TNPSC Thervupettagam

COP 28 உச்சி மாநாடு - பகுதி 1

January 4 , 2024 367 days 3480 0

(For English version to this please click here)

COP 28 உச்சி மாநாடு

  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரையில் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடானது (COP 28) ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) நடத்தப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் 197 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இது நடைபெற்றது.
  • அவர்கள் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான தங்கள் முன் முயற்சிகளை முன்வைத்து, இந்த மாநாட்டின் போது எதிர்கால காலநிலை நடவடிக்கைகள் குறித்த விவாதங்களில் ஈடுபட்டனர்.
  • 70,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதையும் கரிம உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • COP 28 என்பது காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு (UNFCCC) உறுப்பினர்களின் மாநாட்டின் (COP) 28வது அமர்வைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
  • இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

  • பருவநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கான ஒரு உலகளாவிய மன்றமாக இது செயல்படுகிறது.
  • இது உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட உலகளாவிய பங்கேற்பைப் பெருமைப்படுத்தும் வகையில் நடக்கிறது.
  • இதனைத் தலைமையேற்று நடத்தும் நாடானது ஒரு தலைவராக நியமிக்கிறது என்கிற நிலையில் டாக்டர். சுல்தான் அல்-ஜாபர் என்பவரை தலைவராக நியமித்துள்ளது.
  • இவர் பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவதோடு, இம்மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் நடுவராகவும் முக்கியப் பங்கினை வகிக்கிறார்.
  • டாக்டர் சுல்தான் அல்-ஜாபரின் புதைபடிவ எரிபொருள் துறை சார்ந்த அவரது நிலைப்பாடு மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றில் அவரது பங்கினை குறித்த சர்ச்சையானது இதனைச் சூழ்ந்துள்ளது.
  • இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் தற்போதைய இராணுவ நடவடிக்கை காரணமாக COP 28 மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது.
  • COP முடிவுகள் ஒருமித்த கருத்துடனும், ஒப்பந்தச் செயல்முறையானது உன்னிப்பாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எடுக்கப் படுகின்றன.

COP என்றால் என்ன?

  • ஐநாவின் ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு 'உறுப்பினர்களின் மாநாடு' அல்லது 'COP' என்றும் அழைக்கப்படுகிறது.
  • COPகள் என்பது UNFCCCயின் முக்கிய முடிவெடுக்கும் ஒரு அமைப்பாகும்.
  • தணிப்பு, தழுவல், நிதி, தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற காலநிலை நடவடிக்கையின் பல்வேறு அம்சங்களில் அவை முடிவுகள் மற்றும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்கின்றன.
  • COPகள் என்பது காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கட்டமைப்பிற்குள் நடைபெறும் கூட்டங்களாகும்.
  • இது 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாகும்.
  • உலகத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பேச்சுவார்த்தையாளர்கள் ஆகியோர் இம்மாநாட்டின் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
  • காலநிலை மாற்றம், கியோட்டோ நெறிமுறை, மற்றும்/அல்லது பாரீஸ் ஒப்பந்தம், மற்றும் குடியியல் சமூகம், தனியார் துறை, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசாங்கங்களும் இதன் பங்கேற்பாளர்களில் அடங்கும்.

பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகள்

  • உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வைத்திருத்தல், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முயற்சி செய்தல்.
  • தட்பவெப்ப மாற்றத்திற்கு ஏற்றவாறு விரிவாற்றலை உருவாக்குதல்.
  • குறைந்த பசுமை இல்ல வாயு உமிழ்வு மற்றும் காலநிலை-எதிர்ப்பு வளர்ச்சிக்கான பாதையுடன் நிதி ஓட்டங்களை சீரமைத்தல்.
  • வெப்பநிலை பதிவுகளில் தொடர்ந்து சீற்ற நிலை உருவாகி வருவதால், கடுமையான காட்டுத்தீ, வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
  • பாரீஸ் உடன்படிக்கையின் இலக்குகளை அடைய போதுமான அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

  • இம்மாநாடானது நேர்மறையான முடிவுகளையும் அதே சமயம் ஏமாற்றங்களையும் அளிக்கிறது.
  • பாரீஸ் உடன்படிக்கைக்குப் பிறகு இது ஒரு கணிசமான முன்னேற்றத்தை அளிக்கிறது.
  • சிலர் இதை புதைபடிவ எரிபொருள் சகாப்தத்தின் முடிவு என்று போற்றுகின்றனர்.
  • புதுமைத் தழுவல் முயற்சிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் தணிப்பு உத்திகளில் உள்ள சிக்கல் இடைவெளிகள் பற்றிய அச்சங்கள் இதில் உள்ளன.

இந்தியாவின் முன்முயற்சிகள்

  • பிரதமர் நரேந்திர மோடி, தனது COP-28 உரையில், உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய உறுதிமொழிகளைத் தவிர்த்துள்ளார்.
  • COP 28 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்து சில திட்டங்களை முன் வைத்துள்ளார்.
  • இந்தியா தனது வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலக்கரியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டதோடு தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளை (NDCs) கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
  • COP28 மாநாட்டின் மூலம் ஆற்றல் அமைப்புகளில் உள்ள புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கு கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
  • ஒரு சிலர் இயற்கையைச் சுரண்டுவதாகவும், இது உலகம் முழுவதையும் குறிப்பாக உலகளாவிய தெற்கிலும் பெரும்பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்று பிரதமர் விமர்சித்து இருந்தார்..
  • COP-26 மாநாட்டிலிருந்து இந்தியாவின் கடமைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
  • இதில் உமிழ்வின் தீவிரத்தைக் குறைப்பதோடு, 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவது ஆகியவையும் அடங்கும்.
  • அவர் COP-28 மாநாட்டின் இழப்பு மற்றும் சேத நிதிக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான நிதிக் கடப்பாடுகளுடன் ஒப்புதல் அளித்ததையும் வரவேற்றார்.

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் $30 பில்லியன் காலநிலை முதலீட்டு நிதி ஒதுக்கீட்டினை அவர் பாராட்டியதோடு, காலநிலை நிதியத்தில் (NCQG) ஒரு புதிய இலக்கினை முடிவு செய்வதற்கும் அழைப்பு விடுத்தார்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் தடயத்தை அகற்ற வலியுறுத்தி, GCF மற்றும் புதுமைத் தழுவல் நிதி தொடர்பான வளர்ந்த நாடுகளின் கடமைகளையும் அவர் வலியுறுத்தினார்.
  • இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்கத் தேவையான தரிசு நிலங்களில் தோட்டங்களை அமைக்க கடன்களை வழங்குவதற்கான உலகளாவிய பசுமைக் கடன் திட்டமானது வழிவகை செய்கிறது.
  • 2028 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் COP மாநாட்டின் 33வது மாநாட்டின் பதிப்பினை இந்தியாவில் நடத்த முன் வந்திருப்பதோடு, 2050 ஆம் ஆண்டிற்கு முன்பாக கார்பன் உமிழ்விற்கான காரணங்களைச் சரி செய்வதற்காக வளர்ந்த நாடுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • COP மாநாட்டை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு UNFCCC அமைப்பின்  உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதல் தேவைப்படுவதோடு, அது ஏற்றுக் கொள்ளப் பட்டால், 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது இந்தியாவின் இரண்டாவது தலைமையேற்பாகும்.

COP 28 மாநாட்டில் இந்தியாவின் முக்கிய ஈடுபாடுகள்

தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழுவின் இரண்டாம் கட்டம் (LeadIT 2.0)

  • இது உள்ளடக்கிய மற்றும் தொழில்துறை மாற்றத்தில் கவனம் செலுத்துவதோடு,  குறைந்த கார்பன் தொழில்நுட்பத்தின் இணை வளர்ச்சி மற்றும் பரிமாற்றம் மற்றும் தொழில்துறை மாற்றத்திற்கான வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு நிதி உதவி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.

நாற்கர காலநிலைப் பணிக்குழுவின் (QCWG) உள்ளூர்மயமாக்கப்பட்ட காலநிலை நடவடிக்கை

  • நிலையான வாழ்க்கை முறைகளை ஆதரிப்பதில் உள்ளூர்ச் சமூகங்கள் மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் பங்கினை அங்கீகரித்துப் பெருக்குவதில் இந்த மாநாடானது கவனம் செலுத்துகிறது.

முக்கிய கவலைகள்

படிம எரிபொருள் படிப்படியாக வெளியேறுதலுக்கான குறிப்பிட்ட காலக்கெடு இல்லை

  • இந்த ஒப்பந்தத்தில் படிம எரிபொருளை வெளியேற்றுவதற்கான தெளிவான மற்றும் அவசரத் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை.
  • இது குறிப்பிட்ட காலக்கெடு அல்லது இலக்குகள் இல்லாமல் "புதிய ஒன்றிற்கு மாறுதல்" போன்ற தெளிவற்ற மொழியைப் பயன்படுத்துகிறது.

உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மும்மடங்காக அதிகரிப்பதில் குறிப்பிட்ட இலக்குகள் இல்லை

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உலகளாவிய நிறுவப்பட்ட உற்பத்தித் திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கும், எரிசக்தி செயல்திறனில் வருடாந்திர மேம்பாடுகளை இரட்டிப்பாக்குவதற்கும் பங்களிக்க நாடுகளை COP28 ஒப்பந்தமானது அழைப்பு விடுக்கிறது.
  • மும்மடங்கு என்பது உலகளாவிய இலக்காகும், மேலும் இதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக அதன் தற்போதைய நிறுவப்பட்ட திறனை மூன்று மடங்காக உயர்த்துவது அடங்காது.
  • எனவே இந்த மும்மடங்கு எப்படி உறுதி செய்யப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

புதுமைத் தழுவல் இலக்குகளை அடைவதற்கான தெளிவான வழிமுறைகள் எதுவும் இல்லை

  • தழுவல் வரைவு என்பது அவர்களின் எதிர்பார்ப்புகளுக்குக் கீழே குறைந்துவிட்டது என்பதைப் பற்றி வளரும் நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
  • இந்த நோக்கங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது இந்த முயற்சிகளுக்கு நிதியளிக்கும் வழிமுறைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நிதிப் பொறுப்புகளில் பொறுப்புக் கூறல் இன்மை

  • காலநிலை நிதியுதவிக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு தற்போது நிறுவப் பட்ட வழிமுறை எதுவும் இல்லை.

காலநிலை நிதி பற்றிய மாறுபட்ட விளக்கங்கள்

  • காலநிலை நிதி ஓட்டங்கள் பற்றிய தரவு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தித் தொகுக்கப் படுவதோடு மாறுபட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளது.
  • நிதி தொடர்பாக பல தரப்பினரால் புகாரளிக்கப்படும் போது காலநிலை நிதியினை இரட்டை முறை கணக்கிடும் நிகழ்வு ஏற்படுவதோடு, இது உண்மையான நிதி ஓட்டங்களின் மிகை மதிப்பீடுக்கு வழிவகுக்கும்.

நிலக்கரியின் கட்ட இறக்கம் (பயன்பாட்டுக் குறைப்பு) மீதான எதிர்ப்பு

  • உள்ளமைக்கப்பட்ட கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு வசதி இல்லாமல் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைத் திறக்க முடியாது என்று நிபந்தனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • ஆனால் இதற்கு இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மீத்தேன் உமிழ்வு குறைப்பு பற்றிய கவலைகள்

  • உலகளவில் கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத வெளியேற்றத்தை விரைவுபடுத்துவது மற்றும் கணிசமாகக் குறைப்பது பற்றி இவ்வொப்பந்தம் பேசுகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் மீத்தேன் உமிழ்வை 30 சதவீதமாகக் குறைப்பதும் இதில் அடங்கும்.
  • மீத்தேன் உமிழ்வைக் குறைப்பது விவசாய முறைகளை மாற்றியமைப்பதையும் உள்ளடக்கியது.
  • இது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கலாம்.

COP 28 மாநாட்டின் குறைபாடுகள்

1. இலட்சியக் காலநிலை குறித்த நடவடிக்கை இல்லாமை

  • பல்வேறு உறுதிமொழிகள் இருந்தபோதிலும், எந்தவொரு லட்சியக் காலநிலை நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.

2. புதைபடிவ எரிபொருள் உறுதிமொழியில் உள்ள சிக்கல்கள்

  • படிம எரிபொருளை வெளியேற்றுவதற்கான கால அட்டவணைகள் மற்றும் இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

3. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழியில் உள்ள சிக்கல்கள்

  • உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மூன்று மடங்காக உயர்த்துவது என்பது ஒரு உலகளாவிய இலக்காக உறுதிமொழியின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.
  • இருப்பினும், தனிப்பட்ட இலக்குகள் எதுவும் உருவாக்கப் படாததால், இது எவ்வாறு அடையப்படும் என்பதில் தெளிவு இல்லை.

4. நிலக்கரிப் பயன்பாட்டினைக் குறைப்பதில் சிக்கல்

  • உள்ளமைக்கப்பட்ட கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு வசதி இல்லாமல் புதிய நிலக்கரி எரிப்பு அல்லது அனல் மின் உற்பத்தி நிலையங்களைத் திறக்க முடியாது என்ற முன்மொழிவின் மீதான முட்டுக்கட்டையைத் தீர்க்கச் செய்வதில் COP 28 தோல்வியடைந்தது.

5. மீத்தேன் உமிழ்வுக் குறைப்புகள் மீதான முட்டுக்கட்டை

  • மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான எந்தவொருப் பிணைப்பு உறுதிப்பாட்டையும் இந்தியா உட்பட பல நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன.

6. நிதியளிப்பு முறையின் பற்றாக்குறை

  • COP 28 மாநாடானது தழுவல் குறித்த உலகளாவிய இலக்கிற்கு நிதியளிப்பதற்கான நிதியளிப்பு முறையை அமைக்கத் தவறிவிட்டது.
  • COP 28 மாநாட்டின் வரைவு, 2020 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு $100 பில்லியன் காலநிலை நிதியை வழங்குவதற்கு வளர்ந்த நாடுகள் வழங்கச் செய்வது மீதான உறுதிப்பாடு தோல்வியுற்றது குறித்து எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.
  • இழப்பு மற்றும் சேத நிதி தன்விருப்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.

7. COP 28 வரைவில் உள்ள தளர்வான வரையறைகளை தவறாகப் பயன்படுத்துதல்

  • "குறைந்த கார்பன் எரிபொருள்கள்", "குறைந்த-உமிழ்வு" தொழில்நுட்பங்கள், "குறைந்த கார்பன் ஹைட்ரஜன்" மற்றும் "இடைநிலை எரிபொருள்கள்" போன்ற சொற்களைச் சேர்ப்பது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
  • ஏனெனில் அவர்கள் இயற்கை எரிவாயுவை விவரிக்க இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • இயற்கை எரிவாயு ஒரு முக்கிய புதைபடிவ எரிபொருள் என்பதோடு அது புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்குப் பங்களிக்கிறது.

8. CBDR பற்றி குறிப்பிடவில்லை

  • COP 28 மாநாட்டின் வரைவில் கூட்டாண்மை, வேறுபட்டப் பொறுப்புகள் (CBDR) மற்றும் மாசுபடுத்துபவரின் ஊதியக் கொள்கை ஆகியவைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

முக்கிய நுட்பங்கள்

  • COP28 மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுல்தான் அஹ்மத் அல் ஜாபர் இதை வலியுறுத்தினார்.

உள்ளடக்கிய ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நீதி

  • பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வளரும் நாடுகளின் முக்கியப் பங்கினை அவர் வலியுறுத்தினார்.
  • வளரும் நாடுகள் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்து, உள்ளடக்கிய ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நீதிக்காக அவர் வாதிட்டார்.
  • உலகளாவிய ரீதியில் பயனுள்ள காலநிலை நடவடிக்கை மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க மற்றும் அதைப் பயன்படுத்த முயற்சிகள் தேவை.

தொழில்நுட்பத் தத்தெடுப்பு மற்றும் காலநிலை நிதியை அதிகப் படுத்துதல்

  • தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் வளரும் நாடுகள் பின்தங்கி விடக் கூடாது.
  • ஏனென்றால் அவர்கள் உலக மக்கள்தொகையில் மிகக் குறிப்பிடத்தக்கப் பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.
  • பொது, பலதரப்பு மற்றும் தனியார் துறைகள் காலநிலை நிதியை மேலும் கிடைக்கக் கூடியதாகவும், அணுகக் கூடியதாகவும் மற்றும் மிகவும் மலிவு விலையில் வழங்கச் செய்வதாகவும் மேம்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்படக் கூடியச் சமூகங்களானது திறன்களை உருவாக்குவதற்கும் குறைந்த கார்பன் பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கு மாறுவதற்கும் தொழில்நுட்பம் அவசியம் ஆகும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் மற்றும் ஹைட்ரோகார்பன்கள்

  • உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் விரைவான அதிகரிப்புக்கு அவர் வாதிட்டார்.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 11,000 ஜிகாவாட் திறனை மூன்று மடங்காகவும், 2040 ஆம் ஆண்டிற்குள் அதை இரட்டிப்பாக்கவும் இலக்கு வைத்துள்ளது.
  • ஒரு புதிய ஆற்றல் அமைப்புக்கான பாலமாக ஹைட்ரோகார்பன்கள் இன்னும் அவசியம் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
  • ஹைட்ரோகார்பன் பயன்பாட்டிற்கு கார்பன் தடம் குறைப்பு, குறைந்த கார்பன் தீவிர எண்ணெய்ப் பீப்பாய்களில் முதலீடு மற்றும் தீவிரம் குறைப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை.

கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள்

  • யதார்த்தமான நிகர-பூஜ்ஜிய உமிழ்வு சூழ்நிலைகளை அடைய கார்பன் பிடிப்பு தொழில் நுட்பங்கள் பற்றி "தீவிரமாக" இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
  • கொள்கைச் சலுகைகள் பல்வேறு கார்பன் பிடிப்பு முறைகளை வணிகமயமாக்க வேண்டி தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவது மற்றும் கைப்பற்றப்பட்ட கார்பனை நடைமுறைத் தயாரிப்புகளாக அதனை மாற்றுவது உமிழ்வுக் குறைப்புக்குப் பங்களிக்கும்.

மின்கலச் சேமிப்பு, அணு ஆற்றல் மற்றும் இணைவு ஆகியவற்றில் திருப்புமுனை

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைப்பதற்கு மினகலச் சேமிப்பு தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தினை ஏற்படுத்திட அவர் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார்.
  • அணுசக்தியின் விரிவாக்கம் மற்றும் இணைவு போன்ற புதிய ஆற்றல் பாதைகளில் முதலீடு செய்வதை அவர் ஆதரித்தார்.
  • உலகளாவியப் பசுமை இல்லவாயு வெளியேற்றத்திற்கு உணவு முறைகளும் விவசாயமும் குறிப்பிடத் தக்கப் பங்களிப்பினை வழங்குவதால் விவசாய தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னோக்கியப் பாதை

காலநிலை நிதி இலக்குகளுக்கு உறுதியளித்தல்

  • தங்களின் காலநிலை நிதிக் கடமைகளுக்கு ஏற்ப, அதிக லட்சிய இலக்குகளை அனைத்து இருதரப்பு நன்கொடையாளர்களும் அமைத்தல் வேண்டும்.
  • காலநிலை நிதியை தேசிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் ஒருங்கிணைப்பதற்கான தேவை முன்பை விட அதிகமாக உள்ளது.

தெளிவான சாலை வரைபடங்கள் மற்றும் காலக்கெடுவை நிர்ணயித்தல்

  • முக்கிய மைல்கல்லையும், இலக்குகளையும் அடைவதற்கான குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய தெளிவான மற்றும் விரிவான வரைபடங்களை உருவாக்க வேண்டும்.
  • பொறுப்புணர்வுச் சிந்தனையினை வளர்த்து, ஒட்டுமொத்த நீண்ட கால நோக்கங்களுக்குப் பங்களிக்கும் வகையிலான இடைக்கால இலக்குகளை நிறுவுதல் வேண்டும்.

மேம்படுத்தப்பட்ட தேசிய செயல் திட்டங்கள் (NDCs)

  • அதிகபடியான இலக்குகள் மற்றும் உறுதியான காலநிலை நடவடிக்கை இலக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், நாடுகள் தங்கள் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்ட பங்களிப்புகளை (NDCs) திருத்தி வலுப்படுத்துதல் வேண்டும்.
  • NDC இலக்குகள் ஆற்றல், போக்குவரத்து, விவசாயம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

சட்டம் மற்றும் கொள்கை ஆதரவு

  • காலநிலை இலக்குகளைச் செயல்படுத்துவதை ஆதரிக்கும் வகையில் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றுதல் மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்களையும் கொள்கைகளையும் வலுப்படுத்துதல் வேண்டும்.
  • பல்வேறு துறைகளில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் காலநிலை தொடர்பான பரிசீலனைகளை ஒருங்கிணைத்தல் வேண்டும்.

திறன் உருவாக்கம்

  • காலநிலை நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறன் வளர்ப்பில் முதலீடு செய்யப் படுதல் வேண்டும்.
  • தொழில்நுட்பம், நிதி மற்றும் நிறுவனத் திறனை ஆதரிக்கும் வகையில் பயிற்சி மற்றும் ஆதாரங்களை வழங்குதல் வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பு

  • குறிப்பாக வளர்ந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்குக் காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • தொழிற்சாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைத் துரிதப்படுத்த வேண்டுமென்பதற்காக, அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
  • COP-28 மாநாடானது புதிய இலக்குகள் மற்றும் உறுதிமொழிகளை அறிமுகப் படுத்தியிருந்தாலும், இந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி கணிசமான பின்தொடர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய குறிகாட்டிகளின் அறிமுகம்

  • COP 28 மாநாட்டில் நிறுவப்பட்ட ஒவ்வொரு உலகளாவிய இலக்குகளின் முன்னேற்றத்தையும் அளவிட புதிய உறுதியான குறிகாட்டிகள் அடையாளம் காணப் பட வேண்டும்.

நிதியளிப்பு முறையை நிறுவுதல்

  • UNCTAD மதிப்பீட்டின்படி $500 பில்லியன் திரட்டுவதற்கான நிதி வழிமுறையானது விரைவில் நிறுவப்பட வேண்டும்.
  • வளர்ந்த நாடுகள் தங்கள் நிதிக் கடமைகளைக் குறைத்துக் கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது.

பிணைப்புக் கடமைகள்

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழிகள் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
  • புதைபடிவ எரிபொருளின் குறைப்பு பற்றிய தெளிவு, காலவரிசையில் தெளிவு மற்றும் புதைபடிவ எரிபொருளைக் குறைப்பதற்கான இலக்குகள் ஆகியவை எதிர்கால COP மாநாடுகளின் மிக உயர்ந்த நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டும்.

காலநிலை நீதி

  • வரவிருக்கும் காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு (CBDR) ஒரு வழிகாட்டும் ஒளியாக இவை இருத்தல் வேண்டும்.
  • காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் COP மாநாடுகள் முக்கியமானவை, ஆனால் முன்னோக்கிச் செல்லும் பாதை சவாலானது மற்றும் நம்பிக்கைக்குரியது.
  • அதன் வெற்றிக்குக் கூட்டு உறுதியும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், பங்குகள் அதிகம் என்ற அங்கீகாரமும் தேவை.
  • உறுதியான பங்களிப்புகளைத் தழுவி, உண்மையான கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம், உலகளாவியச் சமூகம் ஒரு நிலையான மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

முக்கியமான தசாப்தம்

  • CDR முறைகளின் நம்பகத்தன்மை மற்றும் அளவிடுதல் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் அடுத்த தசாப்தம் முக்கியமானது.

சமநிலையான சட்டம்

  • CCS (கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு) மற்றும் CDR (கார்பன் டை ஆக்சைடு அகற்றுதல்) ஆகியவை உமிழ்வைக் குறைப்பதற்கான சாத்தியமானத் தீர்வுகளை வழங்குகின்ற நிலையில், அவற்றின் செயலாக்கம் என்பது எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்கவும் சமமான மற்றும் பயனுள்ள காலநிலை நடவடிக்கையை உறுதிப்படுத்தவும் வேண்டி கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

காலநிலைப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம்

  • COP28 மாநாட்டில் CCS மற்றும் CDR தொடர்பான விவாதங்கள் மற்றும் முடிவுகள் உலகளாவிய காலநிலை நடவடிக்கையின் பாதை மற்றும் 1.5 டிகிரி செல்ஷியஸ் இலக்கினைப் பின்தொடர்வதை கணிசமாகப் பாதிக்கும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்