TNPSC Thervupettagam

FIFA U-17 உலகக் கோப்பை

December 22 , 2017 2383 days 2914 0
FIFA U-17 உலகக் கோப்பை

- - - - - - - - - -

  • FIFA-U-17 உலகக் கோப்பை முதன் முதலில் FIFA-U-16 உலகக் கோப்பை போட்டியாக உருவாக்கப்பட்டு, பின்னர் 2007-ல் தற்போதைய பெயராக மாற்றம் செய்யப்பட்டடது.

  • இது சர்வதேச கால்பந்து கழகமான Federation of International De foot ball Association (FIFA - International Federation of Association Football)-னால் நடத்தப்படும் 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியாகும்.

FIFA-சர்வதேச கால்பந்து கழகம்

  • FIFA என்பது, கால்பந்து, உள்ளரங்க கால்பந்து, கடற்கரை கால்பந்து போன்ற விளையாட்டுக்களை சர்வதேச அளவில் நிர்வகிக்கும் தனியார் அமைப்பு ஆகும்.

  • முக்கிய சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்தும் பொறுப்புடைய நிறுவனமாக FIFA திகழ்கிறது. குறிப்பாக, 1930-ல் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டி மற்றும் 1991ல் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
  • 1904-ம் ஆண்டு மே மாதம் 21 இல் FIFA நிறுவப்பட்டது. இது பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து போட்டிகளை மேற்பார்வையிடுவதற்காக உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைநகர், சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஜூரிச்சில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன. தற்போது 211 உறுப்பினர்கள் உள்ளன. உறுப்பு நாடுகள், மண்டல கழகங்களிலும் உறுப்பினராக இருக்க வேண்டும். இது உலக அளவில் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆப்பிரிக்கா, 2) ஆசியா 3) ஐரோப்போ 4) வட மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரிபீயன் 5) ஒசேனியா மற்றும் 6) தென் அமெரிக்கா.
  • FIFA கால்பந்தாட்டத்திற்கான விதிகளைக் கட்டுப்படுத்துவதில்லை. (அவை சர்வதேச கால்பந்தாட்ட கழக வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது). எனினும், போட்டிகளின் எண்ணிக்கை, அவற்றினை பிரபலப்படுத்துதல் அவற்றின் மூலம் கொடையாளர்களைத் திரட்டி, வருமானம் ஈட்டுதல் போன்றவை இதன் முக்கியப் பணிகளாகும்.
  • இதன் குறிக்கோள் “விளையாட்டிற்காக, உலகிற்காக”.
  • FIFAவின் முதல் தலைவர் ராபர்ட் குரியன் ஆவார்.

 

FIFA-U-17 உலக சாம்பியன்ஷிப் போட்டி

  • FIFA-U-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியானது 1977 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கால்பந்தாட்டக் கழகத்தால் உருவாக்கப்பட்ட லைன் சிட்டி கோப்பையினை முன் மாதிரியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது.

  • லைன் சிட்டி கோப்பைப் போட்டியானது உலகில் முதன் முதலாக நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியாகும்.
  • FIFA-U-16-ன் முதலாவது உலக சாம்பியன்ஷிப் போட்டி 1985-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்றது. அதன் பிறகு இரு வருடங்களுக்கு ஒரு முறை இப்போட்டி நடைபெற்றது. இது 1991-ஆம் ஆண்டு முதல், 16 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களுக்கான போட்டி என்பதிலிருந்து 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டி என மாற்றம் செய்யப்பட்டது.
  • இந்தப் போட்டிகளின் வரலாற்றில் மிகவும் அதிக முறை வெற்றி பெற்ற நாடாக நைஜீரியா விளங்குகிறது. இது 5 முறை வெற்றியினையும், 3 முறை இரண்டாமிடத்தினையும் பெற்றிருக்கிறது. அதிகம் வெற்றி பெற்ற நாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தினை பெற்றிருக்கிறது. இது 3 முறை வெற்றியினையும் இரு முறை இரண்டாமிடத்தினையும் பெற்றிருக்கிறது. கானா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளும் இரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன.
  • இப்போட்டிகளுக்கு இணையாக பெண்களுக்கென்று தனியான FIFA-U-17 பெண்கள் உலகக் கோப்பை போட்டியானது 2008 முதல் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டியில் வட கொரியா வென்றது.
 

FIFA-U-17 உலகக் கோப்பை : அமைப்பு

  • ஒவ்வொரு போட்டியும், குழு நிலை ஒன்றைக் கொண்டது. இதில் 4 அணிகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக போட்டியிட வேண்டும். அணிகளின் வெற்றி பட்டியல் தரவரிசைப்படுத்தப்படும். தொடர்ந்த போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் விலக்கப்படும். வெற்றி பெறும்  அணிகள் பட்டியலில் முன்னேறும். இந்த நடைமுறை இறுதிப் போட்டி வரை தொடரும். இரு அணிகளில் முதலிடம் பெறுபவரும், இரண்டாம் இடம் பெறுபவரும் இறுதி போட்டியின் மூலம் கண்டறியப்படுவர். அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3ம் இடம் பெற்றவர் தேர்வு செய்யப்படுவர்.
  • 1985 முதல் 2005 வரை 16 அணிகள் 4 குழு நிலைகளாகப் பிரிந்து, ஒரு குழுநிலைக்கு 4 அணிகள் எனப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு அணியும் அதன் குழுவில் உள்ள பிற அணிகளுடன் போட்டியிட வேண்டும். ஒவ்வொரு குழுவிலும், முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் பிற குழுக்களுடன் மோதுமாறு அமைக்கப்பட்டிருந்தன. 2007-ம் ஆண்டு முதல் 24 அணிகளாக, விரிவாக்கம் செய்யப்பட்டு, 4 அணிகளை உடைய 6 குழு நிலைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும், முதல் இரு இடம் பெற்ற அணிகளும், மொத்தக் குழுக்களில் சிறந்த முறையில் விளையாடிய 4 மூன்றாமிடம் பெற்ற அணிகளும் நாக்அவுட் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.
  • போட்டிகள் 45 நிமிடங்கள் அடங்கிய இரு பகுதிகளாக, அதாவது 90 நிமிட போட்டிகளாக நடத்தப்படும். 2011-ம் ஆண்டு வரையிலான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் போட்டியானது 90 நிமிடங்களுக்குள் முடிவு எட்டப்படவில்லை எனில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதன் பின்னரும் முடிவு எட்டப்படாத நிலையில் ‘பெனால்டி ஷுட் அவுட்‘ நடத்தப்படும். 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு, போட்டியாளர்களின் ஓய்வினைக் கருதி கூடுதல் நிமிடங்கள் வழங்கப்படுவதில்லை. உடனடியாக ‘பெனால்ட்டி ஷுட்’ அவுட் மட்டுமே நடத்தப்படுகிறது.

 

FIFA-U-17 உலகக் கோப்பை : தகுதிகள்

  • போட்டி நடத்தும் நாடு, தானாகவே தேர்வு செய்யப்பட்டு விடும். பிற அணிகள், 6 மண்டல போட்டிகளின் மூலமாக வெற்றி பெற்று தேர்வாகின்றன. 1985-ல் நடைபெற்ற முதலாவது போட்டிக்கு FIFA-வின் அழைப்பினை ஏற்று ஐரோப்பாவின் அனைத்து அணிகளும், பொலிவியாவும் பங்கேற்றன.

FIFA-U-17 உலகக் கோப்பை : முடிவுகளின் தொகுப்பு

1. FIFA U-16 உலக சாம்பியன்ஷிப்

ஆண்டு நடத்திய நாடு இறுதிப் போட்டி
சாம்பியன் எண்ணிக்கை இரண்டாமிடம்
1985 சீனா நைஜீரியா 2–0 மேற்கு ஜெர்மனி
1987 கனடா சோவியத் யூனியன் 4–2 நைஜீரியா
1989 ஸ்காட்லாந்து சவுதி அரேபியா 5-4 ஸ்காட்லாந்து

2. Under-17: FIFA U-17 உலக சாம்பியன்ஷிப்

ஆண்டு நடத்திய நாடு இறுதிப் போட்டி
சாம்பியன் எண்ணிக்கை இரண்டாமிடம்
1991 இத்தாலி கானா 1-0 ஸ்பெயின்
1993 ஜப்பான் நைஜீரியா 2-1 கானா
1995 ஈகுவடார் கானா 3-2 பிரேசில்
1997 எகிப்து பிரேசில் 2-1 கானா
1999 நியூசிலாந்து பிரேசில் 8-7 ஆஸ்திரேலியா
2001 டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரான்ஸ் 3-0 நைஜீரியா
2003 பின்லாந்து பிரேசில் 1-0 ஸ்பெயின்
2005 பெரு மெக்ஸிகோ 3-0 பிரேசில்

3. FIFA U-17 உலகக் கோப்பை

ஆண்டு நடத்திய நாடு இறுதிப் போட்டி
சாம்பியன் எண்ணிக்கை இரண்டாமிடம்
2007 தென்கொரியா நைஜீரியா 3–0 ஸ்பெயின்
2009 நைஜீரியா சுவிட்சர்லாந்து 1-0 நைஜீரியா
2011 மெக்ஸிகோ மெக்ஸிகோ 2-0 உருகுவே
2013 ஐக்கிய அரபு நாடுகள் நைஜீரியா 3-0 மெக்ஸிகோ
2015 சிலி நைஜீரியா 2-0 மாலி
2017 இந்தியா இங்கிலாந்து 5-2 ஸ்பெயின்

4. FIFA U-17 உலகக் கோப்பை: நாடுகளின் செயல்பாடுகள்

தரவரிசை அணி முதலிடம் இரண்டாமிடம்
1 நைஜீரியா 5 (1985, 1993, 2007, 2013, 2015) 3 (1987, 2001, 2009)
2 பிரேசில் 3 (1997, 1999, 2003) 2 (1995, 2005)
3 கானா 2 (1991, 1995) 2 (1993, 1997)
4 மெக்ஸிகோ 2 (2005, 2011) 1 (2013)
5 சோவியத் யூனியன் 1 (1987)
சவுதி அரேபியா 1 (1989)
பிரான்ஸ் 1 (2001)
சுவிட்சர்லாந்து 1 (2009)
இங்கிலாந்து 1 (2017)

 

FIFA-U-17 உலகக் கோப்பை : விருதுகள்

  • ஒவ்வொருப் போட்டியிலும் 3 விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • தங்கக்காலணி விருது : மொத்தப் போட்டிகளிலும் அதிக கோல்கள் அடிப்பவருக்கு வழங்கப்படுவது.
  • தங்கப்பந்து விருது : மொத்தப் போட்டிகளிலும் அதிசிறப்பு மிக்கவராகக் கருதப்படும் வீரருக்கு வழங்கப்படுவது.
  • நேர்மையான ஆட்டத்திற்கான விருது : மொத்தப் போட்டிகளிலும் சிறந்த ஒழுங்கு முறையினை கடைபிடித்த அணிக்கு வழங்கப்படுவது.

2017 FIFA-U-17 உலகக் கோப்பைப் போட்டி

  • 2017-ல் நடைபெற்ற FIFA-U-17 உலகக் கோப்பையானது FIFA-வின் 17-வது போட்டியாகும். இது 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்காக, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை FIFA-U-17-ஆல் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான போட்டி இந்தியாவில் அக்டோபர் 6 முதல் 28 வரை நடைபெற்றது.  இந்தப் போட்டியினை நடத்துவதற்குண்டான ஒப்புதலானது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று வழங்கப்பட்டது.

  • இந்தியாவில் முதன் முறையாகப் இப்போட்டி நடைபெறுவது, சிறப்புத்தன்மையினை பெற்றிருக்கிறது. 2013 முதல், U-17-2017 கோப்பையை ஓர் ஆசிய நாடு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • இதற்கு முந்தையப் போட்டியினை 2015-ல் சிலி நடத்தியது. இதில் நைஜீரியா வெற்றி பெற்றது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் தான் FIFA U-17 உலககோப்பை போட்டி வரலாற்றில் முதல் முறையாக அதிக பார்வையாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 12,80,459 பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.
  • போட்டிகள் இந்தியா முழுவதும் 6 மைதானங்களில் நடைபெற்றன. (டெல்லி, கோவா, கவுகாத்தி, கொச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை). இறுதிப் போட்டியானது, மேற்கு மாநிலம் கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது.

  • போட்டியினை நடத்தும் நாடான இந்தியாவை தவிர்த்து மொத்தம் 23 அணிகள் பங்கேற்றன. இவை பல்வேறு கண்டங்கள் அடிப்படையிலான 17 வயதிற்குட்பட்டோர் போட்டிகளில் பங்கேற்று, உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதி பெற்றன.
  • போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகளின் முதல் சுற்றிற்காக, ரவுண்டு ராபின் முறையில் அணிகள் நான்கு குழுக்களாக போட்டியிடும். அதில்,  முதல் இரு உயர்புள்ளி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்படும். மேலும் உயர்புள்ளிகள் பெற்ற, 4 மூன்றாமிட அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும். இந்த 16 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதன் பின் இறுதிப் போட்டியில் பங்குபெறும் அணிகள் மூன்று சுற்றுக்களின் முடிவில் உறுதி செய்யப்படும்.
  • கடந்த முறை பட்டம் வென்ற நைஜீரியா இந்த முறை போட்டிகளில் இடம் பெறவில்லை. ஏனெனில் அந்த அணி, தகுதிப் போட்டிகளிலேயே தோல்வியுற்றது. 2009-ல் சுவிட்சர்லாந்து, இது போல் தோல்வியுற்றது. அதன் பின் இது போல தகுதிப் போட்டிகளில் முதன் முதலாக நைஜீரியா தோல்வியுற்றிருக்கிறது.
  • U-17 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளது. இது இறுதிப்போட்டியில் ஸ்பெயினை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. மேலும் இது, இங்கிலாந்திற்கான இரட்டை  வெற்றியாகும். ஒரே ஆண்டில் U-20 மற்றும் U-17 பிரிவு உலகக்கோப்பைப் போட்டியில் வென்ற இரண்டாவது நாடு என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. முன்னர் 2003-ஆம் ஆண்டு இதே போன்று பிரேசில் வெற்றி பெற்றிருந்தது.

  • மேலும், பிரேசில், வடகொரியாவைத் தொடர்ந்து, ஒரே ஆண்டில் பெண்கள் பிரிவிலும் U-17 மற்றும் U-20 பிரிவுகளிலும் பட்டம் வென்ற மூன்றாவது நாடு என்ற பெருமையினை இங்கிலாந்து பெற்றிருக்கிறது.
  • இந்தத் தொடருக்கான அலுவல்பூர்வ போட்டிக்கான பந்துஅடிடாஸ் க்ரசேவா” ஆகும்.
 

2017 FIFA-U-17 உலகக் கோப்பை : தகுதி பெற்ற அணிகள்

  • போட்டித் தொடரை நடத்தியதால், இந்தியா முதன்முதலாக FIFA-U-17 உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் அனைத்து வயதினருக்கான உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியா பங்கு பெறுவதும் இதுவே முதன்முறை ஆகும். மேலும் இந்தியாவைப் போன்றே, நியு கேடலோனியா, நைஜர் ஆகிய நாடுகளும் FIFA-U-17 உலகக் கோப்பையில் முதன் முதலாகப் பங்கேற்றன.

  • மொத்தம் 24 அணிகள் இறுதித் தொடருக்கு தகுதி பெற்றன. இப்போட்டியில் இந்தியா அல்லாமல் மொத்தம் 23 நாடுகள் பங்கேற்றன. 6  கண்ட அளவிலான தனிப்பட்ட போட்டிகளில் இருந்து தகுதி பெற்றதன் மூலம் இந்நாடுகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றன.
 

2017 FIFA-U-17 உலகக் கோப்பை: இந்திய அணி

 

2017 FIFA-U-17 உலகக் கோப்பை : சின்னம், நல்லெண்ணச் சின்னம் மற்றும் பாடல்

  • போட்டித் தொடரின் அலுவல் சின்னம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 26, அன்று கோவாவில், நடைபெற்ற AFC-U-16 போட்டியின்போது வெளியிடப்பட்டது.
  • FIFA-ன் பத்திரிக்கை வெளியீடானது, “போட்டித் தொடரின் சின்னமானது, இந்தியா போன்ற கலாச்சாரப் பன்முகம் நிறைந்த நாட்டினைக் கொண்டாடும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது இந்தியாவின் தேசிய அடையாளத்தின் முக்கியக் கூறுகளான இந்தியப் பெருங்கடல், ஆலமரம், பட்டம், ஒளிரும் நட்சத்திரம் (அசோக சக்கரத்தின் வழி பிரதிபலிப்பு), ஆகியவற்றை உணர்த்துகிறது” என்றும் கூறுகிறது.

  • அதிகாரப்பூர்வ நல்லெண்ணச் சின்னம் : கேளியோ“ எனப் பெயரிடப்பட்ட மேகச் சிறுத்தை ஆகும்.
  • அதிகாரப்பூர்வ பாடல் : “கர் கே திக்ஹ்லாதே கோல்“.
 

2017 FIFA-U-17 உலகக் கோப்பை: விருதுகள்

தங்கப் பந்து வெள்ளிப் பந்து வெண்கலப் பந்து
ஃபில் ஃபோதென், இங்கிலாந்து செர்கியோ கோமஸ், ஸ்பெயின் ரைஹன் ப்ரூஸ்டர், இங்கிலாந்து
தங்க காலணி வெள்ளி காலணி வெண்கல காலணி
ரைஹன் ப்ரூஸ்டர், இங்கிலாந்து லசானா தியாயே, மாலி அபெல் ரூஸ், ஸ்பெயின்
8 கோல்கள் 6 கோல்கள் 6 கோல்கள்
 
தங்கக் கையுறை
கேப்ரியல் பிராசோ, பிரேசில்
ஃபிபா நேர்மையான ஆட்டத்திற்கான விருது
பிரேசில்

2017 FIFA-U-17 உலகக் கோப்பை : அதிக கோல்கள் மற்றும் தடுப்பாளர்

  • அதிக கோல்கள் அடித்தவர் : இங்கிலாந்தின் ரைஹன் ப்ரூஸ்டர் (8 கோல்கள்)
  • அதிக கோல்கள் தடுப்பாளர் : பிரேசிலின் கேப்ரியல் பிராசோ (29 தடுப்புகள்)

 

2017 FIFA-U-17 உலகக் கோப்பை : இந்தியாவின் செயல்பாடு

  • போட்டியினை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் FIFA-U-17 போட்டியில் முதன்முதலாக இந்தியா பங்கேற்றது.
  • இந்தியா (குழு-A), குழு-Aவின் இன்னபிற உறுப்பினர்களுடன் 3 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றது.
  • முதலாவது ஆட்டம், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு (0-3 கோல்கள்) இடையே அக்டோபர் 6, 2017 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இரண்டாவது ஆட்டம், இந்தியா மற்றும் கொலம்பியா (1-2 கோல்கள்) இடையே அக்டோபர் 9,  2017ல் புது டெல்லியில் நடைபெற்றது.
  • 3வது ஆட்டம் இந்தியா மற்றும் கானா (0-4 கோல்கள்) இடையே  அக்டோபர் 12, 2017 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது.
  • ஒரே ஒரு கோல் மட்டும் அடித்து இந்தியா குழுச் சுற்றில் இருந்து வெளியேறியது.
  • FIFA-U-17 உலகக் கோப்பை, கால்பந்துப் போட்டியில் இந்தியாவின் முதல் கோலை, இந்திய வீரர் ஜீக்சன் தௌநோஜம் (15), 2017ஆம் ஆண்டு அக்டோபர் 9ல் கொலம்பியாவிற்கு எதிரானப் போட்டியில் அடித்தார். இது FIFA உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே கோல் ஆகும்.
 

- - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்