ASER அறிக்கை 2024 பகுதி – 02
(For English version to this please click here)
- பள்ளி மதிப்பீடுகள்
- ASER கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதிரி கிராமத்திலும் ஆரம்ப நிலைக் கல்விப் பிரிவுகளைக் கொண்ட ஒரு அரசுப் பள்ளி பார்வையிடப் படுகிறது.
- ஒரு கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இருந்தால், ஆரம்ப நிலைக் கல்விப் பிரிவுகளில் அதிக மாணவர் சேர்க்கை உள்ள பள்ளி தேர்வு செய்யப்படும்.
- 2024 ஆம் ஆண்டில், ASER கணக்கெடுப்பாளர்கள் 15,728 அரசுப் பள்ளிகளில் ஆரம்ப நிலைக் கல்விப் பிரிவுகளைப் பார்வையிட்டனர்.
- அவற்றில், 8,504 ஆரம்ப நிலைக் கல்விப் பள்ளிகளாகவும், 7,224 பள்ளிகள் உயர் ஆரம்ப நிலை அல்லது உயர் நிலை கொண்டப் பள்ளிகளாகவும் உள்ளன.
- அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் (FLN) செயல்பாடுகள்
- 80%க்கும் அதிகமான பள்ளிகள், முந்தைய மற்றும் நடப்பு கல்வியாண்டில், வகுப்பு I-II / III உடன் FLN செயல்பாடுகளைச் செயல்படுத்த அரசிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளன.
- இதே விகிதத்தில் FLN அமைப்பில் நேரடியாகப் பயிற்சி பெற்ற குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது இருந்தார்.
- 75%க்கும் அதிகமான பள்ளிகள், கற்பித்தலுக்கான கற்றல் பொருள் (TLM) மற்றும் / அல்லது FLN நடவடிக்கைகளுக்காக TLM முறையை உருவாக்க அல்லது வாங்குவதற்கு நிதி பெற்றுள்ளன.
- 75%க்கும் அதிகமான பள்ளிகள், முந்தைய மற்றும் நடப்பு கல்வியாண்டில், முதலாம் வகுப்புக்குள் நுழைவதற்கு முன், மாணவர்களுக்கான பள்ளி தயார்நிலை திட்டத்தை செயல்படுத்தியதாக அறிவித்துள்ளன.
- 95%க்கும் அதிகமான பள்ளிகள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்களை விநியோகித்ததாக அறிவித்துள்ளன, இது 2022 ஆம் ஆண்டின் நிலைகளை விட கணிசமான அதிகரிப்பைக் காட்டுகிறது.

- மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை
- 2018 ஆம் ஆண்டிலிருந்து அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை சிறிய அளவிலான ஆனால் சீரான முன்னேற்றங்களைக் காட்டுகிறது.
- சராசரி மாணவர் வருகை 2018 ஆம் ஆண்டில் 72.4% ஆக இருந்து, 2022 ஆம் ஆண்டில் 73% ஆக உயர்ந்து, பின்னர் 2024 ஆம் ஆண்டில் 75.9% ஆக அதிகரித்துள்ளது.
- சராசரி ஆசிரியர் வருகை 2018 ஆம் ஆண்டில் 85.1% ஆக இருந்து, 2022 ஆம் ஆண்டில் 86.8% ஆக உயர்ந்து, 2024 ஆம் ஆண்டில் 87.5% ஆக அதிகரித்துள்ளது.
- இந்தப் போக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையில் ஏற்பட்ட மாற்றங்களால் பெருமளவில் செயல்படுகிறது.

- சிறு பள்ளிகள் மற்றும் பலதர வகுப்பறைகள்
- 60க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு ஆரம்ப நிலைக் கல்விப் பள்ளிகளின் விகிதம் 2022 ஆம் ஆண்டில் 44% ஆக இருந்து, 2024 ஆம் ஆண்டில் 52.1% ஆக உயர்ந்துள்ளது.
- பின்வரும் இந்த மாநிலங்களில் உள்ள ஆரம்ப நிலைக் கல்விப் பள்ளிகளில் 80%க்கும் அதிகமானவை சிறு பள்ளிகளாகும்: ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், நாகாலாந்து மற்றும் கர்நாடகா.
- இமாச்சலப் பிரதேசத்தில் 75% சிறு மேல்நிலைப் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.
- ஆரம்ப நிலைக் கல்விப் பள்ளிகளில் உள்ள வகுப்பு I மற்றும் வகுப்பு II வகுப்பறைகளில், மூன்றில் இரண்டு பங்கு பல தர நிலைகளாக இருந்தன என்ற நிலையில் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

- பள்ளி வசதிகள்
- தேசிய அளவில், ASER அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கல்வி உரிமை தொடர்பான குறிகாட்டிகளும் 2018, 2022 மற்றும் 2024 நிலைகளுக்கு இடையே சிறு முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன.
- பயன்படுத்தக் கூடிய பெண்கள் கழிப்பறைகளைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 66.4% ஆக இருந்து, 2022 ஆம் ஆண்டில் 68.4% ஆக உயர்ந்து, பின்னர் 2024 ஆம் ஆண்டில் 72% ஆக அதிகரித்துள்ளது.
- அதே காலக்கட்டத்தில் குடிநீர் வசதி உள்ள பள்ளிகளின் விகிதம் 74.8%லிருந்து 76.1% ஆக உயர்ந்து, பின்னர் அது 77.7% ஆக அதிகரித்துள்ளது.
- மாணவர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் தவிர, மற்றப் புத்தகங்களைக் கொண்ட பள்ளிகளின் விகிதம் 36.9% லிருந்து, 43.9% ஆக உயர்ந்து, பின்னர் 51.3% ஆக அதிகரித்துள்ளது.
- பள்ளி உள்கட்டமைப்பில் இந்த மேம்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றன, ஆனால் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இந்த வசதிகளில் பின்தங்கியுள்ளன.

- விளையாட்டு தொடர்பான குறிகாட்டிகள்
- விளையாட்டுத் தொடர்பான குறிகாட்டிகள் 2018 ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலைகளுக்கு அருகில் உள்ளன.
- 2024 ஆம் ஆண்டில், 66.2% பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது என்ற நிலையில் அது 2022 ஆம் ஆண்டில் 68.9% மற்றும் 2018 ஆம் ஆண்டில் 66.5% ஆக இருந்தது.

- ASER 2024 அறிக்கையில் தமிழகத்தின் நிலை:
- ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER) 2024 தமிழ்நாட்டில் மாணவர்களிடையே கடுமையான கற்றல் நெருக்கடியை எடுத்துக் காட்டுகிறது.
- இதன் கண்டுபிடிப்புகள் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் திறன்கள் பற்றிய கவலைகளை எழுப்புகின்றன என்பதோடு இது திராவிடக் கல்வி மாதிரியின் செயல்திறன் பற்றிய கூற்றுகளுக்கு முரணானது.
- ASER 2024: தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது, ஆனால் இடைவெளிகள் உள்ளன
- 2024 ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களில் முன்னேற்றங்களைச் சிறப்பித்துள்ளது.
- இருப்பினும், அவை கற்றல் முடிவுகள் போக்குகளைப் பற்றி தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகின்றன.
- எழுத்தறிவு இடைவெளிகள்
- தமிழ்நாட்டு மாணவர்கள் அடிப்படை தமிழ் வாசிப்புக்கு சிரமப்படுகிறார்கள்
- 5 ஆம் வகுப்பு மாணவர்கள்: தமிழ்நாட்டில் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 64.4% பேர் தமிழில் இரண்டாம் வகுப்பின் எளிய உரையைப் படிக்க முடியாத நிலை உள்ளது.
- மூன்றாம் வகுப்பு மாணவர்கள்:
- 8.6% பேர் எழுத்துக்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை.
- 18.2% பேர் எழுத்துக்களைப் படிக்க முடியும், ஆனால் வார்த்தைகளைப் படிக்க முடியவில்லை.
- 36.3% பேர் வார்த்தைகளைப் படிக்க முடியும், ஆனால் ஒன்றாம் வகுப்பின் உரையைப் படிக்க முடியவில்லை.
- 24.8% பேர் ஒன்றாம் வகுப்பு உரையைப் படிக்க முடியும், ஆனால் இரண்டாம் வகுப்பு உரையைப் படிக்க முடியாது.
- மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 88% பேர் இரண்டாம் வகுப்பு உரையைப் படிக்க முடிய வில்லை.

- அரசு பள்ளிகள் Vs தனியார் பள்ளிகள்:
- 86.8% அரசுப் பள்ளியைச் சார்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்க முடியவில்லை.
- 90% தனியார் பள்ளியைச் சார்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களும், இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்கத் தவறுகிறார்கள்.
- தனியார் பள்ளி மாணவர்களில் 32.3% பேருடன் ஒப்பிடும்போது, 63% அரசுப் பள்ளியைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், இரண்டாம் வகுப்பின் எளிய உரையைப் படிக்க முடியாத நிலை உள்ளது.
- எட்டாம் வகுப்பில், 62.2% அரசு மற்றும் 70.8% தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே இரண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்க முடிகிறது.

- தேசிய ஒப்பீடு:
- உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு வாசிப்பு நிலைகளில் 10%+ முன்னேற்றத்தைக் காட்டும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
- படிக்கும் திறனில் பாலின வேறுபாடு
- வகுப்பு 5: 31.2% ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், 40% பெண்கள் இரண்டாம் வகுப்பு உரையைப் படிக்க முடிகிறது.
- வகுப்பு 8: 68.9% பெண்கள் படிக்கும் திறனை வெளிப்படுத்தினர், அதே சமயம் 59% சிறுவர்கள் மட்டுமே படிக்கும் திறனை வெளிப்படுத்தினர்.

- கணிதத் திறன்கள் குறைந்து வருகின்றன
- அடிப்படை எண்கணிதச் சவால்கள்
- 8 ஆம் வகுப்பு மாணவர்கள்:
- 60% பேர் அடிப்படை வகுத்தல் கணக்கினைத் தீர்க்க முடியவில்லை.
- 67.3% பேர் எளிய கழித்தல் கணக்கினைக் கூட செய்ய முடியவில்லை.
- மூன்றாம் வகுப்பு மாணவர்கள்:
- 80% பேர் அடிப்படை கழித்தல் கணக்கினைத் தீர்க்க சிரமம் கொள்கிறார்கள்.
- அரசு Vs தனியார் பள்ளிகள்:
- 27.6% அரசு மற்றும் 28.2% தனியார் பள்ளிகளைச் சார்ந்த மூன்றாம் ஆம் வகுப்பு மாணவர்களால் மட்டுமே வெற்றிகரமாக கழித்தல் கணக்கினைத் தீர்க்க முடிகிறது.
- எட்டாம் வகுப்பில், 37.8% அரசுப் பள்ளி மாணவர்களும், 46.8% தனியார் பள்ளி மாணவர்களும் மட்டுமே அடிப்படை வகுத்தல் கணக்கினைத் தீர்க்க முடிகிறது.

- காலப்போக்கில் செயல்திறன் குறைகிறது
- பள்ளிச் சேர்க்கை விகிதம் குறைகிறது
- 2022 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிச் சேர்க்கை பதிவு விகிதங்கள் குறைந்துள்ளன, இது தேசியப் போக்குகளைப் பிரதிபலிக்கிறது.
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை:
- சிறுவர்களின் சேர்க்கை 71.1% (2022) லிருந்து 62.2% (2024) ஆக குறைந்தது.
- பெண் குழந்தைகளின் சேர்க்கை 75.4%லிருந்து 67% ஆக குறைந்துள்ளது.
- ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை:
- சிறுவர்களின் சேர்க்கை 76.2% (2022) லிருந்து 71.3% (2024) ஆக குறைந்தது.
- பெண் குழந்தைகளின் சேர்க்கை 80.8%லிருந்து 75.3% ஆக குறைந்துள்ளது.

- சேர்க்கையில் தேசியப் போக்குகள் (2022 Vs 2024)
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை:
- சிறுவர்களின் சேர்க்கை 2022 ஆம் ஆண்டில் 71.7% ஆக இருந்து, 2024 ஆம் ஆண்டில் 64.1% ஆக குறைந்துள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 77% ஆக இருந்த பெண் குழந்தைகளின் சேர்க்கை, 2024 ஆம் ஆண்டில் 70.7% ஆகக் குறைந்துள்ளது.
- ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை:
- சிறுவர்களின் சேர்க்கை 2022 ஆம் ஆண்டில் 72.9% ஆக இருந்து, 2024 ஆம் ஆண்டில் 67.2% ஆக குறைந்தது.
- 2022 ஆம் ஆண்டில் 77.7% ஆக இருந்த பெண் குழந்தைகளின் சேர்க்கை, 2024 ஆம் ஆண்டில் 73.9% ஆக குறைந்துள்ளது.
- எட்டாம் வகுப்பு மாணவர்களின் வகுத்தல் கணக்குகளைச் செயல்படுத்தும் திறன் 2014 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளது.
- ASER 2024 கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் அடித்தளக் கற்றல் நிலைகளில் ஒரு தசாப்த கால வீழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

- எண்ணிமக் கல்வியறிவு அதிகரித்து வருகிறது
- சேர்க்கை குறைந்தாலும், எண்ணிமக் கல்வியறிவு கணிசமாக மேம்பட்டுள்ளது.
- திறன்பேசிகளுக்கான அணுகல்:
- அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்பேசிகளுக்கான அணுகல், 2022 ஆம் ஆண்டில் 83.9% ஆகவும், 2018 ஆம் ஆண்டில் 38% ஆகவும் இருந்து, 2024 ஆம் ஆண்டில் 88.3% பேர் அணுகலைப் பெற்றனர்.

- வெவ்வேறு வயதினரிடையே திறன்பேசிப் பயன்பாடு:
- நேரத்தை திறன்பேசியில் அமைத்தல்: 14 வயதுடையவர்களில் 84.7%, 15 வயதுடையவர்களில் 85.9% மற்றும் 16 வயதுடையவர்களில் 89.5% பேர் திறன்பேசியில் நேரத்தினை அமைத்தனர்.
- பொது அறிவுக் கேள்விகளுக்கு இணையத்தில் உலாவுதல்: 14 வயதுடையவர்களில் 77.7%, 15 வயதுடையவர்களில் 80.5% மற்றும் 16 வயதுடையவர்களில் 85.7% பேர் இணையத்தைப் பயன்படுத்தி பதில்களைக் கண்டறிந்தனர்.
- யூட்டியூப்பில் காணொளித் தேடல் திறன்: 14 வயதுடையவர்களில் 88%, 15 வயது உடையவர்களில் 89% மற்றும் 16 வயதுடையவர்களில் 92.3% பேர் வெற்றிகரமாக காணொளிகளைத் தேடினர்.
- யூட்டியூப்பில் காணொளிகளைப் பகிர்தல்: 14 வயதுடையவர்களில் 95.2% மற்றும் 16 வயதுடையவர்களில் 97% பேர் தளத்தில் காணொளிகளைப் பகிர்கின்றனர்.
- ASER 2024, தொற்றுநோய்க்குப் பிந்தைய சில மீட்சியுடன், வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்களில் தமிழகத்தின் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது.

- இருப்பினும், கற்றல் நிலைகள் 2018 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைகளுக்கு, குறிப்பாக எண்கணிதத்தில் கீழே உள்ளன.
- படிக்கும் திறனில் பாலின இடைவெளி குறிப்பிடத் தக்கதாக உள்ளது என்ற நிலையில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
- பள்ளிச் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது, இது பரந்த தேசியப் போக்கைப் பிரதிபலிக்கிறது, ஆனால் எண்ணிமக் கல்வியறிவு கணிசமாக மேம்பட்டுள்ளது.
- இலக்கு தலையீடுகள் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வது மாநிலத்தில் நிலையான கல்வி வளர்ச்சியை உறுதி செய்வதில் முக்கியமானதாக இருக்கும்.
-------------------------------------