிலையினைத் தாங்கின.
- தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வெப்பத்தால் பள்ளிகள் மூடப் பட்டன.
காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்புகள்:
- ஆய்வு செய்யப்பட்ட 29 தீவிர வானிலை நிகழ்வுகளில், காலநிலை மாற்றம் 26 நிகழ்வுகளில் தீவிரமடைந்துள்ளது என்ற நிலையில், இது குறைந்தது 3,700 உயிரிழப்புகள் மற்றும் மில்லியன் கணக்கானவர்களை இடம் பெயரச் செய்தது என அட்ன்ஹா அறிக்கை வலியுறுத்துகிறது.
- பல தீவிர வானிலை நிகழ்வுகளில் எல் நினோவை விடக் காலநிலை மாற்றம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆரோக்கியத்தின் மீதான தாக்கம்
- ஆபத்தான வெப்ப அலைகள்: 41 கூடுதல் நாட்கள் ஆபத்தான வெப்பம் மில்லியன் கணக்கானவர்களை அதிக உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாக்கியது என்ற நிலையில் புதை படிவ எரிபொருள் உமிழ்வைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இத்தகையத் தீவிர வெப்ப நிகழ்வுகளின் நிகழ்வு மிகவும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நடவடிக்கைக்கான அவசர அழைப்பு
- புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு விரைவான மாற்றம்: புதைபடிவ எரிபொருட்களிலிருந்துப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை நோக்கி வேகமாக மாறுவதற்கான ஒரு முக்கியமானத் தேவையை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
- மேம்படுத்தப்பட்ட ஆரம்ப-எச்சரிக்கை அமைப்புகள்: தீவிர வானிலையில் இருந்து பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட ஆரம்ப-எச்சரிக்கை அமைப்புகள் அவசியமாகிறது.
- வெப்ப இறப்புகளின் நிகழ்நேர அறிக்கை: வெப்ப அலைகளின் முழு தாக்கத்தை மதிப்பிடுவதற்கு வெப்பம் தொடர்பான இறப்புகளின் மிகவும் பயனுள்ள அறிக்கை அவசியம்.
- வளரும் நாடுகளுக்கான நிதி ஆதரவு: வளரும் நாடுகளுக்குப் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உதவுவதற்கு பணக்கார நாடுகள் தங்களின் காலநிலை நிதி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
உலகளாவிய உமிழ்வுகளின் தற்போதைய நிலை
- புவி வெப்பமடைதல் 2100 ஆம் ஆண்டில் 3 டிகிரி செல்சியஸை எட்டும்: சமீபத்திய ஐ.நா தரவுகளின் படி, தற்போதையக் கொள்கைகள் இந்நூற்றாண்டின் இறுதியில் சுமார் 3 டிகிரி செல்சியஸ் அளவ்ரிக்கு உலக வெப்பநிலை உயர்வுக்கு வழி வகுக்கும்.
- போதாத உமிழ்வு குறைப்பு: அனைத்துத் தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் (NDCs) முழுமையாக செயல்படுத்தப் பட்டாலும், 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய உமிழ்வுகள் 5.9% மட்டுமே குறையும், இது வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த தேவையான 43% குறைப்பிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
புதைபடிவ எரிபொருட்களின் பங்கு
- புதைபடிவ எரிபொருள்கள் முக்கிய பங்களிப்பாளர்கள்: புதைபடிவ எரிபொருள்கள் (நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு) உலகளாவியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 75% க்கும் அதிகமானவை மற்றும் அனைத்து கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 90% ஆகும், இது காலநிலை மாற்றத்தின் முதன்மை இயக்கி ஆகும்.
- மாறுதலில் உள்ள சவால்கள்: பணிகள் மற்றும் மலிவு எரிசக்தி, அத்துடன் வரையறுக்கப்பட்ட வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்காக புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதன் காரணமாக உலக தெற்கில் உள்ள ஏழை நாடுகளுக்கு சுத்தமான ஆற்றலுக்கான மாற்றம் கடினமாக உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான முக்கிய தீர்மானங்கள்:
- புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விரைவான மாற்றம்.
- மேம்படுத்தப்பட்ட முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் வெப்ப இறப்புகளின் நிகழ்நேர அறிக்கை.
- வளரும் நாடுகளுக்கு பருவநிலைப் பாதிப்புகளை எதிர்க்கும் திறனை அதிகரிக்க சர்வதேச நிதி உதவி.
முன்னோக்கிய பார்வை:
- புவி வெப்பமடைதலை 1.5°Cக்குக் கீழே வைத்திருக்க, 2030 ஆம் ஆண்டிற்குள் 43% மற்றும் 2035 ஆம் ஆண்டிற்குள் 57% என்ற அளவுகளில் உலகளாவிய உமிழ்வைக் குறைக்க வேண்டிய ஒரு அவசரத் தேவையை பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) எடுத்துக் காட்டுகிறது.
- இருப்பினும், தற்போதைய கொள்கைகள் 2100 ஆம் ஆண்டளவில் உலகளாவிய வெப்பநிலையை 3 °C க்கு தள்ளும் பாதையில் உள்ளன என்பதோடு புதைபடிவ எரிபொருட்கள் பசுமை இல்ல வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன.
முடிவுரை: துரிதமான உலகளாவிய நடவடிக்கைக்கான தேவை
- உமிழ்வைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கும் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், உலகம் பருவநிலை மாற்றத்தின் பேரழிவுத் தாக்கங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
- மிகவும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கவும், எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாக்கவும் உலகளாவிய ஒத்துழைப்பு முக்கியமானதாகும்.
-------------------------------------