TNPSC Thervupettagam

ASER அறிக்கை 2024 - பகுதி 01

March 1 , 2025 2 days 55 0

ASER அறிக்கை 2024 - பகுதி 01

(For English version to this please click here)

  • தேசிய கல்வி நிலை ASER 2024
  • ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) 2024 என்பது அரசு சாரா நிறுவனமான பிரதாம் என்பதால் நடத்தப்படும் ஒரு விரிவான நாடு தழுவிய கிராமப்புறக் குடும்ப ஆய்வு ஆகும்.
  • ASER ஆனது 2005 ஆம் ஆண்டிலிருந்து உலகின் மிகப்பெரிய குடிமக்களின் தலைமையிலான கல்வி ஆய்வாக உள்ளது.
  • இது கணக்கெடுப்பு வாசிப்பு, எண்கணிதம் மற்றும் அடிப்படை ஆங்கிலம் ஆகியவற்றில் அடிப்படைத் திறன்களை மதிப்பிடுகிறது.
  • இது இந்தியாவில் உள்ள 605 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 17,997 கிராமங்களில் உள்ள 649,491 குழந்தைகளைச் சென்றடைந்தது.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உள்ளூர் அமைப்பு அல்லது நிறுவனத்தால் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.
  • ASER 2024 என்பது குழந்தைகளின் மூன்று குழுக்களுக்குத் தனித்தனியாக முக்கியக் கண்டுபிடிப்புகளை வழங்குகிறது:
  • முன்-முதன்மை (வயது 3-5 வருடங்கள்), தொடக்கக் கல்வி நிலை (வயது 6-14 வருடங்கள்), மற்றும் சிறார் குழந்தைகள் (வயது 15-16 வருடங்கள்).

  • முன்-முதன்மை (வயது 3-5 ஆண்டுகள்)
  • முன்-முதன்மை நிறுவனங்களில் பதிவு செய்தல்
  • 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் முன்-முதன்மை நிறுவனங்களில் சேர்க்கை சீராக மேம்பட்டுள்ளது.
  • குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள், அரசு முன் ஆரம்ப வகுப்புகள் அல்லது தனியார் LKG/UKG ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றனர்.
  • மூன்று வயது குழந்தைகள்
  • 2018 ஆம் ஆண்டில் 68.1% ஆக இருந்த பதிவு 2022 ஆம் ஆண்டில் 75.8% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 77.4% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் கிட்டத்தட்ட நூறு சதவிகிதச் சேர்க்கையைக் கொண்டுள்ளன.
  • மேகாலயா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்படாத மூன்று வயது குழந்தைகளின் விகிதத்தில் 50% அதிகமாக உள்ளது.
  • நான்கு வயது குழந்தைகள்
  • 2018 ஆம் ஆண்டில் 76% ஆக இருந்த பதிவு 2022 ஆம் ஆண்டில் 82% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 83.3% ஆகவும் உயர்ந்தது.
  • குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் 95% மாணவர் சேர்க்கை விகிதம் உள்ளது.
  • ஐந்து வயதுடையவர்கள்
  • 2018 ஆம் ஆண்டில் 58.5% ஆக இருந்த பதிவு 2022 ஆம் ஆண்டில் 62.2% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 71.4% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் நாகாலாந்து ஆகியவை 90%க்கும் அதிகமான சேர்க்கை கொண்ட மாநிலங்களில் அடங்கும்.

  • முன்-முதன்மை நிறுவன வகை
  • அங்கன்வாடி மையங்கள் முன்-தொடக்கக் கல்விச் சேவைகளை அதிக அளவில் வழங்குகின்றன.
  • 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளில் 50%க்கும் அதிகமானோர் 2018 ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • ஒடிசா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், இந்த வயதினரை 75%க்கும் அதிகமான குழந்தைகள் இந்த வயதினரை அங்கன்வாடி மையங்களில் சேர்க்கின்றனர்.
  • 2024 ஆம் ஆண்டில் ஐந்து வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தனியார் பள்ளி அல்லது முன் முதன்மைப் பள்ளியில் படித்தனர்.
  • இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 37.3% ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 30.8% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 37.5% ஆகவும் இருந்தது.
  • பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர் அரசு முன்-முதன்மை நிறுவனங்களில் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன.
  • பஞ்சாபில் 11.2 சதவீதப் புள்ளிகளும், ஜம்மு & காஷ்மீரில் 7.6 சதவீதப் புள்ளிகளும் அதிகரித்து உள்ளன.

  • வகுப்பு Iல் நுழைவதற்கான வயது
  • வகுப்பு Iல் வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விகிதம் (5 அல்லது அதற்குக் குறைவான வயதுடையவர்கள்) தொடர்ந்து குறைந்துள்ளது:
  • 2018: 25.6%
  • 2022: 22.7%
  • 2024: 16.7% (குறைந்த பதிவு நிலை)
  • இந்த விகிதம் அனைத்து மாநிலங்களிலும் குறைந்துள்ளது அல்லது நிலையானதாக உள்ளது.
  • குஜராத்தில், குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் 36.4% ஆக இருந்த சரிவு, 2024 ஆம் ஆண்டில் 4%க்கும் குறைவாக உள்ளது.

  • தொடக்கக் கல்வி நிலை (வயது 6-14 வருடங்கள்)
  • சேர்க்கை போக்குகள்
  • கடந்த இரண்டு தசாப்தங்களாக 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானப் பள்ளி சேர்க்கை விகிதம் தொடர்ந்து 95%க்கு மேல் உள்ளது.
  • சேர்க்கை விகிதம் 2022 ஆம் ஆண்டில் 98.4% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 98.1% ஆகவும் உள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும், இந்த வயதுப் பிரிவினருக்கான சேர்க்கை 2024 ஆம் ஆண்டில் 95%க்கும் மேல் உள்ளது.
  • அரசு பள்ளி சேர்க்கை
  • 2018 ஆம் ஆண்டில், இந்த வயதினரில் 65.5% குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
  • தொற்றுநோய் காலத்தில் (2022) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 72.9% ஆக உயர்ந்தது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 66.8% ஆகக் குறைந்துள்ளது.
  • உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஒரு சரிவு காணப் படுகிறது.

  • வாசிப்புத் திறன்
  • மதிப்பீட்டு முறை
  • ASER படிக்கும் செயல்முறை ஆனது குழந்தைகளின் எழுத்துக்கள், வார்த்தைகள், ஒரு எளிய பத்தி (வகுப்பு I நிலை) அல்லது ஒரு கதை (வகுப்பு II நிலை) ஆகியவற்றைப் படிக்கும் திறனை மதிப்பிடுகிறது.
  • 5-16 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒருவருக்கு ஒருவர் என்ற அமைப்பில் நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்த மதிப்பீட்டு முறை 2006 ஆம் ஆண்டு முதல் மாறாமல் உள்ளது எனவே இது நீண்ட கால ஒப்பீடுகளை அனுமதிக்கிறது.

  • வாசிப்பு போக்குகள்
  • 2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து தொடக்கக் கல்வி வகுப்புகளிலும் (வகுப்பு I - VIII) அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு நிலைகள் மேம்பட்டுள்ளன.
  • வகுப்பு III
  • 2024 ஆம் ஆண்டில், ASER தொடங்கியதில் இருந்து அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கான அடிப்படை வாசிப்பு நிலைகள் மிக உயர்ந்த நிலையை எட்டின.
  • இரண்டாம் வகுப்பு எழுத்து அறிதல் மற்றும் மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளின் படிக்கும் திறனின் விகிதம்:
  • 2018: 20.9%
  • 2022: 16.3%
  • 2024: 23.4%
  • தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் அதிகம் உள்ளது.
  • 10 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் அதிகரிக்கும் மாநிலங்கள் (2022-2024): இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், கேரளா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, மகாராஷ்டிரா.

  • வகுப்பு V
  • குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் வகுப்பு Vல் பயிலும் குழந்தைகளின் வாசிப்பு நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் படிக்கும் வகுப்பு V பயிலும் குழந்தைகள் வகுப்பு IIன் உரையை வாசிக்க முடிகின்ற விகிதம்:
  • 2018: 44.2%
  • 2022: 38.5%
  • 2024: 44.8%
  • மிசோரம் (64.9%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (64.8%) அரசுப் பள்ளிகளில், வகுப்பு IIன் பாடத்தைப் வாசிக்கும் மாணவர்களின் விகிதாச்சாரத்தில் உயர் விகிதத்தில் உள்ளது.
  • 10 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் உள்ள மாநிலங்கள்: உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு.

  • வகுப்பு VIII
  • எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பு அளவு அதிகரித்தது:
  • 2018: 69%
  • 2022: 66.2%
  • 2024: 67.5%
  • 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளி செயல்திறன் மாறாமல் இருந்தது.
  • குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த மாநிலங்கள்: குஜராத், உத்தரப் பிரதேசம், சிக்கிம்.
  • சரிவு: பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா.

  • எண்கணிதத் தேர்ச்சி
  • மதிப்பீட்டு முறை
  • ASER எண்கணிதச் செயல்முறைகளைப் பின்வருமாறு மதிப்பிடுகின்றன:
  • எண்களைக் கண்டறிதல் (1-9 மற்றும் 11-99).
  • இரண்டு இலக்க எண்களைக் கழித்தல் (கடன் வாங்குதலுடன்).
  • மூன்று இலக்க எண்களை ஓரிலக்க எண்ணால் வகுத்தல்.
  • 5-16 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒருவருக்கு ஒருவர் என்ற அமைப்பில் நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்த மதிப்பீட்டு முறை 2006 ஆம் ஆண்டு முதல் மாறாமல் உள்ளது எனவே இது நீண்ட கால ஒப்பீடுகளை அனுமதிக்கிறது.
  • எண்கணித போக்குகள்
  • தேசிய அளவில், குழந்தைகளின் அடிப்படை எண்கணித நிலைகள் ஆனது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன, இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.

  • வகுப்பு III
  • குறைந்தபட்சம் ஓர் எண்ணைக் கழிக்கும் கணக்கைச் செய்யக் கூடிய மூன்றாம் வகுப்பு குழந்தைகளின் விகிதம்:
  • 2018: 28.2%
  • 2022: 25.9%
  • 2024: 33.7%
  • அரசுப் பள்ளி மாணவர்களில்:
  • 2018: 20.9%
  • 2022: 20.2%
  • 2024: 27.6%
  • பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 2022 ஆம் ஆண்டிலிருந்து முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
  • 15 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் உள்ள மாநிலங்கள்: தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம்.
  • வகுப்பு V
  • குறைந்த பட்சம் ஓர் எண்ணைக் வகுக்கும் கணக்கைச் செய்யக் கூடிய ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் விகிதம்:
  • 2018: 27.9%
  • 2022: 25.6%
  • 2024: 30.7%
  • இதில் மேம்பாடு முக்கியமாக அரசு பள்ளிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
  • அரசுப் பள்ளிகளில் 10 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் உள்ள மாநிலங்கள்: பஞ்சாப், உத்தரகாண்ட்.
  • வகுப்பு VIII
  • எண்கணிதக் கணக்குகளைத் தீர்க்கக் கூடிய மாணவர்களின் சதவீதம் பின்வருமாறு மாற்றப் பட்டது:
  • 2018 ஆம் ஆண்டில் 44.1% ஆக இருந்த சதவீதம், 2022 ஆம் ஆண்டில் 44.7% ஆக உயர்ந்தது, பின்னர் 2024 ஆம் ஆண்டில் 45.8% ஆக உயர்ந்தது.
  • எண்கணிதச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

  • சிறார் குழந்தைகள் (15-16 வயது) சேர்க்கைப் போக்குகள்
  • பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளின் சதவீதம் பின்வருமாறு மாற்றப்பட்டது:
  • 2018 ஆம் ஆண்டில் 13.1% சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் 7.5% ஆகவும், பின்னர் 2024 ஆம் ஆண்டில் 7.9% ஆகவும் குறைந்துள்ளது.
  • பெண்களின் சேர்க்கை இல்லாத விகிதங்கள் பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:
  • 2022 ஆம் ஆண்டில் 7.9% ஆக இருந்த சதவீதம், 2024 ஆம் ஆண்டில் 8.1% ஆக அதிகரித்துள்ளது.
  • பெண்களின் சேர்க்கை 10%க்கு மேல் உள்ள மாநிலங்கள்:
  • மத்தியப் பிரதேசம் (16.1%), உத்தரப் பிரதேசம் (15%), ராஜஸ்தான் (12.7%), மிசோரம் (12.3%), குஜராத் (10.5%), சத்தீஸ்கர் (10%).
  • 14-16 வயதுடையவர்களிடையே எண்ணிமக் கல்வியறிவு
  • திறன்பேசிகளுக்கான அணுகல்
  • 90% சிறுவர், சிறுமியர் வீட்டில் திறன்பேசி வசதி உள்ளது.
  • திறன்பேசிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் சதவீதம் பின்வருமாறு:
  • சிறுவர்கள்: 85.5%.
  • சிறுமிகள்: 79.4%.
  • குறைந்த அணுகல் மற்றும் பயன்பாடு காணப்பட்ட மாநிலங்கள்: பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்.

  • திறன்பேசி உரிமையாளர்
  • வயதுக்கு ஏற்ப உரிமையாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது:
  • 14 வயது: 27% பேர் திறன்பேசி வைத்துள்ளனர்.
  • 16 வயது: 37.8% பேர் திறன்பேசி வைத்துள்ளனர்.
  • திறன்பேசி உரிமையாளர்களில் பாலின இடைவெளி பின்வருமாறு:
  • சிறுவர்கள்: 36.2%.
  • சிறுமிகள்: 26.9%.

  • திறன்பேசிப் பயன்பாடு
  • 82.2% குழந்தைகளுக்கு திறன்பேசி எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிகிறது.
  • நிகழ்த்தப்பட்ட செயல்பாடுகள்:
  • கல்வி நடவடிக்கை: 57%.
  • சமூக ஊடகங்கள்: 76%.
  • சமூக ஊடக பயன்பாட்டில் பாலின வேறுபாடுகள்:
  • சிறுவர்கள் (78.8%) சிறுமிகளை விட (73.4%) சமூக ஊடகங்களை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

  • மாநில விதிவிலக்குகள்:
  • கேரளாவில், 80%க்கும் அதிகமானோர் கல்விக்காகவும், 90%க்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களுக்கும் திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • எண்ணிமப் பாதுகாப்பு விழிப்புணர்வு
  • சமூக ஊடக பயனர்களில்:
  • சுயவிவரத்தை எவ்வாறு தடுப்பது/அறிவிப்பது என்பதை 62% பேர் அறிந்துள்ளனர்.
  • 55.2% பேர் சுயவிவரத்தைத் தனிப்பட்டதாக்குவது எப்படி என்பதை அறிந்துள்ளனர்.
  • 57.7% பேருக்கு கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி எனத் தெரிகிறது.
  • பொதுவாக சிறுமிகளை விட சிறுவர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.
  • எண்ணிமத் திறன்கள் மதிப்பீடு
  • 70.2% சிறுவர்கள் மற்றும் 62.2% பெண்கள் திறன்பேசிகளைக் கொண்டு வரலாம்.
  • குறிப்பிட்ட நேரத்தை அமைப்பது, ஆன்லைனில் தேடுவது மற்றும் யூட்டியூப் காணொளிகளைப் பகிர்வது போன்ற எண்ணிமப் பணிகளை 75%க்கும் அதிகமான குழந்தைகள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.
  • கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில், சிறுமிகள் சிறுவர்களை விடச் சிறப்பாக அல்லது நன்றாக செயல்பட்டனர்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்