47வது அமெரிக்க ஜனாதிபதி - சிறப்புக் கூறுகள்
(For English version to this please click here)
அறிமுகம்
- டொனால்ட் ஜான் டிரம்ப் (பிறப்பு ஜூன் 14, 1946) ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
- குடியரசுக் கட்சியின் உறுப்பினரான அவர் 2017 முதல் 2021 வரை 45வது ஜனாதிபதியாக பணியாற்றினார் மற்றும் ஜனவரி 20, 2025 அன்று 47வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
டொனால்ட் டிரம்ப் முறியடித்த சாதனைகளின் பட்டியல்
வயது மற்றும் பதவியேற்பு பதிவுகள்
- அதிபராக இதுவரை பதவியேற்றவர்களில் மூத்த நபர்: 78 வயதில், டிரம்ப் ஜோ பிடனைப் பின்னுக்குத் தள்ளி மூத்த அதிபராகப் பதவியேற்றார்.
தேர்தல் மற்றும் குற்றச்சாட்டுப் பதிவுகள்
- இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப் பட்டார்.
- டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- பின்வந்தோர் பதவியேற்பு விழா: அவர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் பின்னாளில் கலந்து கொண்டார்.
விதிமுறைகள் மற்றும் வாக்குப் பதிவுகள்
- 2020 ஆம் ஆண்டில் தோல்வியடைந்து, 2024 தேர்தலுக்குத் திரும்பிய பின்னர், தொடர்ச்சியான காலக் கட்டத்தில் அல்லாமல் தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராக பதவியேற்று டிரம்ப் இந்தப் பதவியினை அடைந்தார்.
- இரண்டு முறை பிரபலமான வாக்குகளை இழந்த பிறகு வெற்றி பெற்ற முதல் ஜனாதிபதி:
- டிரம்ப் 2016 மற்றும் 2024 தேர்தலில் மக்கள் வாக்குகளை இழந்தார், ஆனால் இரண்டு முறையும் ஜனாதிபதி பதவியைப் பெற்றார்.
- பல குற்றவியல் குற்றச்சாட்டுகளுடன் பதவியில் உள்ள முதல் ஜனாதிபதி:
- டிரம்ப் பதவியில் இருந்த காலத்தில் பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
செல்வம் மற்றும் ஊடகப் பதிவுகள்
- முதல் கோடீஸ்வர ஜனாதிபதி இரண்டாவது முறையாகப் பணியாற்றுகிறார்:
- டிரம்ப் பல காலக் கட்டத்தில் பதவி வகித்த பணக்கார ஜனாதிபதி ஆவார்.
- சமூக ஊடகத் தளம் (ட்ரூத் சோஷியல்) சொந்தமாக மற்றும் அதனைச் செயல்படுத்தும் முதல் ஜனாதிபதி:
- பதவியை விட்டு வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த சமூகத் தளத்தைத் தொடங்கினார்.
பதவியேற்பு விழாக்கள் தொடர்பான வரலாற்று முதன்மைகள்
- முதல் பதவியேற்பு விழா இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பட்டது:
- 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பதவியேற்பு இந்த வரலாற்றுத் தருணத்தைக் குறித்தது.
டிரம்பின் நிர்வாக உத்தரவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்
மன்னிப்பு மற்றும் குடியேற்றம்
- மன்னிப்பு: ஜனவரி 6, 2021 கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட 1,500 நபர்களுக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
குடியேற்றக் கொள்கைகள்:
- பைடன் காலக் கொள்கைகள் தலைகீழாக மாறியது என்ற வகையில், இது ஆவணமற்ற அனைத்து நபர்களையும் நாடு கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- அமெரிக்க அகதிகள் மீள்குடியேற்றத் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு இடை நிறுத்தி உள்ளது.
- அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது மற்றும் குடியேற்ற அமலாக்கத்திற்காக துருப்புக்களை நிலை நிறுத்தியது.
- பிறப்புரிமைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது: இந்த உத்தரவு அமலுக்கு வந்த 30 நாட்களுக்குள் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை ஆவணங்களை வழங்குவதைத் தடுக்கிறது.
பைடனின் கொள்கைகளை ரத்து செய்தல்
- பைடனின் உத்தரவுகளை ரத்து செய்தல்: கோவிட் நிவாரணம், பன்முகத்தன்மை மற்றும் தூய்மையான ஆற்றல் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்திய பைடனின் 78 நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்தார்.
- இதில் கூறப்படும் அரசியல் துன்புறுத்தல்கள் தொடர்பான பதிவுகளைப் பாதுகாக்க நிர்வாக அமைப்புகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.
பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்
- நீக்கப்பட்ட DEI கொள்கைகள்: பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) மற்றும் LGBTQ+ பாதுகாப்புகளை ஊக்குவிக்கும் பைடனின் நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்தார்.
அரசாங்கத்தின் செயல்திறன்
- அரசாங்கத் திறன் துறை (DOGE): உடனடி சட்டச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கூட்டாட்சி நடவடிக்கைகளை சீரமைக்க, எலோன் மஸ்க் தலைமையில் உருவாக்கப்பட்டது DOGE ஆகும்.
காலநிலை மற்றும் ஆற்றல் கொள்கைகள்
- பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல்: பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி டிரம்பின் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
- எண்ணெய் எடுக்கத் துளையிடுதல்: ஆர்க்டிக் மற்றும் கூட்டாட்சி நிலங்களில் எண்ணெய் எடுக்கத் துளையிடுதல் மீதான தடைகள் திரும்பப் பெறுவது, ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது.
- எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளது.
பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகள்
- பணவீக்கம் மற்றும் பொருளாதாரம்: பைடனின் கொள்கைகளை ஒரு முக்கியப் பங்களிக்கும் காரணியாகக் காட்டி, பணவீக்கத்தைக் குறைக்க நிர்வாக அமைப்புகளுக்கு ஆணையிட்டு உள்ளது.
- கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரிகளை முன்மொழிந்தது மற்றும் சீனாவின் வர்த்தக இணக்கத்தை மதிப்பிடுவதற்கு ஆணையிட்டுள்ளது.
வெளியுறவுக் கொள்கை மற்றும் உதவி:
- அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப வெளிநாட்டு மேம்பாட்டு உதவியை 90 நாட்களுக்கு இடை நிறுத்தியுள்ளது.
- OECD அமைப்பின் உலகளாவிய குறைந்தபட்சப் பெருநிறுவன வரி ஒப்பந்தத்தை அமெரிக்க காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம்) ஒப்புதல் தேவை என்று கூறி நிராகரித்துள்ளது.
பேச்சு சுதந்திரம் மற்றும் சுகாதார கொள்கை
- பேச்சு சுதந்திரம்: பேச்சுச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மற்றும் இணைய தளங்களின் கூட்டாட்சித் தணிக்கை முடிவுக்கு வந்தது.
- உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல்: 12 மாதங்களில் அனைத்து நிதிப் பங்களிப்புகளையும் நிறுத்தி, உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அமெரிக்கா விலகும் திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளார்.
- மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாற்றம்: தம் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்கா வளைகுடா’ என மறுபெயரிட டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
- தேசிய எல்லை அவசரநிலைப் பிரகடனம்: 1798 ஆம் ஆண்டின் வெளிநாட்டவர் எதிரிகள் சட்டத்தின் கீழ் கடுமையான குடியேற்றக் கொள்கைகளைச் செயல்படுத்த, தெற்கு எல்லையில் அமெரிக்கத் துருப்புக்களை நிலை நிறுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
- தேசிய எரிசக்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்தல்: புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் அலாஸ்காவில் துளையிடுதல் மற்றும் எரிவாயு ஏற்றுமதி உள்ளிட்ட புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரைவான அனுமதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
- இரு பாலினக் கொள்கையை நிறுவுதல்: இரண்டு பாலினங்களை (ஆண் மற்றும் பெண்) மட்டுமே அங்கீகரித்து, கூட்டாட்சி ஆவணங்களில் பாலினச் சித்தாந்தத்தை அகற்ற உத்தரவிடப் பட்டு உள்ளது.
அமெரிக்கா - இந்தியா உறவுகளுக்கான தாக்கங்கள்
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்
- வர்த்தகக் கொள்கைகள்: டிரம்பின் பாதுகாப்புவாத நிலைப்பாடு இந்திய ஏற்றுமதிகள் மீதான அதிக வரிகளுக்கு வழி வகுக்கும், உலக வர்த்தக அமைப்பு விதிகளை மீறும் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தைச் சிக்கலாக்கும்.
- உற்பத்தி வாய்ப்புகள்: இந்தியாவின் உற்பத்தித் துறையானது, சீனா மீதான டிரம்பின் நிலைப்பாட்டிலிருந்து பயனடையலாம், ஆனால் இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் கட்டமைப்பு பெரும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பம் மற்றும் புதுமை
- STEM மற்றும் கண்டுபிடிப்பு: செயற்கை நுண்ணறிவு, துளிமக் கணினியியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடுகள், இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு பயனளிக்கும், இருப்பினும் H-1B விசா கட்டுப்பாடுகள் இந்திய வல்லுநர்களைப் பாதிக்கலாம்.
குடிவரவு மற்றும் விசாக்கள்
- விசா கட்டுப்பாடுகள்: H-1B விசா வரம்புகள் உட்பட கடுமையான குடியேற்றக் கொள்கைகள், அமெரிக்காவில் பணி புரியும் இந்திய வல்லுநர்களை மோசமாகப் பாதிக்கலாம்.
டிரம்ப் 2.0: உலகளாவிய தாக்கங்கள்
பலதரப்புவாதத்தைப் பலவீனப்படுத்துதல்
- உலகளாவிய ஒத்துழைப்பில் தாக்கம்: சர்வதேச அமைப்புகளில் இருந்து டிரம்ப் வெளியேறுவது (WHO, பாரிஸ் ஒப்பந்தம்) சுகாதாரம், வர்த்தகம் மற்றும் காலநிலை பிரச்சினைகளில் கூட்டு நடவடிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.
- பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உலகளாவியப் பருவநிலை இலக்குகளுக்கான வேகத்தைக் குறைக்கிறது, இது பசுமை இல்ல வாயு உமிழ்வை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய உத்திகளைப் பாதிக்கிறது.
WHO அமைப்பிலிருந்து அமெரிக்கா திரும்பப் பெறுவதன் மூலம் ஏற்படும் நிதித் தாக்கங்கள்
- WHO பட்ஜெட்டில் தாக்கம்: WHO அமைப்பின் நிதியுதவியில் அமெரிக்கா தோராயமாக 20% பங்களிக்கிறது, மேலும் அதை திரும்பப் பெறுவது குறிப்பிடத்தக்க நிதி இடைவெளியை உருவாக்கி, உலகளாவிய சுகாதாரத் திட்டங்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
- சீனாவின் பங்களிப்பு: அமெரிக்காவை விட சீனாவின் நிதிப் பங்களிப்பு கணிசமாகக் குறைவாக உள்ளது, இது ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகள் அந்த நிதியினை நிரப்ப உறுதி அளித்த வகையில் ஒரு நிதி இடைவெளியை உருவாக்குகிறது.
இந்தியாவில் தாக்கம்
- WHO நிதி குறைப்புகள்: WHO திட்டங்களுக்கான அமெரிக்க நிதி இழப்பு, நோய்த் தடுப்புத் திட்டங்கள், மலேரியா மற்றும் எச்ஐவி போன்ற நோய்களுக்கான திட்டங்கள் உட்பட இந்தியாவின் பிற சுகாதார முயற்சிகளைப் பாதிக்கலாம்.
- குறைக்கப்பட்ட நிபுணத்துவம்: அமெரிக்கா இந்த நிதியை திரும்பப் பெறுவது உலகளாவிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர்த் திட்டச் செயலாக்கங்களை வழங்குவதற்கான WHO அமைப்பின் திறனைக் குறைக்கலாம்.
வர்த்தகத்தில் ஒருதலைபட்சம் அதிகரிப்பு
- வர்த்தகப் போர்கள்: டிரம்பின் "முதலில் அமெரிக்கா" போன்ற கொள்கைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்கள் உலகில் வர்த்தகப் போர்களைத் தூண்டி, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கலாம்.
- ட்ரம்ப் தனது முதல் காலக் கட்டத்தில் சீனப் பொருட்களுக்கு $360 பில்லியன் வரி விதித்தது உலகச் சந்தைகளை சீர்குலைத்தது மற்றும் BRICS நாடுகள் போன்ற பிற நாடுகளுடன் இது போன்ற வர்த்தகப் பதட்டங்களுக்கு வழி வகுக்கும்.
பருவநிலைக் கொள்கை மாற்றங்களும் உலகளாவிய காலநிலை இலக்குகளும்
புதைபடிவ எரிபொருள் மையக் கொள்கைகளின் மறுமலர்ச்சி
- தேசிய ஆற்றல் அவசரநிலைப் பிரகடனம்: புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான பிரகடனம், வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் நேரடியாக முரண்படுகிறது.
- பசுமை ஆற்றல் முன்னெடுப்புகள் மீதான தாக்கம்: அமெரிக்காவில் பசுமை ஆற்றல் திட்டங்களை நிறுத்துவது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சியை அச்சுறுத்துகிறது, இது இந்தத் துறையில் 3.4 மில்லியனுக்கும் அதிகமானப் பணிகளை ஆதரிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வேலைவாய்ப்புக்கான சவால்கள்
- அமெரிக்கப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பின்னடைவுகள்: பசுமை எரிசக்தித் திட்டங்கள் நிறுத்தப்படுவது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுத்தமான எரிசக்தியில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தும்.
உலகளாவிய வரி ஒப்பந்தத்தை நிராகரித்தல்
- OECD உலகளாவிய குறைந்தபட்சப் பெருநிறுவன வரி: OECD அமைப்பின் 15% உலகளாவிய குறைந்தபட்சப் பெருநிறுவன வரியை ஏற்க அமெரிக்கா மறுப்பது, எண்மச் சேவைகளில் ஒருதலைப் பட்ச வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த மற்ற நாடுகளைத் தூண்டலாம்.
- பலதரப்பு வர்த்தகத்தின் மீதான தாக்கம்: OECD வரி ஒப்பந்தம், 140 நாடுகளை உள்ளடக்கியது, அது பன்னாட்டு நிறுவனங்களின் இலாப மாற்றத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் தற்போது அமெரிக்க எதிர்ப்பிலிருந்து அது பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது.
இறையாண்மை மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள்
- சர்வதேச விதிமுறைகளுக்கான சவால்கள்: பன்னாட்டு ஒப்பந்தங்களை நிராகரிப்பது மற்றும் நாடுகளின் இறையாண்மைக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வது போன்ற செயல்கள் உலகளாவியச் சட்ட ஒழுங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அதன் ஒத்துழைப்பைச் சீர்குலைக்கும்.
TPP லிருந்து அமெரிக்க விலகலின் தாக்கம்
- சீனாவின் பிராந்தியச் செல்வாக்கு: டிரான்ஸ்-பசிபிக் கூட்டுப் பங்களிப்பில் (TPP) இருந்து அமெரிக்கா வெளியேறியதன் மூலம், உருவாக்கப் பட்ட ஒரு சக்திமிகு வெற்றிடத்தை பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை (RCEP) மூலம் சீனா நிரப்பியது.
டிரம்ப் 2.0 மற்றும் இந்தியாவிற்கு அதன் தாக்கங்கள்
குடியேற்றக் கொள்கை மற்றும் இந்திய வல்லுநர்கள்
- H-1B விசாக்கள் மீதான தாக்கம்: H-1B விசாக்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிறப்புரிமைக் குடியுரிமை நீக்கம் ஆகியவை இந்தியத் தொழில் வல்லுநர்களையும் அவர்களது குடும்பங்களையும் மோசமாகப் பாதிக்கலாம்.
- அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள்: 2022 ஆம் ஆண்டில், மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவிற்குப் புதிதாக குடியேறியவர்களின் இரண்டாவது பெரிய ஆதாரமாக இந்தியா இந்தத் தர வரிசையில் உள்ளது என்பதோடு கிட்டத்தட்ட 145,000 இந்திய வம்சாவளி நபர்கள் அங்கு குடியேறியுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் உத்தி சார்ந்த ஒத்துழைப்பு
- இந்தோ-பசிபிக் கவனம் செலுத்துதல்: இந்தோ-பசிபிக் மற்றும் குவாட் கூட்டாண்மை மூலம் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்தியப் பாதுகாப்பில் அமெரிக்கா - இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிகிறது.
- பாதுகாப்பு உபகரண கொள்முதல்: இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியா 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளது.
ஆற்றல் மற்றும் பருவநிலை கொள்கைகள்
- உலகளாவிய பருவநிலை முயற்சிகள்: அமெரிக்கா பருவநிலைப் பொறுப்புகளை மாற்றியமைத்தல் மற்றும் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் கவனம் செலுத்துதல் ஆகியவை இந்தியாவின் தூய்மையான ஆற்றல் இலக்குகளைச் சிக்கலாக்கும்.
- இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க இலக்குகள் மீதான தாக்கம்: பருவநிலை நிதிக்கான உலகளாவிய வேகம் குறைக்கப் பட்டிருப்பது, 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான இந்தியாவின் இலக்கைத் தடுக்கலாம்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்: செயற்கை நுண்ணறிவு, துளிமக் கணினியியல் மற்றும் பிற அதிநவீனத் துறைகளில் மேம்படுத்தப்பட்ட அமெரிக்கா - இந்தியா கூட்டாண்மைகள் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- iCET இயங்குதளம்: சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான அமெரிக்க முன்னெடுப்பு (iCET) கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
குடிவரவு கொள்கைகள்
- கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் தாக்கம்: அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்படும் சாத்தியமான மாற்றங்கள் கலாச்சார உறவுகளைச் சிதைத்து, இந்தியா-அமெரிக்கா உறவுகளை வளர்ப்பதில் இந்தியப் புலம்பெயர்ந்தோரின் பங்கைச் சீர்குலைக்கலாம்.
- இந்தியப் புலம்பெயர்ந்தோரின் முக்கியத்துவம்: 4.2 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்க சமூகம், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மிகவும் செல்வாக்கு மிக்க பங்கினை வகிக்கிறது.
-------------------------------------